Tuesday, August 22, 2017

கவுண்டரின் Game Of Thrones – பகுதி 2!!! (18+)


Share/Bookmark
(முன்னுரை) எமலோகத்தில் கவுண்டர் எமனாகவும், செந்தில் சித்ரகுப்தனாகவும் இருக்க Game of Thrones சீரியலில் இறந்த ஒவ்வொருவராக கவுண்டரைச் சந்தித்து சொர்க்க நரகத்தை தீர்மானித்துக் கொள்கின்றனர். கடைசியாக Hound வர, வெந்துபோன அவரது முகம் பிடிக்காமல் எமன் அவரை மறுபடி திருப்பி அனுப்பி விடுகிறார்.


கவுண்டர் : டேய் சீனா கூனாமறுபடி இதுபோல் வெந்த மூஞ்சி, தீஞ்ச மூஞ்சியெல்லாம் என் கண் முண்ணால் காட்டினால் சுடு பொட்டியை வைத்து உன் முகத்தை தீய்த்துவிடுவேன்..

செந்தில் : அய்யோ ப்ரபோஅப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள்.. அவர்கள் முகம் அப்படி இருப்பதற்கு நான் என்ன செய்வது.

கவுண்டர் : மூஞ்ச மூடிட்டு அனுப்புடாசரி அடுத்தவன வரச்சொல்லு
(ப்ரின்ஸ் ஓப்ரைன் நசுங்கிப் போன முகத்துடன் வருகிறார்)கவுண்டர் : இஹ்ஹ்ஹ்ஹ்டேய் இதுக்கு  முன்னால வந்தவனுக்காவது முஞ்சின்னு சொல்றதுக்கு ஒண்ணு இருந்துச்சி. இவனுக்கு என்னடா மூஞ்சி இருக்க வேண்டிய இடத்துல மொழுக்கட்டையா இருக்கு. டேங்கர் லாரி எதாவது மூஞ்சில ஏறிருச்சா?

செந்தில் : அதெல்லாம் இல்லை ப்ரபோ.. ஒருவன் இவன் முகத்தை கையாலேயே நசுக்கி விட்டான்.

கவுண்டர் : என்னது கையால நசுக்கிட்டானா? பூலோகத்தில் அவ்வளவு பெரிய கை இருப்பது ஒருவனுக்குத்தான். அப்படியென்றால் இவன் முகத்தை நசுக்கியவன் பெயர் ராணா டகுபதி தானே?

செந்தில் : ப்ரபோஅவன் பாகுபலி குடும்பத்தைச் சேர்ந்தவன்இவன் Game of Thrones லிருந்து வந்திருக்கிறான்.

கவுண்டர் : அட ரெண்டும் ஒண்ணுதானப்பாசரி அத்த உடு.. ஆமா எதுக்காக மூஞ்ச நசுக்குனான்?

செந்தில்: இன்னொருவனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக சண்டை போடும்போது இவனுக்கு முகம் நசுங்கி விட்டது.

கவுண்டர் : சீனா கூனா.. பூலோகத்தில் வழக்கமாக அடுத்தவனுக்கு ஆபத்து என்றால் வேடிக்கைதானே பார்ப்பார்கள்.. இவன் என்ன வித்தியாசமான பிறவியாக இருக்கிறான். கடைசில பாரு அவன மரண தண்டனையிலருந்து காப்பாத்தப் போய் இந்த நாயி மரணமடைஞ்சிருச்சி.
செந்தில் : ப்ரபோ இவன சொர்க்கத்துக்கு அனுப்பவா இல்லை நரகத்துக்கு அனுப்பவா?

கவுண்டர் : சரி இவனப் பாத்தா பாவமா இருக்கு.. இவன சொர்க்கத்துக்கே அனுப்பிடு… (ஓப்ரைனைப் பார்த்து) இந்தா பாரு தம்பிஇந்த மூஞ்சோன கேண்டீன் பக்கம் எதுவும் போயிறாத.. மூஞ்சில இருக்கது சிக்கன் மசாலான்னு நினைச்சி வழிச்சி நக்கிறப் போறானுங்க.

ஓப்ரைன் சொர்க்கத்தை நோக்கி நடக்கிறார்.அடுத்து பர்தா போட்டது போல் உடையணிந்து யாரோ ஒருவர் வருவது கவுண்டருக்குத் தெரிகிறது

கவுண்டர் : (பதட்டமாக) அய்யோ சீனா கூனா.. வா ஓடிவிடலாம். அந்த காஞ்சூரிங் பேய் இங்கயும் வந்துவிட்டது.

செந்தில் : (அந்த உருவத்தை நன்றாகப் பார்த்து) ப்ரபோ.. பயப்படாதீர்கள்.. இது காஞ்சூரிங் பேய் இல்லை.. இதுதான் லேடி ஒலேனா

கவுண்டர் : சீனா கூனா என்ன கெட்ட வார்த்தையெல்லாம் பேசுகிறாய்?

செந்தில் : கெட்டவார்த்தை இல்லை ப்ரபு.. அவங்க பேரே அதுதான்.. லேடி ஒலேனா..

