பெங்களூர்ல Bishop Cotton Boy’s School ல LKG பசங்கள சேர்க்குறதுக்கான ஒரு ஃபீஸ் ஸ்ட்ரக்கர் படம் வெளியாயிருக்கு. அதப் பாத்த மக்கள்லாம் மெரண்டு போயிருக்காங்க.. நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லத்துலயும் காசு பண்ணனும்ங்குற வெறி ஊரிப்போன ஒருத்தனாலயே இந்த மாதிரி ஒரு ஃபீ ஸ்ட்ரக்கர ரெடி பண்ண முடியும்னு பேசிக்கிறங்க. அந்த அளவுக்கு ஒரு கொடூரமா இருக்கு அந்த லிஸ்ட். எவ்வளவு ஃபீஸ்னு கேக்குறீங்களா? ரொம்ப அதிமெல்லாம் இல்ல..ஜஸ்ட் ரெண்டு லட்சத்தி ரெண்டாயிரம் ரூவாதான்.
LKG ன்னா என்ன? இந்த 3- 5 வயசுலதான் புள்ளைங்கள மேய்க்கிறதுக்கு ரொம்ப செரமமா இருக்கும். எது செய்யனும் எத செய்யக்கூடாதுன்னு தெரியாம புள்ளைங்க பெத்தவங்களப் போட்டு இம்சை பண்ணிட்டு இருக்கும். அதுங்களோட சேட்டையிலருந்து தப்பிக்கிறதுக்காக பெற்றோர்கள் முயற்சி செஞ்சிட்டு இருக்கப்போ உருவானதுதான் இந்த LKG , UKG எல்லாம். இதுல என்ன பண்ணுங்க புள்ளைங்க? சாப்பாட்ட கட்டி குடுத்து வேன்ல ஏத்தி அனுப்ச்சா, கொண்டு போன சாப்பாட பள்ளிக்கூட்த்துல வச்சி சாப்பிட்டு, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து 3 மணிக்கு திரும்ப வீட்டுக்கு வந்துரும்ங்க. இவ்வளவுதான். ஆனா இவனுங்க அந்த LKG க்கு ராக்கெட் சைன்ஸ் ரேஞ்சுக்கு பில்ட் அப் குடுத்துட்டு இருக்கானுங்க.
அவனுங்க போட்டுருக்க ஃபீ ஸ்ட்ரக்சரப் பாத்து சிரிக்கிறதா அழுகுறதான்னே தெரியல. உதாரணமா ஒரு டீ கடைக்கு டீ குடிக்கப் போறோம். குடிச்சி முடிச்ச உடனே ஒரு 10 ரூவா கேட்டா குடுக்கலாம். இல்ல கடைய பயங்கரமா டெவலப் பண்ணி வச்சிருந்தானுங்கன்னா, ஒரு 15 ரூவா கேட்டாலும் குடுக்கலாம். ஆனா அதுக்கு பதிலா கடை முதலாளி உங்களக் கூப்டு “தம்பி… டீ போடுறதுக்கு பால் வாங்கிருக்கேன். அதுக்கொரு 5 ருவா குடுங்க.. சர்க்கரை வாங்கிருக்கேன்.. அதுக்கொரு 5 ரூவா குடுங்க. டீ த்தூள் வாங்கிருக்கேன். அதுக்கொரு அன்சி ரூவா குடுங்க. அப்புறம் அடுப்பு , கேஸ் கனெக்சன்லாம் வாங்கி வச்சிருக்கேன். அதுக்காக ஒரு 30 ரூவா குடுங்க. அப்புறம் டீ போட்டவனுக்கு சம்பளம் குடுக்கனும். அதுக்காக ஒரு 10 ரூவா குடுங்க. இந்த கடையெல்லாம் அங்கங்க ஒழுகுது தம்பி.. கூரைய மாத்தனும். அதுக்காக ஒரு 50 ரூவா குடுங்க. முன்னால மாதிரி கையால பில் போட முடியல. ஒரு கம்ப்யூட்டர் வாங்கலாம்னு இருக்கேன். அதுக்கொரு 30 ரூவா குடுங்க.. கம்ப்யூட்டர் வாங்கி அத ஆப்ரேட் பண்ண ஒரு ஆள் போடனும். அவனுக்கு சம்பளம் குடுக்க ஒரு 25 ரூவா குடுங்க.. ஆக மொத்தம் ஒரு 250 ரூவா குடுங்க தம்பின்னா…
பதிவின் வீடியோ வடிவம்
ஏன்யா ஒரு டீ குடுக்க வந்தது ஒரு குத்தமாய்யா.. அப்டின்னு நினைச்சிட்டு, மனச கல்லாக்கிக்கிட்டு அந்த 250 ரூவாய எடுத்து குடுக்கப் போகும்போது , தம்பி நில்லுங்க.. நீங்க ஃபாரின்லயா வேல பாக்குறீங்க.. அய்யய்யோ அப்போ இந்த அமவுண்ட் வராதே.. நீங்க ஸ்பெசல் கேஸ். அதுலான ஒரு 500 ரூவா கட்டுங்க.. எதுக்கு ஒரு சிங்கிள் டீக்க்கா.. இப்டி ஒருத்தன் நம்மகிட்ட காசு கேட்ட கடனுக்காச்சும் அஞ்சி லிட்டர் பெட்ரோல் வாங்கி அந்தக் கடைய கொளுத்தனும்னு தோணுமா இல்லயா?
