Wednesday, August 19, 2015

வார்டன்னா அடிப்போம்!!!


Share/Bookmark
ஸ்கூல் படிக்கிற காலத்துல இருந்தே நாட்டைப் பத்தி யாராவது பேசும்பொழுது, ”மாற்றம் வேணும்னா இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்”, ”நாடு முன்னேறனும்னா இளைஞர்கள் நாட்டை ஆள வேண்டும்”, ”படித்தவர்கள் வரவேண்டும்” இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்பவரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. முன்னால அரசியல் பற்றிய ஆர்வம் வெகுசிலருக்கே இருந்ததாலும், அரசியல் பற்றிய தனிமனித நிலைபாடுகள் டீக்கடை பெஞ்சுகளோடு போய்விட்டதாலும் அதுமாதிரி சொல்லியிருக்கலாம். ஆனா இன்னிக்கு கிட்டத்தட்ட இளைஞர்கள் நேரடியாக அரசியலுக்கு உள்ள இறங்கலன்னாலும், சமூகவலைத்தளங்கள் மூலம் அவங்களுடைய அரசியல் பற்றிய நிலைபாடு என்னங்குறத தெளிவா சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க. இந்த நிலைபாடுகளைப்  பாக்கும்போது, ”இளைஞர்கள் வந்தா மாற்றம் வரும்” ங்குற நம்பிக்கை சுத்தமா போயிருச்சி.

பெரும்பாலும் இணையதளங்கள்ல அரசியல் பேசுறவியிங்க, 1925 லருந்து மொத்த இந்திய அரசியல் வரலாற்றையும் கரைச்சி குடிச்சா மாதிரிதான் பேசுவாய்ங்க. “காந்தி ஏன் நேருவ பிரதமரா போட்டாரு தெரியுமா?” “இந்திரா காந்திய ஏன் சுட்டாங்க தெரியுமா?” “பெரியார் இன்னா சொல்லிருக்காரு தெரியுமா?” “1975ல டில்லில என்ன நடந்துச்சின்னு தெரியுமா?” ன்னு ஒட்டுமொத்த இந்திய அரசியலும் அவிய்ங்க கைக்குள்ள இருக்க மாதிரிதான் நினைச்சிக்கிட்டு சுத்துறாய்ங்க. உண்மை என்னன்னு பாத்தா நாயி மொத்தமாவே ஒரு நாலு புத்தகத்த அங்கங்க மேஞ்சிட்டு வந்து இங்க பீலா விட்டுக்கிட்டு இருக்கும்.

 எந்த ஒரு விஷயத்தையும் கத்துக்கவோ தெரிஞ்சிக்கவோ ஆர்வம்ங்குறது ரொம்ப அவசியம். என்னைப் பொறுத்தவரை அரசியல்ங்குற விஷயத்து மேல ஆர்வம் பெரும்பாலும் இருந்ததில்லை. அதனால அவங்க படிச்ச அந்த நாலு புத்தகத்தை கூட படிக்காத, அரசியல் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாத (அவ்வ்) ஒரு சாதாரண மனிதனான நா கடந்த ரெண்டு மூணு வருஷங்கள்ள எனக்கு ஏற்பட்ட தாக்கத்தை பதிவு செய்யிறேன்.

