
ரெண்டு நாளுக்கு
முன்னால ரூம்மேட் ஒருத்தர்கிட்ட “ஜி.. கொம்பன் வருது போலாமா?” ன்னேன். உடனே அவன் பதறிப்போய்
“ அய்யயோ ஜீ.. அவன் குட்டிப்புலி டைரக்டர்ஜீ… அது ரொம்ப ஆபத்தான மிருகம். உயிருக்கு
உத்திரவாதம் இல்லை” ன்னான். “ஜீ கார்த்தி,
ராஜ்கிரனெல்லாம் இருக்காய்ங்கஜீ.. வாங்க ட்ரை பண்ணலாம்” ன்னு எவ்வளவு தான் மண்டைய கழுவிப்பாத்தாலும்
“எனக்கு ஏற்கனவே பாடி கண்டிஷன் சரியில்லைஜீ.. நீங்க வேற இதுக்கு அழைச்சிட்டு போய் பெட்
ரெஸ்ட் எடுக்க வச்சிடாதீங்க” ன்னுட்டான். என்னா உசாரா இருக்காய்ங்கய்யான்னு நினைச்சிட்டு
கடைசில தெலுங்கு படத்துக்கு போறது மாதிரி நா மட்டும் தனியா, நம்பிக்கையோட கொம்பனப்
பாக்கப் போனேன்.
ஒவ்வொரு டைரக்டருக்கும்
ஒரு கெப்பாகுட்டி இருக்கு. அந்த கெப்பாகுட்டி எந்த அளவு இருக்குங்குறத அவங்க முதல்
படத்துலயோ இல்லை அதிகபட்சம் ரெண்டு மூணு படங்கள்ல காமிச்சிருவாங்க. அதுக்கப்புறம் அவங்க
எத்தனை படம் எடுத்தாலும் அவ்வளவு தான் நாம எதிர்பாக்கனும். அதுக்கு மேல எதிர்பாத்தா
ஏமாற்றம் தான். அந்த மாதிரி இயக்குனர் முத்தையா தனது ரெண்டாவது படத்துல அவர் கெப்பாகுட்டி
என்னன்னு காமிச்சிருக்காரு. குட்டிப்புலி தான் அவரோட கெப்பாகுட்டி. அதுக்கு மேல நாம
அவர்கிட்ட எதிர்பாக்க கூடாதுன்னு செவுள்ல அடிச்சா மாதிரி ப்ரூவ் பண்ணிருக்காரு.
ஜிகிர்தண்டா படத்துல
First Half ல சங்கிலி முருகன் கேரக்டர் ஏண்டா வருதுன்னு நமக்கு உறுத்தலா இருக்கும்.
ஆனா செகண்ட் ஹாஃப்ல அவரை வச்சே ஒரு சூப்பர் சீன் பன்னிருப்பாங்க. அதுல அவரு “என்னோட
கதையை படமா எடுக்க ஒரு ப்ரோடியூசர் வந்தாரு. ஆனா அந்தப் படத்துல அவரோட சொந்தக்காரன்
ஒருத்தனை நடிக்க வைக்கனும் சொன்னாரு. நா முடியாதுன்னு கடைசி வரைக்கும் அடம் புடிச்சேன்.
கடைசில படம் எடுக்க முடியாதுன்னு அந்த ப்ரோடியூசர் பொய்ட்டாரு. நீ போய்யா உன்ன மாதிரி
ஆயிரம் ப்ரோடியூசர் எனக்கு கிடைப்பான்னு நினைச்சிக்கிட்டேன். ஆனா அதுக்கப்புறம் இப்ப
வரைக்கும் அந்த ஆயிரம் பேர்ல ஒருத்தன கூட நா பாக்கல. வாய்ப்பு ஒரு தடவ தான் வரும்.
அத ஒழுங்கா யூஸ் பன்னிக்கனும்” ன்னு சொல்லுவாறு.
கார்த்தி, ராஜ்கிரன்ன்னு
இன்னிக்கு தமிழ் சினிமாவுல இருக்க ரெண்டு பெரிய நல்ல நடிகர்கள இயக்குறதுக்கு வாய்ப்பு
கிடைச்சும் டைரக்டர் முத்தையா அத சரியா உபயோகிச்சிக்கலன்னு தான் சொல்லனும். கதை, திரைக்கதை
காட்சி அமைப்புன்னு எந்த விதத்துலயும் எதையுமே புதுசா மக்களுக்கு காட்டிறக் கூடாதுங்குறதுல
டைரக்டர் ரொம்ப ரொம்ப கவனமா இருந்துருக்காரு. எதுவுமே நம்மள பெருசா இம்ப்ரெஸ் பன்ன
மாட்டேங்குது.
