Sunday, July 24, 2016

கபாலிக்கு பறக்கத் தெரியாதா?!!


Share/Bookmark
படம் ரிலீஸ் ஆன முதல் நாள் நூறில் ஐம்பது சதவீதம் பேர் படம் பிடிக்கலன்னும் ஐம்பது சதவீதம் பேர்தான் பிடிச்சிருக்குன்னும் சொன்னாங்க. ரெண்டாவது நாள் இதே பிடிக்கலை பிடிச்சிருக்கு சதவீதம் 25-75 ஆச்சு. மூணாவது நாளான இன்னிக்கு கிட்டத்தட்ட இது 10-90 ஆக மாறிருச்சி. சமூக வலைத்தளங்கள்ல இன்றைய நிலமைப் படி படம் நல்லா இல்லைன்னு யாருமே சொல்லல. ”நல்லா தானேங்க இருக்கு இதப் போய் ஏன் நல்லா இல்லைன்னு சொன்னீங்க?” ன்னு நிறைய பேர் கேக்குறாங்க. அவங்க மனசுக்கு உண்மையிலயே படம் பிடிச்சிருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம்.

எந்த பெரிய நடிகருக்குமே முதல் நாள் படம் ரிலீஸ் ஆகும்போது ஆப்போசிட் குரூப் நெகடிவ் ரிவியூ குடுக்குறது சகஜம் தான். அஜித் விஜய் படங்களை பொறுத்த அளவு இந்த விஷயம் ரொம்ப மோசமா நடக்கும். ஆன்லைன் ரிவியூக்களப் பாத்து நம்மாள படம் எப்டின்னே கணிக்க முடியாத அளவுக்கு மாத்தி மாத்தி கால வாரிவிட்டுக்குவாங்க. ரஜினிய பொறுத்த அளவு இந்த உடைப்பு வேலைகள் பெரிய லெவல்ல நடக்கும்ங்குறது லிங்காவின் போது நடந்த நாடங்கள்லருந்தே நமக்கு தெரிஞ்சிருக்கும்.  

ஆனா இந்த முறை கொஞ்சம் வித்யாசமா, முதல் நாள் படத்தைப் பற்றிய disappointment பெரும்பாலும் ரசிகர்களிடமிருந்து தான் வந்தது. மாறா ரஜினி இப்படி நடிச்சிருந்தா நல்லாருக்கும், அப்படி நடிச்சிருந்தா நல்லாருக்கும்னு எப்பவும் குறை சொல்ற குரூப்புகள்கிட்டருந்து பெரும்பாலும் படம் நல்லாதான் இருக்குங்குற பதில் வந்ததோடு மட்டுமில்லாமல், படம் வெற்றி பெறனும்ங்குற நோக்கத்துல அவர்களே சமூகவலைத்தளங்கள்ல நிறைய பாஸிடிவ்வான விஷயங்கள தொடர்ந்து பகிர்ந்துகிட்டு வர்றதையும் பார்க்க முடியிது. மகிழ்ச்சி.

அவர்களும் சரி, மற்ற ரஜினி ரசிகர்களும் சரி படத்தை புகழ்றதுக்கு பொதுவா யூஸ் பன்னிக்கிட்டு இருக்க ஒரு விஷயம் “ரஜினி பயங்கரமா நடிச்சிருக்காரு… இருபத்தைஞ்சி வருஷத்துக்கு முன்னால காணாமப் போன ரஜினி திரும்ப கிடைச்சிட்டாரு… முல்லும் மலரும் ரஜினி திரும்ப வந்துட்டாரு… “ இதுதான். பெரும்பாலும் படத்தைப் பற்றி நல்லவிதமா சொல்ற எல்லாரோட பதிவுகள்லயும் மேற்கண்ட எதாவது ஒரு வாக்கியம் இல்லாமல் இருக்கத்தில்லை.  

ஒருவேளை நீங்களும் இந்தப் படத்துலதான் ரஜினி ரொம்ப நாள் கழிச்சி நடிச்சிருக்காருன்னு நினைச்சீங்கன்னா, ரஜியை நீங்க ரசிச்சது அவ்வளவுதான். அதே மாதிரி உங்களோட அகராதில நடிப்புங்குறதுக்கு “சோகம்” “ஏக்கம்” “அழுகை” இந்த மூன்று விஷயங்களை வெளிப்படுத்துறதுன்னு மட்டுமே நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க. நடிப்புங்குறது இந்த மூணு விஷயம் மட்டுமில்லை. இதைத் தாண்டி கோபம், மகிழ்ச்சி, குழப்பம், வெகுளித்தனம்ன்னு இன்னும் எக்கச்சக்க பரிணாமங்களை வெளிப்படுத்துவதே நடிப்பு.

