Sunday, August 9, 2015

SRIMANTHUDU - சிறப்பு!!!


Share/Bookmark
ஆடியன்ஸ் பாகுபலி எப்போ ரிலீஸ் ஆகப்போகுதுன்னு எவ்வளவு ஆவலா எதிர்பார்த்தாங்களோ தெரியாது. ஆனா இந்த ஸ்ரீமந்துடு டீம் படத்த எடுத்து வச்சிகிட்டு, பாகுபலி எப்படா ரிலீஸ் பன்னுவாய்ங்க நம்ம எப்படா படத்த ரிலீஸ் பன்னலாம்னு காத்துக்கிட்டு இருந்தானுங்க. அதுவும் ஒரு வகையில கரெக்ட் தான். படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசம் ஆகியும் இன்னும் Week end la பாகுபலிக்கு டிக்கெட் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. படம் ரிலீஸ் ஆகுற அதே நாள் பலிங்கு குவாலிட்டில திருட்டு ப்ரிண்ட் ரிலீஸ் ஆகுற இந்த டைம்ல பாகுபாலியோட மாபெரும் வெற்றி உண்மையிலயே ஒரு பெரிய சாதனைதான்.

நா ஏற்கனவே பல தெலுங்கு பட பதிவுகள்ல எழுதிருக்க மாதிரி, தெலுங்குல ஒரு கதை ஹிட் ஆயிருச்சின்னா, அனைத்து ஹீரோவும் அதே கதையில ஒரு ரவுண்டு நடிச்சி முடிச்சாதான் விடுவாய்ங்க. போலீஸ் கேரட்டர வச்சி படம் ஹிட்டாச்சின்னா, அடுத்த ரெண்டு வருஷத்துல வர்ற அனைத்து பெரிய ஹீரோக்கள் படமும் போலீஸ் கதையாத்தான் இருக்கும். இதுக்கு கொஞ்சம் கூட கூச்சப்பட மாட்டாய்ங்க. “இதுல வெக்கப்பட என்ன இருக்கு? நீங்க ஒரு தடவ நடிங்க நா ஒரு தடவ நடிச்சிக்கிறேன். அட போங்க பாஸ்” தூக்கிப்போட்டு போயிக்கிட்டே இருப்பாய்ங்க.

2010 ல ஜூனியர் NTR நடிச்ச ப்ருந்தாவனம்ங்குற படம் ரிலீஸ் ஆகி செம ஹிட் ஆச்சி. அதுக்கப்புறம் இப்ப வரைக்கும் அதே மாதிரி ஒரு பத்து படம் வந்துருச்சு. அந்த படங்களோட அந்த பொதுன கதை இதுதான். சிட்டிலயோ இல்லை ஃபாரின்லயோ இருக்க ஒரு பணக்கார ஹீரோ, எதோ ஒரு ரீசனுக்காக ஹீரோயினோட கிராமத்துக்கு போவாரு. அங்க கே.எஸ்.ரவிக்குமார் படத்துல வர்ற மாதிரி ஒரு பெரிய்ய்ய்ய குடும்பம் இருக்கும். ஹீரோ போன கொஞ்ச நாள்லயே அந்த குடும்பத்தோட ரொம்ப க்ளோஸ் ஆயிடுவாரு. அங்க உள்ள ப்ரச்சனையெல்லாம் தீத்து வைப்பாரு. 

ஆனா அவரு பெரிய பணக்காரருன்னு மட்டும் யார்கிட்டயும் சொல்லமாட்டாரு. க்ளைமாக்ஸ்ல அதே குடும்பம் அவர வெளில போகச்சொல்லும் போது “அவரு யாரு தெரியுமா… அவரு எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா..” ன்னு அவரப்பத்தி பில்ட் அப் குடுக்க ஒரு அள்ளக்கை கூட இருப்பான். அப்புறம் அந்த குடும்பத்தோட பரம எதிரிய ஹீரோ அவரு எதிரியா நினைச்சி சண்டை போட்டு காப்பாத்துவாறு. பிருந்தாவனம், மிர்ச்சி, தம்மு, அத்தாரிண்டிக்கி தாரெதி, கோவிந்துடு அந்தரிவாடேலே உட்பட நிறைய படங்கள் இதே கதை தான்.