வழக்கம்போல மீசையை
முறுக்கி விட்டுக்கிட்டு, (மதுரை ஸ்லாங்ல படிங்க) “என்னா லந்த குடுத்துக்கிட்டு இருக்காய்ங்க”
“ ஓவரா பேசுனா சங்க அறுத்து விட்டுவேண்டா..” ”அவியிங்கள செய்யாம விடக்கூடாதுடா” மாதிரியான
டெம்ளேட் மதுரை வசனங்களை பேசிக்கிட்டு திரியிற ஊர்க்காரய்ங்க மத்தியில சண்டியர் மாதிரி திரியிற ஒருத்தர் நம்ம குட்டிப்புலி.
ச்ச சாரி.. இது கொம்பன்ல.. ரெண்டுக்கும் வித்யாசம் தெரியாததால கன்பீஸ் ஆயிட்டேன். அட
ஆமாப்பா.. அப்டியே சசிகுமார் மொகரைக்கு பதிலா கார்த்தி மொகரைய வச்சா அதான்பா கொம்பன்
என்கிற கார்த்தி.
யாரப்பாத்தாலும்
செருப்பு காலோட தூக்கி நெஞ்சில நச்சுன்னு மிதிச்சிருவாப்ள கொம்பன். சண்டை வைக்கனும்னே
வாலண்டியரா ஒரு நாலஞ்சி குருப்பு வந்து வந்து இவன்கிட்ட வம்பிழுப்பாய்ங்க. அட போதும்பா..
கொம்பன் நல்லா அடிப்பாருன்னு சாரி நெஞ்சில மிதிப்பாருன்னு எங்களுக்கு தெரியும் விடுங்கப்பான்னாலும்
விட மாட்றாய்ங்க.
பக்கத்து ஊர்காரான
ராஜ்கிரன், அவர் மகளை கொம்பனுக்கு கல்யாணம் பன்னி கொடுக்க, அந்த ஊர் மேல உள்ள வெறுப்புலயும்,
ராஜ்கிரன் மேல உள்ள சில கடுப்புலயும் மாமனாரான ராஜ்கிரன கார்த்தி மதிக்கவே மாட்டேங்குறாரு.
ஒரு கட்டத்துல மகளுக்கு துணையா கார்த்தி வீட்டுலயே இருக்க ராஜ்கிரன அசிங்கமா பேசி அடிச்சி
அவமானப்படுத்தி கார்த்தி அனுப்பிட அதுக்கப்புறம் எப்படி ஒண்ணு சேர்ந்து, ஏற்கனவே இவிய்ங்க
உரண்டை இழுத்து வச்சிருக்க “சங்க அருத்துருவேண்டா” குரூப்போட சண்டை போட்டு எப்புடி
எஸ் ஆவுறாய்ங்கங்குறது தான் கொம்பன்.
இந்த மாதிரி அருவா,
ஊர்ப்பகைன்னு, கிராமத்து வெட்டுகுத்து டைப் படம்னாலே க்ளைமாக்ஸ யாரயாவது போட்டு தள்ளுவாய்ங்க.
இதுலயும் படம் பாக்கும் போது, யாரக் கொல்லப்போறாய்ங்க? ராஜ்கிரனா, கார்த்தியா, லட்சுமி
மேனனா இல்லை க்ளைமாக்ஸுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாகுறதுக்குன்னே அளவெடுத்து
தச்சா மாதிரி இருக்க தாய் மாமன் தம்பி ராமைய்யாவான்னு ஒரே கன்பீசன்ல இருந்தேன். ஆனா
செத்தது யார் தெரியுமா? சொல்லகூடாது சொல்லகூடாது அதெல்லாம் சொல்லகூடாது.
என்னதான் இந்தப்
படம் குட்டிப்புலி மாதிரி இருந்துச்சின்னு சொன்னாலும், குட்டிப்புலி அளவு மனுஷன வெறியாக்கல.
காரணம் ரெண்டே ரெண்டு. கார்த்தி & ராஜ்கிரனோட ஸ்க்ரீன் ப்ரசென்ஸ். கார்த்தி ஆளு
செம்ம கெத்தா இருக்காரு. இருக்குற ஏழெட்டு ஃபைட்டும் ஒரே மாதிரி தான் இருக்குன்னாலும்
பாக்க நல்லாதான் இருக்கு. இன்னும் கொஞ்சம் அழுத்தமான காட்சிகளும், வசனங்களும் வச்சிருக்கலாம்.
ஆள் இருக்க கெத்துக்கு படத்துல சீன்ஸ் இல்ல.
