Tuesday, January 24, 2017

லாரன்ஸ் என்னும் கைக்கூலி.. RJ பாலாஜி என்னும் ஸ்லீப்பர் செல்!!!

Share/Bookmark

நம்மாட்களுக்கு எந்நேரமும் திட்டித் தீர்ப்பதற்கு யாராவது சிலர் இருந்துகொண்டே இருக்கவேண்டும். இந்த இரண்டு நாட்களாக சிக்கியிருப்பது ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் தமிழா மற்றும் RJ பாலாஜி.

இவர்கள் அரசுக்கு பணிந்துபோயும், அரசிடம் பல்க்காக ஒரு அமவுண்டை வாங்கிக் கொண்டு கூட்டத்தை கலைந்து போகச் சொன்னது போலவும், ”மறுநாள் காலையில் மெரினாவிலிருந்து கிளம்பாதவர்களை அடித்து துவைக்கப் போகிறோம். நீங்கள் மட்டும் முன்னரே கிளம்பி விடுங்கள்” என்று அரசு இவர்களுக்கு தெரிவித்ததால் இவர்கள் மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டது போலவும் வண்டை வண்டையாக திட்டுகின்றனர்.
.
அப்படியே வைத்துக் கொண்டால் கூட நீங்கள் அடி வாங்கக் கூடாது என்பதற்குத்தானே கலைந்து போக சொல்லியிருக்கிறார்கள். பிறகு அவரை எதற்காக திட்டுகிறீர்கள்? அரசு தடியடி நடத்தப்போகிறது என்று முடிவு செய்துவிட்ட பிறகு RJ பாலாஜியோ, ராகவா லாரன்ஸோ நினைத்திருந்தாலும் அதைத் தடுத்திருக்க முடியுமா?
.
போராட்டத்திற்கு நீங்கள் அழைக்காமல் உங்களுக்குத் தோள் கொடுக்க அவர்களாகத்தானே வந்தார்கள். உங்களின் செலவுக்கு அவராகத்தான் பணம் கொடுத்தார். இன்னும் கொடுப்பதாக அறிவித்தார். நீங்கள்தான் அவர்களை கூட்டத்தின் தலைவர்களாகவும் ஆக்கினீர்கள். 
.
மெரினா பக்கமே செல்லாமல், நியூஸ் 7 ஐயும், Facebook பதிவுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கே போராட்டத்தை ஞாயிறு இரவே முடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி அதனைப் பதிவும் செய்திருக்கின்றனர். அப்படியிருக்க உங்களுடன் போராடிய ஒருவர் அதே கருத்தை முன் வைக்கும்போது அவர் ஏன் குற்றவாளியாக்கப் படுகிறார்? 
.
அராஜகம் செய்து கூட்டத்தைக் கலைக்கும் முடிவுக்கு அரசைத் தள்ளியது ஒரு வகையில் போராட்டக்காரர்கள் தான். ஏழாம் நாள் நடத்திய தடியடியை இரண்டாம் நாள் ஒரிருவர் மீது பிரயோத்திருந்தால் கூட, கூட்டம் கூட்டமாக பிக்னிக் செல்வது போல மெரினா பீச்சிற்கு குடும்பங்கள் படையெடுத்திருக்காது. இவ்வளவு பெரிய கூட்டத்தையும் சேர்த்திருக்க முடியாது. முதல் இரண்டு நாள் போராட்டத்தில் மூலம் எந்த பாதிப்பும் இல்லை என்று உணர்ந்த பின்னரே சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை போராட்டத்தில் கலந்து கொண்டனர். 
.
இப்போது என்ன நடக்கும்? அடுத்த முறை போராட்டம் என்று ஒரு சிறு கும்பல் கூடும்போதே அரசு ஆட்டத்தை கலைத்து விடும். அல்லது ஒரு சிலரைத் தவிற மற்றவர்கள் என்ன நடக்குமோ என்ற பயத்தில் போராட வெளியிலேயே வர மாட்டார்கள். 
.
போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கால்வாசிப் பேரின் ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதில்லை. போராடியவர்களில் முக்கால்வாசிப் பேர் ஜல்லிக்கட்டை தொலைக்காட்சியைத் தவிற வேறு எதிலும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க ஒரு சாரரின் உணர்வுகளுக்காக ஒன்று பட்டு போராடினீர்களோ அதே போல்தான் அந்த லாரன்ஸூம், ஆதியும், பாலாஜியும்.
.
போலீஸ் தடியடியை ஆரம்பித்து கலவரமாக்கிய பொழுது, இங்கிருந்து ஒருவர் “டேய் லாரன்ஸ் எங்கடா போனா? டேய் ஆதி எங்கடா போன?” என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுகிறார். மொதல்ல நீ எங்க நாயே இருக்க? எதோ லாரன்ஸ்தான் இந்தப் போராட்டத்டை துவக்கியது போலவும், ஹிப்ஹாப் தமிழா கூப்பிட்டதால்தான் இவர்கள் அனைவரும் போராடத் துவங்கியது போலவும். 
.
போராட்டம் நன்றாக சென்ற பொழுது அரசியல்வாதிகள் தேவையில்லை நடிகர்கள் தேவையில்லை என விரட்டியடித்துவிட்டு, கலவரமான பின்னர் மட்டும் ஏன் அவர்களைத் தேடுகிறோம்.
.
ஜல்லிக்கட்டு நடந்தாலும் நடக்காவிட்டலும் அவர்களுக்கு எந்த தாக்கமும் இருந்திருக்கப் போவதில்லை. இளைஞர்களின் இந்த போராட்டத்தை மதித்து, அவர்களுக்குத் தோள் கொடுக்க வந்தவர்களை இதைவிடக் கேவலப்படுத்த முடியாது.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

