
நம்ம மக்களைப்
பொறுத்த அளவு ரஜினிங்குறது ஒரு தவிர்க்க முடியாத சொல். அதுவும் அவரோட படங்கள்
வருதுன்னா கிட்டத்தட்ட ஒரு திருவிழா மாதிரிதான். எதற்கெடுத்தாலும் ரஜினிய குறை
சொல்றவங்க கூட அவர் படம் வரும்போது தியேட்டர்ல பார்க்க தவறுவதில்லை. ஏன்னா
ஒவ்வொருத்தரும் ஏதோ காலகட்டத்துல இந்த மனுஷனுக்க்கு ரசிகரா இருந்துதான்
வந்துருப்பாங்க. பெரும்பாலானவங்க குடும்பத்தோட படத்துக்கு போறதே ரஜினி படங்கள்
வரும்போதுதான். ”இவர் படத்துக்கு
போனா நல்லாருக்கும்.. இவர் படத்துக்கு குடும்பத்தோட நம்பிப் போகலாம்” அப்டிங்குற
நம்பிக்கைய மக்கள் கிட்ட இத்தனை வருட சினிமா வாழ்க்கையின் மூலமா ஆழமா
விதைத்திருப்பவர் ரஜினி. அப்படிப்பட்ட ஒருத்தரை இயக்குறப்போ அவர் மேல நம்பிக்கை
வச்சிருக்குற ஒவ்வொருத்தரயும் மனசுல வச்சிதான் இயக்கனும். அப்படி செய்யத்
தவறும்போது விளைவுகளும் தவறாத்தான் இருக்கும்.
கபாலி இதுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
நம்ம கிட்ட இருக்கது யாரு? அவரோட பொட்டன்ஷியல் என்னனு முழுமையா தெரியாத அல்லது அந்த
பொட்டன்ஷியல உபயோகிக்க ஒரு இயக்குனரோட படைப்பாதான் கபாலி இருந்துச்சி. வணிக ரீதியா
படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும், ரஜினி ரசிகர்கள் பலருக்கே மிகப்பெரிய ஏமாற்றமா
கபாலி இருந்துச்சி. திரும்பவும் அதே இயக்குனர்கிட்ட படமா? பொதுவா ஒவ்வொரு ரஜினியோட
புதுப்பட அறிவிப்பின் போதும் ஒரு மிகப்பெரிய உற்சாகம் இருக்கும். மறுபடியும் ரஜினியை
ரஞ்சித்தான் இயக்கப்போறார்னு வந்த செய்தி உற்சாகத்துக்கு பதிலா பீதியில எக்ஸ்ட்ராவா
ரெண்டு தடவ உச்சாதான் போக வச்சிது. ஆனா நாம நினைச்சது தப்புன்னு செவுட்டுல அறையிற மாதிரி
உணர வச்சிருக்கு இந்த காலா.
உண்மைய சொல்லனும்னா எந்திரனுக்கப்புறம் முழு
திருப்தியோட நான் பார்த்த ஒரு படம் இந்தக காலா. கபாலில நடந்த பெரும்பாலான தவறுகளை
திருத்தி, எல்லா மக்களுக்கும் பிடித்த மாதிரியான ஒரு படத்தை குடுத்துருக்காங்க.
படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ் என்னன்னா சிவாஜிக்கப்புறம்
அதே பழைய துரு துரு ரஜினி, கெத்தான ரஜினி, காமெடி பன்ற ரஜினி, பாடல்கள்ல அழகா சின்ன
சின்ன ஸ்டெப் போடுற ரஜினின்னு நமக்கு பிடிச்ச ரஜினினோட அத்தனை முகங்களையும் ஒருசேர
காமிச்சிருக்காங்க.
வில்லன் எவ்ளோ பவர்ஃபுல்லுங்குறதப் பொறுத்துதான்
ஹீரோவோட கெத்தே இருக்கு. நானா படேகர் நாலு சீன் வந்தாலும் பட்டையக் கெளப்பிருக்காரு.