என்னை பொறுத்தவரைக்கும் ரஜினி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்காருங்குறதுல என்ன சந்தேகம் இல்லை. ஆனா அந்த இருபத்தஞ்சி வருஷத்துக்கு பிறகு ரஜினி நடிச்சிருக்காருன்னு நீங்க சொல்றது, எதோ ஒரு வகையில நீங்களும் இந்தப் படத்துக்கு சப்போர்ட் பன்றதுக்காகத்தான்.

ஒருவேளை நீங்க சொல்ற  மாதிரியே வச்சிக்கிட்டோம்னா, அப்ப இந்த இருபத்தஞ்சி வருஷமா ரஜினி ஸ்கீரீன்ல ஏனோதானோன்னு வந்துட்டுப் போனதா தானே அர்த்தம். எப்ப ஒரு நடிகன் அவன் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தோட ஒட்டாம, சுத்தமா விலகித் தெரியிறானோ அப்பதான் அவன் நடிக்கலைன்னு அர்த்தம். அப்படி எந்தப் படம் இருக்கு.

கபாலியில் ரஜினி பயங்கரமா நடிச்சிருக்காருன்னு நீங்க சொல்றதுக்கான காரணம் வழக்கமான ரஜினி படங்களைக் ஒப்பிடும்போது கபாலில ரஜினியின் முகத்தில் எப்போதும் ஒரு ஏக்கமும் தேடலும் இருக்கும். ஓரிரு காட்சிகளில் உடைந்து அழவைப்பார்.

கபாலியில் ரஜினி –ராதிகா ஆப்தே ரொம்ப நாள் கழிச்சி சந்திக்கிற சீன்ல நா அழுதேன். இல்லைன்னு சொல்லல. ஆன இதே முத்து படத்துல சரத் பாபு ரஜினியை அடிச்சி விரட்டும்போது, ஏன் அடிக்கிறாங்க எதுக்கு அடிக்கிறாங்கன்னே தெரியாம, எஜமான் சொன்ன சொல்லையும் தட்ட முடியாம ஒரு குழப்பத்தோடவே அழுதுகொண்டு வீட்டை விட்டு போவாரே… அதுல வரவழைச்ச அழுகைய கம்பேர் பன்னும்போதும், அந்த காட்சில அவர் வெளிப்படுத்திய நடிப்பை விட இது எனக்கு அவ்வளவு பெருசா தெரியலை. அதே முத்து க்ளைமாக்ஸ்ல பொன்னம்பலத்துக்கிட்ட ”எஜமான் எங்க இருக்காருன்னு சொல்லிடுடா… எஜமானுக்கு ஒண்ணும் ஆகலைல்ல?” ன்னு அழுகையும் தவிப்புமா கலந்து கேப்பாரே அதெல்லாம் என்ன?

பாட்ஷாவுல மெடிக்கல் சீட் கேட்டுப்போற சீன். ஒரு சிரிப்போட “வெளில சொல்லிடமாட்டீங்களே” ன்னு சொல்லிட்டு கைய சொடுக்கி “ஒருதடவ சொன்னா” ன்னு சொல்லும்போது முகத்த கொடூரமாக்கி அடுத்த செகண்டே கைதட்டி ஆளுங்களக் கூப்பிட்டு, கைய கட்டிக்கிட்டு ஒரு வெகுளியான சிரிப்பு சிரிப்பாரே… என்ன அதெல்லாம்? நடிப்பு. படையப்பால ரம்யா கிருஷ்ணன மீட் பன்ற சீன். ”குழந்த.. நீ சொன்னியே 5 faces… எனக்கு இன்னொரு face இருக்கு… ஆறுமுகம்” அப்டிங்கும்போது அவரோட முகத்தையும் “இந்தப் படையப்பனோட இன்னொரு முகம்” அப்டிங்கும்போதும் அவர் முகத்துல காட்டுல variation னயும் பாத்துருக்கீங்களா? அதுவும் நடிப்புதான். சிவாஜில எல்லா சொத்தும் போனப்புறம், ராஜாகிட்ட போய் “என்னோட நிலமை கொஞ்சம் சரியில்லை.. கல்யாணத்த கொஞ்சம் தள்ளி வச்சிக்கலாம்” ன்னு கேக்கும்போது அந்த தர்மசங்கடத்த அவர் முகத்துல வெளிப்படுத்துறத நோட் பன்னிருக்கீங்களா?

