Thursday, October 23, 2014

பூஜை - பூஜா கரானா ஹே!!!


Share/Bookmark
ஹரியிடம் கதைங்குற சரக்கு தீர்ந்து பல நாள் ஆயிருச்சி. ஆனா 20 பேர அடிக்கக்கூட கெப்பாசிட்டியுடைய ஒரு ஹீரோ, பயங்கரமான ஆயுதங்களோட ஒரு ரவுடி கும்பல், வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுகிட்டு கெளரமா இருக்க ஒரு பெரிய குடும்பம் (அந்த குடும்பத்தில் வெள்ளை முடியுடன் ஒரு கிழவி மற்றும் ஒரு நாய் இருக்க வேண்டும்), 15 ஸ்கார்ப்பியோ, ஒரு பத்து செல்ஃபோன் இத மட்டும் அவர்கிட்ட குடுத்துட்டா போதும். இன்னும் ஒரு அம்பது படம் கூட போரடிக்காம  எடுப்பாரு போல.

அவர்கிட்ட இருந்ததே மொத்தம் ஒரு ரெண்டு மூணு கதை தான். அவரோட முதல் மூணு படங்களோட கதைகளை லைட்டா ரீமாடல் பண்ணியே மற்ற படங்களை ஓட்டிக்கிட்டு இருக்கார். சாமி என்கிற படத்தோட குட்டிங்க தான் சிங்கம்1 மற்றும் சிங்கம் 2. அதே போல அய்யா ங்குற படத்தோட குட்டிங்க தான் தாமிரபரணி, வேல் மற்றும் வேங்கை. அதே வரிசையில் அய்யாவின் நான்காவது குட்டியாக ரிலீஸ் ஆயிருக்கது தான் இந்த பூஜை. 

கோவையிலேயே பெரிய குடும்பமான ( எண்ணிக்கையிலும், அந்தஸ்திலும்) கோவை குரூப்ஸ் கம்பெனி குடும்பத்தின் மூத்த வாரிசான விஷால் பிரபல ரவுடி கம் கூலிப்படை தலைவனிடமிருந்து குடும்பத்தை ஆபத்துலருந்து காப்பாத்த கஷ்டப்படுவது தான் கதை. இரண்டு சித்தப்பா, சித்திக்கள், அவர்களின் குழந்தைகள், ஒரு இருபது வேலைக்காரர்கள், ஒரு கிழவி, ஒரு நாய் உட்பட ஒரு அம்பது பேர் கொண்டு குழு தான் விஷாலோட குடும்பம்.

படத்தோட ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு கேரக்டரிலும் ஹரியோட முந்தைய படங்களின் சாயல் அப்டியே தெரியிது. அந்த குடும்ப செட்டப்புலருந்து, பாட்டு லொக்கேசன், ஃபைட்டு லொக்கேஷன் முதல் வில்லனோட கேரக்டர் வரைக்கும் ஒவ்வொரு படத்தை ஞாபகப்படுத்து. வில்லன் ரோல் அப்டியே சிங்கம் 1 ப்ரகாஷ்ராஜ் ரோல். அதே போல தியேட்டர்ல ஒரு சண்டை, மழையில ஒரு சண்டைன்னு தன்னோட அத்தனை வித்தையையும் மொத்தமா இறக்கிருக்காரு.

பார்த்த கதைதான்னாலும் எந்த ஒரு இடத்துலயும் போர் அடிக்காம படம் ஜெட்டு ஸ்பீடுல போய் முடியிது. நாம ஒரு சீன் நல்லா இருக்கா இல்லையாங்குற முடிவுக்கு வருவதற்குள்ள அடுத்த சீனுக்குள்ள நம்மள இழுத்து உள்ள போட்டுடுறாய்ங்க.  ஸ்ருதிய இதுவரைக்கும் யாருக்காவது புடிக்காம இருந்தா இந்தப் படத்துலருந்து அது மாறும். செம்ம அழகு. ஸ்ருதிய இவ்வளவு அழகா எந்தப் படத்துலயும் காமிச்சதில்லை. ஸ்ருதியோட கேரக்டரும் அப்படியே வேல் அசின் கேரக்டர்தான்.

தாமிரபரணியில கருப்பான கையால பாட்டுக்கு பானு போட்டுகிட்டு ஆடுன ட்ரெஸ் அப்டியே இருந்துருக்கும் போல. அத அப்டியே ஸ்ருதிக்கு போட்டுவிட்டு அதே செட்டுல ஒரு பாட்டு எடுத்துருகாய்ங்க. அதே மாதிரி வேல் படத்துல “ஒற்றைக் கண்ணால” பாட்டுக்கு அசின் போட்டுருந்த ட்ரெஸ்ஸும் அப்டியே இருந்துருக்கும் போல. அத ஸ்ருதிக்கு போட்டு அதே லொக்கேஷன்கள் இன்னொரு பாட்டு எடுத்துருக்காய்ங்க. எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா.