“அவனக் கொல்லுங்கடாஆஆஆஆஆ”ன்னு ஹை பிட்ச்ல கத்துற வில்லன்கள விட லேசான பேஸ் வாய்ஸ்ல
“ஏ…….ய்… பாம் வச்சிருவேன்”ன்னு ரகுவரன் மாதிரி கொஞ்சமா பேசுற வில்லன்கள் தான் என்னிக்குமே
பவர்ஃபுல். அப்டி ஒரு கேரக்டர்தான் நானா படேகர். நாலு வசனம்தான்.. அதுவும் ரொம்ப அமைதியா
பேசுறாரு. ஆனாலும் அவரப் பாத்தாலே நமக்கு உள்ளுக்குள்ள அள்ளு கெளம்புது.
அதே மாதிரி ரஜினியோட மனைவியா வர்ற ஈஸ்வரி
ராவும் சூப்பரா பண்ணிருக்காங்க. குறிப்பா தன்னோட முன்னால் காதலனைப் பத்தி சொல்ற சீன்
தியேட்டரே கலகலக்குது. ரஜினியோட மகனா வர்ற திலீபனுக்கும் சூப்பரான ரோல். கபாலியோட
casting ல பெரும்பாலான முகங்களும், அவங்களோட கதாப்பாத்திர அமைப்புகளும் ரொம்ப எரிச்சலூட்டுற
மாதிரி இருக்கும். அதை கிட்டத்தட்ட 90% கிட்ட இந்தப் படத்துல சரி செஞ்சிருக்காங்க.
ஆனா இந்த லூஸ் டீ ஷர்ட் போட்டுட்டு , தொப்பிய சைடுல மாட்டிக்கிட்டு ராப் பண்ணுறேங்குற
பேர்ல நாலு பேர் ஏன் சுத்திக்கிட்டு இருக்கானுங்கன்னு தெரியல. அவனுங்களப் பாத்தாதான்
கல்லக் கொண்டு எரியனும் போல இருக்கு.
எனக்கு மிகப்பெரிய பீதி என்னன்னா கொஞ்ச நாள்
முன்னால ரஞ்சித் குடுத்த பேட்டில ரஜினி சாரோட கேரக்டர் ஒரு எமோஸனான கேரக்டருன்னாரு
பாருங்க… ஆத்தாடி.. இது அதுல்ல… இப்டித்தான் கபாலில எமோசன் எமோசன்னு சொல்லி நம்மள மோஸன்
போற அளவுக்கு அடிச்சானுங்க. இதுல மறுபடி எமோசனான்னு நினைச்சி பயந்துட்டு இருந்தேன். ஆனா அப்டி எதுவும்
தப்பா நடக்கல.
ரஜினிக்கும்- ஹூமா குரேஷிக்கும் நடக்குற
காட்சிகள ரொம்ப சூப்பரா பன்னிருக்காங்க. அதுமட்டுமில்லாம ஃப்ளாஷ்பேக் காட்சிகள அனிமேஷன்
படங்கள் மூலமா விளக்குனது செம சூப்பர். அதுவும் அந்த ”தம்பிக்கு எந்த ஊரு” ஸ்டைல் தலைவர
அதுல பாக்க செம்மையா இருந்துச்சி. ஹூமா குரேஷி ஆளும் சூப்பரா இருக்காங்க. எல்லாத்துக்கும்
மேல கருத்து சொல்லாத சமுத்திரக்கனிய திரையில பாக்குற சொகமே தனிதான்.
சந்தோஷ் நாராயணன் படத்தோட இன்னொரு பில்லர்.
9 ட்ராக் போட்டுருந்தாலும் படத்துல நாலு தான் வருது. BGM உம் சிறப்பு. அதுவும் குறிப்பா
fly over ஃபைட்டு ஆரம்பிக்கிறப்ப வர்ற மியூசிக்குக்கும், நிக்கல் நிக்கல் பாட்டு வர்றப்பவும்
புல்லரிச்சிருச்சி. ஒவ்வொரு ரஜினி படத்துலயும் இந்த “Goosebumps moment” குறைஞ்சது
ஒரு நாலஞ்சாவது இருக்கும். ஆனா கபாலிலயோ அல்லது லிங்காவுலயோ ஒண்ணு கூட இல்லாதது வருத்தம்.