இன்னும் ஓவ்வொரு படத்துலயும் எவ்வளவோ சின்னச் சின்ன விஷயங்கள் சொல்லிக்கிட்டே போகலாம். அவரை அணு அணுவா ரசிப்பவர்கள் 25 வருஷத்துக்கு அப்புறம் ரஜினி இப்பதான் நடிச்சிருக்காருன்னு கண்டிப்பா சொல்லமாட்டங்க. அதுலயும் ரஞ்சித் ரஜினிக்குள்ள இருக்க நடிகன வெளில கொண்டு வந்துட்டாருன்னு வேற பெருமை பட்டுக்குறாங்க. அவருக்குள்ள உள்ள நடிகர் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்காரு. ஒரு கமர்ஷியல் படத்துல நடிக்கும்போது, அதுல ஒரு நடிகன் நடிப்பை வெளிப்படுத்தவே முடியாதுங்குதப் போல ஒரு பிம்பத்த ஏற்படுத்திருக்காங்க நம்மாளுங்க. உண்மையிலயே ஒரு மசாலா படத்துலதான் ஒரு நடிகர் எல்லா விதமான நடிப்பு திறமையையும் வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கும். எல்லா எமோஷன்களும் கொஞ்ச கொஞ்சம் இருப்பதால எந்த ஒரு பகுதியும் பெருசா ஹைலைட் பன்னப்படாம போயிடும்.

கபாலி எனக்கு அவ்வளவு satisfied ah இல்லைன்னு எழுதிருந்ததுக்கு நிறைய பேர் “ரஜினி கை கால ஆட்டுனாதான் உங்களுக்கு பிடிக்கும்.. அவர் நல்லா நடிச்சா உங்களுக்கு பிடிக்காது” “உங்களுக்கெல்லாம் ஆறு பாட்டு 5 ஃபைட்டு உள்ள படம் தான் புடிக்கும்.. நல்ல கதை உள்ள படம்லாம் உங்களுக்குப் பிடிக்காது…” ன்னு ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் சில பேரு சமூக வலைத்தளங்கள்ல “இந்தப் படம் பிடிக்கலன்னா அவங்களுக்கு புரியலன்னு அர்த்தம்”ன்னு கமல் படத்துக்கு சொல்ற மாதிரி ஆரம்பிச்சிட்டாங்க. 

இங்க நா ஒரு விஷயத்த தெளிவு படுத்தனும். இந்த தளத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் படிக்கிறவங்களுக்கு ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கும். நான் விமர்சன்கள்ல ரொம்ப டீப்பா உள்ள இறங்கி ”இந்த காட்சி இப்படி இருந்தது அந்தக் காட்சி அப்படி இருந்தது” ன்னு காட்சி வாரியா அலசுறதில்லை. எல்லா விஷயங்களையும் லைட்டா டச் பன்னி, நா சொல்ல வர்றத கொஞ்சம் ஜாலியா சொல்லிட்டு போயிடுவேன். ஏன்னா படம் பாக்கும்போது எனக்கு இருந்த சுவாரஸ்யங்கள் எனக்கப்புறம் பாக்குறவங்களுக்கும் கிடைக்கனும்ங்குற ஒரு எண்ணத்துலதான். அதுக்காக நமக்கு புரியலன்னு நீங்க நினைச்சா அது என்னோட பொறுப்பில்லை. நா படத்த டீட்டெய்லா பாக்குறேன்னு உங்களுக்கு புரிய வைக்கிறதுக்காக பதிவுகள்ல என்னோட வித்தைய இறக்கி உங்கள் தெறிச்சி ஓட வைக்கிறதுக்கும் எனக்கு மனசில்லை.

இன்னொரு விஷயம் எல்லா படங்களையும் படங்களாகத்தான் பாக்குறேன். அவன் இந்த சாதிய தூக்கி வச்சி படம் எடுக்குறான், இந்த சாதிய மட்டமா பேசிருக்கான் அதுனால இந்த படத்த நா எதிர்க்குறேன்னு படங்களை ரியல் லைஃபோட கம்பேர் பன்னி அதன் மேல விருப்பத்தையோ வெறுப்பையோ நா காட்டுறதில்லை. உதாரணமா சமீபத்துல வந்த மருது படத்தை பெரும்பாலானோர் வெறுக்க காரணம் முத்தையா அவர் சாதிய முன்னிருந்ததி தூக்கி பேசிருக்காருங்குறதுக்கு தான். படத்தை வெறுத்த பலரும் அதுல ஜாதிய பாத்தாங்களே தவிற, அது ஒரு படமா எப்படி இருந்துச்சின்னே பாக்கல.

கபாலியைப் பொறுத்த அளவும் என்னோட நிலை அதுதான். ”ரஞ்சித் தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை பதிவு செய்திருக்கிறார்… யாரும் சொல்லாத விஷயத்தை தைரியமாக சொல்லியிருக்கிறார்.. மலேசிய மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்” இது போன்ற விஷயங்களே படத்தை சப்போர்ட் செய்யும் பலரின் கருத்துக்களாக இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை ஒரு திரைப்படம் என்கிற வகையில் நிறைய விஷயங்களை எனக்கு அது திருப்திபடுத்தவில்லை. 

