மிகப்பெரிய ஹிட்டான
படத்துக்கு மட்டுமே சீக்குவல் எடுக்க நினைக்கிற இடத்துல, ரொம்பவே ஆவரேஜா போன முனி படத்துக்கு
ரெண்டாவது பார்ட் எடுத்து, அத செம ஹிட்டாக்குனது லாரன்ஸோட மிகப் பெரிய சாதனை தான்.
சரியா போகாத படத்துக்கே அடுத்த பார்ட் எடுத்தவரு, சூப்பர் ஹிட்டான காஞ்சனாவுக்கு அடுத்த
பார்ட் எடுத்ததுல பெரிய ஆச்சர்யம் ஒண்ணும் இல்லை. எனக்கு தெரிஞ்சி தமிழ் சினிமாவுல
மூணாவது பார்ட் ரிலீஸ் பண்ண முதல் படம் இது தான்னு நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல
”தாம்பரத்துக்கும் செங்கல்பட்டுக்கும் நடுவுல, ஆவடிக்கும் அம்பத்தூருக்கும் நடுவுல,
அதுக்கும் இதுக்கும் நடுவுல” ன்னு காய் மூய்னு கத்திக்கிட்டு இன்னொரு மூணாவது பார்ட்
படம் வரப்போகுதுங்குறது வேற விஷயம்.
காஞ்சனாவுலயே படம்
முடியும் போது முனி-3 எடுக்கப் போறதுக்கான ஒரு சீன வச்சிருந்தாரு லாரன்ஸ். ஆனா அடுத்த
பார்ட் எடுக்கப்போறதுக்கான க்ளூ குடுக்குற எல்லா படங்களுக்கும் நிச்சயம் அடுத்த பார்ட்
வரும்னு நிச்சயம் சொல்ல முடியாது. மக்கள்கிட்ட அந்தப்படம் எப்படி ரீச் ஆகுதுங்குறத
பொறுத்தும், அந்தப்படம் எவ்வளவு லாபம் தருதுங்குறதப் பொறுத்தும் மாறுபடும். உதாரணத்துக்கு
1989 ல தக்காளி C சீனிவாசன், பிரபு, அமலாவ வச்சி எடுத்த ”நாளைய மனிதன்” படம் நல்லா
போனதுனால, அதோட அடுத்த பாகமான “அதிசய மனிதன்” ங்குற திகில் படத்த எடுத்து ரிலீஸ் பன்னாறு.
அந்தப் படத்தோட கடைசிலயும் தொடரும்னு போட்டு தான் முடிச்சாரு. ஆனா அதிசய மனிதனால ஏற்பட்ட
நஷ்டத்துல அடுத்த பகுதி எடுக்குற முயற்சிய விட்டுட்டாரு.
ஆனா லாரன்ஸ் சொன்ன
மாதிரியே அடுத்த பாகத்த எடுத்து சொல்லி அடிச்சிருக்காப்ள. இதுல இன்னொரு நோட் பண்ண வேண்டிய
விஷயம் என்னன்னா, படத்துக்கு பெரிய ஹீரோ படங்களுக்கு இருக்குற மாதிரி செம First day ஓப்பனிங். செக்ண்ட் ஷோவுக்கு கூட, ஃபுல்லா
குழந்தை குட்டிங்களோட ஃபேமிலி ஆடியன்ஸ். சரி இப்போ காஞ்சனா 2 வ பத்தி கொஞ்சம் பாப்போம்.
திகில் படங்கள்னாலே,
ஒரு பெரிய பங்களா, அங்க போய் வாலண்டியரா போய் தங்குற ஒரு குரூப்பு, ஒவ்வொருத்தரா சாகுறது,
முன்னால பேய தேடிட்டு திரும்பும்போது டக்குன்னு அது நம்ம பின்னால நிக்கிறதுன்னு மக்கள
பயமுறுத்த சில டெம்ளேட் சீன்கள்தான் இருக்கு. ஹாலிவுட்ல கூட திகில் படங்கள்னா இப்பவும்
இதே ஃபார்முலாதான். எப்பவும் ஜெயிக்கிற ஃபார்முலாவும் கூட. அதே ஃபார்முலாவுல வந்துருக்க
அடுத்த படம் தான் நம்ம காஞ்சனா 2.
