Saturday, August 12, 2017

வி ஐ பி 2 விமர்சனம் !!!


Share/Bookmark
முன்னாடியெல்லாம் டிவில பேப்பர்லதான் படத்துக்கு விளம்பாம் பன்னுவாங்கஇப்பல்லாம் படம் ரிலீஸாகுறதுக்குரெண்டு மூணு  நாளுக்கு முன்னால SMS லயே விளம்பரம் பன்ன ஆரம்பிச்சிட்டாங்கஅதுவும் இந்தப் படத்துக்குஒண்ணு அனுப்பிருந்தாங்க பாருங்க.. "The Jobless Raguvaranisback ன்னு.. ஏன்யா ஒருத்தனுக்கு வேலைபோயிருச்சிங்குறதுல உனக்கு அவ்வளவு சந்தோசமா? இத பெருமையா வேற சொல்லிக் கூப்புடுறன்னுநினைச்சிக்கிட்டேன்.   பக்கத்து வீட்டு பையன் எவனுக்காவது வேலை போயிருச்சின்னா “ Wow.. The jobless guy is back”ன்னு சொல்லிப்பாருங்க… கல்லக்கொண்டு மண்டைல எரிஞ்சிருவான்சரி வாங்க நம்ம படம் எப்டி இருக்குன்னுபாப்போம்.

ரெண்டாவது பாகத்துக்கான எந்த ஒரு தடயத்தயும் விடாம இருந்த படங்களுக்கு கூட வலுக்கட்டாயமா இப்பல்லாம்ரெண்டாவது பாகம் எடுத்துக்கிட்டு இருக்காங்ககாலத்தின் கட்டாயம்தனுஷ் நடிச்ச 30 படங்கள்லயும் ஒருமிகப்பெரிய வெற்றிப்படம்னா அது வேலையில்லா பட்டதாரின்னு தான் சொல்லனும்அந்த அளவுக்குஇளைஞர்களை ஈர்த்த படம்அப்படிப்பட்ட ஒரு படத்துக்கு இரண்டாவது பாகம் எடுத்துருக்காங்கஆனா  முதல்பாகத்தோட வெற்றிக்கு வித்திட்ட ரெண்டு முக்கியான ஆட்களான இயக்குனர் வேல் ராஜ் இயக்கல.இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கலஇருந்தாலும் படம் நல்லதான் வந்திருக்கு.

மற்ற இரண்டாம் பாகப் படங்கள ஒப்பிடும்போது இந்தப் படத்துல கதைக்கான அந்த செட்டப்புக்குள்ள நம்மளபுகுத்திக்கிறதுக்கு நேரமே தேவைப்படலநேரடியா காட்சிகளோட ஒன்ற முடியிதுஏன் இத சொல்றேன்னா சிங்கம்படத்துல முதல் பாகத்துல நடிச்ச ஒவ்வொரு கேரக்டரையும் இரண்டாவது பாகத்துல அறிமுகப்படுத்த நிறையகாட்சிகள் தேவையில்லாம இருந்துச்சிஆனா இங்க அந்தப் ப்ரச்சனையே இல்லைஎந்த கேரக்டருக்கும் எந்த ஒருவிளக்கமும் தேவைப்படாம வேலையில்லா பட்டதாரி முதல் பாகத்துக்குள்ள இருக்க மாதிரியே ஒரு தாக்கத்தஉண்டு பன்னிருந்தாங்கஅதுவே படத்துக்கு பெரிய ப்ளஸ்.

