Saturday, December 23, 2017

வேலைக்காரன் – ரொம்ப அழாகா செஞ்சுருக்கம்மா!!!


Share/Bookmark
நல்ல படங்களுக்கும் நல்ல கருத்துள்ள படங்களுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. நல்ல கருத்துள்ள படங்கள் நல்ல படங்களாதான் இருக்கனும்னு எந்த அவசியமும் இல்ல. ஒரு படம் நல்ல படமா அமையிறதுக்கு படத்துல உள்ள நல்ல கருத்துக்களையும் தாண்டி நிறைய விஷயங்கள் தேவை. நம்ம மக்கள்கிட்ட உள்ள வீக்னஸ் என்னன்னா நல்ல கருத்து இருந்தாலே நல்ல படம்னு போற போக்குல சொல்லிட்டு போயிருவாங்க. யாரு பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு மட்டும்தாண்டா கடவுள் தெரிவாருங்குற மாதிரி அடுத்தடுத்து போறவங்களும் அதயே ஃபாலோ பன்ன ஆரம்பிச்சிருவாங்க. இந்த மாதிரி பல படங்கள நாம ஹிட்டாக்கிருக்கோம். அந்த வகையில வந்துருக்க ஒரு படம்தான் சினா கானா நடிச்ச வேலைக்காரன்.

”இதப் படிங்க முதல்ல”  அப்டின்னு ஆரம்பிச்சி பாக்கெட்டுல அடைச்சி வச்ச உணவுகள்ல மெழுகு கலந்துருக்கு, பத்து வகையான கெமிக்கல் கலந்துருக்கு அத சாப்டா கேன்சர் வரும் இத சாப்டா அல்சர் வரும்னு அப்டின்னு நமக்கு ஒரு பக்க வாட்ஸாப் மெசேஜ் வருமே ஞாபகம் இருக்கா? அப்டி ஒரு பக்கத்துக்கு “விக்ஸ்”ன்னு எழுதி வந்தத ஒரு 200 பக்கத்துக்கு சுத்தி சுத்தி எழுதி அத ஒரு படமா எடுத்தா அதுதான் இந்த வேலைக்காரன்.

பேசியே கொல்றதுல ரெண்டு வகை இருக்கு. முதல் வகை சூர்யா. “ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு” அப்டின்னு ஹைபிட்சுல கொஞ்ச நேரத்துல நம்ம காதப் பதம்பாக்குறது ஒரு வகை.  “இது முக்கோணம் SVS சன் ஆயில் அது இது எது பவர்டு பை வைக்கிங் பனியன்கள் ஜட்டிகள் கோ ப்ரசண்டட் பை சங்கு மார்க் லுங்கிகள் இப்ப நம்ம சிரிச்சா போச்சு ரவுண்டுல இவங்கள சிரிக்க வைக்கப் போற அந்த ஆளு யாருன்னு இப்ப லிஃப்ட தொறந்து பாப்போம்” அப்டின்னு ஒரே டோன்ல நான்ஸ்டாப்பா பேசிக்கொல்றது இன்னொரு வகை.

சுருக்கமா சொன்னா முதல் வகை லவுடு ஸ்பீக்கார் மாதிரி.. காய் மூய்னு கத்திட்டு நிறுத்துன உடனே டக்குன்னு அப்பாடா அப்டின்னு ஆயிரும். ஆனா ரெண்டாவது வகை மாவுமில் மாதிரி. மாவரைச்சிட்டு வெளில வந்தப்புறமும் அடுத்த அரை மணி நேரத்துக்கும் காதுல மாவு மிஷின் ஓடுற மாதிரியே இருக்கும். அந்த மாதிரிதான் இந்தப் படம் பாத்துட்டு வந்தப்புறமும் இருந்துச்சி.


நல்ல கருத்த சொல்லனும்னு படம் எடுத்தாங்களா இல்ல சிவகார்த்திகேயனுக்கு நல்லா பேசத்தெரியும்னு காட்ட இந்தப் படத்த எடுத்தாங்களான்னே ஒரே கன்பீசன்.

படம் நல்லாதான் ஆரம்பிக்குது. படம் கொஞ்சம் ஸ்லோவா இருந்தாலும் ஸ்டெடியாவே போயிட்டு இருந்துச்சி. ஆனா பாருங்க மைக்க பாத்த உடனே சிவாவுக்கு பழைய ஞாபகம்லாம் வந்துருச்சி போல. டிவில காம்பயரிங்க் பன்ற மாதிரியே பேச ஆரம்பிச்சிட்டாரு.