இப்ப காலாவுல நிச்சயம் ஒரு நாலஞ்சி Goosebumps moments இருக்கு.
கடைசியா இயக்குனர் ரஞ்சித். ஒவ்வொரு இயக்குனருக்கும்
ஒரு காட்சிப்படுத்தும் திறன் அப்டின்னு ஒண்ணு இருக்கு. என்னதான் நல்ல கதை திரைக்கதை
இருந்தாலும் அந்த காட்சிப்படுத்துறதுலதான் ஒரு சினிமாவோட உயிரே. தன்னோட காட்சிப்படுத்தும்
திறன் என்ன அப்டிங்குறத ஒவ்வொரு இயக்குனரும் ஒரு ரெண்டு அல்லது அதிக பட்சம் மூணு படங்களுக்குள்ள
காமிச்சிருவாங்க. அதான் அவங்களோட கெப்பாகுட்டி. அதுல ஒரு படி மேல கீழ இருக்கலாமே தவிற
ஒரே படத்துல மிகப்பெரிய முன்னேற்றம் எதையும் காமிச்சிட முடியாது. உதாரணமா நூறு கோடிரூவா
குடுத்து சுசி கணேசன்கிட்ட படம் எடுக்க சொன்னாலும் அவரு சுசி கணேசன் மாதிரி தான் எடுப்பாரே
தவிற ஷங்கர் மாதிரி எடுக்க முடியாது.
ரஞ்சித்தோட திறமை என்ன, அவரால எந்த அளவு
படமெடுக்க முடியும் அப்டிங்குறத நம்ம கடந்த
மூணு படங்கள்ல பாத்துருக்கோம். இந்தக் காலாவுலயும் அது மிகப்பெரிய அளவுல மாற்றம் எதுவும்
அடையல. கபாலியோட கதைய விட இந்தக் காலாவுல ஒண்ணும் பெரிய கதையெல்லாம் எதுவும் இல்ல.
ஆனா இந்தக் காலா கபாலிய விட பல மடங்கு சூப்பரா இருக்க மாதிரி நாம உணர முடியுதுன்னா
அதுக்கு காரணம் அவர் சேர்த்திருக்குற “ரஜினிகாந்த் காட்சிகள்” தான். படத்தை காப்பாத்துறதே
அது தான். ரஜினி இல்லாம வேற எந்த ஒரு நடிகரயும் அந்தக் கதாப்பத்திரத்துல பொருத்தியே
பார்க்க முடியாது.
ஆனா ஒண்ணு. ரஞ்சித் ஒரு அதிர்ஷ்டக்காரப்
பையன்பா.. எல்லாரும் நிறைய படம் எடுத்து பழகிட்டு அப்புறம்தான் ரஜினிய வச்சி எடுப்பாங்க.
ஆனா இவரு ரஜினிய வச்சித்தான் படம் எடுத்தே பழகுறாரு. முந்தைய படங்கள்ல பேசின அதே ஒடுக்கப்பட்ட
மக்களுக்கான அரசியலத்தான் இந்த படத்துலயும் ரஞ்சித் பேசியிருக்காரு. படத்துல எக்கச்சக்க
குறியீடுகள். இயக்குனருக்கே தெரியாத பல குறியீடுகள அக்கு வேற ஆணி வேற பிரிச்சி ரெண்டு
நாள்ல உங்களுக்கு நம்ம சமூக வலைதள நண்பர்கள் குடுத்துருவாங்க.. கொஞ்சம் காத்திருங்க.
மொத்ததுல நீங்க ரொம்ப நாளுக்கப்புறம் பார்க்கப்போர
“ரஜினி” படம் இந்தக் காலா. எஞ்சாய் பன்னுங்க.