இந்த டீக்கடை உதாரணம் ரொம்ப அபத்தமா இருக்க மாதிரி தோணலாம். ஆனா அந்த ஸ்கூல் ஃபீ ஸ்ட்ரக்சருக்கு மிகச் சரியான உதாரணம் இதுதான். இந்த மயில்சாமி ஒருபட்த்துல குடிக்கிறதுக்கு பாருக்கு போய் மொதல்ல க்ளாஸ் கடன் வாங்குவாரு.. அடுத்து “பாஸ் கொஞ்சம் கூல் ட்ரிங்க்ஸ் குடுங்க”ன்னு கூல்ட்ரிங்க்ஸ் வாங்குவாரு.. அடுத்து “கொஞ்சம் சரக்கு குடுங்க”ன்னு சரக்க வாங்கவும் ஏண்டா அப்ப நீ சும்மாதான் வந்தியா? எப்பவுமே நா சும்மாதான் வருவேன். அந்தக் கதைதான் இவனுங்களும். பாஸ் பில்டிங்க் கட்டுறதுக்கு காசு குடுங்க.. பாஸ் இன்ஃப்ரா டெவலப் பன்ன காசு குடுங்க.. பாஸ் சாஃப்ட்வேர் மெய்ண்டெய்ண் பன்ன காசு குடுங்க.. ஏண்யா அப்ப எத வச்சிதான் ஸ்கூல் ஆரம்பிச்சீங்க.
இந்த கோயில் திருவிழா முடிஞ்சப்புறம் செலவு கணக்கு எழுதும்போது பூ வாங்குனது புஷ்பம் வாங்குனதுன்னு தனித்தனியா பில்ல போடுவானுங்க. அது மாதிரிதான் இவங்களோடதும்.. பில்டிங் ஃபண்டுன்னு ஒண்ணூ.. இன்ஃப்ரா டெவலப்மெண்டுக்கு ஒண்ணு.. ஸ்போர்ட்ஸ்க்கு ஒண்ணு… எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்க்கு ஒண்ணு.. அதாவது நீ ஓடுறதுக்கு ஒரு வட்டி.. நீ ஓடும்போது நா தொரத்துவேன்ல… அதுக்கு ஒரு வட்டி.
Computer Fee ஆறாயிரம் ஓவா… ஏண்டா MSC IT படிச்சவனே இன்னும் எக்ஸெல்லதான் வேலை பாத்துக்கிட்டு இருக்கான்.. இதுல பச்ச புள்ளைக்கு என்ன கம்ப்யூட்டர் எஜூகேஷன்.. அதுக்கு பேரு கம்ப்யூட்டர்ன்னு அந்த புள்ளைக்கு தெரியவே 5 வயசாயிரும்.. இத விட பெசல் ஐட்டம் ஒண்ணு இருக்கு…. ரொபாட்டிக்ஸ் எஜுகேஷன்... அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லயேன்னு எனக்கு நெஞ்சு டபீர்னு வெடிச்சிருச்சி.. இவங்க LKG ல சொல்லிக்குடுக்கப் போறதா சொல்றதயெல்லாம் பாத்தா இந்த வருஷம் முடிச்சோன்னயே அந்தப் புள்ளைங்களுக்கு காம்பஸ் இண்டர்வியூ வச்சி வேலைக்கு எடுத்துடலாம் போல.
முன்னால அரசாங்கம் குடும்பக்கட்டுப்பாட மக்கள கடைபிடிக்க வைக்கிறதுக்கு ரொம்ப செரமப்பட்டாங்க.. இப்ப அதெல்லாம் தேவையில்ல.. இது மாதிரி நாலு ஃபீ ஸ்ட்ரக்சர காமிச்சா போதும்.. அந்த ஆசையே போயிரும்..
நா பொறியல் ஒரு அரசு கல்லூரில படிச்சேன். நாலு வருஷத்துக்கும் ஹாஸ்டல், மெஸ் பில் எல்லாம் சேர்த்து அந்த காலேஜோட Fee structure வெறும் 85400 ரூவா.. அதுலயும் வருஷத்துக்கு 7000 ஸ்காலர்ஷிப்புங்குற பேர்ல நமக்கு திரும்ப வந்துடும். அப்டி இருக்க LKG க்கு ரெண்டு லட்சம் வாங்குறானுங்க்கும்போது உண்மையிலயே கொடுமையா இருக்கு.
