
ஒரு
படத்துக்கு கதை எப்படி இருந்தாலும், திரைக்கதையில
காட்சிகள முன்ன பின்ன வச்சி எவ்வளவு சாதாரண கதையையும் சுவாரஸ்யமாக்கிடலாம். ஒரு சிறந்த திரைக்கதையில காட்சிகளை முறைப்படுத்தி
present பன்றதும் ரொம்ப முக்கியம். அதனாலதான் நிறைய படங்கள்ல ஏற்கனவே ப்ரூவ் செய்யப்பட்ட
template ல சீன்ஸ வைப்பாங்க. உதாரணமா சமீபத்துல நிறைய மசாலா படங்கள்ல யூஸ் பன்னப்பட்ட
template பாட்ஷா வோடது. கதையமைப்ப இங்க நா சொல்லல. காட்சிகளோட வரிசை மற்றும் பாட்டு
எந்தெந்த இடத்துல வைக்கனும்ங்குற format. முதல்ல ஒரு இண்ட்ரோ சாங், கொஞ்ச நேர காமெடி, அப்புறம் இன்னொரு லவ் சாங், கரெக்ட்டா
இண்டர்வல் ப்ளாக் ஆரம்பிக்கப்போறதுக்கு முன்னால இன்னொரு லவ் சாங். பெரும்பாலான மசாலா படங்கள்ல இந்த சீக்வன்ஸ
பாக்கலாம்.
அதே
மாதிரி நம்ம படங்களுக்கு பாட்டு அவசியமான்னு நிறைய பேர் யோசிப்பாங்க. நம்ம ஊர்ல ரெண்டரை
மணி நேரம் படம் பாத்தே பழகிட்டோம். படம் சீக்கிரம் முடிஞ்சிட்டா எதோ நம்மள ஏமாத்தி
காச வாங்கிப்புட்ட மாதிரி ஒரு ஃபீல். அதுனால லென்த்தா போற காட்சிகளுக்கு நடுவுல ஒரு
சின்ன சின்ன ப்ரேக்குக்காகதான் பாட்டு. பாட்டு இல்லாத படங்களப் பாருங்களேன். முக்கால்
மணி நேரமே எதோ ரொம்ப நேரம் ஓடுற ஒரு ஃபீல் இருக்கும். ஏன் இப்புடி சம்பந்தம் சம்பந்தம்
இல்லாம ரம்பத்த போடுறேன்ன்னு வெறிக்காதீங்க. ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்கும்போது இப்புடி
எதையாச்சும் வச்சி ஆரம்பிக்கிறது வழக்கம்தானே. சரி நம்ம தங்க மகன கொஞ்சம் உரசிப் பாப்போம்.
வடிவேலு
தோசை ஆர்டர் பன்ற காமெடி எல்லாரும் பாத்துருப்பீங்க. சூடான தோசைக்கல்லுல நல்லா வரட்டு
வரட்டு வெளக்க மாற வச்சி வரட்டு வரட்டுன்னு தேச்சி ரெண்டு கரண்டி மாவ ஊத்தி, நாலு கரண்டி
நெய்ய அப்டியே ஊத்தி, கொஞ்சம் இட்லிப்பொடிய மழைச்சாரல் மாதிரி தூவி இப்டி ஒரு பெரட்டு
அப்டி ஒரு பெரட்டு பெரட்டி கொண்டுவா.. ”அண்ணனுக்கு
ஒரு ஆனியன் ஊத்தாப்பம் பார்சல்”.. அந்த பாணியில வேலையில்லா பட்டதாரி வெற்றிக்கு அப்புறம்
தனுஷுக்கும் வேல்ராஜூக்கும் ஒரு கான்வர்சேஷன் நடந்துருக்கு. அது என்னன்னு பாருங்க…
அதே ஸ்லாங்குல பண்ணுங்க
தனுஷ் : அண்ணேன் நாம இன்னொரு படம் இதே மாதிரி பன்னனும்ணே
வேல்ராஜ் : பன்னலாம் தம்பி
தனுஷ் : அந்தப்படம் எப்டி இருக்கனும்னா… இந்த ஆட்டோகிராஃப்ல
வர்ற மாதிரி வாழ்க்கையோட வேவ்வேற phase ah காட்டணும்னே
வேல்ராஜ் : சரி தம்பி
தனுஷ் : "3" படத்துல வர்ற மாதிரி லவ்வு செமையா இருக்கனும்ணே
வேல்ராஜ்
: சரி தம்பி…
தனுஷ்
: இந்த அஞ்சாதே படம் எனக்கு ரொம்ப புடிக்கும்னே.. அதுல வர்ற மாதிரி கூட இருக்க ஃப்ரண்டே
முதுகுல குத்துற மாதிரி ஒரு கான்செப்ட் இருக்கனும்
வேல்ராஜ்
: சரி தம்பி..