ராஜ்கிரன் உண்மையிலயே
கொடூர நடிப்பு. லட்சுமி மேனனோட அப்பாவா, கார்த்திகிட்ட அவமானப்படும்போதும் சரி, கார்த்திகிட்ட
அடி வாங்கிட்டு அழும்போதும் சரி அவர் முகத்த பாத்து நமக்கே அழுகை வருது. வாய்ப்பே இல்லை.
ரொம்ப நாளுக்கு அப்புறம், இந்த படத்துதோட செகண்ட் ஹாஃப்ல கார்த்தியும், ராஜ்கிரனும்
பேசுற ஒரு சீன்ல எனக்கு தியேட்டர்லயே கண்ணுல தண்ணி வந்துருச்சி. விட்டுறுங்க விட்டுறுங்க
வலிக்குதுன்னு நா நிறைய படத்துல அழுதுருக்கேன். ஆனா இந்த மாதிரி ஃபீலிங்ல அழுததில்லை
ஒரு சீன்ல, ஜெயில்ல
உள்ள கைதிகளையெல்லாம் உக்கார வச்சி படம் போட்டு காமிக்கிறாங்க. என்ன படம் தெரியுமா?
நம்ம தளபதியோட ஜில்லா. தண்டனை கிடைச்சிதான் ஜெயிலுக்குள்ள வந்துருக்காய்ங்க எல்லாரும்.
இன்செப்ஷன்ல வர்ற கனவுக்குள்ள கனவு மாதிரி தண்டனைக்குள்ளயே இன்னொரு தண்டனையா. பாவம்யா.
கார்த்தியோட அம்மாவா
வர்ற கொரியன் செட்டு கோவை சரளா பல இடங்களில் கேரக்டருக்கு பொறுந்தாத மாதிரி இருந்தாலும்
அப்பப்போ அடிக்கிற சில ஒன்லைன் கமெண்ட்டு நல்லா இருக்கு. கார்த்தியோட தாய்மாமனா தம்பி
ராமைய்யா. ஒரே ஒரு இடத்துல சிரிப்பு வந்த மாதிரி ஞாபகம் இருக்கு. ஒரு டம்மி கேரக்டர்ல
கர்னாஸ்.
கார்த்தி கெட்டப்புலயும்,
நடை உடை பாவனை அத்தனையிலயும் பருத்திவீரன ஞாபகப்படுத்துறாரு. லட்சுமி மேனன பாத்த குஜால்ல
அவர் பாடுற “அடி கருப்பு நிறத்தழகி” பாட்டும், கொரியோகிராஃபியும் அப்படியே ”ஒத்த சொல்லால”
ய ஞாபகப்படுத்துது. நாலு பாட்டுல மூணு ஓக்கே.
கருப்பு நிறத்தழகி செம.
இவ்வளவு நொள்ளை
சொல்லிட்டு எதுக்கு டைட்டில்ல கலக்கிட்டடா காப்பின்னு போட்டேனு கொஞ்சம் வெறியாயிருப்பீங்களே.
U for mistake. நா என்ன சொல்ல வந்தேன்னா பருத்திவீரன் ங்குற பால்ல, குட்டிப்புலி ங்குற
காப்பி தூளப் போட்டு, கார்த்தி, ராஜ்கிரண்ணு கொஞ்சம் சர்க்கரையை சேத்து கலக்கி நமக்கு
குடுத்தால கலக்கிட்டடா காப்பின்னு சொன்னேன்.
மொத்ததுல கொம்பன்
குட்டிப்புலி வெர்ஷன் 2.0 தான். ஆனா கார்த்தி மற்றும் ராஜ்கிரனோட ப்ரசென்ஸ் இந்த படத்த
அத விட கொஞ்சம் மேல தூக்கி விட்டுருக்கு அவ்வளவுதான். கண்டிப்பா பாக்கலாம். போர் அடிக்கல
ஆனா அதே சமயம் பெருசாவும் ஒண்ணும் இல்லை.
5 comments:
நா என்ன சொல்ல வந்தேன்னா பருத்திவீரன் ங்குற பால்ல, குட்டிப்புலி ங்குற காப்பி தூளப் போட்டு, கார்த்தி, ராஜ்கிரண்ணு கொஞ்சம் சர்க்கரையை சேத்து கலக்கி நமக்கு குடுத்தால கலக்கிட்டடா காப்பின்னு சொன்னேன். Semma explanation bro.... Super....
//கலக்கிட்டடா காப்பி//
என்னாது படம் ப்ரூ காப்பி வெளம்பரம் மா(தி)ரி இருக்கா?
Nice review ji 🙋 ...Waiting for ur review on Nanbenda and Sagaptham..
போர் அடிக்காம ஜாலி யா இருக்குல்ல ? அப்புறம் என்ன ஜி?
போர் அடிக்காம ஜாலி யா இருக்குல்ல ? அப்புறம் என்ன ஜி?
Post a Comment