மாயக்கான்னு ஒரு லேடி.. காணாம போகுது அவங்க பாடி. இவளோதான் படத்தோட
ஒன் லைன். அட காணாமப் போனா என்ன வேற வாங்கிக்க வேண்டியதுதானன்னு நமக்கு தோணும்.
ஆனா அந்த body eh மாயக்காதான். என்னடா மாயக்காங்குறீங்க.. பாடிங்குறீங்க.. ஒரு
வேளை இது ஒரு மலையாள மாயக்கா மாதிரி அவ்வ் அவ்வ் படமா இருக்குமோன்னு எதும் குழம்ப
வேண்டாம். படம் பக்கா சஸ்பென்ஸ் த்ரில்ல்லர்.
முதல் காட்சியிலேயே மார்ச்சுவரியில் வேலை செய்யிற ஒருத்தர் எதையோ
பாத்து பீதியில பயந்து ஓடுறாரு. ”தெய்வமே புயல் வேகத்துல போயிட்டு
இருக்கேன்…குறுக்க மணல் லாரி எதும் வந்துடாம பாத்துக்கன்னு வேண்டிக்கிட்டே
காட்டுக்குள்ளயெல்லாம் புகுந்து ஓடுறாவர, ரோட்டுல போற ஒரு கார் ஒண்ணு அடிச்சி
தூக்கிருது. உசேன் போல்ட் மாதிரி ஓடுனியேடா இப்டி வாயப் பொளக்குறதுக்கு தானா.
அள்ளிப்போட்டு ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போனா, கோமாவுக்கு பொய்ட்டருன்னு
சொல்லிடுறானுங்க. மேட்டர கேள்விப்பட்டு போலீஸ் அந்த மார்ச்சுவரிக்கு வந்து
பாக்குறாங்க. அப்பதான் மார்ச்சுவரில வச்சிருந்த மாயக்காவோட பாடி மிஸ்ஸான விஷயம்
தெரியிது.
”ஒரு பாடி ஃப்ரஷ்ஷா இருக்ககூடாதே உடனே தூக்கிருவாய்ங்களே”ன்னு
போலீஸ் கடுப்பாக்கி விசாரிக்க ஆரம்பிக்கிறானுங்க. மொத வேளையா மாயக்காவோட புருசன
போலீஸ் ஸ்டேஷன்ல கூப்டு வச்சி பிதுக்கு பிதுக்குன்னு பிதுக்குறானுங்க. மாயக்கா
பாடிய யாரு எடுத்ததுங்குற மேட்டரத் தவற மத்த சிலப் பல மேட்டர்கள்லாம் வெளில வருது.
கடைசில ஒரு செம்ம ட்விஸ்ட் வச்சி முடிச்சிருக்காங்க.
படத்தின் பெரும்பகுதி மழை பெய்துகொண்டிருக்கும் இரவுல நடக்குது.
அதுவே செமையா இருக்கு. ஸ்பானிஷ் படம் என்பதால் தவிர்த்து விட வேண்டாம். சஸ்பென்ஸ்
த்ரில்லர் விரும்பிகள் கண்டிப்பா பாக்க வேண்டிய படம்.
(அந்த பாடி பேரு Mayka... கொஞ்சம் கிளுகிளுப்பா இருக்கட்டுமேன்னு மாயக்கான்னு மாத்திக்கிட்டேன்)
THE BOY
தவிர்க்க முடியாத சூழல்ல, ஒருத்தன்கிட்டருந்து எஸ்கேப் ஆகுறதுக்காக
ஒரு பொண்ணு வேலை தேடுது. அப்ப லண்டன்ல இருக்க ஃபேமிலி அவங்க குழந்தைய பாத்துக்க
ஆயா வேலைக்கு ஆள் வேணும்னு விளம்பரம் கொடுக்க, தூரமா இருந்தாலும் பரவால்லைன்னு
இந்தப் புள்ள வேலைக்கு வந்துருது.
வந்து பாத்தா அந்த வீட்டுல நிறைய வித்யாசமான விஷயங்கள் நடக்குது.