முதலில் கபாலிங்குற அந்த கேரக்டரோட வடிவமைப்பு. விமர்சனத்தில் ஏற்கனவே சொல்லியிருந்த விஷயம்தான். கபாலி அங்க வாழ்ற தமிழ் மக்களோட தலைவனா காட்டப்படுறாரு. சிறையிலிருந்து வர்றவர் அவர் குடும்பத்தை தேடுறதைத் தவிற மக்களுக்கு பெரிதாக எதுவுமே செய்திருக்க மாட்டார். அந்த Free life school இல் கூட கபாலி கட்டிடம் கொடுத்தார்ன்னு சொல்லுவாங்களே தவிற மற்றபடி கபாலிதான் அந்தப் பள்ளிய நடத்துவதாக கூட காட்டமாட்டாங்க.

கபாலி சிறையிலிருந்து வர்றாருன்னு தெரிஞ்சதும் ரெண்டு இளைஞ்சர்கள் படத்தில் பேசிக்கொள்வார்கள் “Bro செம்ம கை ப்ரொ… சாவடி” ம்பாப்ள ஒருத்தர். “அண்ணேன்.. கபாலி வர்றான்.. வெளில வந்தோன சூட்டோட சூடா செஞ்சா சாவடியா இருக்கும்” ம்பாரு இன்னொருத்தர். ரெண்டு பேருமே இளைஞர்கள். 25 வருஷத்துக்கு முன்னால ஜெயிலுக்கு போன கபாலி மேல் இவர்களுக்கு இவ்வளவு வெறுப்பும், மதிப்பும் வர காரணம் எதுவுமே இருக்காது. கபாலி ஜெயிலுக்கு போகும்போது இவர்கள் பிறந்திருக்கவே மாட்டார்கள். இல்லைன்னா கபாலியோட பெருமைய வரலாறு மூலமா தெரிஞ்சிக்க கபாலியும் ரொம்ப பெருசா எதுவும் செஞ்சிருக்க மாட்டாரு.அப்படி இருக்க கபாலி மேல இவ்வளவு மதிப்பும் வெறுப்பும் வர்றதுக்கான காரணமே எதுவும் இல்லை. 

கபாலியை சிறையிலருது கூட்டிட்டு வரும்போது ஜான்விஜய் நடுரோட்டில் போதை மருந்து மாத்துரத காமிச்சி சொல்லுவாரு.. “பட்டப் பகல்லயே எப்படி மாத்துறாங்க பாத்தியா… 43” ன்னு. அந்த காட்சில அவர் எப்டில்லாம் பன்றானுங்க பாருன்னு கோவப்பட்டு சொல்றாரா இல்லை ”செம்மையா பன்றானுங்க பாரு” ன்னு பில்ட் அப் பன்னி சொல்றாரான்னே தெரியாது. அடுத்து free school ல “அண்ணேன் அவன் பேர கேளேன்..” னதும் “ஒருத்தன் டைகர்” ன்னு சொல்லுவான். உடனே எல்லாம் சிரிப்பாங்க. அதுல சிரிக்க என்ன இருக்கு? 

“நம்ம கேங் நல்லது பன்ற கேங்.. நம்ம கேங் நல்லது பன்ற கேங்” ன்னு அடிக்கடி படத்துல சொல்லுவாங்க. ஆனா என்ன நல்லது பன்றாங்கன்னே சொல்ல மாட்டாங்க.. ஒருதடவ எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்கும்போது ரஜினி எழுந்து  ஒரு ஸ்பீச் குடுப்பாரு.. “நாம என்ன செஞ்சிக்கிட்டு இருக்கோம்.. நமக்கு வேலைகள் நிறைய இருக்கு…. நேரம் குறைவா இருக்கு” ன்னு. அப்படி எந்த வேலையும் செய்ய மாட்டாங்க.

கபாலி தமிழ்நேசன் இடத்த புடிச்சத அவர் பையனும் சரி வில்லன்களும் சரி ரஜினிய ஒரு போட்டியாதான் பாப்பாங்களே தவிற கீழ்சாதி ஆளு, வெளியூர்லருந்து வந்தவன் இடத்த புடிச்சிட்டாங்குற பார்வையிலயே பாக்க மாட்டாங்க. ஆனா க்ளைமாக்ஸ்ல திடீர்னு உனக்கு நிலம் இருக்காடா… ஆண்ட பரம்பரைன்னு சொகப்ரசவம் கொரை ப்ரசவம்னு பேச ஆரம்பிச்சிருவானுங்க.

