ஒரு
விஷயத்துக்கு மக்கள் எந்த அளவு முக்கியதுவம் கொடுக்குறாங்க என்பதைப் பொறுத்துதான் ஊடகங்கள்
அந்த விஷயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் இருக்கு. ஒவ்வொரு முறை கிரிக்கெட்டை
பத்தி சூடா விவாதம் பன்னிக்கிட்டு இருக்கும்போதும் “நம்மூர்ல கிரிக்கெட்டுக்கு கொடுக்குற
அளவு மத்த விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்குறாங்க” ங்குற புலம்பலும்
சேர்ந்துதான் வரும். ஏன்னா இன்னிக்கு கிரிக்கெட்தான் மக்களுக்கு புடிச்சிருக்கு. அதனால
எல்லாரும் கிரிக்கெட்ட தான் புரமோட் பன்ன ஆசைப்படுறாங்க. அது சம்பந்தமான வீரர்களுக்கு
தான் நிறைய ஸ்பான்ஸர்ஸ் கிடைக்கிது. மற்ற விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் இந்த அளவு
வசதி இல்லாம இருக்காங்க.
ஒருதடவ
எனக்கும் என்னோட நண்பருக்கும் இடையில ஒரு பெரிய விவாதமே நடந்துச்சி. நான் க்ரிக்கெட்ட
பத்தி எதோ பேசிக்கிட்டு இருக்கும்போது அவர் “க்ரிக்கெட்லாம் பாக்க கூடாது சிவா.. அது
நம்ம விளையாட்டே இல்லை. அத நம்மகிட்ட மார்கெட்டிங் பன்னிட்டாங்க” ன்னு சொன்னாரு. அதுக்கு
நா “இருந்துட்டு போகட்டும்.. அதனால என்ன? அந்த
விளையாட்டு எனக்கு புடிச்சிருக்கு நா பாக்குறேன்” ன்னேன். மறுபடி மறுபடி அவரோட வாதம்
முழுசும் “கிரிக்கெட் நம்ம விளையாட்டில்ல.. அத நம்மகிட்ட வெளிநாட்டுகாரர்கள் மார்க்கெட்டிங்
பன்னிட்டாங்க.. அந்த விளையாட்ட பாக்க நாம மூணு மணி நேரம் ஆறு மணிநேரம்னு வேஸ்ட் பன்னக்கூடாது”
என்பதாத்தான் இருந்துச்சி.
அவரோட
வாதம் உண்மையா கூட இருக்கலாம். ஆனா அது இப்ப வரைக்கும் எனக்கு கன்வீன்சிங்கா இல்லை.
மார்க்கெட்டிங் பன்னப்பட்டதா இருந்தாலும் அது இப்பதைக்கு நமக்கு பிடிச்ச ஒரு விஷயமா
இருக்கு. அத நீ செய்யக்கூடாதுன்னு, நமக்கு பழக்கமில்லாத, பிடிக்காத ஒரு விஷயத்ததான்
நீ பன்னனும்னு சொல்றத என்னால ஏத்துக்க முடியல. அத விட மூணு மணிநேரம் ஏன் வேஸ்ட் பன்றீங்கன்னு
ஒண்ணு கேட்டாரு. ஒருத்தனோட நேரம் வீணடிக்கப்படுதா இல்லை முறையா பயன்படுத்தப்படுதாங்குறத
அவன் அவந்தான் முடிவு பன்னனும். என்னப் பொறுத்த அளவு அந்த மூணு மணி நேரம் நா எனக்கு
பிடிச்ச ஒரு விஷயத்த பன்றேன். அது அவரது பார்வையில வீணடிக்கப்படுவதா இருக்கு. இன்னிக்கு
இருக்க நிலமையில நேரத்த பணமா கன்வர்ட் பன்னாலோ, அல்லது பணம் செய்வதற்கு தேவையான திறமையை
வளர்த்தாலோதான் அந்த நேரம் பயனுள்ளபடி செலவழிக்கப்பட்டதாக கருதப்படுது.
