போன வருஷத்த கம்பேர் பன்னும்போது இந்த வருஷம் நமக்கு strike rate கொஞ்சம் அதிகம்தான். வழக்கம்போல இந்த வருஷமும் பலருக்கு புடிச்ச சில படங்கள் எனக்கு பிடிக்காமயும், பலர் வெறித்து ஓடிய சில படங்கள் எனக்கு புடிச்சும் இருக்கு. அதனால வழக்கம்போல நம்மள biased ன்னு சொல்றவங்க சொல்லிக்கலாம். விமர்சனங்களுக்கு தலைப்பை க்ளைக்கவும்
10. 49-ஓ & மாசு (எ) மாசிலாமணி
நீண்ட நாட்களுக்குப் பின் கவுண்டரின் அதே நக்கல் நையாண்டியுடனான கம்பேக். அதே சமயம் தேவையற்ற விஷயங்களை அதிகம் காண்பிக்காமல் எடுத்துக்கொண்ட கதையையும் கருத்தையும் தெளிவாகச் சொன்ன படம்.
அஞ்சானின் சருக்கலுக்குப் பிறகு சூர்யாவுக்கு ஒரு நல்ல படம். ஆனால் படம் பார்த்தவர்களை விட படம் பார்க்காதவர்களால் படு கேவலமாக விமர்சனம் செய்யப்பட்டு மரப்படுக்கைக்கு அனுப்பப்பட்ட படம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு வெற்றிப்படம். பெரும்பாலான காட்சிகளின் இயக்கம் சுந்தர்.சி யை ஞாபகப்படுத்தியது. சூப்பர் டூப்பர் நகைச்சுவையில்லை என்றாலும் ஓரளவுக்கு ஓக்கே.
8. ஆம்பள
விஷால் சுமோவில் பறக்கும் ஒரே விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இணையத்தில் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் என்னைப்பொறுத்த வரை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சிரிக்க வைத்த சுந்தர்.சி யின் அக்மார்க் நகைச்சுவைப் படங்களில் இதுவும் ஒன்று.
மீசை கூட சரியாக முளைக்காமல் இருந்த தனுஷை ரவுடியாக புதுப்பேட்டை படத்தில் ஏற்றுக்கொண்டவர்களுக்கு இந்தப் படத்தில் அவரை ரவுடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். இந்தப்படம் நல்லா இல்லை என்று சொன்ன ஒருவனிடம் ஏன் என்று காரணம் கேட்ட பொழுது “என்னண்ணே எல்லா சீனும் இன்ட்ரோ சீன் மாதிரியே இருக்கு.. எவ்வளவு நேரம் தான் கை தட்டுறது “ என்றான். ஏம்மா இதெல்லாம் ஒரு காரணமாம்மா?
சிறுத்தை சிவாவுடனான அஜித்தின் இரண்டாவது வெற்றி. பழைய கதை மற்றும் சற்று டொம்மையான இரண்டாவது பாதி என்றாலும் அஜித்தும், இயக்கமும் படத்தை தூக்கி நிறுத்தியது.
பேய்களை காமெடியாக்காமல் பேய்களுக்கான உரிய மரியாதையைக் கொடுத்து நம்மை பயமுறுத்திய படம்.
5. பாபநாசம்
இந்த வருடம் கமலுக்கு கைகொடுத்த ஒரே படம்
4. மாயா
நயந்தாராவின் சோலோ பர்ஃபார்மன்ஸில் நம்மை பயத்தில் உரைய வைத்த இந்த வருடத்தின் சூப்பர் திகில் படம்
3. காக்கா முட்டை
பீட்சாவுக்காக ஏங்கும் ஏழைச்சிறுவர்களுடன் நம்மையும் இயல்பாக பயணிக்க வைத்த சூப்பர் திரைப்படம்.
இந்தியாவின் அனைத்து ரெக்கார்டுகளையும் அடித்து நொறுக்கி வாயைப்பிளக்க வைத்த ராஜமெளலியின் ப்ரம்மாண்டம்
1. தனி ஒருவன்
”இந்த பையனுக்குள்ளயும் எதோ இருந்துருக்கு பாரேன்” என்று ரீமேக் ராஜாவைப் பார்த்து வியக்க வைத்த சூப்பர் படம்.
லிஸ்டுல 4 நயன்தாரா படங்கள் இருப்பதால் நயனுக்காக biased ah எழுதிருக்கேன்னு சொன்னீங்கன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.
2 comments:
இதில் வேதாளம், demandi colony தவிர வேறு எந்த படமும் நான் பார்க்கவில்லை. தனி ஒருவன் பார்க்க நினைத்தும் ஏனோ முடியவில்லை. எனக்கு உத்தம வில்லனும் என்னை அறிந்தாலும் பிடித்த படங்கள் டார்லிங் டிமாண்டி காலனியை விட எனக்கு பிடித்திருந்தது.
Top ten movies okay. Top down movies list eppo ? ;-)
Post a Comment