நெகட்டிவ்
க்ளைமாக்ஸ வச்சிக்கிட்டு படத்த ப்ரமோட் பண்ணி வெற்றி பெற வச்ச பாலா , பாலாஜி சக்திவேல்,
அமீர் வரிசையில இன்னொரு ருசிகண்ட பூனை ப்ரபு சாலமன். பல நூறு இயக்குனர்களுக்கு மத்தியில
தனக்குன்னு ஒரு அடையாளத்தையும், தன்னை நோக்கி அனைவரின் கவனத்தயும் வெகு விரைவில் ஈர்க்கவும்
கடந்த பத்தாண்டுகள்ல சில இயக்குனர்கள் கண்டுபிடிச்ச ஈஸியான வழிதான் இந்த நெகடிவ் க்ளைமாக்ஸ்.
நெகடிவ் க்ளைமாக்ஸ் மட்டும் ஒரு படத்தை ஓட வைக்கிறதில்லை. அதுக்கேற்ற கதை, திரைக்கதை
இருந்தா மட்டுமே ஹிட் ஆகுது.
டி.ஆர்
ஒரு பேட்டில சொல்லுவாரு. “சார் ஒரு படத்தோட ஆரம்பத்துல ஆடியன்ஸ சிரிக்க வைக்கலாம் சார்…
இடைவேளையில சிரிக்க வைக்கலாம் சார். ஆனா க்ளைமாக்ஸ்ல ஆடியன்ஸ சிரிக்க வைக்க கூடாது
சார். அழ வைக்கனும் சார்.. அப்பதான்சார் அவன் ஒரு நல்ல டைரக்டர்” அப்டின்னு அவர் சொன்னதக்
கேட்டு பல பேரு சிரிச்சாங்க. ஆனா சில டைரக்டர்கள் அத சீரியஸா எடுத்துக்கிட்டாங்க போலருக்கு.
நல்லா போயிட்டு இருக்க கதையில படக்குன்னு ஹீரோவையோ, ஹீரோயினையோ இல்லை இன்னும் எதாவது
ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தையோ போட்டுத்தள்ளி சிம்பத்தி கிரியேட் பன்ற யாவாரம்
ரொம்ப நாள ஓடிக்கிட்டு இருக்க, சமீப காலமா அந்த யாவாரம் டல் அடிச்சி போயிருச்சி.
அதே
ஃபார்முலாவ ஆரம்பத்துலருந்து இப்ப வரைக்கும் மாத்தாம படம் எடுக்குற பாலா படங்கள்லாம்
இப்ப டண்டனக்கா போடுது. ப்ரபு சாலமனும் கிட்டத்தட்ட அதே கேட்டகிரி தான். அவருக்கு இதுவரைக்கும்
ஓடிய படங்களப் பாத்தா, எல்லாமே அந்த மாதிரியான க்ளைமாக்ஸ் உள்ள படங்கள்தான். இப்பவும் மாறலன்னா நமக்கும் அதே கதிதான்னு நல்லா
உணர்ந்த ப்ரபு சாலமன், அவரோட பானிலருந்து கொஞ்சம் விலகி ஒரு படத்த குடுக்க முயற்சி
பன்னிருக்காரு.
டெல்லிலருந்து
சென்னை வர்ற ஒரு ட்ரெயின்ல Pantry செக்ஷன்ல வேலை பாக்குற ஒரு சாதாரண பையன் தனுஷ்.
அதே ட்ரெயின்ல பயணம் செய்யிற ஒரு நடிகையோட touch up girl ah வர்றவங்க கீர்த்தி சுரேஷ்.
பாத்த உடனே தனுஷுக்கு காதல் பத்திக்க, அத இத சொல்லி கீர்த்தி சுரேஷ உசார் பன்னும் போது
வேற ஒரு பெரிய ப்ரச்சனையாகி ட்ரெயின நிறுத்த முடியாம முழு ஸ்பீடுல ஓடிக்கிட்டு இருக்கு.
அதுலருந்து எப்படி எஸ் ஆகுறாங்கங்குறதுதான் மீதிக் கதை.
கதை,
ஒரு பகுதி திரைக்கதை, characterization எல்லாத்தையும் கொஞ்சம் டீப்பா உள்ள இறங்கி பாத்தோம்னா
இந்தத் தொடரி “சென்னையில் ஒரு நாள்” மற்றும் “பயணம்” படங்களோட கலவை தான். ரயில்ல பயணம்
செய்யும் ஒரு அரசியல் ப்ரமுகர், ஒரு சினிமா ப்ரபலம், குடிக்கு அடிமையான ஒருத்தன்னு
நிறைய கேரக்டர்களும் பயணம் படத்தோட ஒத்துப் போகுது.