எவன்
என்ன மார்க்கெட்டிங் பன்னாலும் நமக்கு தேவையானதை, நமக்கு பிடித்ததைத்தான் நாம தெரிவு
செய்யிறோம். டிவில போடுற அத்தனை விளம்பரங்களையும் பார்த்து நம்பி நாம எல்லாத்தையும்
வாங்கிடுறதில்லை. நமக்கு ஒரு பொருள் தேவைப்படும்போது அதுல ஒண்ணத் தெரிவு செய்ய வேணும்னா
இந்த விளம்பரங்கள் உதவுன்னு வச்சிக்கலாம். உயிர்வாழ அத்யாவசியம் இல்லாத ஒரு பொருளை
மார்க்கெட்டிங் பன்னுறப்போ அது எப்பவுமே திணிப்பதாக எடுத்துக்க முடியாது. நம்மதான் திணிக்கப்படுவது போல உணருரோம். அது வெறும்
ஆப்ஷன் தான்.
இந்தப்
பதிவு எழுத ஆரம்பிச்சதே இந்த நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடத்தப்பட இருக்கிற மேடை
நாடகம் மற்றும் நட்சத்திர க்ரிக்கெட் தொடர்பாத்தான். முன்னதா ஒரு நாலு மாசத்துக்கு
முன்னால நடிகர் சங்கத் தேர்தலுக்கு சட்டமன்றத் தேர்தலை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து
ஊடகங்கள் பெரிது படுத்தியும், வாக்கெடுப்பு அன்னிக்கு லைவ் டெலிகாஸ்ட்டெல்லாம் பன்னி
எக்கச்சக்க பில்ட் அப் பன்னாய்ங்க.
அடுத்த
ரெண்டு மாசத்துல சென்னை வெள்ளத்துல மூழ்குனப்போ நேரடியா விஷால் & co இதுக்கு நடிகர்
சங்கம் எதுவும் செய்ய முடியாது அரசாங்கம்தான் உரிய நடவடிக்கை எடுக்கனும்னு ஓப்பனா சொன்னாரு.
இப்ப அதுதான் நிறைய பேருக்கு உறுத்துது. சென்னை வெள்ளத்தில் தத்தளிச்சப்போ உதவ முடியாதுன்னு
சொன்ன நீங்க இப்ப ஏன் மக்கள்கிட்ட பணம் வசூல பன்றீங்க? இதுக்கு பேரு என்ன தெரியும்மா…
எச்சைங்குறான் ஒருத்தான்.. இன்னொருத்தன் ஏன் அதுக்கு நிதி திரட்ட நிகழ்ச்சி நடத்தலன்னு கேக்குறான். இன்னும் என்னென்னவோ
வாய்க்கு வந்தத திட்டுறாய்ங்க.
எதோ
நடிகர் சங்கத்துல உள்ளவிங்க இவனுங்க ஒவ்வொருத்தன் வீட்டுக்கும் வந்து அம்மா, தாயே கட்டிடம்
கட்ட காசு இல்லை எதாவது போடுங்கன்னு கேட்ட மாதிரி இவனுங்க பொங்குற பொங்கு தாங்க முடியல.
நடிகர்கள் ஒரு ஷோ நடத்தி 100, 200 டிக்கெட் போட்டு வசூல் பன்றதுக்கு பேர் மக்கள்கிட்டருந்து
பணம் பறிக்கிறதுன்னா, தியேட்டர்ல படத்த ரிலீஸ் பண்ணி 120 ரூவா டிக்கெட் வாங்கிட்டு
படத்த மக்களுக்கு காமிக்கிறதுக்கு பேரும் பணம் பறிப்பு தானா? ஃபாரின் ப்ளேயர்ஸ கொண்டு வந்து இங்க விளையாடவிட்டு
குறைந்த பட்ச டிக்கெட் 1500, அதிகபட்ச டிக்கெட் 50000 வரைக்கும் வசூலிக்கிற IPL லுக்கு
பேரெல்லாம் என்ன?
அதெல்லாம்
சரி.. இப்ப நடிகர்சங்க மேட்ச்ச கட்டாயமா நீங்க பாத்தே ஆகனும்னு யாரு கட்டாயப்படுத்துனது?