ஒரே மாதிரியான காட்சியமைப்புகள் நிறைய இருக்கு படத்துல. குறிப்பா லீ மெரிடியம் ஹோட்டல் ரூம் காட்சிகள்ல கதவ யாரோ தட்டுறதும், அதுக்கு ரஜினியும் தன்ஷிகாவும் ஷாக் ஆவுற மாதிரியுமான காட்சிகள் மூணு தடவ வரும். அதே போல ரஜினி மனைவியைத் தேடும் படலத்துல எதையுமே கண்டுபிடிப்பது போல இல்லாம யாரோ ஒருவர் “சார் எனக்கு வேலு எங்க இருக்கான்னு தெரியும்… சார் எனக்கு அந்த ஃப்ரெஞ்ச்காரங்க வீடு எங்க இருக்கான்னு தெரியும்” ன்னு சொல்ற காட்சிகள் ஒரு மூணு நாலு தடவ வரும். ஒரு காட்சிய எப்படி தொடங்குவது எப்படி எடுத்துச் செல்வதுங்குறது முக்கியம். இந்த மாதிரி ரிப்பீட்டட் காட்சிகள் கடுப்பையே வரவழைக்கிது.

சில படங்களில் லாஜிக் பார்க்க வேண்டும். சில படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது. லிங்காவில் லாஜிக் பார்த்தா தப்பு. கபாலில லாஜிக் பாக்கலன்னா தப்பு. கபாலி மனைவி இறந்துட்டதா நினைச்சி தேடாம இருக்காரு. ஆனா குமுதவள்ளி அட்லீஸ்ட் கபாலிக்கு என்ன ஆச்சின்னாவது தெரிஞ்சிக்க முயற்சித்திருக்கலாமே. கபாலி மட்டும்தானே உள்ள போனாரு. அவர் கூட இருந்த அமீர் மற்றும் இன்ன பிற கேங்குகளேல்லாம் அங்கயேதான இருந்தாங்க.

சங்கிலி முருகன் சீன்ல இன்னொரு அபத்தம். முதல் வசனத்துல “என் புருஷன என் கண்ணு முன்னாலயே கொன்னுட்டாங்கன்னு வள்ளி அழுதுக்கிட்டே இருப்பா” ன்னு சொல்லுவாப்ள. அடுத்து கொஞ்ச நேரத்துல “என் புருஷன் வருவாரு.. வந்து என்ன கூட்டிட்டு போவாருன்னு வள்ளி சொல்லிக்கிட்டே இருப்பா” ன்னு சொல்லுவாரு. புருஷன் செத்துட்டாருன்னு நினைச்சிட்டு இருக்க பொண்டாட்டி எப்படி வந்து கூட்டிட்டு போவாருன்னு சொல்லும்.

இன்னும் சிலபேரு “உங்களுக்கு மலேசிய தமிழர்களோட வாழ்க்கை முறை புரியலை..”ன்னு படத்தில் உபயோக்கிற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தத்த போட்டு “ரஞ்சித் கரெக்ட்டாதான் எடுத்துருக்காரு… உங்களுக்கு தான் புரியலை”ன்னு சொல்றாங்க. நீ இதுக்கு தனி ஆர்டிகிள் எழுதி புரிய வைக்கிறதுக்கு பதிலா,  ரஞ்சித் புதுசா மலேசியாவுக்கு போற ஒருத்தனுக்கு இந்த வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் சொல்லிக்குடுக்குற மாதிரி ஒரு காட்சி  வச்சிருந்தா எந்த ப்ரச்சனையுமே இல்லையே.


நீ மட்டுமாய்யா ரஜினி ரசிகன்? நானும் தான்யா.. யார்யாரோ படத்த தூக்கி பேசும்போது சின்ன வயசுலருந்து அவர் ரசிகரா இருந்துகிட்டு படத்த தப்பா பேச எனக்கென்ன வந்துச்சி. அதுக்குன்னு புரியாததாலதான் நல்லா இல்லைன்னு சொல்றாங்கன்னு சின்னப்புள்ள தனமா கிளப்பி விடாதீங்க. பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

15 comments:

Unknown said...

அண்ணா நான் உங்க பதிவ ஏத்துக்கிறேன் ஆன உங்க அளவுக்கு ரஜினி ரசிகன் இல்ல ஆன ரஜினியா அவ்ளோ பிடிக்கும். ஆனாலும் எனக்கு ரஜினி யாரலயும் முடியாதத செய்யனும் அதான் ரஜினி எனக்கு நடிகன் ரஜினி வேணாம் SUPER STAR தான் வேணும். அவர் நார்மலா லாம் நடிக்க வேணாம் அத செய்ய நிறைய பேர் இருக்காங்க எனக்கு படையப்பா இல்ல சிவாஜி Second Half ரஜினி தான் வேணும்.

சரவணகுமரன் said...

சூப்பர் பாஸு

வருண் said...

ஏங்க நீங்க வேற!!!

உங்களுக்குப் பிடிக்கலைனா என்னங்க இப்போ? கபாலி கடல்கடந்து அமோக வெற்றி பெற்றுள்ளது.

எல்லாக் கான்கள் சாதனையையும் பிந்தள்ளியுள்ளது!!

எல்லாரும் மிரண்டு போயி இருக்காங்க!!