நம்மூரப் பொறுத்த அளவு நல்லது நடக்குதோ கெட்டது நடக்குதோ, ஆனா எது நடந்தாலும் திமுக, அதிமுக இந்த ரெண்டு கட்சி மூலமா மட்டுமே நடக்கனும்னு எழுதி வச்சிட்டாய்ங்க. ஒரு தடவ இவுக இன்னொரு தடவ அவுக. இதுக்கு இடையில நாலஞ்சி அல்லக்கை கட்சிகள், எல்லாத்தையும் குறைசொல்லிக்கிட்டே, கடைசில எந்தப்பக்கம் லம்ப்பா தேறுதுங்குறத பாத்து, நாய் பொறைக்கு ஓடுறமாதிரி ஓடி ஒருபக்கம் சேந்துக்குறாங்க. கூட்டணிக்கு முன்னால வரைக்கும் ஊழல் பன்ற கட்சின்னு மேடைபோட்டு பேசிட்டு, கரெக்டா எலெக்‌ஷன் வர்ற சமயத்துல அவன் பின்னாடியே போய் தலையச் சொறிஞ்சிக்கிட்டு நிக்கிறதுன்னு அல்லுசில்லு கட்சிகள் எல்லாமே மானங்கெட்ட கட்சிகளாத்தான் இருக்கு.
இன்னும் சிலபேர் ”ரெண்டு பேருமே ஆட்டையப் போடுறாய்ங்க. ஆனா நம்ம ஓட்டு வேஸ்ட்டாகக்கூடாதுன்னு எந்தத் திருடன் சின்ன திருடன்னு பாத்து ஓட்டுப்போடுவோம்” ங்குற பாலிசியோட இருந்துட்டுப் போயிடுறாய்ங்க.

ஒரு கட்சி எலெக்‌ஷன்ல ஜெயிச்சி ஆட்சியப் புடிச்சிட்டா, மற்ற கட்சிகளோட பார்வையில அடுத்த அஞ்சி வருஷத்துக்கு அவங்க செய்யிற அனைத்துமே தப்பாகத் தெரியிது. எதிர்கட்சியா இருந்தாலுமே நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும்போது பாராட்டவும், சரியில்லாத திட்டங்களை விமர்சிக்கவும் செய்யனும். ஆனா இங்க ஆளுங்கட்சி எதுசெஞ்சாலும் மற்றவர்கள் பார்வையில அது தவறு. சுருக்கமா சொல்லனுமா “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது.. வார்டன்னா அடிப்போம்” கதைதான்.

இதுகூட பரவால்ல. ஆட்சி மாற்றம் நடக்கும்போது புதுசா பதவியேற்கிற கட்சி அதுக்கு முன்னால இருந்த கட்சி போட்ட திட்டங்களை தொடர விடுறதில்லை. இது சரியில்லை. அது தேவையில்லைன்னு கேன்சல் பன்னிடுறாய்ங்க. எது நல்லது கெட்டதுங்குறதத் தாண்டி இது எங்களால நடந்துச்சா இல்லை உங்களால நடந்துச்சாங்குறதுலான் எல்லாரும் குறியா இருக்காய்ங்க. ஒவ்வொரு கட்சிக்கும் அவியிங்க பன்றத நியாயப்படுத்தவும் அடுத்தவன கிழிச்சி தொங்கவிடவும் சொந்தமா ஒரு டிவியும் ஒரு நியூஸ் பேப்பரும்.

இப்போ வலைத்தளங்கள்ல இருக்க ஜூனியர் அரசியல்வாதிகளும் இதுல எந்த விதத்துலயும் வித்யாசப்பட்டவர்கள் இல்லை. அவர்களோட தற்போதைய வேலை என்னன்னா, திமுகவா இருந்தா அரசு என்னனென்ன பன்னிருக்காங்களோ அத்தனையும் நொள்ளை சொல்வதும், அதே அதிமுகவ இருந்தா அரசு செய்ற அத்தனையும் ”சிறப்பு” ”பருப்பு”ன்னு அடிச்சிவிடுறதும் மட்டுமே. காலங்காத்தால எழுந்து நியூஸ் பேப்பர்ல மொதநாள் எவன் எவன் என்னென்ன சொன்னாங்குறதயெல்லாம் பாத்துட்டு அத டைப் பண்ணி, அதுக்கு இவரோட ”டைமிங் சென்ஸ” காமிக்கிற மாதிரி ஒரு ஒன் லைன் கமெண்டு. இவ்வளவுதான்.