நடிகர்கள் விளையாடுறாங்க. உங்களுக்கு பாக்கனும்னு தோணுச்சின்னா போங்க. இல்லைன்னா பேசாம
கெடங்க. எதோ உங்க பாக்கெட்டுலருந்து உங்களக் கேக்காம காச எடுத்த மாதிரி பதறுறீங்க.
இந்த
கேப்புல அஜித் மக்கள்கிட்ட பணம் பறிக்கக்கூடாதுன்னு ஃபங்ஷனுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாராம்.
அதுக்கு கெத்துடா… மாஸுடா வேற.. ஏதோ அஜித் படங்கள்ல பணம் வாங்காம நடிக்கிற மாதிரியும்,
அஜித் படங்கள் தியேட்டர்ல மக்களுக்காக ஃப்ரீயா ஓடிக்கிட்டு இருக்க மாதிரியும். இவரு
என்னவோ மத்த எல்லா ஃபங்ஷனுக்கும் வந்துட்ட மாதிரியும், மக்கள்கிட்ட பணம் பறிக்கிறாங்கன்னு
கொதிச்சி இந்த ஒரு ஃபங்ஷனுக்கு மட்டும் வரமாட்டேன்னு சொல்லிட்ட மாதிரியும்.. எந்த ஃபங்ஷனுக்கு
அது வந்துருக்கு? ஃபங்ஷனுக்கு வராம ஓபி அடிக்கிறதுக்கு இப்டி ஒரு பில்ட் அப்பு.
நம்ம
மக்கள்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா மத்த எல்லா இடத்துலயும் காசு குடுத்து ஒண்ணு
வாங்குனா அந்த டீலிங்க அப்பவே முடிச்சிக்குவாய்ங்க. ஆனா சினிமாக்காரங்ககிட்ட மட்டும்
“தில் மாங்கே மோர்” ன்னு “நா காசு குடுத்து இவன் படத்த பாத்தேன்.. இவன் ஏன் எனக்கு
இத செய்யல? இவன் எதுக்கு இதுக்கு காசு குடுக்கல?” ன்னு எக்ஸ்ட்ராவா எதிர் பாப்பாய்ங்க.
விஷால்
நடிகர் சங்கத்தின் மூலமா எதுவும் செய்ய முடியாதுன்னு சொன்னாலும், தமிழ் நடிகர்கள் மூலமா
பல கோடி ரூபாய் நிவாரண உதவி கிடைச்சிது. இரவு பகல் பாக்காம உதவிய சித்தார்த், RJ பாலாஜி
லாரன்ஸ், மயில்சாமி எல்லாரும் மக்கள்கிட்ட பணம் பறிக்கக்கூடாதுன்னு நடிகர்கள்தான்.
ஆன்னா
ஊண்ணா ரசிகர்கள் காசுலதான் சினிமாக்காரங்க வாழுறாங்க.. ரசிகர்கள் இல்லைன்னா சினிமாக்காரனே
இல்லைன்னு ஆரம்பிச்சிருவோம். இன்னிக்கு இருக்க நிலமையில ஒரு சில ஹீரோக்களத் தவிற, மக்களுக்கும்
நடிகர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒரு கஸ்டமருக்கும் சப்ளையருக்கும் இடையில உள்ள
தொடர்புதான். இதுல நம்ம பெருசா அவங்கள வாழ வைக்கிறமாதிரியெல்லாம் நினைச்சிக்கிறது நம்மோட
மன ப்ராந்தி தான்.
நடிகர்
சங்க கட்டிடம் இவங்க நடிகர்கள்கிட்டயே வசூல் செஞ்சி கட்டுறதோ, இல்லை ஷோ நடத்தி வசூல்
பன்னி கட்டுறதோ அவங்க விருப்பம். அந்த ஷோவ காசு குடுத்து பாக்குறதோ, மூடிக்கிட்டு வீட்டுல
இருக்கதோ நம்ம விருப்பம். இதுக்காகவெல்லாம் அவங்கள அசிங்கமா திட்டுறது எப்படி இருக்குன்னா,
நம்ம ஏரியாவுல உள்ள பீட்சா கடை ஓனர்கிட்ட போய் “ஏண்டா நானே காசில்லாம கஷ்டத்துல இருக்கேன்..
