நிறைய முறை சில
ஆங்கிலப் படங்களைப் பாத்து ”என்னடா இவிங்க இப்டி இருக்காய்ங்க…” ன்னு வாயப் பொளந்ததுண்டு.
பிரம்மாண்டம்ங்குறது ஒரு பக்கம் இருந்தாலும் இப்படியெல்லாம் கூட யோசிக்கமுடியுமான்னு
யோசிக்க வச்ச படங்களே நிறைய இருக்கு. அந்த வகையில, டைம் ட்ராவலைப் பற்றிய படங்களுக்கு
முக்கியமான பங்கு இருக்கு. நேத்து நைட்டு என்னோட தூக்கத்த கெடுத்த ஒரு டைம் ட்ரவால்
பற்றிய ஒரு படம்தான் இந்த Predestination.
முதல்லை இந்தப்
படத்தைப் பற்றி விளக்க வேண்டுமேயானால் தசாவதாரம் ஸ்டைல்ல சில நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்வது அவசியமாகிறது. ஆங்கிலப்படங்கள்ல ஊறிக்கிடக்குறவங்க இங்கு ஏராளாம். அதனால சிலருக்கு என்னடா இந்தப்
இவன் இப்பதான் இங்கயே வர்றானான்னு இந்த பதிவ படிக்கும்போது சிரிப்பு கூட சிரிப்பு வரலாம்.
எதோ நமக்கு எட்டுனது வரைக்கும் எழுதுவோம்.
2009 ல Moon ன்னு
ஆங்கிலப்படம் வந்துச்சி. ஒரே ஒருத்தர் மட்டும் நடிச்ச படம். லூனார் இண்டஸ்ட்ரிஸ்ங்குற
கம்பெனி மூலமா, நிலவுல இருக்க பவர் ரியாக்டரோட operations எல்லாத்தையும் தனியா கவனிச்சிக்குற
வேலையில ஒருத்தர், நிலவுல தங்கி இருப்பாரு. மூணு வருஷ காண்ட்ராக்ட் முடிஞ்சி இன்னும்
ரெண்டு வாரத்துல பூமிக்கு கிளம்புறதுக்காக காத்திருப்பாரு. மனைவி மற்றும் குழந்தையப்
பாக்கப்போற சந்தோஷத்துல அவங்க வீடியோ, அவங்க பேசுன ஆடியோ எல்லாத்தையும் போட்டு கேட்டுக்கிட்டு
ஹாப்பியா இருப்பாரு. அங்க அவருக்கு துணைன்னு பாத்தா ஒரே ஒரு பேசுற மிஷின் மட்டும் தான்.
ஒருநாள் ஒரு ரியாக்டர்ல எதோ ப்ரச்சனைன்னு வண்டிய எடுத்துட்டு போறவரு அங்க ஒரு விபத்துல
மாட்டிக்கிறாரு.
கட் பன்னி ஓப்பன்
பன்னா பெட்ல படுத்துருக்காரு. அந்த மெஷின் அவர் கிட்ட “ஒரு சின்ன மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க..
வேற ஒண்ணும் இல்லை”ன்னு சொல்லுது. இவர் கொஞ்சம் நார்மல் ஆகி திரும்ப அந்த ரியக்டர்
பக்கம் போகும்போது, யாரோ ஒருத்தர் அங்க கார்ல மாட்டிக்கிட்டு இருக்கது தெரியிது. யாருன்னு
பாத்தா, அங்க ஆக்ஸிடெண்ட்ல மாட்டியிருக்கதும் அவரே. அவர காப்பத்தி ட்ரீட்மெண்ட் குடுக்குறாரு.
பின்னால அவங்களுக்குள்ளயே யார் ஒரிஜினல்ங்குற பிரச்சனை வர, அப்புறம் தான் தெரியிது
அவங்கள மாதிரியே பல க்ளோனிங்க் உடல்கள் அந்த ஸ்பேஸ் ஸ்டேஷன்ல இருக்கது. யாராவது ஒருத்தர்
இறந்துட்டா, அந்த பேசுற மிஷின் ஆட்டோமேட்டிக்கா அடுத்த க்ளோன ஆக்டிவேட் பன்னி வேலைய
பாக்க வச்சிடும். கடைசில அந்த ஸ்பேஸ் ஸ்டேஷன்லருந்து எப்படி அவர் தப்பிச்சி வீட்டுக்கு
வர்றாரு, வர்றவருக்கு ஊர்ல என்ன சர்ப்ரைஸ் காத்துருக்க்குங்குறது தான் அந்தப் படம்.
இந்தப் படத்தோட அப்பட்டமான காப்பிதான் 2013 la டாம் க்ரூஸ் நடிச்சி வந்த Oblivion.
என்ன இது கொஞ்சம் ஹைடெக்கா எடுத்துருப்பாய்ங்க.
