Thursday, January 15, 2015

ஆம்பள - தாறுமாறு!!!


Share/Bookmark
ஆஹா வந்துட்டான்ய்யா.. சுந்தர்.சி படம்னா இவன் விமர்சனம்ங்குற பேர்ல ”படம் பட்டைய கெளப்புது, அனல் பறக்குது ஆவி பறக்குதுன்னு ஓவரா build up குடுப்பானே”ன்னு வெறித்து ஓடும் நண்பர்களே. இந்த தடவையும் எனக்கு வேற வழியே இல்லை. இந்த படமும் பட்டைய கிளப்புதுங்குறது தான் நிஜமான உண்மை. உண்மையான truth.

வழக்கம் போல ஹீரோ வருவதற்கு முன்னால ஒரு build அப்பு. அப்புறம் ஹீரோயின் வர்றதுக்கு ஒரு பில்ட் அப்புன்னு தனித்தனியா ஒவ்வொருத்தருக்கும் நேரம் வேஸ்ட் பண்ண விரும்பாம முதல் காட்சியிலிருந்தே ஆடியன்ஸ் அவர்கிட்ட என்ன எதிர்பார்க்குறாங்களோ அதுக்குள்ள நுழைஞ்டுறாரு. முதல் மூணு நிமிஷத்துலயே விஷால், ஹன்சிகா ரெண்டு பேரயும் உள்ள கொண்டு வந்து அவங்களுக்கு லவ் லைனயும் அடிச்சி விட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சந்தானத்தையும் உள்ள இறக்கி ஆட்டத்த ஆரம்பிச்சிடுறாரு தலைவர் சுந்தர்.சி

சமீபத்தில் விஷாலுக்கும் நடிகர் சங்கத்துக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தது எல்லாருக்கும் தெரியும். படம் ஆரம்பிக்கும் போதே ஒரு பஞ்ச்சோட ஆரம்பிக்கிறாரு. படத்துல ஒருத்தர பாத்து விஷால் “உங்க வேலைய நீங்க கரெக்டா செஞ்சா நா ஏன் இந்த வேலைக்கு வர்றேன்” ன்னு வசனம் பேசி முடிக்கும் போது produced by “VISHAL” ன்னு கெத்தா பேர் போடுறாங்க.

க்ளீஷே ஆகாத ஒரே விஷயம் காமெடி மட்டும் தான். இந்தாளு என்ன வித்தை பண்றாருன்னே தெரியல. ஒரே டைப் காமெடி தான் திரும்ப திரும்ப எடுக்குறாரு. ஆனா செமையா இருக்கு. வழக்கம் போல ஒரு கார் chasing. மனோபாலா DSP. சந்தானமும் இன்ஸ்பெக்டர். இதுக்கு மேல என்ன வேணும். சந்தானம் counter அடிச்சி தள்ளுறாரு. ஒரு சீன்ல சந்தானம் சுடுறது குறி தவறி மனோபாலா back la குண்டு பாய்ஞ்சிருது. மத்த போலீஸ்காரனுங்க உடனே மனோபாலாவ ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போகும்போது, “டேய் ஏண்டா ஹாஸ்பிட்டலுக்கெல்லாம் போறீங்க. அந்த இடத்துல சதை இருந்தா தானே ப்ரச்சனை. அங்க வெறும் எலும்பு தான் இருக்கு. குண்டு எலும்புக்குள்ளதான் சொருவினு இருக்கும். ரெண்டு தடவ உக்காந்து எழுந்தாருன்னா கீழ விழுந்துரும்” ன்னு கலாய்க்கிறாரு.

சந்தானம் வர்ற முதல் அரை மணி நேரமும் கேப் இல்லாத காமெடி. இந்த தடவை சுந்தர்.சி யோட ஹீரோ சித்தார்தோ, மிர்ச்சி சிவாவோ இல்லை. விஷால்ங்குறதால அவர் பாடிக்கு தகுந்தா மாதிரி சில பல ஃபைட்டுகள வைக்க வேண்டிய கட்டாயம். ஆனா அந்த ஃபைட்டர்ஸ கூட காமெடிக்கு யூஸ் பண்ண தலைவரால மட்டுமே முடியும். ரொம்ப நாளுக்கு அப்புறம் கனல் கண்ணன், பைட்டுலயும் சரி காமெடிலயும் சரி. கலக்கிருக்காரு.  