வாசிங்க கீழே!

This movie has broken all the overseas records set by Khans and Hindi media. You should be happy that Ranjith-Rajini has done this achievement!

Kabali Smashes All Indian Film Records Overseas
Sunday 24 July 2016 23.30 IST
Box Office India Trade Network

The Tamil language film Kabali has smashed all weekend records for a film from India. The previous record was held by Dhoom at $10.32 million but Kabali has gone through that comfortably. The film has grossed $4.05 million is US / Canada which is in four days but for comparison the three day figure of $3.51 million is taken. This is the second highest figure ever in US / Canada after PK which was slightly better at $3.55 million.

The film has grossed a further $4.25 million in the Far East which includes Malaysia, Singapore and Philippines over four days as Malaysia and Singapore see unbelievable numbers though this was probably expected as it fetched a higher price for Malaysia than US / Canada. The three day figures is $3.50 million for Far East. The Gulf has grossed $2.25 million which gives the film a total of $9.25 million three day figure and there is still Europe, Oceania, Africa and parts of Middle East to come. United Kingdom will be around $400,000 over three days..The film has also broken all records in Sri Lanka where day one was similar to the lifetime of Dilwale which scored big there. The three day figure for the film will close around the $11 million mark (INR 74 crore)and if we take four day figure it will probably be a $13 million weekend (INR 87.5 crore).The $11 million three day weekend beats Dhoom 3, Sultan, Dilwale and Bajrangi Bhaijaan. It is the second film after Dhoom 3 to cross $10 million in three days but that was a Christmas release which is the best period in Overseas and Kabali has been released on a normal period.

http://www.boxofficeindia.com/report-details.php?articleid=2182

Manimaran said...


//“என் புருஷன என் கண்ணு முன்னாலயே கொன்னுட்டாங்கன்னு வள்ளி அழுதுக்கிட்டே இருப்பா” ன்னு சொல்லுவாப்ள. அடுத்து கொஞ்ச நேரத்துல “என் புருஷன் வருவாரு.. வந்து என்ன கூட்டிட்டு போவாருன்னு வள்ளி சொல்லிக்கிட்டே இருப்பா” ன்னு சொல்லுவாரு. //

ஒரே காட்சியில் இரண்டு எதிர்மறையான வசனங்கள் வர வாய்ப்பில்லை என்கிற ரீதியில் இந்தக் காட்சியை அணுகினால் புரிய வாய்ப்பிருக்கு.

என் புருஷன என் கண்ணு முன்னாலயே கொன்னுட்டாங்கன்னு வள்ளி அழுதுக்கிட்டே இருப்பா என சொல்வது சங்கிலி முருகன். அடுத்து ஒன்னு சொல்லுவாரு .. " அவ பித்து புடிச்சமாதிரி இருந்தா... "

பைத்தியம் மாதிரி சுத்திகிட்டு இருக்குமே அந்த பொண்ணான்னு முதல்ல கேட்டுத்தான் இதை ஆரம்பிப்பார் சங்கிலி முருகன்.

அடுத்து , அமெரிக்காவுக்கு போன் பேசிவிட்டு சொல்வார்.. "உன் பொண்டாட்டி அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பாளாம். என் புருஷன் வருவாரு.. என்னைக் கூட்டிட்டு போவாருன்னு..."

இதை சங்கிலி முருகன் போனில் கேட்டுவிட்டு ரஜினியிடம் சொல்கிறார். அதாவது தற்போது அவள் தெளிவாகிவிட்டாள் என்பதற்கான குறியீடாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை அவர் ஜெயிலில் இருப்பதைக் கூட அறிந்திருக்கலாம். எப்படி அணுகுவது என்பதைத் தெரியாமல் அந்தத் தன்னம்பிக்கை வாக்கியத்தை சொல்லியிருக்கலாம் இல்லையா..

என் புரிதலை சொல்கிறேன். மற்றபடி யாருக்காவும் முட்டுக்கொடுக்கவில்லை.

Anonymous said...

கபாலி சிறந்த படம். ஆனால் படத்தை வேறு வழியில் புரோமோட் செய்ததால் வந்த விளைவே எதிர் மறை விமர்சனம். முதன் முதலாக அதிகப்படியாக விளம்பரம் செய்தது. வழக்கமாகவே நம் ஆட்களுக்கு அதிகப்படியாக விளம்பரம் செய்தால் அந்த படம் தோல்வி அடைந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். உதாரணம் அஞ்சான். இதிலும் அப்படித்தான். இரண்டாவது இதை வழக்கமான ரஜினி படம் (மிகவும் மாஸாக) என்பது போல டீசர் வெளியிட்டது. இது வேறு மாதிரி படம் என்று விளம்பரம் செய்திருந்தால் இது போன்ற எதிர் மறை விமர்சனம் வந்திருக்காது. ரஜினியின் நடிப்பு பற்றி எனக்கு வேறு விதமான அபிப்ராயம் உள்ளது. நடிப்பு (ஓவர் ஆக்டிங், இயல்பு) என இருவகைப்படுத்தலாம். நீங்கள் சொன்ன முத்து படத்தில் வருவது ஓவர் ஆக்டிங் மிகவும் செயற்கை ஆக இருக்கும். இது இயல்பான நடிப்பு. இந்த படத்தில் ரஜினியின் நடிப்பிற்க்கு free schoஒல் ல நடக்கும். கபாலியிடம் மாணவர்கள் கேள்வி கேட்கும் காட்சியில் அவரது மாறி கொண்டே இருக்கும் முக பாவனை ஒன்றே போதும். இதுதான் இயல்பான நடிப்பு.