ஒரு டிவி சேனலோட
டிஆர்பி ரேட்டிங்க ஏத்துறதுகாக, பேய் இருக்குறதா பொய் சொல்லி ஒரு ப்ரோக்ராம் பன்னலாம்னு
கேமராமேன் லாரண்ஸ், டைரக்டர் டாப்ஸி, லைட் மேன் மனோபாலா டாக்டர் ஸ்ரீமன் உள்ளிட்ட ஒரு
படப்பிடிப்பு குழு பாண்டிச்சேரி போற வழியில, பீச் ஓரமா இருக்க ஒரு பயங்கரமான பங்களாவ
செலக்ட் பண்ணி போறாங்க. போய் இருக்கமாதிரியான சில சீன்கள இவங்களே க்ரியேட் பண்ணி ஷட்டிங்
எடுத்துகிட்டு இருக்கும்போது, உண்மையான பேய் வேலையைக் காட்ட ஆரம்பிக்குது.
காஞ்சனாவுல நம்மள
பயமுறுத்துனத காட்டிலும் இதுல பல மடங்கு பயமுறுத்திருக்காங்க. சொல்லப்போன, தமிழ் சினிமாவுல
வந்த சிறந்த பேய் படங்களோட வரிசையில காஞ்சனா 2 வையும் சேத்துக்கலாம். முதல் பாதில அந்த
அளவு இண்ட்ரஸ்டிங்காவும், செமைய நம்மள பயமுறுத்தியும் கொண்டு போயிருக்காங்க. லாரண்ஸ
பயந்தவரா காட்டுற முதல் ரெண்டு மூணூ அருவை சீன்களை தவற, முதல் பாதில எல்லா சீனுமே செம.
காமெடியோ இல்லை திகிலோ ரெண்டுல எதையாவது ஒண்ண போட்டு நம்மள வாயடைக்க வச்சிடுறாங்க.
காஞ்சனாவுலயே ஸ்ரீமன்
காமெடில பின்னிருந்தாரு. அதே போல இந்தப் படத்துலயும். பத்தாததுக்கு, மயில்சாமி, மனோபாலா,
ஜாவா சுந்தரேசன், ஓகே ஓகே ஜாங்கிரின்னு எல்லாரையும் நல்லா யூஸ் பண்ணி காமெடியும் செமையா
வந்துருக்கு. இண்டர்வலலுக்கு அப்புறம் படத்தோட மொத்த செட்டப்பே மாறிடுது. முதல் பாதியில
இருந்த அத்தனை பேரும் மாறி, லாரன்ஸ், டாப்ஸி, கோவைசரளா, ரேணுகான்னு ஒரு சின்ன குரூப்புக்குள்ள
கதை சுத்த ஆரம்பிச்சிருது.
இண்டர்வல் முடிஞ்சி
ஒரு கால் மணி நேரத்துக்கு அப்புறம், காஞ்சனா 2 திகில் பட வரிசையிலருந்து நகர்ந்து,
சாதாரண மசாலா பட ரகத்துக்கு மாறிடுது. ஒவ்வொரு காட்சியையும் பாக்கும்போது, நாடாவுலருந்து
லேசா எலி செத்த வாடை. அப்படியே அந்த நாடாவ புடிச்சிக்கிட்டே அடுத்தடுத்த காட்சிகளைப்
பாத்தா நமக்கு தோணுறது என்னன்னா “ஆக மொத்தத்தில் இந்த நாடா நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட
நாடா… அப்டியே இந்தப்பக்கம் கொஞ்சம் திரும்பும்மா” ன்னு திருப்பிப் பாத்தா, அதே பழைய
காஞ்சனா.
கொஞ்ச நாளுக்கு
முன்னால “The Conjuring” ன்னு ஒரு படம் வந்தது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும். பயங்கரமான
பேய் படம். ஓப்பனா சொல்லனும்னா, இந்த காஞ்சனா 2 வோட முதல் பாதி, The conjuring க்கு
எந்த விதத்துலயும் குறைஞ்சது இல்லை. கேப்பே விடாம பயமுறுத்தி ஆடியன்ஸ நகர விடாம பண்ணிருவாய்ங்க.
ஆனா இப்போ Conjuring க்கும் காஞ்சனாவுக்கும் உள்ள ஒரு வித்யாசம் என்னன்னா,
Conjuring ல ஆடியன்ஸ பயமுறுத்தி, அந்த பயம் தெளியிறதுக்கு முன்னாலயே படத்த முடிச்சிருவாய்ங்க.
ஆனா காஞ்சனாவுல முதல்பாதியில உண்டாக்குன பயத்த ரெண்டாவது பாதியில அவிங்களே தெளிவ வச்சிடுறாய்ங்க.