சந்தானம் கழண்ட உடனே, சதீஷ், ப்ரபு, விஷால், வைபவ் கூட்டணி அமைச்சி காமெடி பண்ண ஆரம்பிக்கிறாங்க. சதீஷ வச்செல்லாம் சுந்தர்.சி நம்மள சிரிக்க வைக்கிறாரு. பெரிய விஷயம் தான்பா. சும்மா லவ் பண்ணி காமெடி ஃபைட்டுன்னு பண்ணிகிட்டு இருந்த விஷாலுக்கு அப்பா ப்ரபு, அத்தை பொண்ணத்தான் கல்யாணம் பண்ணனும்னு ஒரு டார்கெட் குடுக்குறாரு. ப்ரபுவோட மகன்களான விஷால், வைபவ், சதீஷ் மூணு பேரும் சண்டைக்கார அத்தை பொண்ணுங்கள கரெக்ட் பண்ற process la இறங்குறாங்க. மூணு பசங்களுக்கு வசதியா மூணு அத்தைகள். மூணு அத்தைகளுக்கும் மூணு அழகான பொண்ணுங்க.

அத்தை வீட்டுக்குள்ள பித்தலாட்டம் பண்ணி உள்ள போற விஷால் & ப்ரதர்ஸ் (தெலுங்கு பட பாணியில்) அந்த வீட்டுல உள்ள ப்ரச்சனைகளை சரி பண்ணி, பிரிஞ்சவங்கள சேத்து எப்படி அத்தை பொண்ணுங்கள உசார் பண்றாருங்குறது தான் மீதிக் கதை.


மூணு அத்தைகளா ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா. அத்தைகளுக்கு உள்ள வீட்டோட புருஷன்களா ஸ்ரீமன், அபிஷேக் மற்றும் கெளதம். விஷால் கூட்டத்துக்கு ஆள் சேக்குற ஏஜெண்ட். மத்த ரெண்டு அத்தை பொண்ணுங்கள கரெக்ட் பண்ண ப்ளான் பன்ற வைபவ் & சதீஷ். சந்தானம் இன்ஸ்பெக்டர். அவரோட பாஸ் மனோபாலா. இந்த செட்டப்ப பாத்தாலே உங்களுக்கு படத்துல காமெடி எந்த லெவல்ல இருக்கும்னு புரியும்.

பொதுவா சுந்தர்.சி படம் பாக்க போகும் போது, என்கூட படம் பாக்க வர்றவங்கிட்ட “சுந்தர்.சி பேர் போடும் போது கைதட்டனும் ஓக்கேவா” ன்னு சொல்லி தான் அழைச்சிட்டு போவேன். (இதெல்லாம் ஒரு பொழப்பான்னு கேக்குற உங்க மைண்ட் வாய்ச ஐ ஆம் கேட்ச் பண்ணிட்டேன்) இந்த தடவையும் அப்படித்தான் சொல்லி அழைச்சிட்டு போனேன். அதே மாதிரி அவர் பேர் போடும் போது,  தியேட்டர்லயே அதுக்கு கைதட்டுனது நாங்க ரெண்டு பேரு தான். ஆனா படம் ஆரம்பிச்ச அப்புறம், படம் முடியிற வரைக்கும் ஒவ்வொரு சீனுக்கும் மத்த எல்லாரும் கைதட்டி என்ஜாய் பண்ணாங்க. அங்க நிக்கிறாரு சுந்தர்.சி.

ஹிப் ஹாப் தமிழாவோட மியூசிக்ல அஞ்சி பாட்டுமே ஏற்கனவே ஹிட். பழகிக்கலாம் பாட்டு அதுல இன்னும் கலக்கல். BGM உம் காட்சிகளுக்கு நல்லா எடுக்குற மாதிரி தான் போட்டுருக்காரு. ஹன்சிகா அருமை. அவ்வளவுதான் இங்க சொல்ல முடியும். மத்தத நீங்களே பாத்து தெரிஞ்சிக்குங்க. ப்ரபுக்கு செம ஜாலியான கேரக்டர் கொஞ்சம் செண்டிமெண்டும் கலந்து. விஷால் அவரோட கேரக்டர் ரொம்ப அசால்ட்டா பண்ணி அசத்திருக்காரு. 

”ஹைய்யோ.. விஷாலா.. அவன் படத்தையெல்லாம் யாராவது பாப்பாங்களா? எதோ தெலுங்கு படம் மாதிரி ஆளுங்கள அடிச்சி பறக்க விடுறான். இதெல்லாம் எனக்கு சுத்தமா புடிக்காது. இந்த regular commercial movies ன்னாலே எனக்கு ரொம்ப அலர்ஜி ya” ன்னு சீனப்போட்டுக்கிட்டு இருந்தா ஒரு நல்ல படத்த மிஸ் பண்ணிடுவீங்க.


சுருக்கமா சொன்னா இன்னொரு கலகலப்பு படம் பாத்த எஃபெக்ட். ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் கேப்பில்லாத காமெடி கலக்கல். நீங்க வாய்விட்டு சத்தம்போட்டு சிரிக்க ஒரு ரொம்ப நல்ல சந்தர்ப்பம். நிச்சயம் மிஸ்பண்ணாம பாருங்க. 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Unknown said...

உன்னை நம்பி படம் பாக்க போறேன்

Manimaran said...


கலகலப்பை விட நன்றாக இருந்தது போன்ற உணர்வு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...