Monday, October 13, 2014

ANNABELLE - புடீக!! அந்த டைரக்டர கொல்லுக!!!


Share/Bookmark
SP முத்துராமன் எடுத்த ஒரு படத்துக்கு SP ராஜ்குமார வச்சி ஒரு சீக்குவல் எடுத்தா எப்புடி இருக்கும்? வீரேந்தர் சேவாக்கு பதிலா வெங்கடேஷ் ப்ரசாத்த ஓப்பனிங் இறக்கி விட்டா எப்புடி இருக்கும்? கண்றாவியா  இருக்கும்ல.. அதே மாதிரி தான் இருக்கு இந்தப் படமும். எப்பவுமே சாதாரணமா ஒரு படம் எடுக்குறதுக்கும்  சீக்குவலோ ப்ரீக்குவலோ எடுக்குறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. சாதாரணமா எடுத்து ரிலீஸ்  பண்ணும் போது பெரிய அளவுல ஒண்ணும் எதிர்பார்ப்பு இருக்காது. அப்போ படம் சுமாரா இருந்தா கூட பாக்குறவங்களுக்கு ஒரு ஏமாற்றம் இருக்காது. ஆனா ஒரு ஹிட்டான படத்துக்கு அடுத்த பார்ட் எடுக்கும்  போது முதல் பாகத்த விட ரொம்ப சூப்பரா இருந்தா மட்டும் தான் அடுத்த பார்ட் எடுபடும்.  ஆனா அந்த மாதிரியான எந்த முயற்சியும் இந்தப் படத்துல இவியிங்க எடுத்ததா தெரியல.

The Conjuring படத்துல நாலே நாலு சீன் வந்தாலும் நமக்கு வயித்த கலக்குற அளவுக்கு பயமுறுத்துற ஆனபெல் பொம்மை இந்தப் படம் முழுக்க வருது. ஆனா நமக்கு பயம் மட்டும் வரவே மாட்டேங்குது. நாமளும் இப்ப பயமுறுத்துவாய்ங்க இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி பயமுறுத்துவாய்ங்கன்னு உக்கார்ந்திருந்தா படம் முடிஞ்சி போயிடுது.

படத்துல பல ட்விஸ்டுங்கள வச்சி டைரக்டர் மெரட்டிருக்காரு. ஆடியன்ஸ் எல்லாரும் இப்போ பாருங்களேன் பின்னாலருந்து பேய் வரும்.. இப்ப பாருங்களேன் அவன் தலைக்கு மேல பேய் வரும். அடுத்த சீன்  பாருங்களேன் செம பயங்கரமா இருக்கப்போவுதுன்னு பல மாதிரி கெஸ் பன்னிட்டு இருக்கும் போது ஆனா அவங்களோட எந்த கெஸ்லயுமே பேயையே காமிக்காம டைரக்டர் செம டுவிஸ்டு குடுத்து எல்லாரையும்  ஏப்ரல் fool பண்ணிருக்காரு.

இது ஒரு முழு நீள பேய்படம்னு நினைச்சி போனா, தியேட்டர்ல ஓடுறது ஒரு  ஆக்சன்  கலந்த, காமெடி,  க்ரைம், செண்டிமெண்ட் திரைப்படம். டேய் யாரடா ஏமாத்துறீங்க. எங்க விக்ரமன் படத்துக்கு பேர மாத்தி வச்சி ரிலீஸ் பன்னிருக்கிங்க. வக்காளி ஹீரோவும் ஹீரோயினும் பேசுறாய்ங்கன்னா பேச்சு... படம்  ஆரம்பிச்சதுலருந்து கடைசி வரைக்கு பேசிகிட்டே இருக்காயிங்க. இவிங்க கொஞ்சம் கேப் விட்டாத்தானா  அந்தப் பேய் உள்ள வரும்.

தினமும் நைட்ட காட்டுவாய்ங்க. அப்படா இன்னிக்கு நைட்டு பேய் வந்துடப்போவுதுன்னு தோணும். ஆனா அந்த மாதிரி ஒரு அம்பது நைட்டு வந்துட்டு போயிறும். பேயக் காணும். கடைசியா ”பொட்டி  வந்துருச்சி”ங்குற மாதிரி பேயக் காட்டுனாய்ங்க. அப்டியே கையோட லைட்ட போட்டு இண்டர்வல்லும் விட்டுட்டாய்ங்க. பேயையே காட்டாத ஒரு முழுநீள பேய்ப்படம்ன்னா இதுதான்.

