Saturday, December 9, 2017

கொடிவீரன்.. முத்தையா… முடியலய்யா!!!


Share/Bookmark
ஒரு குறிப்பிட்ட சமூகத்தச் சேர்ந்த படம் எடுக்குறவங்கன்னு பேர் எடுத்த சசிகுமாரும், முத்தையாவும் ஒண்ணா சேந்து அதே சமூகத்த சார்ந்து திரும்பவும் எடுத்த படம்தான் இந்த கொடிவீரன். நீங்க எந்த சமூகத்த சார்ந்து வேணாலும் எடுங்க.. யார வேணாலும் தூக்கிப் பேசுங்க… அது உங்க இஷ்டம்.   கழுதை அத பாக்குற மாதிரி எடுத்துத் தொலைங்க அப்டிங்குறதுதான் ஆடியன்ஸோட விருப்பம். 

தெலுங்குப் படம் ஒண்ணுல வந்த ஒரு  சின்ன காமெடி. ஒரு பிரபல இயக்குனர டிவில பேட்டி எடுப்பாங்க.  (இத ஏற்கனவே சொல்லிருக்கேன்னு நினைக்கிறேன்)

“சார் உங்களோட அடுத்த படம் என்ன சார்?”

“Blood Path 2”

”Blood Path ஒண்ணே ப்ளாப் ஆயிருச்சே சார்?”

“அதுக்காகத் தான் ரெண்டாவது பார்ட் எடுக்குறேன்”

“அப்ப ரெண்டாவது பார்ட்டும் ஃப்ளாப் ஆயிட்டா?”

“மூணாவது பார்ட் எடுப்பேன்”ன்னு அசால்ட்டா சொல்லிட்டு போயிருவாரு. இப்ப அந்தக் காமெடில வந்த இயக்குனருக்கும் நம்ம முத்தையாவுக்கும் பெரிய வித்யாசமெல்லாம் இல்ல. இயக்குனர் முத்தையா ஒவ்வொரு படத்துலயும் அவரோட கதையில காட்டுற வித்யாசங்களக் கண்டு நா அப்டியே மெரண்டு போயிருக்கேன்.முதல் பாதில ஒரு புள்ளைய காதலிச்சி கல்யாணம் பன்னிக்கிட்டு ரெண்டவது பாதில அந்தப் புள்ளையோட அப்பாவ அவரோட எதிரிங்க கிட்டருந்து காப்பாத்துனா அது கொம்பன். அதே முதல் பாதில ஒரு பொண்ண காதலிச்சி கல்யாணம் பன்னிக்கிட்டு ரெண்டாவது பாதில அந்தப் பொண்ணோட எதிரிங்க்கிட்டருந்து அந்தப் பொண்ணக் காப்பாத்துனா அது மருது. அதே முதல் பாதில தங்கச்சிய ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு ரெண்டாவது பாதில தங்கச்சி புருஷன அவரோட எதிரிங்க்கிட்டருந்து காப்பாத்துனா அது கொடிவீரன். மொதல மாமனாரு, அடுத்து மனைவி அடுத்து மச்சான்.. அனேகமா அடுத்த படத்துல மாமியார அவங்க எதிரிங்ககிட்டருந்து காப்பாத்துறதுதான் கதையா  இருக்கனும்.

முன்னாடில்லாம் ஒரு படம் ஹிட்டானா அதே டெம்ளேட்டுல திரும்பத் திரும்ப படம் எடுத்து கொல்லுவாய்ங்க. நம்ம முத்தையா கொஞ்சம் வித்யாசமா ஃப்ளாப் ஆன பட்த்தை திரும்பத் திரும்ப எடுத்துக்கிட்டு இருக்காரு. மரு வச்சி ஒரு படம்.. மரு வைக்காம ஒரு படம்ன்னு மாத்தி மாத்தி ஒரே படத்த வேற வேற ஹீரோக்கள வச்சி எடுத்துப் பழகிட்டு இருக்காரு. அனேகமா அடுத்த படம் கவுதம் கார்த்திக்க வச்சி எடுப்பாருன்னு நினைக்கிறேன். லைக்ஸ் சும்மா பிச்சிக்கும்.

இந்த ஸ்கூல்லயெல்லாம் பசங்க ஒரு கேள்விக்கு தப்பா விடை எழுதிட்டா அதுக்கு தண்டனையா அதே பதில பத்து தடவ மிஸ்ஸூ எழுதிட்டு வரச் சொல்லும். அனேகமா முத்தையாவுக்கும் அதே மாதிரி “இந்தக் கதைய ஒழுங்க எடுக்குறவரைக்கும் வேற எந்தக் கதையையும் எடுக்கக்கூடாதுன்னு யாரும் சொல்லிருப்பாய்ங்க போல.. அதான் ஒரே கதைய திரும்பத் திரும்ப எடுத்து கொண்ணுகிட்டு இருக்காரு.அதுவும் கொடிவீரன்ல அவரு கதை சொல்லிருக்க அழகே தனி. கதைய சொல்றேன் கேளுங்க.