தனுஷ்
: அப்புறம் இந்த ஃபேமிலி ஆடியன்ஸ்லாம் பாக்குற மாதிரி குறிப்பா சீரியல் பாக்குற ஆண்டிங்கல்லாம்
வந்து பாக்குற மாதிரி நாலு அலுகாச்சி சீன் வைக்கனும். ஐ மீன் எமோஸன்
வேல்ராஜ்
: சரி தம்பி
தனுஷ்
: அப்புறம் வேலையில்லா பட்டதாரி மாதிரி இண்டர்வல்ல யாராவது ஒருத்தர மட்டை பண்ணனும். அப்பதான் இன்னும்
எமோஸன் ஜாஸ்தியா இருக்கும்ணே
வேல்ராஜ்
: பன்னிடலாம் தம்பி
தனுஷ்
: அப்புறம் நம்ம ஃபேன்ஸ்லாம் ரொம்ப ஃபீல் ஆயிடுவாங்க.. அவங்களுக்காக நாலு மாஸ் சீன்
வைக்கனும்ணே. முடிஞ்சா எதாவது பழைய ரஜினி பட டைட்டில் இருந்தா அதையும் வச்சிருங்கன்னே…
வேல்ராஜ்
: அண்ணனுக்கு ஒரு மொக்கைப்படம் பார்சல்…..
வேலையில்லா
பட்டாதாரி விமர்சனத்துல கதை முழுசும் ட்ரையிலர்லயே நமக்கு தெரிஞ்சிடும். ஆனாலும் படம்
கொஞ்சம் கூட நமக்கு போர் அடிக்கலன்னு சொல்லிருந்தேன். இங்கயும் கதை நமக்கு ட்ரையிலர்ல
முக்கால்வாசி தெரிஞ்சிடுது. படம் ஓடிக்கிட்டு இருக்கும்போதே அடுத்தடுத்து இதுவாத்தான்
இருக்கும்னும் தெரிஞ்சிபோயிடுது. ஓரளவு சஸ்பென்ஸா இருக்க வேண்டிய விஷயங்கள கூட நம்மளால
ஈஸியா கெஸ் பன்ன முடியிது.
பொதுவா
ஒரு படம் ஆரம்பிச்சி அதிலுள்ள கேரக்டர்கள்லாம் நமக்கு பதிஞ்ச அப்புறம்தான் நமக்கு அந்த
கேரக்டர்களுக்கு எதாவது ஒண்ணுன்னா ஆடியன்ஸூக்கு ஒரு தாக்கம் இருக்கும். ஐ மீன் படத்தோட
ஓப்பனிங் சீன்ல ஹீரோ அடிவாங்குனா நமக்கு எந்த ஃபீலும் இருக்காது. ஆனா படத்தோட க்ளைமாக்ஸ்ல
அடிவாங்குனா நமக்கும் அழுகை வரும். இங்க படம் ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிஷத்துலயே அழுகை
காட்சிகள், சோக காட்சிகள். ஆனா அதானால நமக்கு எந்த பாதிப்பும் இல்லாம போயிடுது.
கொஞ்சம்
மெதுவா ஸ்டார்ட் ஆனாலும் அடுத்து தனுஷ் எமி ஜாக்சன் லவ் சீக்வன்ஸ் ஸ்டார்ட் ஆனதும்
தியேட்டரே ஜாலியாயிடுது. ஒரு அரை மணி நேரம் தொடர்ந்து சிரிப்பும் கைதட்டலும்தான். சதீஷ
வச்செல்லாம் காமெடி பன்றது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் ரெண்டு பேரும் சேந்து நல்ல
சிரிக்க வச்சிருக்காங்க. ஆனா அதுக்கப்புறம் படுக்குற படம் கடைசி வரைக்கும் எழுந்திரிக்க
மாட்டுது. மட்டை.
ஆட்டோகிராஃப்
படம் பாக்கும்போது ரொம்ப நேரமா படம் ஓடிக்கிட்டே இருந்துச்சி. என்னடா இண்டர்வலே வரல..
ஒருவேளை இண்டர்வல் இல்லாம ஒரே அடியா படத்த முடிச்சிருவாய்ங்க போலன்னு நினைச்சி பாத்துக்கிட்டு
இருந்தேன். க்ளைமாக்ஸ் வந்துருச்சிபோலன்னு நினைக்கும்போது போட்டாய்ங்க இண்டர்வல்ன்னு.
அடப்பாவிகளா.. அதே மாதிரிதான் இங்கயும். இத்தனைக்கும் ஒன்னேகால் மணி நேரம்தான் ஓடுச்சி.
எமி ஜாக்சன் போர்ஷன் முடிஞ்சப்புறம் எப்படா இண்டர்வல் வரும்னு ஆயிருச்சி.