ப்ரபு
சாலமனோட வழக்கமான படைப்புகள் மாதிரி லவ்வுக்கு அதிக முக்கியத்துவம் குடுக்காம முதல்
பகுதி காமெடிக்கு குடுத்துருக்கது மகிழ்ச்சி. அதுவும் நிறைய வசனங்கள் சிரிப்பையும்
வரவழைக்கிறது இன்னும் மகிழ்ச்சி. தம்பி ராமைய்யா தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச ஒரு மிகச்
சிறந்த நடிகர். ரியாக்ஷன்லாம் பின்னி எடுக்குறாப்ள. என்ன ஒரே மாதிரி காமெடி ரெண்டு
மூணு தடவ ரிப்பீட் ஆகுறதுதான் கொஞ்சம் கடுப்பா இருக்கு.
கொஞ்சம்
கப்பித்தனமான கிராஃபிக்ஸ் மற்றும் ரெண்டு பாடல் காட்சிகளைத் தவிற வேற எதுவுமே போர்
அடிக்கல. சொல்லப்போனா செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்சதுலருந்து எதோ நம்மளும் அவய்ங்க கூட அதே
ட்ரெயின்ல ட்ராவல் பன்ற மாதிரி ஒரு பதட்டமாவே இருக்கு.. க்ளைமாக்ஸ் முடிஞ்சி வரும்போது
உண்மையிலயே டெல்லிலருந்து ரெண்டு நாள் ட்ராவல் பன்னிட்டு செண்ட்ரல்லருந்து வெளில வர்ற
ஃபீல் தான்.
படம்
முழுசும் ஒரே ஒரு ட்ரெய்ன சுத்தி மட்டுமே நடக்குறதால முதல் பாதி படம் முடியிறதுக்கே
எதோ படமே முடிஞ்ச மாதிரி ஒரு ஃபீல். ட்ரெயின் மட்டும்தான் லொக்கேஷன்ங்குறதால பாடல்
காட்சிகளையும் அவ்வளவு சிறப்பா குடுக்க முடியல. ஒரே ஷாட்ல நாலு கார்மேல ஏறி மின்னல்
வேகத்துல “ஜிந்தா.. ஹே ஜிந்தா.. ஹே ஜிந்தா” ன்னு வெறித்தனமா ஆடுன தனுஷ ட்ரெயின் மேல
நின்னு கிழக்கே போகும் ரயில் சுதாகர் மாதிரி காலையும் கையயும் ஆட்ட விட்டுருக்கதப்
பாத்தா பாவமா இருக்கு.
இந்தப்
படம் மத்த ப்ரபு சாலமன் படங்களை விட நல்லா இருக்கதா நா ஃபீல் பன்னதுக்கு இன்னொரு காரணம்
படத்தோட star casting. எப்பவும் வெந்தது வேகாதது, ஈயம் பூசுனது பூசாதது மாதிரி ஆட்களை
வச்சி படம் எடுப்பாரு. ஒண்ணு ரெண்டு ஆட்களைத் தவிர மற்ற எல்லா நடிகர்களுமே நமக்கு புதுசா
இருப்பாங்க. ஆனா இதுல தனுஷ், ராதாரவி, சின்னி ஜெயந்த், A.வெங்கடேஷ், கருணாகரன், படவா
கோபி, பட்டி மன்ற ராஜா, கு.ஞானசம்பந்தம், கணேஷ் வெங்கட்ராம், போஸ் வெங்கட்ன்னு அத்தனை
பேரும் நல்ல ஃபெமிலியரான ஆட்கள். அவங்களோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸே படத்துக்கு பெரிய பெரிய
பலத்த குடுக்குது.
கட்சியால
மதிக்கப்படாத ஒரு மொக்கை மினிஸ்டரா வர்ற ராதாரவி பட்டையக் கெளப்பிருக்காப்ள. ”யோவ்
என்னோட டிப்பார்டெம்ண்ட்ட பத்தியே எனக்குத் தெரியாது. இதுல ரயில்வேயப் பத்தி வேற கேக்குற”
“எப்பவுமே வேலை தெரியாதவன்கிட்டதான்யா இவனுங்க வேலையக் குடுப்பானுங்க”ன்னு அவர் பேசுற
வசனமெல்லாம் நச்.