படத்துல இவிங்க பயமுறுத்த வச்ச ரெண்டு மூணு சீனுக்கும் தியேட்டர்ல எல்லாம் சிரிச்சிகிட்டு இருக்காய்ங்க. அடப்பாவிகளா.. சந்தானம், சூரியெல்லாம் கஷடப்பட்டு காமெடி பண்றாய்ங்க.. அதுக்கு ஒரு பய கூட சிரிக்க மாட்டேங்குறீங்க. இவிங்க பேயக் காட்டுறாய்ங்க. அதுக்கு போய் கெக்க புக்கன்னு  சிரிக்கிறீங்களேடா.. 

எல்லா பேய்ப்படங்களைப் போல இதுலயும் ஹீரோயினுக்கு மட்டும் பேய் தெரியும். வழக்கம்போல “மிச்சர்” திங்கிற கேரக்டர்ல ஹீரோ. அப்பப்போ வந்து சிரிப்பு காட்டிட்டு போயிருவான். அப்புறம் பேயப் புடிக்கிறதுக்கு இன்னொரு ஃபாதர் வருவாரு. பொம்மைய கொண்டு போறப்பவே பேய் பொடனில தட்டி படுக்கப் போட்டுரும். ஃபாதர் உங்களைப் பெரிய ரவுடின்னு நெனைச்சேன். ஒரே அடியில பொசுக்குன்னு  பொய்ட்டீங்க. பேய் ஓட்டப்போனா கையில ஒரு சிலுவை, அப்புறம் அந்த பாட்டில்ல கொஞ்சம் தண்ணி எல்லாம் கொண்டு போகனும் ஃபாதர். அப்பதான் பேய் பயப்படும். காலங்காத்தால வாக்கிங் போற மாதிரி வெறுங்கைய வீசிக்கிட்டு பேயோட்டப்போனா இப்புடித்தான் பொடனில தட்டி அனுப்பிரும்.

அப்புறம் இன்னொரு நீக்ரோ ஆண்டி ஹீரோயினோட சுத்தும். ஒரு கட்டத்துல நாமளே பல மாதிரி யோசிப்போம். இந்த ஆண்டி ஒரு வேளை பேயோ? இல்லை இந்த ஆண்டி தான் பேய ஓட்டுமோன்னு நெனைச்சா, அங்க தான் டைரக்டர் ஒரு செண்டிமெண்ட் டச்ச வக்கிறாரு.  க்ளைமாக்ஸ பாக்கும் போது நம்ம முரளி நடிச்ச “காமராசு” பட க்ளைமாஸ்தான் ஞாபகம் வந்துச்சி. எஸ்.ஏ.ராஜ்குமார் மீசிக்கு மட்டும் தான் மிஸ்ஸிங்.

”ஸ்நேகா... ஸ்நேகா... அந்தப் பேர்லதான்யா நா ஏமாந்துட்டேன்” ன்னுபேரழகன்ல விவேக் சொல்ற மாதிரி  “conjuring.. james wan" இந்த ரெண்டு பேர்லதான்யா நாங்க ஏமாந்துட்டோம். இந்தப் படத்துக்கு நா போனதுமட்டுமில்லாம என் ஃப்ரண்டோட குடும்பத்தையே அழைச்சிட்டு போனேன். கொடுமை என்னன்னா அவன் தம்பிக்கு பேய்ப்படம்னா பயம்னு அவங்க வீட்டுல “பயப்படாம பாருப்பா... ரொம்ப பயமா இருந்தா காதப் பொத்திக்க” ன்னு ரொம்ப கண்டிச்சி அனுப்சாங்க.. அவன் படத்த பாத்துட்டு வடகறி ஜெய் மாதிரி “அண்ணேன் நாளைக்கு பயப்படவா” ன்னு கேக்குறான். அய்யோ அசிங்கமாப் போச்சே..

மொத்தத்தில் இது ஒரு முழு நீளக் குடும்பச் சித்திரம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹஹஹஹஹ்ஹ்ஹஹ்ஹ்............அயோ! சிரிச்சு சிரிச்சு மாளல.....ஒரு பேய் படத்த இப்படிக் காமெடி பீஸா விமர்சனம் பண்ணி.....சூப்பர்...சூப்பர்!! அப்ப தியேட்டர் போனா ஒரு நல்ல குடும்ப காமெடிப்படம் பார்க்கலாம்னு சொல்லுங்க......

Alex said...

Waiting for your kaththi review boss

முத்துசிவா said...

@alex:

tomorrow bosss.. nethu over crowd... athan pogala

Ramesh said...

Ha ha ha.. Sema

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...