அடுத்து 2000 ல
வந்த Frequency ங்குற ஒரு படத்த பத்தி கொஞ்சம் பாக்கலாம். 1999 ல ஒரு கொலைகேஸ கண்டுபுடிக்க
முடியாம கஷ்டப்படுறாரு ஒரு டிடெக்டிவ். அதுக்கு parallel ah முப்பது வருஷத்துக்கு முன்னால
1960s இருக்க ஒரு அப்பா, பையனோட ட்ராக்கும் ஓடுது. அந்த அப்பா ஒரு fire fighter. பையன்
ஸ்கூல் படிச்சிட்டு இருப்பான். திடீர்ன்னு ஒருநாள் அந்த அப்பா ஒரு ரேடியோவுல எதோ ட்யூன்
பன்னும்போது யாரோ ஒரு ஆள் பேசுறாங்க. யாருன்னு அவரு விசாரிக்கும்போது தான் தெரியிது,
பேசுறது 1999 ல இருக்க அந்த டிடெக்டிவ்னு. அந்த டெடிக்டிவ் வேற யாரும் இல்லை அவரோட
சொந்த பையன் தான்.
30 வருஷத்துக்கு
அப்புறம் இருக்க அவரோட பையனோட, தினமும் 1969 ல இருக்க அப்பா பேசிட்டு இருப்பாரு. இப்படி
அந்த ரேடியோவுல பேசி, பேசி 1969 ல இருக்க அப்பாவோட உதவியால அந்த சீரியல் கில்லர கண்டுபுடிக்கிறாரு
டிடெக்டிவ். நா இந்தக் கதையை செம்ம மொக்கையா சொல்லிருக்கேன். ஆனா உண்மையிலயே படம் செமையா
இருக்கும். அப்பாவுக்கு 1969 ல கிடைச்ச ஒரு எவிடென்ஸ 1999 ல இருக்க பையனுக்கு குடுக்கனும்.
எப்படி குடுக்குறது. அதுக்கு ஒரு சீன் வச்சிருப்பாய்ங்க பாருங்க செம.
அடுத்து 2012 ல
வந்த looper ன்னு ஒரு படம். டைம் ட்ராவல் கான்செப்ட செம எஃபெக்டிவ்வா யூஸ் பன்னி வெளிவந்த
ஒரு செம்மை படம். அந்த படத்த பாத்துட்டு நாட்டாமை பட கவுண்டமணி மாதிரி “நா ஒரு செம
படம் பாத்துட்டேண்டோய்… அந்தக் கதைய நா இப்ப யார்கிட்டயாவது சொல்ல வேணும் டோய்.. அத
சொல்லலன்னா என் மண்டை வெடிச்சி போயிரும்டோய்” ங்குற ரேஞ்சில அலைஞ்சேன். அந்தக் கதைய
அடுத்தவங்ககிட்ட சொல்லவே எனக்கு அவ்வளவு புடிக்கும். உங்களுக்கு ஒருக்கா சொல்றேன்.
வெறிக்காதீங்க. நா சொல்லப்போறது படத்தோட முதல் பத்து நிமிஷ கதையத் தான்.
2075 ல டைம் ட்ராவல்
மிஷின் கண்டுபுடிப்பாய்ங்க. 2075 ல யாரையாவது படக்குன்னு கொன்னுட்டா, அங்க பாடிய டிஸ்போஸ்
பன்றது ரொம்ப கஷ்டமாயிடும். அதனால இந்த கேங்ஸ்டர்களெல்லாம், யார் யாரை கொல்லனுமோ, அவங்களையெல்லாம்
அந்த டைம் மிஷின்ல 2044 க்கு அனுப்பிருவாங்க. 2044 ல இருக்க loopers ங்குற paid
killers அவிங்கள கொன்னு பாடிய டிஸ்போஸ் பன்னிடுவாங்க. இந்த loopers குரூப்புக்கு
head, 2075 லருந்து 2044க்கு வந்த ஒருத்தன். டைம் மிஷின்
2075 கண்டுபிடிச்சதால, 2075 லருந்து 2044 க்கு ஆளுங்க வர முடியும். ஆனா 2044 ல டைம்
மிஷின் கண்டுபுடிக்காததால இங்கருந்து யாரும் அங்க போக முடியாது.
2044 ல இருக்கவிங்களுக்கு
யாரை கொல்லப்போறோம்னு தெரியாது. முகத்த மூடி தான் அனுப்புவாய்ங்க. கொன்னதுக்கு அப்புறம்
செத்தவன் முதுகுக்கு பின்னால சில்வர் பார் இருக்கும். அதான் இந்த loopers க்கு சம்பளம்.
சில சமயம், செத்தவனுக்கு பின்னால சில்வர் பிஸ்கெட்டுக்கு பதிலா தங்க பிஸ்கெட் இருந்தா
சேகர் செத்துட்டான்னு அர்த்தம். அவனை அவனே கொன்னுட்டான்னு அர்த்தம். அதாவது 2044 ல
இருக்க looper, அவனோட 2075 ல இருக்க உடலை கொன்னுட்டான்னு அர்த்தம். அப்டி நடந்தா
loop closed ன்னு சொல்லுவாய்ங்க.