படத்துல
ஸ்கிரிப்ட விட மொக்கையான விஷயம் ஒண்ணு இருக்குன்னா அது நம்ம சமந்தாக்கா தான். “சாமி
முன்னாடி மட்டும்தான் நா சாந்தமா பேசுவேன்” ங்குற டயலாக்க பேசும்போது எப்புடி விஜய்
லிப்பே அசையாம பேசுவாறோ அதே மாதிரிதான் சமந்தா படம் முழுசும் பேசிக்கிட்டு இருக்கு.
சேலைகட்டி மூக்குத்தியெல்லாம் போட்டு சமந்தா கெட்டப் இருக்கே.. ப்ப்பா… நானும் ஆரம்பத்துல
அப்டி இருக்கும் போகப்போக பழகிரும்னு பாத்தேன். நடக்கலையே. கடைசிவரைக்கும் அதே பீலிங்.
நிறைய
ஏரியாக்கள ஒரே படத்துல கவர் பன்னும்னு ஆசைப்பட்டு இயக்குனர் படத்தோட போக்கையே மாத்திட்டாரு.
படம் எடுத்து முடிச்சப்புறம்தான் அனிரூத் இருக்கதே ஞாபகம் வந்திருக்கும்போல. அட அவன்
வேற சும்மா இருப்பானே..அவனுக்கு மீசிக் போடுறதுக்காவது ஒரு நாலு சீன் வேணும்னு கடைசில
மாஸ் சீன்ங்குற பேர்ல நாலு கப்பி சீன்ஸ். இதுல தமிழ்ப்பற்று வேற பொங்கி வழியிது.
“தமிழ்நாட்டுல
தெலுங்கு தோக்கலாம்.. கன்னடா தோக்கலாம்.. மலையாளம் தோக்கலாம்”.. ”பேசிக்கிட்டே இருப்பா
டீ குடிச்சிட்டு அப்புறம் பாக்கலாம்”னு நம்ம போய் டீய குடிச்சிட்டு வந்தாலும் ”சைனீஸ்
தோக்கலாம் , கொரியா தோக்கலாம்” ன்னு அதே டயலாக்குதான் ஓடிக்கிட்டு இருக்கு. யப்பா டேய்…
போதும்ப்பா.. நல்லதானடா போய்ட்டு இருந்துச்சி.. இப்ப ஏண்டா மொழிப்ப்ரச்சனையெல்லாம்
உண்டாக்குறீங்க.
அனிரூத்
நாலு பாட்டுல ரெண்டு ஓக்கே. அதுவும் “டக்குன்னு பாத்தா பக்குன்னு ஆவேன்” பாட்டு சூப்பரா
இருக்கு. நல்லாவும் எடுத்துருக்காங்க. முத்தம் மட்டுமே குடுக்குறதுக்காகவே இன்னொரு பாட்டு.
ஏம்பா எமி ஜாக்சன் நீங்க சொல்றதெல்லாம் கேக்கும்னு என்ன வேணாலும் பன்னுவீங்களா? மாரி
படத்துல தனுஷுக்கு வர்ற BGM ah அப்புடியே
இங்கயும் போட்டுருக்காங்க.
தனுஷ்
எப்பவும் போல சூப்பரா நடிச்சிருக்காரு. ஆனா என்ன காட்சிகள்லதான் ஒரு impact இல்லை.
முதல் பாதி சூப்பரா இருக்க இன்னொரு காரணம் தனுஷோட அப்பா அம்மாவா வர்ற ராதிகா, கே.எஸ்.ரவிக்குமாரோட
ஸ்க்ரீன் ப்ரசன்ஸ். எமி ஜாக்சன் செம அழகு. ஆண்ட்ரியா டப்பிங்க்ல நல்லாவே பேசிருக்கு.
தனுஷ் எமி ஜோடி சக்கரைப்பொங்கல் தயிர்வடை காம்பிஷேன்தான். ஆனாலும் ஒன்னும் தெரியல.
முதல்பாதி
சூப்பர்னு இண்டர்வல்ல எழுந்து போறவங்கள, செகண்ட் ஹாஃப்ல வாயே திறக்க விடாம கும்மு கும்முன்னு
கும்மி எடுக்குறாங்க. செகண்ட் ஹாஃப்ல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, திணிக்கப்பட்ட
காட்சிகளை கொஞ்சம் குறைச்சி வேற மாதிரி எதாவது பன்னிருந்தா வேலையில்லா பட்டாதாரி லிஸ்டுல
சேர்ந்திருக்க வேண்டிய படம்.
ஆனா
இப்ப தங்கமகன ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு ரகத்துலயே சேக்க வேண்டியதா இருக்கு. ஆனாலும் முதல்பாதிக்காக ஒருக்கா பாக்கலாம். சுருக்கமா
சொன்னா இன்னொரு ரஜினி பட டைட்டிலும் அவுட்டு.
2 comments:
"சுருக்கமா சொன்னா இன்னொரு ரஜினி பட டைட்டிலும் அவுட்டு. "
:))
தங்க மகனே ஒரு மொக்கைதான
Post a Comment