பொதுவா தமிழ்ப்படங்கள்ல க்ளைமாக்ஸ் நெருக்கிருச்சின்னா “கணம் கோர்ட்ரார் அவர்களே” அப்டின்னு ஆரம்பிச்சி பத்து நிமிஷம் நிறுத்தாம வசனம் பேசுவாங்க. லெந்த்தா வசனம் பேசுனாலே படம் முடியப்போவுதுன்னு நாமளே புரிஞ்சிக்கலாம். ஆனா இந்த படத்துல ஒவ்வொரு அஞ்சி நிமிஷத்துக்கு ஒரு தடவ ஒரு பத்து நிமிஷ வசனம் பேசுறாரு சிவா. அதுவும் சீரியஸா பேசுறதுதான் அங்க செம்ம காமெடியே.

செகண்ட் ஹாஃப்லயெல்லாம் சிவா மட்டும் பேசிக்கிட்டே இருக்காப்ள… தியேட்டர்ல மயான அமைதி… யப்பா டேய் ஒரு செண்டர் ஃப்ரஷ்ஷ வாங்கி இவரு வாய்க்கு ஒரு பூட்ட போட்டு விடுங்கடான்னு தோணிருச்சி.

படத்துல ஒரு முக்கியமான விஷயம். வெளில சொல்லக்கூடாது இருந்தாலும் சொல்றேன். படத்துல சிவா ஒரு ஆண்டி ஹீரோ. அட ஆமாங்க. நயன் தாரா அப்டிங்குற ஆண்டியோட நடிச்சிருக்காரு. சிவாவுக்கு பக்கத்துல நயன சேத்து பாக்கும்போது “Aandi பாலும் வேணாம் டீயும் வேணாம் bournvita குடுங்க”ன்னு கேக்குற அளவுக்கு அவ்வளவு Aandi யா இருக்காங்க நயன்தாரா. வளர்ச்சி.. வரலாறு காணாத வளர்ச்சியெல்லாம் ஓக்கே… அதுக்குன்னு ஒரு ஜோடிப்பொருத்தம் வேணாமா.. விட்டா அடுத்து அனுஷ்கா, திரிசா கூட ஜோடியா நடிப்பாரு போல. நீ வெக்கப்படமாட்ட… ஆனா எங்களால முடியாதுப்பா…

நயன்தாராலாம் என்ன ரேஞ்சுல நடிச்சிக்கிட்டு இருக்கு. அதக் கொண்டு வந்து இப்டி மொன்னையாக்கி வைச்சிருக்காங்க. படத்துல நயந்தாரா பன்ற ஒரே வேலை “அறிவு.. என்ன அறிவு.. சொல்லுங்க அறிவு” மொதல்ல உனக்கு இருக்கா அறிவு? உன்னயெல்லாம் எங்க வச்சிருக்கோம். இப்புடி ஒரு மொக்க கேரக்டர்ல போய் நடிச்சிருக்க.

ப்ரகாஷ்ராஜ். படத்தோட ட்ரெயிலர்ல ப்ரகாஷ்ராஜ பாத்த உடனே எனக்கு அவ்ளோ சந்தோஷம். ஏனா அவரெல்லாம் இருந்தாலே படம் ஒரு கெத்தா இருக்கும். ஆனா ப்ரகாஷ் ராஜ இவ்வளவு மொக்கையா யூஸ் பண்ண படம் சமீபத்துல எதுவுமே இல்ல. இண்டர்வல்ல ப்ரகாஷ்ராஜ குத்திருவாங்க. இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கல அதுக்குள்ள கொண்ணுட்டீங்களேடான்னு கடுப்பாயிருச்சி. ஆனா சிவா காப்பாத்திட்டாரு. அப்படின்னா செகண்ட் ஹாஃப்ல ப்ரகாஷ் ராஜ நல்லா யூஸ் பன்னிருப்பானுங்கன்னு நினைச்சேன். ஆனா படம் முடிஞ்சப்புறம்தான் அந்தாளு இண்டர்வல்லயே செத்துருக்கலாம்னு தோணுச்சி. இப்டி மொக்கை ரோல் பன்றதுக்கு சாவுறதே மேல்.. ப்ரகாஷ்ராஜ் மட்டும் இல்லாம சார்லி, மைம் கோபின்னு நிறைய நல்ல நடிகர்களுக்கு நடிக்க ஸ்கோப்பே குடுக்காம வேஸ்ட் பன்னிருக்காங்க. எல்லாரு வசனத்தையும் சிவகார்த்திகேயனே புடுங்கி பேசிட்டாரு போல.

