Friday, January 15, 2016

கதகளி – பழக்கப்பட்ட நாடா!!!


Share/Bookmark
ஒரு கதாநாயகனுக்கு ரெண்டு மாசத்துக்கு ஒரு படம் ரிலீஸ் ஆகுதுங்குறது பெரிய விஷயம் இல்லை. ஆனா அதே ஒரு இயக்குனருக்கு ரெண்டு மூணு மாச கேப்புல படம் ரிலீஸ் ஆகுறது மிகப்பெரிய விஷயம். சில இயக்குனர்கள் எவ்வளவு கேப் ஆனாலும் பரவால்ல சார். நல்ல கதைக்காக நான் வொய்ட் பன்றேன் சார் டைப். ஆனா சில இயக்குனர்கள ஒரு ரெண்டு மாசம் ஆளக்காணும்னு பாத்தா மூணாவது மாசம் எதாவது ஒரு படத்தோட ட்ரைலரோட வந்து நிப்பாங்க. பூரி ஜகன்நாத், சுசீந்திரன் போன்ற இயக்குனர்கள் இந்த கேட்டகிரி. வத வதன்னு எதாவது எடுத்துத் தள்ளிக்கிட்டே இருப்பாய்ங்க. அந்த வரிசையில அடுத்ததா சேர்ந்திருக்கது நம்ம பாண்டிராஜ். ரெண்டு வாரம் முன்னால தான் ஒரு படம் ரிலீஸ் ஆச்சு. இப்ப இன்னொரு படம். ஒரு படம் முழுசா எடுத்து ரிலீஸூக்கு ஆறு மாசமா காத்திருக்கு.

நம்ம விஷாலும் பாண்டிய நாட்டுக்கு அப்புறம் வேற மாதிரி ஆட ஆரம்பிச்சிட்டாரு. Full fledged  தெலுங்கு டைப் action unlimited படங்கள் இல்லாம ”ஆக்சன் படம் மாதிரியும் இருக்கனும் அதே மாதிரி பழைய படங்கள் மாதிரி இல்லாமயும் இருக்கனும். அப்ப நா பாண்டிய நாட்டையேத்தான் திரும்ப எடுக்கனும்” னு அதே மாதிரி கதை திரைக்கதையில கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டாரு. பாண்டிய நாடு டைப் படத்துல பாயும் புலிக்கு அப்புறம் வந்திருக்கதுதான் இந்த கதகளி.

மாமன் கதகளி ஆடி பாத்ததில்லைல.. இப்ப வந்து ப்ரீயா பாருங்க. இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் டைப் படம்ங்குறதால (அப்டித்தான் நெனைக்கிறேன்) கதையப் பத்தியோ காட்சிகளப் பத்தியோ ரொம்ப வெளாவரியா உள்ள போகத் தேவையில்லை. பொதுவாச் சொல்லனும்னா முதல் பாதி நல்லாவே இருக்கு. வழக்கமான பாண்டிராஜ் டைப் காதல் காட்சிகள். அங்கங்க சிரிப்பும் வர வைக்கிற கருணாஸோட ஒரு சில நகைச்சுவைகள்.

பசங்க படத்துல “சோபிக்கண்ணு” ன்னு ஒரு புது பேர இண்ட்ரோடியூஸ் பன்னி குடுத்த நம்மாளு இதுல மீனுக்குட்டின்னு இன்னொரு பேர இறக்கி விட்டுருக்காரு.. மீனுக்குட்டி வேற யாரும் இல்லை. நம்ம கேத்ரின் தெரெசா தான். அதுவும் ”மீனுக்குட்டி”ன்னு அந்தப்புள்ள வாயால சொல்லும் போது செம சூப்பரா இருக்கு. எந்தப் புள்ளை டப்பிங் குடுத்துச்சோ. முதல் பாதி முழுக்க ரொம்ப சீரியஸான காட்சிகள் எதுவும் வைக்காம விஷால் கேத்ரினை உசார் பன்றத காமெடியா வச்சி முடிச்சிட்டாங்க.


வழக்கமா ஹரி படத்துலயும் பாண்டிராஜ் படத்துலயும் உள்ள கடுப்பான விஷயம் கச கசன்னு ஃபோன்லயே பேசிக்கிட்டு இருப்பாய்ங்க. “அதுக்கும் இதுக்கும் எவ்வளவு தூரம்… காருக்கும் உங்களுக்கும் எவ்வளவு தூரம்… சென்னையிலருந்து தூத்துக்குடிக்கு ஃப்ளைட்டுல அஞ்சி நிமிசம்”ன்னு ஹரி படத்துல தொட்டதுக்கும் ஃபோன்லயே பேசிக்கிட்டு இருப்பாய்ங்க. அதே மாதிரிதான் இந்தாளு படத்துலயும். ”பசங்க”ல ஆரம்பிச்ச இந்த்ப் பழக்கத்த இன்னும் விடல. படத்துல விஷாலுக்கு ஒரு 500 ஃபோன் வந்துருக்கும். வக்காளி அந்த ஃபோன தூக்கி போட்டு உடைங்கடான்னு வெறியாயிருச்சி. மேலும் பசங்க, வம்சம் மாதிரியே இதுலயும் லவ் ட்ராக்கும் ஃபோன வச்சி தான் வருது.