நாதாரித்தனம் பன்னும்போது தலையில குட்டுறதும், நல்லது செய்யிம்போது தட்டிக்கொடுக்குறதுமே நல்ல பண்பு. திமுக காரங்களப் பொறுத்தவரைக்கும் அதிமுக ஆட்சிக்கு வந்த இந்த நாலு வருஷத்துல எதுவுமே பண்ணல. அதிமுகவ பொறுத்தவரை போன அஞ்சி வருஷத்துல திமுக செஞ்ச எல்லாமே வேஸ்டு. இவ்வளவுதான் இவிய்ங்க அரசியல்.

கொஞ்ச நாள் முன்னால ஜெயலலிதா சிறையில இருந்தப்போ நாஞ்சில் சம்பத் ”அம்மா வர்றதுக்காகத்தான் புது பஸ்ஸூங்க எல்லாத்தையும் இயக்காம வச்சிருக்கோம். என்ன குடியா முழுகிப்போச்சி” ன்னாரு. இத திமுக காரய்ங்க பயன்படுத்திக்கிட்டாய்ங்களே தவற அதிமுக தொண்டர்கள் யாரும் அவருக்கு கண்டனம் தெரிவித்த மாதிரியோ அவர் பேசுனதுக்கு மறுப்பு தெரிவிச்ச மாதிரியோ தெரியல.

மினரல் வாட்டர் 20 ரூபாய் வித்துக்கிட்டு இருக்குது அதுனால அரசே குறைந்த விலைக்கு தண்ணீர் பாட்டில்கள் தரும்னு பத்து ரூவாய்க்கு அரசு தண்ணீர் பாட்டில்கள் அறிவித்து அத எல்லா பஸ் ஸ்டாண்டுலயும் வச்சாங்க. உடனே திமுக காரங்க “இலவசமாக கொடுக்க வேண்டிய தண்ணீரை காசுக்கு விற்பதா?” ன்னு ஒரு பொங்கல் பொங்குனாய்ங்க. ஏண்டா நீங்க அதக்கூட செய்யலையேடா. அப்புறம் பத்துரூவா தண்ணிய குறை சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?

அதே மாதிரி டக்ளஸ் அய்யாவுக்கு 90 வருஷமா வராத ஞான உதயம் போனமாசம் கழிவறையில் உக்கார்ந்து இருந்தப்போ வந்துருக்கு. “அநேகமா மதுவிலக்கு வந்தாதான் நாட்டைக் காப்பாத்த முடியும்”ன்னு சொல்றாரு. உடனே இம்சை அரசன்ல வடிவேலு “போர்” ன்னு சொன்னதும் “போர்” ”ஆமா போர்” மத்தவய்ங்க கத்துறமாதிரி நாய் பேயெல்லாம் “உடனே மதுவிலக்கு உடனே மதுவிலக்கு” ன்னு ஆரம்பிச்சிட்டாய்ங்க. போனமாசம் வரைக்கும் மூடிக்கிடந்த அறிவுக்கண்ண மடார்ன்னு டக்ளஸ் அய்யா தொறந்துவிட்டுட்டாரு. ஏண்டா அவரே என்ன பண்ணா அடுத்த வருசம் சீட்டுல உக்காரலாம்னு யோசிச்சி கிளப்பி விட்டுருக்காரு. அதக்கேட்டுட்டு இவய்ங்க குதிச்சிட்டு இருக்காய்ங்க.

இவய்ங்களையெல்லாம் கூட ஒரு கணக்குல சேத்துக்கலாம். ஆனா போன மாசம் வரைக்கும் “பயப்படாதீங்க பத்து மணிக்கு கடைய மூடுறதுக்குள்ள மீட்டிங்க முடிச்சிடுறேன்” ன்னு சொன்ன நாயெல்லாம் இப்ப உடனே மதுவிலக்கு வேணும்ங்குது.