ஜீவி said...

நெத்தியடி.

Anonymous said...

இவr சொல்வது எல்லாம் சரியன்று!

இவr சொல்லுவது போல, எல்லாம் நடந்திருந்தால்….அதை ஏன் போராட்டத்திற்கு முன்பே செய்திருக்கவேண்டியதுதானே! இன்று இவன் டெல்லியில் உள்ளவனை சந்தித்து பேசும் சூழலை உருவாக்கியது மாணவர்கள்.

மாணவர்கள் வெறும் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு மட்டும் வரவில்லை. தமிழகதில் கடந்த 10-20 வருடமாக நடக்கும் திருடர்களின் அட்சியை எதிர்த்தும், மத்திய அரசு செய்யும் அய்யோக்கியத்தனத்தை எதிர்த்தும் வெளிப்பட்ட ஒரு புரட்சியின் தொடக்கம்.

Student protest never ends with a partial result. Students/protesters wanted a permenant solution. It is impossible, but the law should have passed in assembly on Monday. Then students have to accept. CM OPS did everything best, but he failed at last.

போராட்டங்கள் நல்வாழ்வை அமைக்கும்; ஆனால் போராட்டமே வாழ்க்கை ஆகிவிடக்கூடாது!!!

மாணவ இளையோர்கள் பெண்கள் குழந்தைகள் பொது மக்களின் போராட்டம் — வெற்றி !!!

திருவிழா போல நடைபெற்று, மிகப்பெரிய சந்தோச வெற்றியுடன் முடிந்திருக்க வேண்டிய போராட்டம், எட்டப்பர்களின் துணையால் காக்கி கயவர்களின் கைவண்ணத்தில், இன்னொரு சோக நிகழ்வாகிப்போனது!!!

எம்மினத்திற்க்கே உரிய எட்டப்பர்களின் காட்டி கொடுக்கும் வேலை, இந்த போராட்டத்தின் போக்கை மாற்றி விட்டது.

எட்டப்பர்கள்: ஹிப்ஹாப் தமிழா சிவசேனாபதி ராஜேஸ்வர் balaji மற்றும் சிலர்

கெட்டதிலும் நன்மை : இந்த எட்டப்பர்களின் உள்முகம் வெளி வந்தது. இல்லையேல், இவர்கள் நாங்கள்தான் அடுத்த தலைவர்கள் என்று நம்மை இன்னொரு தலைமுறைக்கு ஏமாற்றி இருப்பார்கள்!

