10. பன்னையாரும் பத்மினியும்
பெரிய ஆரவாரமோ
அலட்டலோ இல்லாத ஒரு அழகான படம். சின்ன வயசுல கார்கள் ஊருக்குள்ள வரும் போது எனக்கெல்லாம்
அப்டித்தான் இருக்கும். அது பின்னாலயே போறது. எப்படா அந்த ட்ரைவர் அண்ணேன் நம்மள ஏத்துவார்னு
காத்துகிட்டு இருந்த டைமெல்லாம் உண்டு. (இப்ப மட்டும் என்ன BMW கம்பெனி ஓனராவா ஆயிட்டன்னு
நீங்க கேக்குறது புரியிது) அட்டக்கத்தி தினேஷ் பத்மினியோட கதைய சொல்லி முடிச்சிட்டு,
கார் வந்ததும் தன்னோட சொந்த கார கூட விட்டுட்டு பத்மினில ஆசையா ஓடிப்போய் ஏறி உக்காந்து
போறது செம ஃபினிஷிங்.
9. தெகிடி :
ஒரு ராஜேஷ்குமார்
நாவலை படமா பாத்த உணர்வு. குறைந்த பட்ஜெட்ல
எடுக்கப்பட்ட சில நல்ல படங்கள்ல இதுவும் ஒண்ணு. சில விஷயங்களை கணிக்க முடிஞ்சாலும்,
கடைசி வரை சுவாரஸ்யமா கொண்டு போனது சூப்பர்.
சுந்தர்.சியோட
ஃபார்முலாவுல ஒரு பேய் படம். ஆனா வழக்கமான அரைச்ச மாவையே இரண்டாவது பாதில அரைக்காம
கொஞ்சம் புதுசா எதாவது செஞ்சிருந்தா இந்த வருஷத்தோட மிகப்பெரிய ஹிட்டா இந்தப் படம்
அமைஞ்சிருக்கும்
7. மெட்ராஸ்
ரொம்ப நாளுக்கு
அப்புறம் கார்த்திக்கு ஒரு ஹிட். தமிழ் சினிமாவுல இப்ப இருக்க ஒரு சில நல்ல நடிகர்கள்ல
கார்த்தியும் ஒருத்தர். அவர ஒழுங்கா யூஸ் பண்ண படம்னு இத சொல்லலாம்.
6. யாமிருக்க பயமே
பெரிய பெரிய நடிகர்
பட்டாளங்கள்லாம் இல்லாம, காமெடிய மட்டும் நம்பி வெளிவந்து ஜெயிச்ச ஒரு சூப்பர் படம்.
முழுக்க முழுக்க
ராஜ்கிரனை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்ட படம். கிராமத்து அப்பாவி தாத்தாவா காமெடியும்
சரி, செண்டிமெண்டும் சரி பூந்து விளையாடிருப்பாரு.
4. சதுரங்க வேட்டை
Brilliant ஆன திரைக்கதையில,
இன்னிக்கு நம்மூர்ல நடக்குற ஏமாத்து வேலைகளையெல்லாம் ரொம்ப சுவாரஸ்மா சொன்ன படம். நட்ராஜுக்குள்ளயும்
இப்படி ஒரு சூப்பர் நடிகர் இருக்காருன்னு உணர்திய படம். கடைசில அவர் கோபுர கலசத்தப்
பத்தி மூச்சி விடாம சொல்ற விஷயங்கள்ள படத்துல அத கேக்குறவருக்கு மட்டும் இல்லை. நமக்குமே
புல்லரிக்கும்.
3.ஜிகர்தண்டா
இந்த வருஷத்துல
வந்த படங்கள்லயே சிறந்த திரைக்கதையுடைய படம்னு இத சொல்லலாம். ஒவ்வொரு சீன்லயும் ஒவ்வொரு
கேரக்டர்லயும் அவ்வளவு தெளிவு. முதல் பாதில நமக்கு உறுத்தலா படுற சில விஷயங்கள் கூட
ரெண்டாவது பாதில பாக்கும் போது சரிதான்னு தோணிரும். என்ன இந்த சித்தார்த் முகத்த தான்
கொஞ்சம் சகிச்சிகிட்டு பாக்க வேண்டியிருந்துச்சி.
நா ஏற்கனவே ஒரு
பதிவுல சொன்ன மாதிரி அஜித்த வச்சி ரொம்ப சூப்பரா எடுக்கனும்னு அவசியம் இல்லை. அறுக்காம
எடுத்தால படம் நல்லாருக்கும். அதே மாதிரி தான் இந்தப் படமும். ரொம்ப வித்யாசமான முயற்சிக்கெல்லாம்
போகாம அஜித்த வச்சி, எஃபெக்டிவ்வா ஒரு படம். கொஞ்சம் கூட போர் அடிக்காத மசாலா படம்.
சென்ற வருஷத்தோட
தொடர் தோல்விகளுக்கு பிறகு, தனுஷோட செம கம் பேக் படம். தனுஷோட 25 படங்கள்ல்லயும் பெஸ்டுன்னு
கூட சொல்லலாம். மக்கள் ஒரு ஹீரோவ எந்த அளவுக்கு ரியல் லைஃப் கேரக்டரோட தொடர்பு படுத்திக்கிறாங்களோ
அந்த அளவு அவர எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பிக்கும். அப்படி பாக்கும் போது தனுஷ் அந்த
பாதையில முன்னேறி போயிட்டு இருக்காரு. ஒரு கொக்கி குமாரோ, கே.பி.கருப்போ இல்லை ரகுவரனோ
வானத்துலருந்து குதிச்ச template ஹீரோக்களா இல்லாம இயல்பா இருக்கது தான் அதோட வெற்றிக்கு
காரணமே.
(கோலி சோடாவ காணும்னு சில பேர் வெறியாயிருப்பீங்களே.
இன்னும் கோலி சோட பார்க்காத என்னை மன்னிச்சிருங்க யுவர் ஹானர்)
மனம்
அப்புறம் இந்த
வருசத்துல பாத்த ”மனம்” ங்குற தெலுங்கு படத்த பத்தி சொல்லியே ஆகனும். குடும்ப படம்னு
கேள்விப்பட்டுருக்கோம்ல அது இதுதான். நாகர்ஜூனாவோட மொத்த குடும்பமும் நடிச்ச படம்.
நாகர்ஜூனாவோட அப்பா நாகேஷ்வரராவோட கடைசி படமும் இதுவே. இந்த வருஷம் ரிலீஸ் ஆன தெலுங்கு
படங்கள்லயே பெஸ்டு இதுது தான். பார்க்காதவங்க நிச்சயம் பாருங்க. கதைய தெரிஞ்சிக்காம
பாத்தீங்கன்னா, நிச்சயம் அந்த படத்தோட தீமே உங்களுக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். இந்த
feel good படம்ன்னு சொல்லுவாங்களே.. இந்த படத்த பாத்தா அத நீங்க ஃபீல் பண்ணுவீங்க.
ஒரே ஒரு கஷ்டம் என்னன்னா நாகர்ஜூனாவோட மொத பையன், தொரந்த வாயன் நாக சைதன்யா மூஞ்ச தொடர்ந்து பாக்க
கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அத மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.
1 comment:
இது உங்களுக்கு பிடிச்ச வரிசைனு எடுத்துக்கிறேன்!! ஆமா எங்க லிங்கா வை காணும்!!!!!!!!!!!!!! ஒ! நடுநிலைமை !!! புத்தாண்டு வாழ்த்துகள்!
Post a Comment