நீ ஏண்டா உன் கடையில பீட்சா விக்கிற?” ன்னு அவன் சட்டையப் புடிச்சி கேக்குற மாதிரி.
நல்லா
சம்பாதிக்கிற நமக்கு பரிட்சையமான முன்னணி நடிகர்கள்
மட்டும் இல்லாம, டெய்லி பேட்டாவுக்காக மட்டும் நடிக்கும் எத்தனையோ துணை நடிகர்களைக்
கொண்டது நடிகர் சங்கம். பெரிய நடிகர்களிடம் மட்டும் லட்சக் கணக்கில் நன்கொடை பெற்று
கட்டிடம் கட்டி முடிப்பது எளிதான வேலையாகத்தான் இருக்கும். ஆனால் இந்தக் கட்டிடம் இவர்களால்
மட்டும் கட்டப்பட்டது என்பது போலாகிவிடலாம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் பணம் வசூல்
செய்து கட்டிடம் கட்டும்போது அதில் எந்த தனிப்பட்ட நடிகரின் பெயரும் முன்னிலைப் படுத்தப்படாமல்
அனைத்து நடிகர்களுக்குமான சம உரிமைக் கட்டிடமாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே இந்த முடிவு
எடுக்க்கப்பட்டிருக்கலாம்ங்குறது என்னோட ஊகம்.
13 comments:
//அந்த ஷோவ காசு குடுத்து பாக்குறதோ, மூடிக்கிட்டு வீட்டுல இருக்கதோ நம்ம விருப்பம். இதுக்காகவெல்லாம் அவங்கள அசிங்கமா திட்டுறது ....//
Very Correct....
//ஃபங்ஷனுக்கு வராம ஓபி அடிக்கிறதுக்கு இப்டி ஒரு பில்ட் அப்பு.//
நீங்க மேலே சொன்ன உரிமை அஜித்துக்கும் இருக்கிறதே. எந்த ஒரு ஃபங்க்ஷனில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் அவர் விருப்பம். அவரை பார்த்து ஓபி அடிக்கிறார்னு நீங்க ஏன் கமெண்ட் பண்றீங்க?
I second Alien's comment.
Its ajith's wish to participate in the function or sit in home and give the money.
Why are you commenting about him? And pls do give respect. He is Living being.
Dont address as 'Adhu'. Give respect and take respect.
when Ajith raised voice abt this internal nadigar sangam politics(About kalai nigazhchi) in one of the karunanidihi's function, Rajini was the first person who stood and clapped for long time.
Neenga ezhuthunamnaa enna vena ezhuthuveengala.. Unga thalaivar senja sari adhuthavnaga senja Thappu..... vishal Photo correct ah thaan pottu irukeenga...
Kanna mudhalla sari pannitu article ezhuthunga
கமெண்ட் பண்றது அவர் உரிமை. அத நீங்க ஏன் குத்தம் சொல்றீங்க? இப்படியே போயிட்டு இருக்கும்? 😀
Super.Im also in the same thought.
சிங்கப்பூர் கலை நிகழ்ச்சிக்கும் அஜித் வரவில்லை.. விஜயகாந்த் எச்சரிக்கை செய்தும்..நடிகர்கள் அனைவரும் சேர்ந்து நிதி அளித்தாலே போதுமே?
அதை விடுத்து ஏன் இந்த நாடகம்?
தெலுங்கு மலயாள நடிகர்கள் செய்த செயலைகூட அரசியல் காரணங்களால், அம்மா வுக்கு பயந்து வெள்ள பாதிப்பில் இவர்கள் செய்யவில்லை..
அஜித் தன் பட புரமோசன் மற்றும் எதற்காக வும் வரமாட்டேன் என்று அட்வான்ஸ் வாங்கும்போதே சொல்லி விடுகிறார்.. ஏமாற்ற வில்லையே..?கருணாநிதி பிரச்சனை யில் ரஜினி யைத்தவிர எந்த நடிகர், சங்கம் அவருக்கு ஆதரவாக இருந்தது? அதனால் அவரை குற்றம் சொல்வது அநீதி.
நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி..