அட காசு இருக்கவன் சேர்க்கப்போறான்.. நமக்கென்னா அப்டின்னு ரொம்ப சாதாரணமா இத நாம ஒதுக்கிட முடியாது. இது மிகப்பெரிய ஒரு சமுதாய சீர்கேடு.. இப்போ மக்களுக்கு ரொம்பவும் அத்யாவசியமான மருத்துவம் இன்னிக்கு எவ்வளவு காஸ்ட்லியா இருக்கு? அரசு கல்லூரிகளத் தவற தனியார்ல மருத்துவம் படிக்க ஒவ்வொருத்தனும் 25-30 லட்சம் குடுத்து சீட் வாங்கி படிச்சி வந்துருக்கான். அத இன்னிக்கு நம்மகிட்டருந்து எடுக்கப் பாக்குறான்.
இது அவனோட தப்பில்ல. இது ஒரு பிஸினஸ் மாதிரிதான். எந்த பிஸினஸ்லயுமே Return on Investment ன்னு ஒண்ணு பாப்போம்ல.. அதாவது நாம எவ்வளவு செலவு செஞ்சிருக்கோம். அதுலருந்து நமக்கு எவ்வளவு நமக்கு திரும்ப வருதுன்னு. இப்போ இந்த ஸ்கூல்ல LKG க்கு ரெண்டு லட்சம் வாங்குறானுங்க… அதே ஸ்கூல்ல அவன் 12th வரைக்கும் படிச்சிட்டு வரதுக்குள்ள குறைச்சலா 50 லட்சத்த புடுங்கிருவானுங்க. இவனுங்க நாளைக்கு படிச்சிட்டு சமுதாயத்துல ஒவ்வொரு வேலைக்கு போகும்போது அங்கருந்து எப்டி போட்ட பணத்த எடுக்குறதுன்னு பாக்குற பணப் பேயாதான ஆகப்போறானுங்க. இன்னிக்கு இது நேரடியா நமக்கு பெரிய பாதிப்ப ஏற்படுத்தலன்னாலும் வரும்கால சமுதாயத்துக்கு இது மிகப்பெரிய பாதிப்ப எற்படுத்தும்.
இந்த மாதிரி பள்ளிகளை சொல்லி குத்தமே இல்ல. அதிக ஃபீஸ் வசூலிக்கிற இடத்துலதான் அதிக தரமான கல்வி இருக்கும்னு நம்புற மக்கள்தான் மாறனும்.
இதுனால ஒண்ணே ஒண்ணு மிச்சம்டா.. முன்னாடியெல்லாம் அரசாங்கம் குடும்பக்கட்டுப்பாட்ட வலியுறுத்த ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டு இருந்தாங்க. இனிமே அந்த்த் தொல்லையில்ல.. இந்த மாதிரி நாலு ஃபீ ஸ்ட்ரக்சர காமிச்சா போதும். ஜென்மத்துக்கும் குழந்த ஆச வராது.
2 comments:
சார்.. சரவண பவனில் முப்பது ரூபாய்க்கு கிடைக்கும் ஃபில்டர் காபி ஸ்டார் ஓட்டலில் முன்னூறு ரூபாய். அதுக்காக அவன் கிட்ட ஒரு லிட்டர் பால் என்ன ஆயிரம் ரூபாயா விக்குதுண்ணு கேக்க முடியுமா ? கோடீஸ்வரன் ஆடி காரில் வந்து அங்கே சாப்பிடுவான். அதே போல bishop காட்டன் ஸ்கூலும்.. வருஷம் ரெண்டு லட்சம் ஒரு பொருட்டே இல்லைன்னு நினைக்கிற அளவுக்கு சம்பாதிக்கும் தொழில் அதிபர் பலர் பிள்ளைகளை சேர்க்க வருவாங்க .. அவன் கிட்ட போய் யேண்டா இது ஜாஸ்தி இல்லையான்னு கேட்டா எனக்கு அப்படி இல்லைன்னு தான் சொல்லுவான்.
அது சரி சார்..
நம்ம தலைவர் சம்சாரம் நடத்துற ஆஷ்ரம் ஸ்கூல்ல ஃபீஸ் எப்படின்னு விசாரிச்சு பாருங்க ? ஒவ்வொரு குரூப்புக்கும் ஒரு விலை. அதானே சமுதாயம்.
நம்ம தலைவரே அவரோட ஆன்மிக ஸ்குல் இந்த மாதிரி வசுல் சேஞ்சா சம்பளம் & வாடகை பாக்கி இருக்காது
Post a Comment