நகரம் மறுபக்கம் படத்துல வடிவேலுகிட்ட ஹீரோயின லவ் பண்ணனும்னு சத்தியம் வாங்கிக்கிட்டு முத்துக்காளை செத்துருவாரு. “நா எப்புடிடா லவ் பண்றது?” ன்னு வடிவேலு அழும்போது குண்டு மனோகரன் “அண்ணே சும்மா லவ் பண்ணுங்கண்ணே.. அப்பதான் நம்ம டெய்லி பிஸியா இருப்போம்” ம்பான். அந்தக் கதைதான் நம்ம வைகோ அய்யா. அவருக்குத் தேவை தினமும் பிஸியா இருக்கனும். அவ்வளவுதான். ஒருமாசம் இந்தப்பக்கம் இருப்பாரு. இன்னொருமாசம் அந்தப்பக்கம் இருப்பாரு. மிச்ச நாள்லயெல்லாம் ஜெயிலுக்குள்ள இருப்பாரு. மதுவிலக்குக்கு போராடுவாறு. செத்தவனை தூக்க விடமாட்டாரு. சிகரெட் குடிச்சா தப்பு இல்லையாம். ஆனா மது அருந்தினால் தவறு. தொட்டு நக்குனாலும் அள்ளி திண்ணாலும்….  சரி விடுங்க அத ஏன் என் வாயால சொல்லிக்கிட்டு.


எல்லாத்தையும் விட நம்மாளுங்க திருந்தவே மாட்டாங்கங்குற ஒரு எண்ணம் வந்தது போனவாரம் ஈவிகேஎஸ் பேசுன பேச்சுக்கும் அதுக்கு நம்ம இளம் அரசியல்வாதிகளோட ரியாக்சனும்தான். ஒரு மாநில முதலமைச்சரும், ஒரு நாட்டோட பிரதமரையும் இவ்வளவு கேவலமா ஒருத்தன் ஒரு பப்ளிக் மீட்டிங்குல பேசுறான். அவன என்ன பன்னிருக்கனும்? நீங்க எந்தக் கட்சில இருந்தா என்ன? திமுகவோ அதிமுகவோ பாமகாவோ? அந்த தரங்கெட்ட பேச்சுக்கு கடுமையான எதிர்ப்ப காமிச்சிருக்கனுமா இல்லையா? அதவிட்டுட்டு, ”ஐ ஈவிகேஎஸ் ஜெயலலிதாவ தப்பா பேசிட்டாரு” ன்னு பல்ல காட்டிக்கிட்டு, அவங்களோட காமெடி சென்ஸ் மொத்தத்தையும் இதுல காமிக்கிறாய்ங்க. (நான் பார்த்த சிலர்) இன்னிக்கு அந்தம்மாவுக்கு நடந்ததுதான் மத்தவங்களுக்கும். சத்தியமா இவிங்கள பாத்தப்புறம்தான் எத்தனை வருசம் ஆனாலும் எதுவும் தேறாதுன்னு தோணுது.

எந்தக்கட்சியா இருந்தா என்ன? தப்புன்னா தப்புன்னு சொல்றதும், ரைட்டுன்னா ரைட்டுன்னு ஒத்துக்கிற மனப்பான்மையும் எப்ப வளருதோ அப்பதான் எதாவது முன்னேற்றத்துக்கான வழி தெரியும். இப்ப இருக்க எல்லா இணையதள அரசியல் பீரங்கிகளுமே, அதே சாக்கடையில் ஏற்கனவே இருக்கும் பன்றிகளுக்கு இடையில தங்களையும் நுழைச்சிக்கிட்டு அதே நாற்றத்தில் வாழ்ந்துகிட்டு அடுத்தவன் மேல அதே சாக்கடையை வாரி இறைக்கும் பணியைத்தான் செஞ்சிக்கிட்டு இருக்காய்ங்க. அவர்களால் எந்த வித பயனும் இருக்கப்போவதில்லை.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comment:

Alex said...

Super siva arasiyaluku vanthutinga pola

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...