படம் முடிஞ்சி வெளில வரும்போது ஒரு பயங்கரமான திகில் படத்த பாத்தோம்ங்குற ஒரு ஃபீலிங்கே
இல்லாம போயிடுது.
அதுவும் செகண்ட் ஹாஃப்ல மல்டிபிள் பேய்கள். ஒரு ஆளுக்குள்ள எத்தனை பேயிங்க? உடம்புக்குள்ள போறதுக்கு இடம் இல்லாம shift போட்டு பேயிங்க குடும்பம் நடத்துது. பெரிய கொடுமை, “கங்காவ உடம்புல ஏத்திக்கிட்டு நீ வெளிய வா... சிவாவ உடம்புல ஏத்திக்கிட்டு நீ வெளிய வா” ன்னுலாம் சொல்றாய்ங்க. என்னடா பேய மெமரி கார்டு போட்டு பாட்ட ஏத்துற மாதிரி சொல்றீங்க?
அதுவும் செகண்ட் ஹாஃப்ல மல்டிபிள் பேய்கள். ஒரு ஆளுக்குள்ள எத்தனை பேயிங்க? உடம்புக்குள்ள போறதுக்கு இடம் இல்லாம shift போட்டு பேயிங்க குடும்பம் நடத்துது. பெரிய கொடுமை, “கங்காவ உடம்புல ஏத்திக்கிட்டு நீ வெளிய வா... சிவாவ உடம்புல ஏத்திக்கிட்டு நீ வெளிய வா” ன்னுலாம் சொல்றாய்ங்க. என்னடா பேய மெமரி கார்டு போட்டு பாட்ட ஏத்துற மாதிரி சொல்றீங்க?
படத்துல ஒரு பெரிய
ப்ளஸ் S S தமனோட பிண்ணனி இசை. First half la பீதியக் கிளப்பி விட்டுடுது. ஆனா அதே பின்னணி இசை தான் ரெண்டாவது பாதியில நம்மோட
காதுக்குள்ள கடப்பாரைய விட்டு ஆட்டுது. க்ளைமாக்ஸலயெல்லாம் BGM மிடியல. நாலு பாட்டும் ஒவ்வொரு மியூசிக் டைரக்டர் போட்டுறுக்காங்க.
தமன் கம்போஸ் பண்ணிருக்க ”மொட்டைப் பையன்” பாட்டு மட்டும் சூப்பர். மத்ததெல்லாம் சுமார்
ரகம் தான்.
டாப்ஸி சில ஆங்கிள்ல
மட்டும் நல்லாருக்கு. மத்தபடி, டயலாக் பேசும்போதெல்லாம் மூஞ்ச பாக்க முடியல. கோவை சரளா,
வழக்கம்போல சூப்பர். ரேணுகா, நல்லா நடிச்சிருக்காங்கன்னு சொல்றதுக்கு பதிலா நல்லா சிரிச்சிருக்காங்கன்னு
சொல்லாம். ஃப்ளாஷ்பேக்ல வர்ற நித்யா மேனன் செம. ஆனா காஞ்சனாவுல சரத்குமார் ஃப்ளாஷ்பேக்
அளவு இந்த ஃப்ளாஷ்பேக்ல ஒரு impact இல்லை. லாரன்ஸ் ஆளு சூப்பரா இருக்காரு. காஸ்ட்யூமெல்லாம்
நல்லா இருக்கு. ஆனா, முனி முதல் பாகத்துலருந்து அவர் பயப்படுறமாதிரி பன்ற சில ஓவர்
ஆக்டிங் மட்டும் கொஞ்சம் சகிச்சிக்க முடியல. ஓப்பனிங் சாங் choreography வாய்ப்பே இல்லை.
லாரன்ஸோட ஒன் ஆஃப் த பெஸ்டு.
மொத்ததுல, லாரண்ஸ்
ஆடியன்ஸோட எதிர்பார்ப்ப நிச்சயம் வீணடிக்கல. கண்டிப்பா ஒருதடவ பாத்து பயப்படலாம். ரெண்டாவது
பாதிய இன்னும் கொஞ்சம் நல்லா குடுத்துருந்தா, காஞ்சனா 2 மிகப்பெரிய வெற்றிப்படமாயிருக்கும்.
1 comment:
எனக்கும் செம் பீலிங் தான் பாஸ்.... படம் சுமார்...ம்ம்ஹ்ம்ம்...சுமார் கூட இல்லை. சொதப்பல்....
Post a Comment