Anonymous said...

---சில படங்களில் லாஜிக் பார்க்க வேண்டும். சில படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது. லிங்காவில் லாஜிக் பார்த்தா தப்பு. ---

சில​ சமயஙகளில் லாஜிக் பிழை ரொம்ப எரிச்சல் பன்னும். ரஜினி நடித்த ராஜாதிராஜா படத்தில last scene ரொம்ப over . Jail'a உடைச்சுக்கிட்டு போய் போலிஸ் கிட்ட explain பன்னுவாரு உடனே இன்னோரு ரஜினிய Police release பன்னிடுவாங்க. அதே மாதிரி அந்நியன் படத்துல அம்பி பெரிய வெண்ண மாதிரி advice பன்னுவாரு ஆனா Helmet போடமாட்டாரு.

ஆனா ரொம்ப Logic கூட கடுப்பாவும். For example மிஷ்கின் படம், படத்த Practical'a எடுக்கரேன்னுட்டு அருப்பாரு. ஓவ்வொரு Scene'ம் முழம் நீளத்துக்கு இருக்கும்

suresh said...

Just now saw the movie.. Except some weak scene the film is really good.. I accept screenplay is poor but acting and screen presence of rajini makes the movie one step ahead to what it really deserve.. The family sentiment of old aged gangster is shown nicely and acting of rajini in these scenes are awesome.. I start watching the movie on thiruttu vcd first but while watching the convocation scene when rajini expose his past to the students I simply close the laptop and went to theatre to watch the movie only for rajini's screen presence.. Rajini's best in recent times..

NewWorldOrder said...

Kabali is a fantastic movie. It's not a Dalit movie. It's a movie about all oppressed and suppressed people. Watch more.

ஜீவி said...

ஆழந்த கண்ணோட்டத்துடன் தரப்பட்ட பதிவு. ரஜினி இன்னொரு எம்ஜிஆர். மாஸ் ஹீரோ. நடிக்க முடியாத தெரியாத நடிகர் என்று அர்த்தமில்லை. கபாலி ரஜினி ரசிகனின் வழக்கமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத படம். அதற்காக வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்டு critically acclaimed list படம் என்ற ரீதியில் கண்டுபிடித்து பலர் முன்வைக்கும் வாதங்கள் அபத்தம். நாயகன் டைப் உணர்ச்சி கொந்தளிப்பான காட்சிகள் துளியும் இல்லை. ஒருமுறை ரஜினிக்காக பார்க்கலாம்... அவ்வளவுதான். பாட்சா படையப்பா போல் டிவியில் பலமுறை வரமுடியாத படம். வந்தால் சேனலை மாற்றத்தான் தோணும். அந்த அளவில் இந்தப் படத்தை கடந்து போவதுதான் சரி. ஆனால் டைரக்டரை அவரின் வலிந்து வைக்கப்பட்ட வசனங்களை வைத்து இந்தப் படத்தை அதற்காகவே ஆதரிக்கும் பலர் துணைக்கு ரஜினியின் திடீர் நடிப்பு என்று கருத்து வழங்கி வருகிறார்கள். அதே காரணத்துக்காக படத்தை கைமா பண்ணவும் ஒரு கூட்டம். படத்தை அதன் கதை காட்சியமைப்புக்காக பார்க்க இரண்டு தரப்பும் தயாராக இல்லை. மொத்தத்தில் ஒருமுறை பார்த்து கடந்து போக வைக்கும் படம்தான் கபாலி.

vivek kayamozhi said...