மொதல்ல ஒரு அண்ணன் தங்கச்சிங்க. அப்புறம் இன்னொரு அண்ணன் தங்கசிங்க.. அதுக்கப்புறம் இன்னொரு அண்ணன் தங்கச்சிங்க. மொத்தம் மூணு செட் ஆச்சா? அடுத்து இன்னொரு…. அன்ணன் தங்கச்சின்னு நினைப்பீங்க .. அதான் இல்லை.. அடுத்து ஒரு மச்சான்.. அதுவும் தெய்வ மச்சான். மொத்தம் படத்துல எத்தனை அண்ணன் எத்தனை தங்கச்சின்னு காட்டி முடிக்கிறதுக்குள்ளயே இடைவேளை வந்துருச்சி. அதுவும் ஒரு அண்ணன் தங்கச்சின்னாலே ஒண்ணுக்கு போற அளவுக்கு அடிப்பாய்ங்க. அதுவும் இதுல மூணு அண்ணன் தங்கச்சி.. மோசன் போற அளவுக்கு அடிக்கிறாய்ங்க.

ஊர்த்திருவிழா, பெண்களத் தாயா மதிக்கிறேன்னு நாலு வசனம், ”இய்ங்காரு… சலிச்சி புடுவேன் பாத்துக்க… தட்டி விட்டுருவேன் பாத்துக்க..”ன்னு அதே வசனத்த 30 வருசமா மாத்தாம பேசிக்கிட்டு திரியிற வில்லனுங்கன்னு கொஞ்சம் கூட மாத்தாம நாலு படத்துக்கும் அதே டெம்ளேட்டு.

சசிக்குமாரப் பாக்கதான் பாவமா இருந்துச்சி. உலகத்துலயே ஒரு கம்பெனிக்கு “கம்பெனி”ன்னு (Company productions) பேரு வச்ச மகான் அவரு. தொடர்ந்து அடி வாங்கிட்டு வர்றவரு இந்தப் படத்துலயாவது எழுவார்னு பாத்தா அதுக்கான எந்த சாத்தியக்கூறுமே படத்துல இல்ல.

ரொம்ப நாளுக்கப்புறம் பசுபதி முழு நீள வில்லனா நடிச்சிருக்காரு இந்தப் படத்துல. “டேய்… உனக்கு நான் தாண்டா எமன்…” “டேய்..உனக்கு நாந்தான்னா சிவன்” அப்டின்னு மாத்தி மாத்தி பசுபதியும் சசிகுமாரும் மாத்தி மாத்தி பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டு இருக்கும்போது “அட சட்டுபுட்டுன்னு யாராது யாரயாவது கொன்னுட்டு சாவுங்கடா.. சீக்கிரம் படமாச்சும் முடியும்”ன்னு தோணுது நமக்கு.

என்ன கண்றாவியா இருந்தாலும் சசிகுமாருக்கு லவ் சீனு வைக்க மட்டும் மறக்கவே மாட்டேங்குறாங்க. அதுலயும் அவரு பொண்ணுங்களப் பாத்து வெக்கப் படுற அழகு இருக்கே… “டேய் நீ என்ன எழவு வேணாலும் பண்ணு ஆனா வெக்கம் மட்டும் படாத… உன் மூஞ்ச பாக்க முடியல”ன்னு சந்தானம் சொல்ற வசனம்தான் ஞாபகம் வந்துச்சி.

டான்ஸ் பர்ஃபார்மென்ஸெல்லாம் அதகளம்.  சசிகுமார் செமையா இம்ப்ரூவ் பண்ணிருக்காரு. அசுரன் படத்துல ஜக்கு ஜக்கு வத்திகுச்சி நெப்போலியன் அவர் இடுப்பு உயரம் இருக்க புள்ளைங்கள ரெண்டு பக்கமும் புடிச்சிக்கிட்டு ஒரு டான்ஸ் ஆடுவாரு. அந்த ஸ்டெப்புக்கு நா ரசிகன். நெப்போலியனுக்கு அப்புறம் அதே ஸ்டெப்ப கண்ணு முன்னால கொண்டு வந்து நிறுத்துறவரு நம்ம சசிகுமார்தான்.