கிரிக்கெட் போட்டி யை பார்ப்பது கட்டாயமில்லை.. அவரவர் விருப்பம்..
ஆனால் எதற்காக இவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள் என்றால் அது விசாலின் அரசியல் அரிப்பே..
Kanda Karu அவர்களே,
நடிகர் சங்க கிரிக்கெட் பற்றி மக்கள் கமெண்ட் பண்றது அவங்க உரிமை. அத ஏன் அதிரடிக்காரன் குத்தம் சொல்கிறார்? இப்படி நானும் கேட்கலாம்.
After all, this is very silly matter. Just forget about this. Let's not continue this argument as this is of no use to anyone.
தம்பி அஜித் ஒரு நடிகராக அவருக்கு தோன்றியதை சொல்லியிருக்கிறார் அது சிலருக்கு சரியாக பட்டிருப்பதால் அவரை ஆதரிக்கிறார்கள் ..இதுல உனக்கு ஏன் கடுப்பு வருது? பேசாம கவர்மென்ட் கூட வரி வசூலிக்கறத விட்டுட்டு கிரிக்கெட் மேட்ச் நடத்தி பட்ஜட்டுக்கு துட்டு சேக்கலாம் போலயே?
நண்பா பங்க்சனுக்கு வராம இருக்குறதுக்கு பேரு ஓபி அடிக்கிறது இல்லை. அது அவரோட உரிமை. அஜித்தை பொறுத்தவரை அவரது வேலை சினிமாவில் நடிப்பது மட்டுமே. இதில் அஜித்தை புகழவும் தேவை இல்லை, இகழவும் தேவை இல்லை.
//ஏதோ அஜித் படங்கள்ல பணம் வாங்காம நடிக்கிற மாதிரியும், அஜித் படங்கள் தியேட்டர்ல மக்களுக்காக ஃப்ரீயா ஓடிக்கிட்டு இருக்க மாதிரியும்
அது அவரோட தொழில். பொது மக்களிடம் சங்க கட்டிடம் கட்ட பணம் வசூல் செய்ய கூடாது என்பதையும் இதையும் போட்டு குழப்புகிறீர்கள்.
நீங்கள் சொல்வது போல தனிப்பட்ட எவர் ஒருவருக்கு சொந்தமாக அந்த கட்டிடம் ஆகிவிடக்கூடாது என்பதெல்லாம் சரிதான். அதற்கு பொதுமக்கள் ஏன் நன்கொடை கொடுக்கவேண்டும்? எந்த சங்கமும் பொது சேவை செய்ய (சங்கம் சாராத)மக்களிடம் பணம் வசூல் செய்யலாம். ஆனால் சொந்த கட்டிடம் கட்ட வசூல் செய்ய கூடாது. சங்க உறுப்பினர்களிடம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.
வியாபாரிகள் சங்கம் கட்டிடம் கட்ட வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்வது அயோக்கியத்தனம்தானே?
@பாலா:
பாஸ்...எவ்ளோ நாள் ஆச்சு உங்களப் பாத்து... சீக்கிரம் எழுத ஆரம்பிங்க.. நா தொடர்ந்து படிச்சிட்டு இருந்த ரெண்டு மூணு பதிவர்கள்ல நீங்களும் ஒருத்தர்.. டக்குன்னு நிறுத்திட்டு பொய்ட்டீங்களே.. சீக்கிரம் திரும்ப எழுத ஆரம்பிங்க...
//நண்பா பங்க்சனுக்கு வராம இருக்குறதுக்கு பேரு ஓபி அடிக்கிறது இல்லை. அது அவரோட உரிமை. அஜித்தை பொறுத்தவரை அவரது வேலை சினிமாவில் நடிப்பது மட்டுமே. இதில் அஜித்தை புகழவும் தேவை இல்லை, இகழவும் தேவை இல்லை.
//
agreed
//அது அவரோட தொழில். பொது மக்களிடம் சங்க கட்டிடம் கட்ட பணம் வசூல் செய்ய கூடாது என்பதையும் இதையும் போட்டு குழப்புகிறீர்கள்//
இதில் குழப்புவதற்கு எதுவுமே இல்லை.. தெளிவாகப் பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான். இரண்டிலுமே மக்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. விருப்பப்படுபவர்கள் பார்த்துக்கொள்ளலாம். அவ்வளவே..