இளையராஜா
ஒரு காலத்துல பல ராமராஜன்களை காப்பாத்தி விட்ட மாதிரி இப்ப வர்ற மீடியம் பட்ஜெட் படங்களையெல்லாம்
காப்பாத்தி விடுறது நம்ம இமான் தான். இந்தப் படத்தோட பாடல்கள் அவரோட பெஸ்ட்டுன்னு சொல்ல
முடியாது. ஆனா பாட்டெல்லாம் நல்லா இருந்துச்சி. BGM வெறும் ட்ரெயின் சவுண்டு மட்டும்
தான்.
என்னைப்
பொறுத்த அளவு படத்துல மைனஸ்னா மூணு விஷங்களைச் சொல்லலாம். முதலாவது கீர்த்தி சுரேஷும்
அதோட பாத்திரப் படைப்பும். சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா ஃபீல கொண்டு வர்ற மாதிரி நினைச்சிக்கிட்டு
கொன்னு எடுத்துருக்காங்க. அதுவும் போன உசுறு வந்துருச்சி பாட்டுல மொத்தமும் ஃபேஸ் ரியாக்ஷன்
தான். அங்கதான் ஒண்ணும் வரலன்னு தெரிஞ்சப்புறமும் கேமராவ அந்தப் புள்ள மூஞ்சிக்கிட்டயே
வச்சி பாட்ட எடுத்துருக்காய்ங்க. ஆளும் பாக்க ரொம்ப டொம்மையா இருக்கு இந்தப் படத்துல.
அடுத்தது
படத்தோட கிராஃபிக்ஸ். லோ பட்ஜெட்டுக்கு அவ்வளவுதான் வரும்னு சொன்னாலும் அதுக்கேத்த
மாதிரி கொஞ்சம் ட்ரெயின் மேல நிக்கிற காட்சிகளக்
கம்மி பன்னிருக்கலாம். அடுத்து பாடல்களோட காட்சிப்பதிவு. ஏற்கனவே சொன்னமாதிரி
ட்ரெயின் மட்டும்தான் லொக்கேஷன்ங்குறதால பாடல்களை அவ்வளவு சிறப்பா காமிக்க முடியல.
அங்கங்க
கொஞ்சம் லாஜிக் ஓட்டைகள், நானே உள்ளுக்குள்ள ஒரு இடத்துல சிரிச்சிக்கிட்டேன். ”சார்
ட்ரெயின் இப்ப மீஞ்சூர்ல இருக்க ஒரு பாலத்த க்ராஸ் பன்னுது சார்” ம்பானுங்க. ட்ரெயினப்
பாத்தா எதோ ஊட்டி மாதிரி உள்ள ஒரு லொக்கேஷன்ல உள்ள ஒரு பாலத்த க்ராஸ் பன்னும். அடுத்து
“சார் ட்ரெயின் அத்திப்பட்டுவத் தாண்டி அடுத்து ஒரு forest க்குள்ள நுழையிது சார்”
ன்னானுங்க. எனக்கு நெஞ்சு டபீர்ன்னு வெடிச்சிருச்சி. அடேய்… அத்திப்பட்டுலயும், மீஞ்சூர்லயும்
கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் வெறும் காய்ஞ்சி போன கருவ மரம் மட்டும்தாண்டா நிக்கும்.
இதுல அத்திப்பட்டுல ஃபாரஸ்ட்டா… ஊட்டி லொக்கேஷன்ல மீஞ்சூரா.. ஏண்டா நீங்க காலண்டர்ல
கூட மஹாலட்சுமியப் பாத்ததில்ல போலருக்கே. அத்திப்பட்டு மீஞ்சூர் ஏரியாவுல ரொம்ப நாளா
குப்பை கொட்டுறதால எனக்கு சிரிப்பு வந்துருச்சி. மத்தவங்களுக்கு அப்டி இருக்காதுன்னு
நினைக்கிறேன்.
சாதாரணமா ட்ல்லியிலருந்து சென்னைக்கு 36 மணி நேரப் பயணம். அதுவும் இந்தப் படத்துல ட்ரெயின் நிக்காம 160 குலோ மீட்டர் வேகத்துல ஓடுது. கூட்டி கழிச்சி பாத்த இன்னும் சீக்கிரம்தான் வரனும் . ஆனா படத்துல காமிக்கிறதப் பாத்த அந்த ட்ரெயின் பல நாளா ஓடிக்கிட்டு இருக்க மாதிரி இருக்கு. அதுவும் அந்த ட்ரெயினுக்கு ஆகுற மீடியா பப்ளிசிட்டி, ஆன் த ஸ்பாட் விவாத மேடை அது மட்டும் இல்லாம ட்ரெயின்ல நடக்குற அனைத்து விஷயத்தையும் டிவி ஒளிபரப்ப, அத ட்ரெயின்ல இருக்க மக்கள் மொபைல் ஃபோன்லயே பாத்து ரசிக்கிறாய்ங்க. அடேய் டெல்லி-சென்னை ட்ரெயின்ல நீங்க நிம்மதியா ஒரு கால் பேசுறதே பெரிய விஷயம்டா.. அதுக்குள்ள சிக்னல் போயிலும். இதுல ஆன்லைன் ஸ்ட்ரீமிங்ல லைவ் வீடியோ பாத்துக்கிட்டு வர்றீங்க.