நல்ல சுவாரஸ்யமா போற முதல் பாதில இண்டர்வல் முடியும் போது கரெக்ட்டா கதை சூடு புடிக்க ஆரம்பிக்குது.  ஒரு மணி நேரத்துல இண்டர்வல். பரவால்ல படம் நீட்டாதான்யா எடுத்துருக்காய்ங்கன்னு ரெண்டாவது பாதில வந்து உக்காந்தா நம்ம பொறுமைய ரொம்ப சோதிக்கிறாய்ங்க. எத்தனை பேரு சஸ்பெக்ட்ன்னு லிஸ்ட்ட நம்ம கிட்ட குடுத்துடுறாங்க. அவங்க குடுத்த ஆப்ஷன், குடுக்காத ஆப்ஷன் எல்லாத்தையும் வச்சி அத செஞ்சது யாரா இருக்கும்னு நம்மளே நிறைய கெஸ் பன்னி வச்சிருப்போம். பெரும்பாலானவங்க கரெக்ட்டா கெஸ் பன்னிடலாம்.

யார் அத செஞ்சதுன்னு தெரிஞ்சிக்க நாம ஆர்வமா இருக்கும்போது படத்த ஜவ்விழுப்பு இழுத்து கடைசில சற்று டொம்மை போல ஒரு க்ளைமாக்ஸ் வச்சி முடிக்கிறாங்க. அதுவும் ஒரு ஃபினிஷிங் டச் சும்மா வலுக்கட்டாயமா ஹீரோவுக்கு கெத்து காமிக்கனும்ங்குற நோக்குல வச்சா மாதிரி இருக்கு.

பெரும்பாலும் ஹீரோ யாரு.. ஹீரோவோட கெப்பாசிட்டி என்னங்குறத முழுசா முதல் பாதிலயே சொல்றது நல்லது. பல படங்கள்ல இண்ட்ரோ ஒரு ஃபைட்டு வைக்கிறதுக்கு காரணமும் ஹீரோவோட கெப்பாசிட்டி, அவர் எப்படிப்பட்டவர்ங்குறத விளக்குறதுக்கு தான். இங்க கிட்டத்தட்ட படம் முடியிற வரைக்கும் விஷால் எப்படிப்பட்டவரு? அவருக்கு சண்டை போட வருமா? இல்லை பாண்டிய நாடு டைப்புல ஊம குத்த வாங்கிட்டு ஒதுங்கிடுவாராங்குற சந்தேகமே இருக்கு. க்ளைமாக்ஸ்ல விஷால் வில்லன்கள பொள பொளன்னு பொளக்கும்போது தான் அவருக்கு சண்டை வரும்போல.. ஹீரோ டம்மி இல்லை அடி அம்மி மாதிரி இருக்கும்னு தெரியிது.

கேத்ரின் ட்ரெசா மூஞ்சிலாம் நல்லா குண்டாகி செம அழகா இருக்கு. விஷால் ரெகுலர் பர்ஃபார்மன்ஸ். இசை ஹிப் ஹாப் தமிழா. எல்லா பாட்டையும் அவரே பாடுறாதால எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. ஓக்கே ரகம். சில இடங்கள்ல BGM காட்சிக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி எதோ ஓடுது. “கத களி.. கத களி”ன்னு வர்ற தீம் மியூசிக் செம.

எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தி. ஒரு வேலைய ஆரம்பிச்சி செஞ்சிட்டு இருக்கும்போது இடையில வேற ஒரு வேலை க்ராஸ் பன்னா அத பன்ன ஆரம்பிச்சி இத விட்டுருவேன். ரெண்டு நாள் கழிச்சி மொத வேலை என்னாச்சின்னு எவனாது கேக்கும்போது தான் “ஆத்தாடி மறந்துட்டோமே” ன்னு ஞாபகம் வரும். ஆனா படங்களைப் பொறுத்த மட்டுல இது அப்புடியே ஆப்போசிட். எங்கயாது பாத்த சீனோ கதையோ உள்ள வந்துச்சின்னா டக்குன்னு மூளை ஒரு search ah போட்டு எடுத்துக்குடுத்துரும்.
-
அப்டித்தான் இன்னிக்கு படம் ஓடிக்கிட்டு இருக்கும்போது ஒண்ணும் தெரியல. படம் முடிஞ்சி தியேட்டர விட்டு வெளில வரும்போது மண்டையில எதோ குடைய லேசா எலி செத்த நாத்தம். இந்த நாடாவ நாம ஏற்கனவே எங்கயோ பாத்துருக்கோமே… ஆக இந்த நாடா நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட நாடான்னு அத ஃபாலோ பன்னி பாத்தா… அட நம்ம தடையற தாக்க. அதே கதையில அப்புடியே number of suspects ah மட்டும் அதிகப்படுத்தி ஒரு ஆல்ட்ரேஷன் பன்னா நம்ம கதகளி.. அடங்ங்ங்… என்னமோ ஒழிஞ்சி போங்க. படம் பார்த்து முடிச்சவங்க தடையறத் தாக்கவோட இத ஒப்பிடு பாத்துக்குங்கப்பா.


மொத்தத்துல கதகளி முதல் பாதி சந்தோஷத்தை கொடுக்கும். ரெண்டாவது பாதி நம்ம பொறுமைய சோதிக்கும். ஆனா நிச்சயம் ஒரு தடவ பாக்கலாம்.  


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

ஜீவி said...

அருமை...

Siva said...

Thala super review

Madhu said...

After reading your uthama villan review only I became fan for your comedy reviews. I expect same kind of review for thaarai thappatai movie soon ;-)

Unknown said...

Thara thappatai pathachaa...

முத்துசிவா said...

@Madhu & Balakrishnan

நீங்க ரெண்டு பேரு என்ன தாரை தப்பட்டையில தள்ளி விடப் பாக்குறீங்க..

கொலை கேசுல உள்ள போகப்போறீங்க பாருங்க :-)

Madhu said...

ha ha ha.. Correct than. Engaluku oru comedy review padikanum nu ungala antha kodumaiya parka solrathu niyayam illai than.. polachu ponga :-)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...