வழக்கம்போல, பத்து பதினைஞ்சி ஏக்கர் நிலத்த வளைச்சிப் போட்டு, அதுக்கு ஒரு கேட்டப்
போட்டு நடுவுல கட்டப்பட்டு, ஆங்கில த்ரில்லர்
படங்களுக்கு வாடகைக்கு விடுறதுக்குன்னே ரெடியா வச்சிருக்க மாதிரி ஒரு வீடு. சுத்து
வட்டாரத்துல ஒரு பய இருக்க மாட்டான்.
அந்தப் புள்ளை வேலைக்கு வந்துருது. வீட்டுல இருக்க அந்த தம்பதிகள்
ரொம்ப வயசானவங்க. “இவங்களுக்கு குழந்தை இருந்தா அவன ஆயா பாத்துக்க முடியாதே..
அவந்தான் ஆயாவ பாத்துக்கனும். அப்புறம் எதுக்கு வேலைக்கு கூப்டுருக்காங்க?”ன்னு
டவுட்டுல, சரி பையன காமிங்கன்னு சொல்லுது. அந்த வயசான தம்பதி ஒரு ரூமுக்குள்ள்
இந்தப் பொண்ணை அழைச்சிட்டு போய் அது பாத்துக்க வேண்டிய பையன காமிக்கிராங்க. பாத்தா நல்லா சீவி, ட்ரெஸ்ஸெல்லாம் மாட்டிவிடப்பட்ட
ஒரு பொம்மை உக்காந்துருக்கு. இதப்பாத்த இந்தப் புள்ள கெக்க புக்கன்னு சிரிக்க
ஆரம்பிக்க, “அவ்ளோ பெரிய காமெடி இல்ல இது” ங்குற மாதிரி அந்த தம்பதிகள்
முறைக்கிறாங்க.
அந்த பொம்மைய, அதாவது அவங்க பையனா நினைச்சிட்டு இருக்க பொம்மைய
எத்தனை மணிக்கு எழுப்பனும், எப்ப குழுப்பாட்டனும் எப்ப சாப்பாடு குடுக்கனும்னுலாம் டைம் டேபிள் போட்டு குடுக்குறாங்க.
இவளுக்கு அதெல்லாம் காமெடியா இருக்கு. ஒரு கட்டத்துல அந்த தம்பதிகள் வெளியூர்
போறோம் ரெண்டு மூணு நாளுக்கு பையன பாத்துக்கன்னு சொல்லிட்டு வீட்ட விட்டு எஸ்கேப்
ஆயிடுறாங்க. இப்ப பொம்மையும் நம்ம அம்மையும் தனியா வீட்டுக்குள்ள..
பொம்மைய ஒரு இடத்துல உக்கார வச்சிட்டுப் போய் திரும்ப வந்து பாத்தா
வேற இடத்துல இருக்கு. தீடீர்னு பொம்மை கண்ணுலருந்து கண்ணீர் வருது. இப்படி பல
பீதியைக் கிளப்பும் சம்வங்கள் நடந்து, கடைசில அது பொம்மையா இல்லை உயிர் இருக்கா?
அப்டிங்குறதயெல்லாம் கொஞ்சம் த்ரில்லிங்கா சொல்லியிருக்க படம் தான் THE BOY.
க்ளைமாக்ஸ் காட்சிகளைத் தவிற மற்றபடி இண்ட்ரஸ்டிங்காவே இருந்துச்சி. டைம் இருந்தா
பாக்கலாம்.
THE BEST OFFER
யூரோப்ல அரிய வகை ஓவியங்களையும், பொருட்களையும் ஏலம் விடுற ஒரு
கம்பெனில மேனேஜரா இருக்கவர் Virgil Oldman. சின்ன வயசுல young man ah தான் இருந்தாரு. இப்ப
வயசாயிட்டதால Oldman ன்னு பேர மாத்திக்கிட்டாப்ள. அட இப்ப அதுவா ப்ரச்சனை? எங்கயாவது
எதாவது பழங்கால பொருள் கிடைச்சா அத ஏலம் விட்டுருவாரு. இவருக்கு புடிச்ச
ஓவியங்களயெல்லாம் இவரே ஒரு அள்ளக்கைய வச்சி அவன ஏலம் கேக்கச் சொல்லி, அவனுக்கு டீல
முடிச்சி விட்டு பின்னால வந்து அவனுக்கு 50 ரூவா கமிஷன குடுத்துட்டு ஓவியத்த
வாங்கிட்டு போயிருவாரு. இப்டி செஞ்சே ஒரு ரூம் ஃபுல்லா அரிய ஓவியங்கள சேகரிச்சி
வச்சிருக்காப்ள.