கான்செப்ட் நல்லா இருந்தாலும் படத்தோட ஸ்க்ரிப்ட் எழுதுனது ரொம்ப மோசம். எதையோ கொண்டு போய் எங்கயோ லிங்க் பன்ற மாதிரி இண்டர்வல்ல காட்டுற ஒரு கம்பாரிசனுக்காக உருவாக்கப்பட்ட தேவையில்லாத ஆணி ப்ரகாஷ்ராஜ் போர்ஷன். ரெண்டாவது பாதில என்ன வாய் மட்டும்தான் வேலை செய்யிது மத்த்தெல்லாம் அப்டியே இருக்குங்குற மாதிரி கச கசன்னு பேசிக்கிட்டே இருக்கானுங்க. உலகத்துலயே ரொம்ப பவர்ஃபுல்லான சொல் செயல்… டேய் இதயே நாலுதடவ சொல்லிக்கிட்டு இருக்காம நீங்க எதாவது செய்ங்கடா…

படத்துல நல்ல விஷயங்களே இல்லையான்னு கேட்டா கண்டிப்பா இருக்கு. முதல் பாதி ஏவி எம் தயாரிக்கிற படங்கள் மாதிரி சுமாரா போயிட்டு இருக்க, அங்கங்க ஒரு சில சின்ன சின்ன காமெடிகள் நல்லாருக்கு. ஸ்நேகா வர்ற கொஞ்ச நேரமும், அவங்க செய்ற அந்த போராட்டத்தோட கான்செப்டும் நல்லாருக்கு.

குறிப்பா ஃபஹத் ஃபாசில் ஆளு செம சூப்பரா இருக்காரு. சிவகார்த்திகேயன் பக்கம் பக்கமா மனப்பாடம் பண்ணி வசனம் பேசி பில்ட் அப் பன்னதயெல்லாம் கடைசி பத்து நிமிஷத்துல ஃபஹத் தூக்கி எரிஞ்சிட்டு போயிருறாரு. அவரோட பாடி லாங்குவேஜ், பேசுற ஸ்டைல்ன்னு அந்த ரோலுக்குன்னே அளவெடுத்து தச்ச ஒருத்தர்.


என்னதான் ஆயிரம் நெகடிவ் சொன்னாலும் இந்தப் படம் இவ்வளவு பெரிய ஓப்பனிங்க் இருக்க காரணம் சிவாதான். அவரோட டைமிங் காமெடி நிறைய ஒர்க் அவுட் ஆயிருக்கு. சிவா சீரியஸா பேசாத இடங்கள் எல்லாமே சீரியஸா நல்லாருக்கு. கருத்தவன்லாம் கலீஜாம் பாட்டுல அப்டியே தனுஷ் மாதிரி ஆடிருக்காரு. பின்னணி இசை பெரிய அளவு சொல்ற மாதிரி இல்ல.

மொத்தத்துல வேலைக்காரன் ஒரு கருத்துள்ள படம். ஆனா அவ்வளவு சிறப்பான படமா அமையல. ஒருதடவ பாக்கலாம்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

ஜீவி said...

நச் விமர்சனம்.. அப்படியே நம்ம சாண்டா அதான் சந்தானம் படத்தின் விமர்சனத்தையும் போட்டு தாக்குங்க

Anonymous said...

//பேசியே கொல்றதுல ரெண்டு வகை இருக்கு. முதல் வகை சூர்யா. “ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு” அப்டின்னு ஹைபிட்சுல கொஞ்ச நேரத்துல நம்ம காதப் பதம்பாக்குறது ஒரு வகை.//

Recently I saw the மாடு List Scene in தொன்டன் Movie. Paa...அப்படி ஒரு எரிச்சல். ரெண்டாவது சசிகுமார் advice பன்றேன் பேர்வழி'nu mokka podrathu. Seriously I enjoy Singam Dialogues more than these சென்டிமென்டா நெஞ்ச நக்கற dialogues.

Hari said...

படம் பார்த்தேன். செம மாஸ். நல்ல மெசேஜ் உள்ள பொழுதுபோக்கு படம். எனக்கு குறையே தெரியல. மான்கராத்தே ரெமோ மாதிரி லவ்னு ஹீரோயின் பின்னால் ஜொள்ளு விட்டு சுத்தாம சிவகார்த்திகேயன் நல்ல ரோல் பண்ணி இருக்காரு. ஆக வேலைக்காரன் பக்கா மாஸ் படம். எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...