எல்லாரும் அதுல நடிக்கும்போது மகேஷ்பாபு மட்டும் சும்மா இருப்பாரா. “நானும் ஆந்தாராக்காரன் தாண்டா” ன்னு அதே கதைய கொஞ்சம் ஆல்ட்ரேஷன் பண்ணி, ஒரு ஃபீல் குட் டைப் ஸ்கிரீன் ப்ளேயோட குடுத்துருக்காரு. மகேஷ் பாபுவுக்கு Dookudu க்கு அப்புறம் வந்த நேன் ஒக்கடினே, ஆகடு ஆகிய ரெண்டும் அவ்வளவு சிறப்பா போகாததால, கண்டிப்பா ஹிட் அடிச்சே ஆகவேண்டிய சூழல்ல ரொம்ப கேர்ஃபுல்லாவே ஸ்கிரீன் ப்ளேவ பண்ணிருக்காய்ங்க.

ஆயிரம் கோடிரூபாய் சொத்துக்கு சொந்தக்காரரான ஜகபதி பாபுவோட ஒரே வாரிசு மகேஷ் பாபு. அப்பாவோட பிசினஸ்ல இண்ட்ரஸ்ட் இல்லாம அவருக்கு புடிச்ச விஷயங்களப் பண்ணிகிட்டு future la என்ன பன்னப்போறோம்ங்குற எந்த ஐடியாவும் இல்லாம இருக்காரு. அதுமட்டும் இல்லாம, நம்ம மட்டும் நல்லா இருந்தா பத்தாது நம்மகிட்ட வேலை பாக்குறவங்க, நம்மள சார்ந்திருக்கவங்க எல்லாருமே சந்தோஷமா இருக்கனும்ங்குற ஒரு நல்ல எண்ணதோட இருக்காரு. ஆனா ஜகபதி பாபுவுக்கு பையன் பிசினஸ பாத்துக்க வர மாட்டேங்குறானேங்குற கவலை.

அதே சமயம் ஒரு கிராமத்துல எந்த வசதியும் இல்லாம மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க. அந்த ஊர் அரசியல்வாதியான சம்பத் தண்ணி எல்லாத்தையும் அவரோட பீர் ஃபேக்டரிக்கு யூஸ் பண்ணிக்கிட்டு மக்களுக்கு எந்த வசதிகளையுமே செஞ்சி குடுக்காம கஷ்டப்பட வைக்கிறாரு. எதிர்த்து பேசுறவங்கள வழக்கமான கொடூர தெலுங்கு வில்லன்கள் மாதிரி “ஏசேயெண்ட்ரா வாடுனி” ன்னு போட்டுத்தள்ளிகிட்டு போய்கிட்டே இருக்காரு. அதனால ஒவ்வொரு குடும்பமா அந்த கிராமத்த விட்டு வெளியேறுறாங்க. இதப்பாத்து பொறுக்க முடியாத ஊர் பெரியவரான ராஜேந்திர ப்ரசாத் அந்த குடும்பங்கள அந்த கிராமத்துலயே இருக்க வைக்க முயற்சி பண்ணி தோத்து போயிடுறாரு.