அடுத்தது காமெடி.. மனைவி அமலா பாலுக்கு தனுஷ் மட்டும் இல்லாம மொத்த குடும்பமும் நடு நடுங்கிப் போறமாதிரியான காமெடி ட்ராக் நல்லாவே ஒர்க் அவுட் ஆயிருக்குதனுஷ்சமுத்திரக்கனிவிவேக்செல் முருகன்னுஎல்லாருமே காமெடி நல்லா பன்னிருக்காங்க

கிட்டத்தட்ட இந்த VIP 2 வோட முதல்பாதி VIP முதல் பாகத்துக்கு எந்த வகையிலயும் குறைவில்லாம சூப்பராவேபோச்சு. ”வட்டச் செயலாளர் வண்டு முருகன்.. வட்டச்செயலாளர் வண்டு முருகன்ன்னு விர்ருன்னு போயிட்டுஇருந்த படம் ரெண்டாவது பாதில “வட்டாஆஆஆஆ…. செயலாஆஆஆளர்….. வண்டுடூடூடூ..டூ  முரு..ன்’ ந்ங்குறஅளவுக்கு வேகம் குறைஞ்சிருச்சி.

ரெண்டாவது பாதிய நகர்த்த இந்த டீம் கையில எடுத்துக்கிட்ட கதைக்களம் சரியில்லைஇன்னும் சிறப்பா எதாவதுசெஞ்சிருக்கலாம்அதுவும் க்ளைமாக்ஸ் அதுக்கும் மேல.. இந்த ஜெயம் படத்துல ரெண்டாவது பாதில பெரியஃபைட் சீக்குவன்ஸ் இருக்கும்அதப் பாக்கும்போடு நமக்கு க்ளைமாக்ஸ் மூடு செட்டாயிரும்அந்த ஃபைட்டுமுடிஞ்சோன படமெல்லாம் முடிஞ்சிருச்சின்னு நினைச்சிட்டு இருப்போம்ஆனா அதுக்கப்புறம் ஜெயம் ரவியும்சதாவும் பாட்டெல்லாம் பாடி கொண்ணூ எடுத்துருவாங்கஅதேதான் இங்கயும்நம்ம க்ளைமாக்ஸ் மூடுலஇருக்கும்போது ஸ்க்ரீன்ல மொக்கை போட்டுக்கிட்டு இருக்காங்கஎதோ இண்டர்வல் முடிஞ்சி படம் போட்ட உடனே வரவேண்டிய சீனையெல்லாம் எடுத்து க்ளைமாக்ஸ்ல போட்ட மாதிரி ஒரே இழுவைஆனா அதுலயும்காமெடிய கலந்து விட்டதால கொஞ்சம் பரவால்ல.

கஜோல் கெட்டப்புலயெல்லாம் சிறப்புமாப்பிள்ளை ராஜராஜேஸ்வரிமன்னன்  சாந்தி தேவி,படையப்பாநீலாம்பரின்னு பல பேரப் பாத்த நமக்கு கஜோலோட கேரக்டர் அவ்வளவு ஈர்க்கல.கஜோலோட கதாப்பாத்திரஅமைப்பு அப்டியே மன்னன் விஜயசாந்தியத் தான் ஞாபகப்படுத்துது.ஒருவேளை மன்னன் படத்துல ரஜினி விஜயசாந்திய கல்யாணம் பன்னாம குஷ்பூவக் கல்யாணம் பன்னிருந்தா இப்டித்தான் இருந்துருக்கும் போல. தனுஷ்ரஜினி நடிச்ச மாப்பிள்ளைய ரீமேக் பன்னிட்டாரு… அடுத்து மன்னன் படத்ததான் லைட்டா டிங்கரிங் பண்ணி இந்தப்படத்த எடுத்துருக்காங்கஅடுத்து என்ன படையப்பா தானேஏன் தனுஷ்சார்… நீங்க நம்ம மாப்பிள்ளைதான்ரஜினியோட ரசிகர்தான்அவர ஃபாலோ பன்றதுல தப்பில்லைஅதுக்குன்னு இவ்ளொ க்ளோஸாவா ஃபாலோபன்றது?