நல்ல முறையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மாணவர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த வந்த தமிழக அரசு, கடைசி நேரத்தில் காவல் காக்கிகள் மூலம் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது!

பெண்கள் மாணவர்கள் குழந்தைகள் மீது தடியடி செய்துள்ளதை காணும்போது…இது நம் மக்களின் அரசா அல்லது நம்மை அடிமைப்படுதும் அரசா என சந்தேகம் வருகிறது !!!

மத்திய அரசின் அழுத்தங்களுக்கு பயப்படாமல் மாணவர்களின் 7-வது நாள் போராட்டத்தை அனுமதித்து, அதே நேரம் சட்டடபையில் சட்ட வரைவு கொடுக்கப்பட்டு, மதியத்திற்குள் சட்டம் உருவாக்கப்பட்டபின், போராட்டம் முடிக்க சொல்லியிருந்தால் — தமிழக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்!

மாணவர்களும் வெற்றியோடு போராட்டத்தை முடித்திருப்பார்கள். கலவரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போயிருக்கும்! ஆளும் கட்சியும் அதை ஆட்டிவிப்பவர்களும் நல்ல பெயர் வாங்கி இருக்கலாம். அவர்கள் மேல் இருக்கும் அதிருப்தி குறைந்திருக்கும்!

ஆறு நாள் பொறுத்திருந்துவிட்டு ஏழாவது நாள் எல்லாமே தவறாகிப்போய்விட்டது!

இது நம் இனத்துக்கே உரிய குணம்! எட்டப்பர்களின் காட்டி கொடுக்கும் வேலையும், எங்கே மற்றவனுக்கு புகழ்/கிரெடிட் சேர்ந்துவிடுமோ என்ற நரித்தன அரசியல்வாதியின் எண்ணமும்….நம்மை மேலும் மேலும் கீழே தள்ளிக்கொண்டே இருக்கிறது!

பெரும்பாலோரின் உழைப்பும் எண்ணமும் நம் மக்களின் முன்னேற்றத்திற்காக, ஏதோ ஒரு வகையில் செயல்பட்டாலும்…..நம்மவர்களே நம்மை குழியில் தள்ளுவதை காணும்போது….விரக்தியும் வேதனையும் ஆற்றாமையும் ஆட்கொள்கிறது!!!

தமிழகத்தில் முதலில் மாற்றவேண்டியது காக்கி சட்டை அணிந்த கயவர் கூட்டங்களைத்தான். காக்கி சட்டையில் இருக்கும் தமிழின விரோதிகளை துரத்தி அடிக்கவேண்டும்! அவர்களை தூண்டிவிட்ட அரசியல் அயோக்கியர்களை அம்பலப்படுத்தி, அவர்களை அரசியலில் இருந்தே துரத்தவேண்டும்!

மாணவர்களுக்கு உதவி செய்த ஒரே காரணத்திற்கு, ஒரு குப்பத்து மக்களின் வாழ்வாதாரங்களை தீக்கிரையாக்கியுள்ளனர்! கொடுமையின் உச்சம்! அலங்கோல காட்சிகளை காண பொறுக்கவில்லை !!!

A humble request for readers of this blog: many may agree or may not agree with my opinion. However, kindly do not blindly write that these people have done everything good. Do not propose that they can lead the student movement. Specifically senapathy has political agenda and in the past he tried to get MLA seat from ADMK.

the memes praising him and others were in circulation for the last 10 days. It has supporters and opposers. Many has critically opposed it on Facebook/twitters and other social media that participated in protest. So it is waste of time to read this type of old self-proclaimed propoganda materials.

Eyes are tearful when I see the cries of kuppathu makkal. They are not criminals. They are Tamils. They support either DMK or ADMK in election. They support students in distress. They do not want to appropriate (seize or grab illegally) the wealth of people or others. The spineless police force have played their foul-play with these harmless people.

Chitra said...

super bro

Anonymous said...

செம

Unknown said...

I agree with you buddy.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...