சத்யராஜ் கெட் அப் செம்ம. அந்த மொட்டைத் தலைக்கும், அந்த கூலர்ஸுக்கும் அப்டியே நூறாவது நாள் படத்துல இருந்த மாதிரி இருக்காரு. சத்யராஜின் ரெண்டு மூணு சீன் கெத்து. (மொத்தமே அந்தாளு ரெண்டு மூணு சீனு தானப்பா வர்றாரு). அதுவும் அவருக்குன்னு தனியா யுவனின் trade mark BGM ஒண்ணு.. செமயா இருந்துச்சி. சத்யராஜூக்கு இன்னும் கொஞ்சம் நிறைய காட்சிகளை குடுத்திருக்கலாம்.

ஹரியப் பொறுத்த அளவுல டபுள் மீனிங்ல பேசுறது மட்டும் தான் காமெடின்னு நினைச்சிகிட்டு இருக்கார் போல. ஒரு பக்கம் எவ்வளவு டீசண்டா படம் இருக்கோ இன்னொரு பக்கம் காமெடிங்குற பேர்ல அங்கங்க அருவருப்பான டபுள் மீனிங் வசங்கள். வழக்கமாக மொக்கை போடும் கஞ்சா கருப்பு இல்லாதது ரொம்ப பெரிய ரிலீஃப். சூரி பெரும்பாலான இடங்களில் ஓரளவு சிரிக்க வைக்கிறாரு. யார்ட்ட எவ்வளவு அடி வாங்குனாலும் அடுத்த செகண்டே அத மறந்துட்டு நார்மலா பேசுற ஸ்லாங்கு செம. ஆனா ஒரு கடல் பன்னிய பக்கத்துல வச்சிக்கிட்டு எவர் க்ரீன் கவுண்டமணி செந்தில் காமெடிகள இமிட்டேட் பண்றத தான் பொறுத்துக்கவே முடியல்.

சத்யராஜூக்கு வர்ற ஒரு BGM ah தவிற யுவன் பெருசா ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.  “பூஜை ஒண்ணு போடப்போறானே” பாட்டு மட்டும் சூப்பர். மத்தபடி எல்லா பாட்டுமே ஏற்கனவே கேட்ட ட்யூன்கள். அதுவும் “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது” ட்யூன அப்பட்டமா அடிச்சி “தேவதையை தேட தேவையில்லையே”ங்குற ட்யூனா போட்டுருக்காரு. ஏன் யுவன் bhai இப்புடி? BGM பெரும்பாலான காட்சிகள்ல இரைச்சலே மிஞ்சுது. 

படத்துல 50 ஃபைட்டுக்கு ஒரு 5 ஃபைட் கம்மி. Action unlimited ன்னு கேள்விப்பட்டிருக்கோம். அது இதானாலே... ஆனா ஒவ்வொரு ஃபைட்டும் தெறிக்குது. வில்லனும் ஆள் செம கெத்தா இருக்கான். கெத்தா இருக்கவன அடிச்சி வேட்டிய அவுத்தா தானே நம்ம ஹீரோக்களுக்கு கெத்து. விஷால் அத சிறப்பா செய்யிறாரு. விஷால் ஆளும் சூப்பர் நடிப்பும் ஓக்கே. காதல் காட்சிகள் கொஞ்சம் தான்னாலும் ரெண்டு மூணு சீன் நச்சின்னு இருக்கு.

ஹரி சார்.. உங்களால இதே கதைய வச்சி இன்னும் இருபது படம் கூட எடுக்கக்கூடிய கெப்பாகுட்டி இருக்குன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். ஆனா தயவுசெஞ்சி கொஞ்சம் வேறு ஒரு புது கதையை கண்டுபிடிச்சி அத வச்சி ஒரு அஞ்சி படம் எடுக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மொக்கை காட்சிகளுக்காக மரங்களை வெட்டித் தள்ளுவது ஹரிக்கு வாடிக்கையாயிருச்சி. தாமிரபரணில பைசா பேராத ஒரு காமெடிக்கு ஒரு பெரிய தென்னை மரத்த வெட்டி காலி பண்ணிருவாய்ங்க. இதுலயும் ஒரு கார் போய் மோதுவதற்காக ஒரு பனை மரம் அடியோட விழுது. Behind the scene எத எத காலி பண்ணாங்களோ தெரியால ஆன படத்துல தேறாத காட்சிகளுக்கு மரங்கள் விழும் போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

எது எப்டியோ, வழக்கமான ஹரி படங்களைப் போலவே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு படம். சூப்பர் டூப்பர்ன்னு எல்லாம் சொல்ல முடியலைன்னாலும் கண்டிப்பா ஒரு காட்சி கூட போர் அடிக்காது. 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Thulasidharan V Thillaiakathu said...

ஸோ வழக்க்கமான ஹரி ஸ்டைல்! ம்ம்ம்ம் ஹரி நலே ஜெட் அண்ட் விறு விறு தான் அழ்கா சொன்னீங்க...ஒரு சீன் நல்லாருக்கா இல்லையானு தீர்மானிக்கறதுக்குள்ள் அ அடுத்த சீனுக்குள்ள இழுத்துடறாங்கனு....டிபிக்கல் ஹரி படம்...நல்ல விமர்சனம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...