நெத்தியடி...மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்.. என்னவோ படையப்பா, அண்ணாமலை, பாட்சா இதிலெல்லாம் நடித்தது சரியில்லை, முள்ளும் மலரும், ஜானி, ஆறிலிருந்து அறுபது வரை,எங்கேயோ கேட்ட குரல் இவற்றில் நடித்தது தான் சரி என்று சொல்வோருக்கு...
நீங்கள் சொன்ன படங்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் சரியாக ஓடாத அல்லது தோல்விப்படங்களே..!
என்னவோ அப்போல்லாம் பாத்து ரசிச்சு வெற்றி பெற வைத்தது போல பேசவேண்டாம்.
ரஜினின்னா சினிமாவில் கோபக்கார, குறும்பான,ஸ்டைலான , நேர்மையான, பண்பாடு, கலாச்சாரத்தை கைவிடாத , எதையும் சாதிக்கும் மனிதனாக வருவது தான் எல்லாருக்கும் பிடிக்கும்..
யதார்த்தமாக வருவதற்கு தான் கமல் இருக்கிறாரே?
இந்த படத்தில் நீங்கள் சொன்ன குறைகள் தான் ஆணிவேர்...
ஒன்றவிடாமல் செய்த பிழைகள்..

vivek kayamozhi said...

நெத்தியடி...மிகவும் சரியாக சொல்லியிருக்கிறீர்.. என்னவோ படையப்பா, அண்ணாமலை, பாட்சா இதிலெல்லாம் நடித்தது சரியில்லை, முள்ளும் மலரும், ஜானி, ஆறிலிருந்து அறுபது வரை,எங்கேயோ கேட்ட குரல் இவற்றில் நடித்தது தான் சரி என்று சொல்வோருக்கு...
நீங்கள் சொன்ன படங்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் சரியாக ஓடாத அல்லது தோல்விப்படங்களே..!
என்னவோ அப்போல்லாம் பாத்து ரசிச்சு வெற்றி பெற வைத்தது போல பேசவேண்டாம்.
ரஜினின்னா சினிமாவில் கோபக்கார, குறும்பான,ஸ்டைலான , நேர்மையான, பண்பாடு, கலாச்சாரத்தை கைவிடாத , எதையும் சாதிக்கும் மனிதனாக வருவது தான் எல்லாருக்கும் பிடிக்கும்..
யதார்த்தமாக வருவதற்கு தான் கமல் இருக்கிறாரே?
இந்த படத்தில் நீங்கள் சொன்ன குறைகள் தான் ஆணிவேர்...
ஒன்றவிடாமல் செய்த பிழைகள்..

ஜீவி said...

சரியான கருத்து. ரஜினி ஏன் கமல் மாதிரி ஆக முயல வேண்டும்? ரஜினியை ரஜினியாக பார்க்கத்தான் ரஜினி ரசிகனுக்கு விருப்பம்.

ஜீவி said...

சரியான கருத்து. ரஜினியை ரஜினியாக பார்க்கத்தான் ரஜினி ரசிகனுக்கு பிடிக்கும். அவர் ஏன் கமல் மாதிரி ஆகணும்?

Anonymous said...

கபாலி repeated scenes சரியாக கூறியுள்ளீர்கள். பாட்ஷாவில் ரஜினியின் நடிப்பைப் பற்றி கூறிய அந்த காட்சி ரஜினியின் நடிப்பிற்கு சரியான ஒரு எடுத்துக் காட்டு. இருந்தாலும் ரஜினி தன் தங்கை இந்த காலேஜ் வேண்டாம் என்று காரணத்தை கூறும் போது ரஜினி காட்டும் அந்த சிறு expressionற்கு நிகர் வேறு எதுவும் (யாரும்) இல்லை.

Devikumar said...

Padayappa, baasha and all rajni's super hit films of 90s are the best mass movies ever.. adhella vida idhella rajni idhella supera nadichirukaru nu solradhu adhella la sariya nadikalanu artham illa.. Flashback solli mudichitu thirumbi with such a heavy heart nadakka mudiyama konja steps vapparae, adha yaarachum notice paaningala.. avar ponnu kaapathi kooptu varum bothu irangum bothu oru smile.. climax la dialogue appo avaroda eyes, first time ponmoda kai pidikum bothu avaroda eyes evalo variation.. indha maari character avarku endha directorun last 20 yrs la kodukula.. malaysian gangsterism pathi avalo analysis irukku padathula.. push ups after release, pooja podrathu, seeni saagum bothu periya procession, gangster mannerism ellame perfect irukku.. oru poraali kootam enna pannanumo adha thaa avangalum pannuvanga, adheyum explain panni innum padam slow irukku solradhuka.. screenplay la director's freedom, ipdi thaa irukkanumnu template maari edukka mudiathu..chinna vayasul irundhu rajni fan vida unga review ku support panra intention thaa adhigama irukku..adhuku thaa indha article maari thonudhu.. padam paakum bothu review ezhutharatha ninaichate paatha, padatha enjoy panna mudiathu.. rajni in a fresh avatar with young team.. padam super ah irukku, rajni padam nalla irukkanum na padayappa baasha maari irundha thaa nalla padam othupeengala.. ella mega hit padathulayum flaws irukkum..namakku pidikilana flaws thaa therium.. this is a neat and perfect rajni film.. Let's enjoy this..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...