இப்போ சிட்டில மகேஷ் ஒரு ஹாஸ்டல்ல சுருதியப் பாத்து ஃபீல் ஆயிடுறாப்ள. ரெண்டு பாட்டப் போட்டு லவ் பண்ணா கூல் ஆயிடுவாப்ள. ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருக்கும்போது, திடீர்னு சுருதிக்கு மகேஷ்பாபு ஜகபதிபாவுவோட பையன்னு தெரிஞ்சிபோய் ஷாக் ஆயி, அப்பதான் மகேஷ்பாபு கிட்ட “உங்க சொந்த ஊர்  இது இல்லை. அது” (அந்த ஊர் பேர் மறந்துபோச்சு) சொல்லி அவரோட அப்பா அந்த ஊர்லருந்து ஓடிவந்தவருன்னு சொல்றாங்க. உடனே நம்ம மகேஷ்பாபு வீட்டுல வோர்ல்டு டூர் போறதா சொல்லிட்டு அந்த கிராமத்துக்குப் போய் அத தத்தெடுத்துகிட்டு அதுக்கு தேவையான எல்லா உதவியையும் ஒரே பாட்டுல செஞ்சி குடுக்குறாரு. இதுக்கு குறுக்க வர்ற ரெண்டு மூணு வில்லன்கள தூக்கிப்போட்டு பந்தாடுறாரு. அம்புட்டுத்தேன்.

கதை அதே டெய்லர் அதே வாடகைதான்னாலும் மகேஷ் பாவுவோட நடிப்பும், வசனங்களும், காட்சி அமைப்புகளும் படத்த தூக்கி நிறுத்துது. தெலுங்கு படங்கள்ல வசனங்கள் எப்பவுமே பட்டையக் கிளப்பும். அது பஞ்ச் டயலாக்கா இருந்தாலும் சரி, செண்டிமெண்ட் வசங்களா இருந்தாலும் சரி. உதாரணமா மகேஷ் பாவு பிஸினஸ பாத்துக்கு முடியாதுன்னு சொல்லுவாறு. அதுக்கு ஜகபதி பாபு “டேய் ஆயிரம் கோடி ரூவாடா… அதுக்கு ஒரே வாரிசு நீ.. நீதான் பாக்கனும்”ன்னு சொல்லுவாறு. உடனே மகேஷ் “ஆமா உங்கப்பா என்ன தொழில் பன்னாறு.?” ன்னதும் ஜகபதிபாபு “விவசாயம்” ம்பாரு. “அப்ப நீங்க ஏன் விவசாயம் பாக்காம பிஸினஸ் பன்றீங்க? அதே மாதிரி நா எதுக்கு நீங்க பன்னதயே பன்னனும்னு எதிர்பாக்குறீங்க?” ன்னு சொல்லி வாயடச்சிருவாரு.

 இன்னொரு சீன்ல அஞ்சி ரவுடிங்க மகேஷ்பாபுவ சுத்தி நிப்பாங்க. முதல்ல அடிக்க வந்த ஒருத்தன கும்முன்னு வயித்த ஒரு பஞ்ச குடுத்து தூக்கி வீசுவாறு. உடனே ரெண்டாவது ஒருத்தன் அடிக்க வருவான். அவன நிறுத்தி “டேய்.. இந்த இடம் இங்க தான் இருக்கும். நானும் இங்கதான் இருப்பேன். என்ன நீ எப்ப வேணாலும் அடிக்கலாம். (அடிவாங்கிட்டு கீழ விழுந்தவனக் காட்டி) ஆனா அவன இன்னும் அஞ்சி நிமிஷத்துல ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போகலன்னா செத்துருவான்” ன்னு அசால்ட்டா சொன்னதும் மத்தவனுங்களுக்கு டர்ர் எடுத்து ஓடிருவானுங்க.

மத்த தெலுங்கு ஹீரோக்கள் மாதிரி மகேஷ்பாபு முகத்த அஷ்ட கோணலாக்கி “டேய் நேனு எவரு தெலுச்சா… மா ஃபேமிலி ஏண்டோ தெலுசா” ன்னு உயிர் போற மாதிரி வசனமெல்லாம் பேசமாட்டாரு. அதே மாதிரி பாடிலயும் ரொம்ப லாங்குவேஜ்லயும் ரொம்ப வித்யாசமெல்லாம் காமிக்க மாட்டாரு. முகமும் அப்டியேத்தான் இருக்கும். பாக்குறதுக்கு சவுக்கார்பேட்டையில திரியிற சேட்டு பையன் மாதிரித்தான் இருப்பாரு. ஆனா அசால்டா பேசுற அந்த டயாலாக் டெலிவெரிலதான் ஸ்கோர் பண்ணுவாறு. அதத்தான் நம்ம விஜய்ன்னா போக்கிரில முயற்சி பண்ணி நம்ம கழுத்த அறுத்தாரு.