இதே அஜித் படங்கள் வெளியாகும் நாளில் சென்னையின் முக்கிய தியேட்டர்கள் தவிற மற்ற அனைத்து திரையரங்குகளிலும் இரண்டு மூன்று மடங்கு டிக்கெட் விலை வைத்து விற்கின்றனர். இது தியேட்டர்காரர்கள் முடிவு செய்வதல்ல.. டிஸ்டிபியூட்டர்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் ப்ரிண்டுகளுக்கு முதல் நாள் இவ்வளவு வசூலித்தால் தான் கட்டுபடியாகும் என அவர்களே இந்த விலை நிர்ணயிக்கின்றனர். உ.தா. எங்கள் ஊரில் வேதாளம் படத்தின் முதல் நாள் நான்கு காட்சிகளுக்குமே டிக்கெட் ஒன்றின் விலை ரூ.300. இதெல்லாம் பணம் பறிக்கும் கணக்கில் வராதா? இப்போது நீங்கள் கேட்கலாம் உங்களை யார் முதல் நாள் போய் பார்க்க சொன்னது என்று? இந்தக் கேள்வி உங்களுக்கு கேட்கத் தோன்றினால் அதிலேயே உங்கள் கேள்விக்கான பதிலும் இருக்கிறது.
//வியாபாரிகள் சங்கம் கட்டிடம் கட்ட வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்வது அயோக்கியத்தனம்தானே?// வியாபாரிகள் அவர்கள் விற்கும் பொருளை உங்களுக்கு பிடித்தால் வாங்கிக்கொள்ளலாம் என கூறி, அதை விற்று வரும் பணத்தில் கட்டிடம் கட்டிக்கொள்வதில் என்ன அயோக்கியத்தனம் இருக்கிறது?
சிவா, உங்கள் கருத்தை நான் மறுக்கின்றேன். டிக்கெட் விற்ப்பதில் நடிகர்களுக்கு பங்கு கிடையாது என்பது சரியே. அது தியேட்டர்காரர்களும் டிஸ்டிபியூட்டர்களும் சேர்ந்து நிர்ணயிப்பதே.
வியாபாரி பொருளை விற்று காசு சேர்த்து சொந்த வீடு கட்டினால் யாரும் எதுவும் கேக்கப்போவதில்லை. ஆனால் நான் வீடு கட்டப்போகிறேன் என்று கடை வாசலில் ஒரு உண்டியல் வைத்தால் அது சரியா? நியாயமாகுமா? அல்லது வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து சங்க கட்டிடம் கட்டுவதற்கு மார்க்கெட் வாசலில் உண்டியல் வைப்பது தகுமோ?
ரொம்ப புத்திசாலினு நினைச்சு முத்துசிவா இந்த பதிவு போட்டு இருக்கார்.விமர்சனம் பண்றதும் அவங்க அவங்க உரிமை தானே. நீங்க மட்டும் எதுக்கு பொங்கரீங்க. கோடி கோடியா சம்பாதிக்கிற நடிகர்கள் இப்படி வசூல் பண்ணி கட்டிடம் கட்டுவது கேவலம். நடிகர் சங்கம் பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு தொண்டு நிறுவனம் இல்லை வசூல் செய்வதற்கு. நடிகர்களுக்காக நடிகர்கள் அமைத்து கொண்ட அந்தசங்கத்திற்கு பணப்பிரச்சினை என்றால் அவர்கள் தான் அதை சரிசெய்து கொள்ள வேண்டும். இப்படி மக்களிடம் காச எதிர்பார்க்ககூடாது. இஷ்டம் இல்லைனா வராதேனு சொல்லி எல்லார் வாயையும் அடைச்சிடலாம்னு தான் திரும்ப திரும்ப அதையே சொல்ரீங்க.யாருமே வரத்தேவை இல்லைனு ஸ்பான்சர் செய்யும் நிறுவனமே போதும்னு சொல்லட்டுமே. என்ன சொன்னாலும் இது அயோக்கியத்தனம் தான்.
Post a Comment