எருது
சண்டைகளுக்காக ப்ரத்யேகமாக காளைகள் வளர்க்கப்படும் ஒரு பண்ணையில், அந்த சண்டைக்கு தெரிவாவதே
வாழ்வின் லட்சியமென காளைகள் வாழ்ந்து வருகின்றன. பலசாலியான காளைகள் மட்டுமே சண்டைகளுக்கு
தெரிவு செய்யப்படும். யார் பலசாலி, யார் சண்டைக்கு தெரிவு செய்யப்படப் போவது என எருதுகள்
போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பலத்தைக் காட்டிக்கொண்டிருக்க, Ferdinand என்ற ஒரு கன்று மட்டும் இது போன்ற சண்டைகளிலெல்லாம்
ஈடுபாடில்லாமல் வாழ்க்கையை வேறு கோணத்தில் ரசிக்கிறது.
Ferdinand
இன் தந்தை , எருது சண்டைக்குத் தெரிவாகி பண்ணையிலிருந்து வெளியேறி, நீண்ட நாட்களாகியும்
திரும்பாததால் Ferdinand பண்ணையிலிருந்து தப்பித்து வெகுதூரம் பயணித்து ஒரு குடும்பத்திடம்
சேர்கிறது. தான் எதிர்பார்த்த அத்தனையும் அங்கு கிடைக்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் வளர்ந்து
வருகிறது. Ice Age படத்தில் Ellie என்ற யானை தான் ஒரு யானை என்பதே தெரியாமல் குழந்தைத்
தனமாய் வளர்ந்து வருவது போல, தான் ஒரு பிரம்மாண்டமான எருது எனத் தெரியாமலேயே ப்ரம்மாண்டமாக
வளர்ந்து வருகிறது.
எல்லாம்
மகிழ்வாகச் சென்றுகொண்டிருக்க, ஒரு எதிர்பாராத சம்பவத்தினால் Ferdinand மீண்டும் தான்
தப்பித்து வந்த இட்த்திற்கே கொண்டு செல்லப்படுகிறது. எந்த சண்டை வேண்டாம் என்றிருந்ததோ
அதே சண்டையை மீண்டும் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட, அதை
Ferdinand எப்படி எதிர்கொண்டு வெற்றி பெருகிறது என்பதே கதை.
கதை
என்று பார்த்தால் நமக்கு பழக்கமான தமிழ்ப்படங்கள் போல எளிதில் யூகிக்க முடிந்த டெம்ளேட்
கதை தான். ஆனால் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அனிமேஷன் படம் என்பதால் போரடிக்காமல்
செல்கிறது.
முடி
வளர்ந்து கண்ணை மறைத்திருப்பதை ஒரு எருது தனக்கு பார்வை கோளாரு இருக்கிறது என நினைத்துக்
கொண்டிருப்பதும், Ferdinand ன் நண்பனாக வரும் ஒரு நாயும் அவ்வப்போது லேசான சிரிப்பை
வரவழைக்கின்றன.
ஆஹா
ஓஹா டைப் படமெல்லாம் இல்லை என்றாலும், ஒரு முறை தாராளமாகப் பார்க்கலாம்.
COCO
No
Spoilers
மூணு தலைமுறைக்கு முன்னால மியூசிக்ல இருக்க ஆர்வத்துல மனைவியையும் குழந்தையையும் விட்டுட்டு போயிடுற ஒருத்தனால, அந்தக் குடும்பத்துக்கே மியூசிக் மேல வெறுப்பு வந்துடுது. எந்த அளவுக்கு வெறுப்புன்னா ரோட்டுல போற எவனாவது ஒருத்தன் மியூசிக்க பத்தி பேசுனாலே செருப்ப சாணில முக்கி அவன் அடுத்த தெருவுக்கு போற வரைக்கும் அடிச்சி தொறத்துற அளவுக்கு.
மொத்தக் குடும்பமும் அதே மாதிரி மனநிலையுடன் இருக்க, மூணு தலைமுறை தாண்டிய ஒரு சின்ன பையனுக்கு இசை மேல பயங்கர ஆரவம் வருது. மிரட்டல் அடில வர்ற ஓனர் கெழவி மாதிரி அவனோட பாட்டி அந்தப் பையன வாயிமேலயே நாலு மிதி மிதிச்சி மீசிக்கெல்லாம் ஒண்ணும் வேணாம் நம்ம குடும்பத் தொழிலான ஷூ தைக்கிற தொழிலையே கத்துக்கோன்னு சொல்லிடுது.
சோகத்துல இருக்க பையன், ஒரு சில சம்பவங்களால இறந்துபோனவர்களோட உலகத்துக்கு போயிடுறான். அங்கிருந்து அவன் திரும்ப நிஜ உலகத்துக்கு வரனும்னா, அவன் குடும்பத்த சேர்ந்த யாராவது அவனுக்கு ஆசி வழங்குனாதான் வரமுடியும். எப்படி அவன் இறந்தவர்களோட உலகத்துலருந்து நிஜ உலகத்துக்கு வர்றாங்குறத, ரொம்ப ஜாலியாவும் ட்விஸ்டுகளோடவும் சொல்லிருக்க படம்தான் கோகோ.
பெரும்பாலும் அனிமேஷன் படங்கள்ல கதை ரொம்ப ரொம்ப சிம்பிளாதான் இருக்கும். ஆனா இந்தப் பட்த்தைப் பொறுத்த அளவு, மற்ற படங்கள் மாதிரி இல்லாம கதையில நிறைய twists & turns வச்சி ரொம்பவே சுவாரஸ்யமா கொண்டு போயிருக்காங்க.
ஒரு திரைப்படத்துல ஒவ்வொரு காட்சிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அதிகரிக்கும்போது, படத்துல சுவாரஸ்யமும் அதிகரிக்கும் அதே சமயம் அந்தக் கதையில ஒரு முழுமையை நம்ம உணரமுடியும். அந்த மாதிரி ஒரு முழுமைய இந்தப் படத்துல உணர முடியிது. ரொம்ப brilliant ஆன திரைக்கதை.
சமீபத்துல satisfied ah பாத்த ஒரு சூப்பர் படம். மிஸ் பன்னாதீங்க.
No comments:
Post a Comment