கவுண்டர்: என்னது லேடி ஒலேனாவா.. அது என்ன மண்டையில உல்மா கட்டிக்கிட்டு வந்துருக்கு..

செந்தில் : எனி டைம் இதே கெட்டப்தான் ப்ரபோ.. ஆனா கெழவிய சாதாரணனமா நினைச்சிடாதிங்க.. ஒரு சின்னப் பையன வெசம் வச்சி கொன்னுருக்கு

கவுண்டர் : இஹ்ஹ்…. (ஒலேனாவிடம்) ஏன் பாட்டிக்கா.. சின்னப்பையனுக்கு வெசம் வச்சிருக்கியே பாக்க பாவமா இல்லை?

ஒலேனா : இருந்துச்சி

கவுண்டர் : எப்ப?

ஒலேனா : எனக்கு பதிலா டிரியன அவனுங்க கைது பன்னி மரண தண்டனை குடுக்கும்போது


கவுண்டர் : அடங்கப்போவ்சீனா கூனா... இது ரொம்ப டேஞ்சரஸ் கெழவியாக இருக்கிறது. இவளை நரகத்திற்கு அனுப்பி விடு

செந்தில் : அப்படியே ஆகட்டும் ப்ரபோ…. (என்று கூறிவிட்டு ஒலேனாவை நரகத்திற்கு செல்லும்படி சமிக்கிறார்)

கையில் அதே சிறிய விஷ பாட்டிலுடன்இவனுக்கும் ஒரு பாயசத்த போட்டுற வேண்டியதுதான்என்றபடி நரகத்தை நோக்கி நடக்கிறது ஒலேனா.

செந்தில் : ஏன் ப்ரபு.. உங்களுக்கு காஞ்சூரிங் பேய்னா அவ்ளோ பயமா?

கவுண்டர் : (லேசாக அழுகிற தொணியில்) ஆமாடா ஹிப் ஹாப் ஆதி மண்டையாஅந்தக் காஞ்சூரிங் கெழவிய எப்ப பாத்தாலும் திடுக் திடுக்குன்னு தூக்கிப்போடுதுடா

செந்தில் : அந்த பேய வெரட்டுறது ரொம்ப ஈஸி ப்ரபோ.. அதுக்கிட்ட போய்வலாக்ந்னு சொன்னா போயிரும்

கவுண்டர் : என்னாது?

செந்தில் : வ்வலாக்கு   ( ”ப்ளீச்”.. ஸ்லாங்கில் படிக்கவும்)

கவுண்டர் : அதுக்கு ஏண்டா மூஞ்சில எச்சி துப்புறசரி அடுத்தவன வரச் சொல்லு.

செந்தில் : ப்ரபோ.. எனக்கு அர்ஜண்ட்டாக வருகிறது.. இதோ ஒரு 5 நிமிடத்தில் வந்து விடுகிறேன். அடுத்து வருபவரை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்


சற்று பருமனாக ஒருவர் வருகிறார்

கவுண்டர் : இஹ்ஹ்ஹ்என்ன இவன் என்ன கடல் ஆமைக்கு மீசை தாடி வச்ச  மாதிரி வந்து நிக்கிறான். டேய் உன் பேரென்னடா?

“Hodor”

கவுண்டர் : சரி வச்சிக்க.. எப்புடி செத்த?

“Hodor”

கவுண்டர்: இஹ்ஹ்.. என்ன அதயே சொல்றான்.. ஒருவேள செவுடா இருப்பானோ? டேய் ராஜா.. இப்டி பக்கத்துல வாம்மா.. (காதுக்கு அருகே சென்று) “ஆமா எப்புடி  செத்த?

“Hodoooor”

கவுண்டர் : குட்டிம்மா… அது இல்லை.. எப்புடி மர்கையா.. ? யாரு உன்ன கொன்னா?

“Hodorrrrr”

கவுண்டர் : டேய் என் பொறுமைய சோதிக்காத..  மரியாதையா சொல்லு எப்புடி செத்த? (கடுப்பாக)

“Hodorrrr”

கவுண்டர் ; (உச்சகட்ட கடுப்பில்) ஒக்கா மவனே.. கதைய எடுத்து மண்டையை பொளந்துருவேன்என கவுண்டர் ஆவேசப்பட

செந்தில் : ப்ரபோ.. நிறுத்துங்கள்.. நிறுத்துங்கள்.. என்றபடி செந்தில் ஓடிவருகிறார்

கவுண்டர் : சீனா கூனா.. எதற்காக என்னை தடுக்கிறாய்வன் என் இடத்திற்கு வந்து என்னையே அவமதிக்கிறான்.

செந்தில் : அவனுக்கு அவ்வளவுதான் பேச வரும்,,

கவுண்டர் : இஹ்ஹ்ஹ்… காண்டாமிருக கண்ணுக்குட்டி மாதிரி இருக்கான். இன்னுமா இவன் பேச கத்துக்கல…

செந்தில் : ஆமாம் ப்ரபு.. ஆனால் மிகவும் நல்லவன்..