ரைஸாவ முதல் முதல்ல காட்டுனப்போ தியேட்டர்ல உள்ள அத்தனை பேரும் “ஏய் ரைஸா.. அங்க பாரு ரைஸா..சார் அங்க பாருங்க.. இந்த பிக் பாஸுல வருமே ரைஸா… அதான் இதுன்னு கூட இருக்கவன் பக்கத்துலஇருக்கவன்கிட்டல்லாம் கூப்டு கூப்டு சொல்லிட்டு இருந்தாய்ங்கஅந்தப் புள்ளைக்கு எதாவது நல்ல கேரக்டராஇருக்கும்னு பாத்தா அள்ளக்கைக்கு அள்ளக்கையா கடைசி ஒரு அள்ளக்கை இருந்தா எப்டி இருக்கும்அந்த மாதிரிசும்மா ஃபைல வச்சிட்டு நின்னுட்டு இருக்கதுதான் ரைஸாவோட கேரக்டர்.

கருத்து கந்தசாமி சமுத்திரக்கனி கருத்துக்களுக்கு நடுவுல கொஞ்சம் காமெடியும் பன்ன முயற்சி செஞ்சிருக்காரு.சீன் ரோல்டனோட இசை நல்லாவே அமைஞ்சிருக்குபாடல்களும் பரவால்லநிழலின் அருமை வெயிலில்தெரியும்ங்குற மாதிரி அனிரூத்தோட அருமை இந்த ரெண்டாது பாகத்துல அவரோட மியூசிக் இடையில இடையிலவரும்போதுதான் தெரிஞ்சிது.  உண்மையிலயே அனிரூத்தோட பெஸ்டு வேலையில்லா பட்டதாரி தான்இந்தப்படத்துக்கும் அவரு இசையமைச்சிருந்தா படம் இன்னும் ஒரு படி மேல இருந்துருக்கும்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதையும் இயக்கமும் ஆஹா ஓஹோன்னு சொல்ல முடியாட்டாலும் முதல்பாகத்துக்கு எந்த ஒரு கலங்கமும் வராத அளவுக்கு பண்ணிருந்ததே பெரிய விஷயம்அதுவும் அவங்களுக்கு முதல்படம் மாதிரியே இல்லைநல்ல மேக்கிங். Poetu வின் நகைச்சுவை வசங்களும் அவரோட நடிப்பும்தான் படத்துக்குமிகப்பெரிய ப்ளஸ்நடை உடை பாவனைன்னு நிறைய இடங்கள்ல ரஜினியை ஞாபகப்படுத்துறாரு.

முதல் பாகத்துல இருந்து கிட்டத்தட்ட எல்லா நல்ல வசங்களையும் இந்தப் பகுதில எதாவதுஒரு இடத்துலபேசிடுறாங்கஅதக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

மொத்ததுல சூப்பரான முதல் பாதி.. சுமாரான ரெண்டாவது பாதி.. ரொம்ப சுமாரான க்ளைமாக்ஸ்.. இதான்வேலையில்லா பட்டதாரி ரெண்டாவது பாகம்ஆனா காமெடிக்காகவும் தனுஷுக்காகவும் கண்டிப்பா பாக்கலாம்.


வேலையில்லா பட்டதாரி 2 வீடியோ விமர்சனம் இங்கே க்ளிக்கவும்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

Anonymous said...

எழுத்து வடிவ விமர்சனம் எப்ப

Paranitharan.k said...

எழுத்து வடிவில் காண காத்திருக்கிறேன் சார்...

Paul Ra Je said...

Muthu siva anna.. antha sila mani neram nu sonneengaley ... athu eppo varum :)

Anonymous said...

வரும் ஆனா வராது 😜

ஜீவி said...

யூ ட்யூபில் பார்த்தாலும் எழுத்து வடிவில் படித்து ரசிக்கும் சுகமே அலாதி... விரைவில் பதிவிடுங்கள் தலைவா

Anonymous said...

செளந்தர்யா ரஜினிக்கு முதல் படமா ��

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...