இவங்க தொல்லை ஒரு பக்கம்னா இந்தப் இந்தப் பசுபதியோட தங்கச்சியா வர்றப் பூர்ணா தொல்லை இன்னொரு பக்கம். இந்த படத்த பேய் படம்னு சொல்லி எதுவும் நடிக்க வச்சாய்ங்களான்னு தெரியல.. யாரையுமே நார்மலா பாக்காம. முழிய உருட்டி உருட்டு ஒன் சைடாவே பாத்துக்கிட்டு இருக்கு.  நா வேற ஸ்ட்ரோக் வந்து கண்ணு எதுவும் மேல சொருகிக்கிச்சோன்னு நினைச்சிட்டேன்.  “எங்க அண்ணன் அவனுங்கள கொல்லுவாண்டா.. எங்க அண்ணன் ஒருத்தன் போதும்டா”ன்னு பசுபதியப் பத்தி பெருமையா பூர்ணா பஞ்ச் டயலாக் பேசும்போது பசுபதி மூஞ்சக் காட்டுவானுங்க… ”நம்ம அந்த அளவுக்கெல்லாம் ஒண்ணும் ஒர்த் இல்லையே.. இவ ஏன் இப்புடி ஓவரா பில்ட் அப் பன்றா”ன்னு அவரு மைண்டுல ஓடுற மாதிரி ஒரு மரண பயம் மூஞ்சில தெரியும்.

படத்துல நல்ல விஷயங்கள்னு சொல்லனும்னா, டெக்னிக்கலா ஒவ்வொரு படத்துலயும் முத்தையா நல்லா இம்ப்ரூவ் பண்ணிட்டு வர்றாரு. முந்தைய படங்களை விட இந்தப் படத்துல கேமாரா, எடிட்டிங், சவுண்ட் எஃபெக்ட் எல்லாமே பெட்டரா இருந்துச்சி. ஆண்டவன் எல்லாத்தையும் குடுத்து ஒரு சின்ன குறை வைக்கிற மாதிரி, முத்தையாவுக்கு எல்லா நல்ல டெக்னீஷியன்கள் இருந்தும் ஒரு நல்ல கதை மட்டும் மாட்ட மாட்டேங்குது. கூடிய சீக்கிரம் கிடைக்கும்னு நம்புவோம்.

அடுத்து சசிகுமாரோட காஸ்டியூமும், கெட்டப்பும் நல்லாருக்கு. அவருக்கு நல்லா செட் ஆயிருக்கு. சசிகுமாரோட தங்கச்சியா வர்ற சனுஷா செம்ம அழகு. முழு நேரமும் சிரிச்சிக்கிட்டே இருக்கது இன்னும் அழகு. ஹீரோயினும் ஓக்கே. விதார்த் நீட்டா நடிச்சிருக்காரு. ரகுந்தனோட எல்லா பாடல்களும் கிட்டத்தட்ட நல்லாருக்கு. மதுபாலகிருஷ்ணன் பாடுன முதல் பாடலும், அய்யோ அடி யாத்தே பாட்டும் சூப்பர். மஞ்சப்பைல வர்ற ”பாத்து பாத்து” பாட்டுல வரிய மட்டும் மாத்தி திரும்ப போட்டுக்குடுத்துருக்காரு. பின்ணனி இசைல வெறும் உறுமியும் மேளமும்தான். பாலசரவணனோட ஒருசில ஒன்லைன் கவுண்டர் அப்பப்ப கொஞ்சம் ஆறுதல்.

முத்தையா இன்னும் எத்தனை படம் இப்டியே எடுக்கப்போறார்னு தெரியல. மருது படத்துல ஒரு அம்மாவ கழுத்தறுத்து கொல்ற காட்சிய ரொம்பக் கொடூரமா காமிச்சிருந்தாங்க. அதே மாதிரி இந்தப் படத்துலயும் முதல் காட்சிலயே ஒரு அம்மா தூக்கு போட்டுக்கிட்டு சாகுறத ரொம்பவே கொடூரமா காமிச்சிருக்காங்க. படத்தோட வேற எங்கயும் அந்தக் காட்சியோட தாக்கம் இல்லாதப்ப அதை அவ்வளவு அப்பட்டமா, காமிச்சிருக்கத் தேவையில்ல.


மொத்தத்துல முத்தையா, சசிகுமார் ரெண்டுபேருக்கும் சேத்து பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். 

வீடியோ விமர்சனத்திற்கு இங்கே க்ளிக்கவும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

ஜீவி said...

அடப்பாவமே... அப்ப அன்பு கடனை அடைக்க முடியாதே

Paranitharan.k said...

உங்க விமரசனத்தை பாத்தா இது காமெடி படம் போல..:-)


அண்ணாதுரை எழுத்து விமர்சனத்திற்கு இன்னமும் வெயிட்டிங்..:-(

FunScribbler said...

hahahahaha semma review ji!! I happened to watch the film yesterday and your review is on point!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...