கவுண்டர் : சைஸுல உன்ன மாதிரி இருந்தா உடனே சப்போர்ட் பன்ன ஆரம்பிச்சிருவியே… சரி அவன சொர்க்கத்துக்கே அனுப்பிரு… அப்புடியே அங்க கதவு தொறக்குற வேலை எதாவது இருந்தா போட்டுக்குடு..

செந்தில் : ப்ரபோ… அட்டகாசம்… இவனுக்கு தெரிந்ததும் அந்த ஒரு வேளைதான். எப்படி இப்படி கச்சிதமாக கண்டுபிடித்தீர்கள்..

கவுண்டர் : நா எமண்டா…

பேசிக்கொண்டிருக்கும் போதே வெட்டப்பட்ட கை ஒண்று தவழ்ந்து தவழ்ந்து வருகிறது…. அதில் ஒரு Tag ஒண்று கட்டப்பட்டு அதில் “ஜேமி லானிஸ்டர்” என்று எழுதியிருக்கிறது

கவுண்டர் : டேய் சீனா கூனா… என்ன இது வெறும் கை மட்டும்  வருகிறது? மீத உடல் எங்கே..? எரிச்சிட்டானுகளா?

செந்தில் : இல்லை ப்ரபு.. இது ஜேமி லானிஸ்டரோட கை.. இன்றைய தேதியில் அவரது கைக்கு மட்டும்தான் ஆயுள் முடிந்திருக்கிறது.

கவுண்டர் : வர வர உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லையடா சீனா கூனா.. இப்படி கைவேறு கால் வேறாக எடுத்து வந்தால் எப்போது டார்கெட்டை அச்சீவ் செய்வது?

செந்தில் : மன்னித்துக் கொள்ளுங்கள் ப்ரபோ..

கவுண்டர் : சரி இந்த ஜேமி ஒரு கருமாந்திரம் பிடித்தவன் என என் காதுக்கு செய்தி வந்ததே உண்மையா?

செந்தில் : ஆமாம் ப்ரபு.. ஆனாலும் ஒரு வகையில் ஜெண்டில்மேன்.. Lannisters Always pay their debts ப்ரபோ…

கவுண்டர் : அப்டின்னு யாரு சொன்னது?

செந்தில் : அவங்களே தான்

கவுண்டர் : (ஹைபிட்சில்) அயர்ன் பேங்குல வாங்குல 5 லட்சம் கடன கட்ட முடியாம ஊர் ஊருக்கு பிச்சை எடுத்துக்கிட்டு திரியிது நாயி.. இதுல குடும்ப பஞ்ச் டயலாக்கு வேறயா? இனிமே இந்த டயலாக்க இவனுக பேசுறதக் கேட்டேன்… மகனே நாக்க இழுத்து தார்ரோட்டுல வச்சி தேச்சிபோடுவேன்.. படுவா.. இந்தக் கைய்ய நரகத்துல தூக்கிப்போடுடா..
காவலாளிகள் கையை அப்புறப்படுத்திக் கொண்டிருக்க

முன்பு ”கை” வந்ததைப் போல அடுத்து அதே போல் Tag கட்டப்பட்டு வித்யாசமாக எதோ ஒண்று கவுண்டரை நோக்கி வர… செந்தில் நைஸாக நழுவப் பார்க்கிறார்.. கவுண்டர் ஒரு கையால் பிடித்து “இருடீ…” “என்கிறார்.

அது அருகில் வந்தவுடன் அதனைப் பார்த்த கவுண்டர் ஜெர்க்காகிறார்…

கவுண்டர் :  அட்டடடாடா…. இய்ய்ய்ய்ய்ய்ய்ய்…. டேய் சீனா கூனா… ஏன் இப்டி செஞ்ச?

செந்தில் : (அழுகிற தொணியில்) ப்ரபோ  ஆயுளை முடித்து விடலாம் என்றுதான்…

கவுண்டர்: ஒழுங்கு மரியாதையா சொல்லு ஏன் இப்டி செஞ்ச..? கைய வெட்டிக் கொண்டு வந்த ஓக்கே.. கால வெட்டிக் கொண்டு வந்த ஓக்கே… இப்பப்…… ஹைய்யோ அத என் வாயால எப்டி சொல்லுவேன்.. என்று கவுண்டர் புலம்பிக் கொண்டிருக்கும்போதே செந்தில் நைஸாக நழுவி ஓடுகிறார்…

”டேய்… ஓடாத நில்லு… வக்காளி நீ எங்க போனாலும் உன்ன விடமாட்டேன்” என்ற படி கதையை எடுத்துக்கொண்டு துரத்துகிறார்….

கவுண்டரை நோக்கி வந்த அந்தப் பொருள் சொர்க்கத்திற்கு செல்வதா நரகத்திற்கு செல்வதா என்பது போல குழம்பி நிற்க அதில் கட்டப் பட்டுள்ள Tag இல் “Theon Grejoy” என்று எழுதப்பட்டிருந்தது.
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...