ஃபைட்டு ஒவ்வொண்ணும் பட்டையக் கிளப்புது. அடி ஒண்ணும் இடி மாதிரி விழுகுது. கால் கை முறிக்கும்போதெல்லாம் எதோ அப்பளத்த நொறுக்குற மாதிரி ஒரு சவுண்டக் குடுக்குறாரு DSP. தமிழ்ல்லயாச்சும் ஹீரோக்கள் ஃபைட்டுல ரெண்டு மூணு அடி வில்லன்கிட்ட வாங்குவாங்க. ஆனா தெலுங்குல வாய்ப்பே இல்லை. 500 பேர் வந்தாலும் அசராம அடிப்பாங்களே தவிற ஒரு அடி ஹீரோ மேல விழுகாது. இந்தப் படத்துல இருக்க அஞ்சாரு ஃபைட்டுல மொத்தமாவே ஒரே ஒரு அடிதான் மகேஷ்பாபு வாங்குனாறு.

DSP யும் வழக்கம்போல அதே டெய்லர் அதே வாடகை. ஆனா பாட்டு எல்லாமே கேக்குற மாதிரிதான் இருக்கு. பிக்சரைஸேஷனும் சூப்பர். BGM க்கு நம்ம சிங்கத்துல போட்ட “சிங் கம்… ஹோ ஹோ” ங்குற அதே மீசிக்கையும் சிவாஜில வர்ற சோகமான BGM ஐயும் போட்டு விட்டுருச்சி. ஆனா DSP ராசிக்காரப்பய. அவன்போட்டாலே படம் செம ஹிட்டாயிருது. என்னது வில்லா? அட நா தெலுங்கச் சொன்னேன்.

சுருதி அவ்வளவு சிறப்புன்னு சொல்ல முடியாது. பரவால்ல. வாயில திரும்ப ஆப்ரேஷன் எதுவும் பன்னிருக்கும் போல. சற்று கண்றாவியாக உள்ளது.  கொடுமை என்னன்னா மகேஷ் பாபு பக்கத்துல எந்த ஹீரோயின் நின்னாலுமே சுமாரத்தான் தெரிவாங்க. படத்துல ப்ரம்மானந்தம் மிஸ்ஸிங். அதுமட்டும் இல்லை. காமெடியே மிஸ்ஸிங் தான். ஆலே ய வேஸ்ட் பன்னிருக்காய்ங்க.

இந்தப் படத்தோட டைட்டில் கார்டு எதோ அகர்பத்தி விளம்பரம் மாதிரியும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ல மகேஷ் பாபு நம்ம நாம் தமிழர் சீமான் மாதிரியும் கையத்தூக்கிட்டு நிக்கிறதையும் பாத்தப்போ கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. ட்ரெயிலரும் பெருசா இம்ப்ரஸ் பன்னல. ஆனாலும் படம் நிச்சயம் ஏமாத்தல.

முன்னாலயே சொன்ன மாதிரி இந்தப் படம் ஏற்கனவே வந்த சில படங்களோட கலவைதான். கிட்டத்தட்ட ரெண்டாவது பாதி மகேஷ்பாபு நடிச்ச ”கலேஜா” படம் மாதிரியும் இருக்கு. ஆனா, போர் அடிக்காத ஸ்க்ரீன் ப்ளே, அசத்தலான மகேஷ் பாபு ஆக்டிங்னு படம் நிச்சயம் பாக்குற மாதிரி தான் இருக்கு. கண்டிப்பா ஹிட்டுதான்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

rmn said...

டர்ர் எடுத்து ஒடிருவானுங்க
நகைச்சுவையான விமர்சனம்
விமர்சனம் படித்ததும் படம் பார்க்க தோன்றுகிறது.

Anonymous said...

It sounds like, my friend is talking to me about this movie.
I enjoyed this review very much.
Thanks.
Amarnath

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...