என்னென்னமோ
சொல்றீங்க. தனுஷப் பத்தி எதுவுமே சொல்லலையேன்னு தானே கேக்குறீங்க. தனுஷ் பட்டையக் கெளப்பிருக்காரு.
நடிப்புல பின்னி எடுத்துருக்காருன்னு சொல்றதுக்கு எனக்கும் ஆசைதான். ஆனா அப்டி எந்த
சீனுமே இல்லை. இன்னும் சொல்லப்போனா இது தனுஷுக்கான படமே இல்லை. விதார்த் நடிச்சிருந்தா
கூட இந்த படத்துக்கு இதே இம்பாக்ட் இருந்துருக்கும். தனுஷ உள்ள இறக்குனதுனாலதான் இவ்வளவு
பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்துக்குள்ள வந்துச்சின்னு சொல்லலாம்.
ப்ரபு
சாலமன் ரொம்ப நல்லாவே இந்த ஸ்க்ரிப்ட ஹேண்டில் பன்னிருக்காரு. எந்த இடத்துலயும் ரொம்ப
செண்டிமெண்ட்டாவும், ரொமான்ஸாவும் உள்ள போயிடாம எல்லா இடத்துலயுமே டக்குன்னு ஒரு காமெடி
வசனத்த வச்சி ஆடியன்ஸூக்கு போர் அடிக்காம பாத்துக்குறாரு. வசனங்கள் எல்லாம் சூப்பர்.
எல்லாத்தையும் வியாபாரமாக்கும் மீடியாக்காளை அங்கங்க வசனங்களால குத்திருக்காரு. விவாதமேடையைக்
கலாய்க்கும் ஒரு சீன் சூப்பர்.
மொத்தத்தில் தொடரி கண்டிப்பா பாக்கலாம். தனுஷூக்கு ஒரு நல்ல படம்னு சொல்றத விட ப்ரபு சாலமனுக்கு ஒரு நல்ல படம்.
5 comments:
Please bro..
Put a spoiler alert
ட்ரெயின் பேரு தொடரி...
இனிமே அவரைக்கொடி பேரு ..படரி
சார்...
மாயவலை என்னதான் ஆச்சு? முடிவு எழுதலையா?
Unstoppable என்கிற ஆங்கிலப் படத்தின் நகல் இந்தப் படம். முடிந்தால் அதைப் பார்க்கவும்.
எனக்கு தமிழ் சினிமாவில் புடிக்காத Train சீன்கள்
1. Correct'ஆ Hero Heroine'க்கு Window சீட்டே கிடைக்கும். அதுவும் எதிரெதிரே கிடைக்கும்
2. Heroine பணக்கார வீட்டு பொண்ணா இருக்கும் ஆனா Second Seatingல travel பன்னும். இந்த Two Tire Three Tire இதெலெல்லாம் travel பன்னமாட்டாங்க.
3. நாட்ல முக்காவாசி Train Electric trainஆ மாறிடுச்சி. ஆனா இன்னும் நம்ம தமிழ் சினிமாவில புகை வண்டில தான் இந்த நாதாரிங்க travel பன்னும்
4. கண்டிப்பா TTR ஒரு கோமாளியாதான் இருப்பார்
5. தவறாம Hero தண்ணி பாட்டில் வாங்கற சீன் இருக்கும். அத விட கொடுமை hero குழாயில தண்ணி புடிக்கிற சீன். டேய் எந்த காலத்துலடா இரீக்கீங்க
6.
Anonymous...
நாம எப்படி இருந்தா நல்ல இருக்கும்னு நினைக்கிறோமோ அத screenplayல காட்டுனா (இயல்பா) நம்ம அறியாமலே நமக்கு பிடிக்கும். சில இயக்குனர்கள் சற்று இனிப்பு சேர்க்க நினைத்து அது நமக்கு விருந்தாக அமைந்த scenes இருக்கு. மரண மொக்க scenes இருக்கு. I think, it depends on our expectation.
உங்க நெஞ்ச தொட்டு சொல்லுங்க உங்க கமெண்ட்ல இருக்க மாதிரி உங்களுக்கு நடந்தா பிடிக்காதா...
Post a Comment