இப்படி போயிட்டு இருக்கும்போது, ஒரு பொண்ணுகிட்டருந்து நம்ம ஓல்டு
மேனுக்கு கால் வருந்து. அதாவது அந்தப் பொண்ணோட பெற்றோர் இறந்துட்டாதாகவும், அவங்க
பேலஸ்ல உள்ள பழைய காலத்து அரிய வகை ஓவியங்களையெல்லாம் ஏலம் விட்டுத் தரும்படியும்
கேக்குது. ஓல்டு மேனும் அந்த பேலஸூக்கு போய் பாக்குறாரு. நிறைய அந்த காலத்து
பொருட்கள். “நல்லா தொக்கா மாட்டிருக்குது”ன்னு பவர் ஸ்டார் மாதிரி வாய
வச்சிக்கிட்டு அந்தப் பொண்ணை பாக்க முயற்சி பன்றாரு. ஆனா அந்தப் புள்ள நேர்ல பாக்காம
ஃபோன்லயேதான் பேசுது.
போகப் போக அந்தப் பொண்ணுக்கு Agoraphobia ன்னு ஒரு வியாதி இருக்கது
தெரியவருது. சிம்பிளா agoraphobia ன்னா என்னனு சொல்லனும்னா எதப் பாத்தாலும் பயம்
மற்றும் நம்பிக்கையின்மை. “காலா வாடா உன்னைக் காலால் உதைப்பேன் என்றார் பாரதி..
ஆனால் காலனைக் காலால் உதைத்தால் எண்ட கால் அடிபடுமோ எண்ட பயமெனெக்கு” ன்னு எதப்
பாத்தாலும் பயம்னு சொல்லுவாரே தெனாலி. அந்த மாதிரி. அதனால அந்தப் பொண்ணு யாரையும்
நம்பாது. தனியா வெளில போகாது. யாரையும் நேர்ல சந்திகவும் சந்திக்காது. இப்படியே
போயிகிட்டு இருக்க நம்ம ஓல்டு மேன் அந்த ஏலம் விடுற சாகுக்குல அந்தப் பேலஸுக்கு
போக்கும் வரத்துமா இருக்காரு.
அந்தப் புள்ளை ஓல்டுமேன கொஞ்சம் கொஞ்சமா நம்ப ஆரம்பிச்சி அவர
மட்டும் நம்புது. அவர மட்டும் நேர்ல பாத்து பேசுது. பேலஸூக்குள்ள மட்டும். இப்டியே
போயிட்டு இருக்கயில “The Illusionist “ ல குடுக்குற மாதிரி ஒரு ட்விஸ்ட்ட குடுத்து
படத்த முடிக்கிறாங்க. நேரமிருந்தா இதையும் கண்டிப்பா பாக்கலாம்.
3 comments:
அண்ணே. இந்த ஹாலிவுட்டுகாரங்க என்ன டெக்னாலஜிய யூஸ் பண்ணி திருடுறானுங்கன்னு தெரியல. 2016 ஷாம், அர்ஜுன் நடிச்ச ஒரு மெல்லியகோடு படத்த 2012 வருசத்திலயே திருடிருக்கானுங்க. ப்ளடி ராஷ்கோல்ஸ்...
ஆமா
ஆமா
அவிக டைம்ட்ராவல் பண்ணிருப்பாக....நம்ம ஆளுக கஷ்டப்பட்டு கதை எழுதுனா அத காலத்த கடந்து வந்து ஆட்டய போடுராங்க
Post a Comment