உடனே அவன சங்கத்துலருந்து
விடுவிச்சி, அந்த தங்ககட்டியெல்லாம் எடுத்துக்கிட்டு மிச்சம் இருக்க காலத்த ஜாலியா
இருக்க சொல்லிருவாய்ங்க. சப்போஸ், அவனோட loop ah கொல்லாம தப்பிக்க விட்டுட்டா, அந்த
loopers குரூப்புல உள்ளவிங்க ரெண்டு பேரையும் கொன்றுவாய்ங்க. இதான் படத்தோட முதல் பத்து
நிமிஷம். இப்போ ஹீரோ அவனோட loop ah சுடும்போது, 2075 லருந்து வந்த அவனோட லூப் எஸ்கேக்
ஆயிருது. ஏன் எஸ்கேப் ஆகுது. ரெண்டு பேரும் எப்படி எஸ் ஆவுறானுங்கன்னு நாம மூக்குல
விரல் வைக்கிற மாதிரி சொல்ற படம் தான் இந்த Looper.
இப்போ வர்றோம்
நம்ம மெயின் பிக்சருக்கு. இந்த looper ah எல்லாம் தூக்கி சாப்புடுற மாதிரி வந்துருக்க
படம் தான் இந்த Predestination. தேடினேன் வந்தது படத்துல கவுண்டர் ஒரு வசனம் சொல்லுவாரு
“இவரு பையன் என் பையன் மாதிரி.. என் பையன் இவுரு பையன் மாதிரி… நானே இவருக்கு பையன்
மாதிரி… இவரே எனக்கு பையன் மாதிரி” ன்னு. இந்தக் காமெடிய ஆஸ்திரேலியாவுல எவனோ ஒருத்தன்
பாத்துட்டு, அத ஒன் லைனா வச்சி எடுத்த படம் தான் இந்த predestination. மொதல்ல கவுண்டர்கிட்ட
சொல்லி அவிங்க மேல கேஸ் போட சொல்லனும்.
சத்தியமா இந்த
படத்த பாத்துட்டு நைட்டு ரொம்ப நேரம் தூக்கமே வரல. “யார்ரா நீங்க.. எங்க உக்காந்துடா
யோசிக்கிறீங்க”ன்னு நினைச்சிட்டே படுத்துருந்தேன். Looper eh ஒரு ரேஞ்சுன்னா, இது அதுக்கும்
மேல. பின்னி பெடலெடுத்துருக்காய்ங்க. முதல் நாப்பது நிமிஷம் எதோ நார்மலா போற மாதிரி
தான் இருக்கும். ஆனா அப்புறம் குடுக்குறாய்ங்க பாருங்க சர்ப்ரைஸூ.. மிரட்டல்.
மேல சொல்லிருக்க
Frequency, Looper படங்களைப் பாக்காதவங்க அதப் பாத்துட்டு அப்புறம் இந்த predestination
ah பாத்தா நல்லது. இல்லைன்னு மொதல்ல இதப் பாத்துட்டு அந்தப் படங்களை பாத்தா, “த்தூ..
இவ்ளோதானா” ன்னு அந்தப் படங்கள் மேல மதிப்பு கம்மி ஆயிடும். மொதல்ல சொல்லியிருக்க MOON
படம் டைம் ட்ராவல் பற்றிய கதை இல்லை. ஆனா அதுக்கும் இந்த predestination க்கும் ஒரு
சின்ன ரிலேஷன் இருக்கு அதான் கொஞ்சம் உள்ள இழுத்துப் போட்டேன்.
சர்ப்ரைஸ் உங்களுக்கு
ரொம்ப பிடிக்கும்னா கண்டிப்பா இந்த படத்த மிஸ் பண்ணாம பாருங்க. மிரண்டுருவீங்க.. எனக்கு இந்த படத்த suggest
பன்ன, நண்பர் கரிகாலன் அன்பரசுக்கு நன்றிகள் பற்பல.
10 comments:
Pre-Destination is adapted from Robert Heinlein's "All You Zombies". you would think this novella cannot be adapted but the predestination team has done a extraordinary job.
I saw the moon and looper, let me see the predestination, thanks for suggestion.
I saw the moon and looper, let me see the predestination. thanks for suggestion
I saw the moon and looper, let me see the predestination. thanks for suggestion
Looper download link pls :)
saw Looper and Frequency. IMHO Frequency is better than Looper.Thanks for introducing this titles.
அட்டகாசமான பதிவு...
Nice,
Thanks for recommending,
It's very good film
Vel.
இதற்காகவே இந்த படத்தை downloadசெய்து பார்த்தேன்.... உண்மையிலேயே ஆச்சர்ய பட வைத்த படங்களில் இதுவும் ஒன்று.
இதே போல் வேறு ஏதேனும் படங்கள் இருந்தால் கூறவும்.
Triangle என்ற படமும் time loop சம்பத்தப்பட்டது. இதுவும் கிட்டத்தட்ட predestination மாதிரி இருக்கும். கண்டிப்பாக இதையும் பார்க்கவும்.
http://en.wikipedia.org/wiki/Triangle_%282009_British_film%29
Prominently there are 2 characters in Predestination. (i) Agent (ii) His boss (Noah Taylor). But, you can remake this movie by making his boss character also into that "Agent" character and make only one character in the whole movie :)
Post a Comment