8 comments:
அண்ணாமலை படத்துக்கு அப்புறமா பாட்ஷா பண்ணனும்னு நெனச்ச சுரேஷ் கிருஷ்ணா கிட்ட தலைவர் சொன்னது, நம்ம மேல இருக்கிற எதிர்பார்ப்ப மொதல்ல கம்மி பண்ணனும்!!!! அப்பறம் பாட்ஷாவை எடுக்கலாம்னு !!!
அதே தான் கபாலில நடந்திருக்குமோ!!!
சூப்பரு நண்பா.. படத்தைப் பத்தி எதிர் கோஷ்டிகள் கூட மௌனமாக இருப்பதே நம் வெற்றி தான்..
//ஆனா இந்த லூஸ் டீ ஷர்ட் போட்டுட்டு , தொப்பிய சைடுல மாட்டிக்கிட்டு ராப் பண்ணுறேங்குற பேர்ல நாலு பேர் ஏன் சுத்திக்கிட்டு இருக்கானுங்கன்னு தெரியல. அவனுங்களப் பாத்தாதான் கல்லக் கொண்டு எரியனும் போல இருக்கு// ஹா ஹா சேம் பீலிங் மை லார்ட்..
ஆன்மீக அரசியலால் ரஜினி மீது இருந்த வெறுப்பை ரஞ்சித் குறைத்துள்ளார்... pure india வ எதிர்த்தால் மக்கள் சந்தோஷபடுவார்கள் என புறிந்து வைத்துள்ளார்... ரஜினி ரஞ்சித்தை தேர்வு செய்தது சினிமாவுக்காக மட்டுமல்ல அரசியலுக்காகவும் தான்... ஆனால் நீங்க சொன்னத நினைவில் வைக்க வேண்டும்..சினிமா கதாநாயகன் வேறு அரசியல் தலைவன் வேறு ..
Semma Siva..I have enjoyed a lot with with police station scene,first fight and tharavi blocking scene for villain and Nana padekar acting... Especially thuru thuru Rajinikanth after longtime
Super
https://www.youtube.com/user/thilbharathi
Screen presence of Thalaivar is unmatched. BGM for Nana was awesome. Ram Ravan story telling was superb. Got to see one of the best performances from everyone
யாரு என்னதான் சொன்னாலும் படத்தோட ஒன்றிப்போகவுடாமா ஒண்ணு தடுத்துகிட்டே இருந்துச்சு என்னடா அதுன்னு பாத்தா வேற ஒண்ணுமில்ல.. அது வந்து தாதா தாதான்னு சொல்லி விவேக்க படிக்காதவன் படத்துல கூட்டி அலைக்கழிப்பாங்களே அது மாதிரி ஒரு பீலிங்கு.. ஏன் பீலிங்கு எதுக்காக பீலிங்கு? சொல்றேன் பிரதர்.. காலாங்குற அந்த தாதா அந்த தாராவில பெரியாளா ஆனதுக்கு சிறப்பான சம்பவம்னு ஒண்ண மட்டுமாவது காட்டி இருந்துருக்கணும்.. அது இல்லாததால எப்டி இருக்குன்னா.. யாரோ அவரோட உள் மனசுல போயி அவர ஒரு தாதான்னு நினைக்க வச்சுருக்காங்கன்னு தோணுது.. அந்த தாராவில மக்கள் சங்கடப்பட்டு வாழ்றது நம்ம தாதாவுக்கு தெரியுது ஆனா அத எப்பிடி சரி பண்ணணும்ணு தெரியாம போனது.. ரஞ்சித்தின் சதியும் அல்ல.. நானா படேக்கரின் சூழ்ச்சியும் அல்ல.. நம்பினோர் கைவிட்ட கதை காலாவில் மட்டுமல்ல கபாலியிலும் நடந்துள்ளது.. எங்க கை விட்டாங்க எப்போ கை விட்டாங்க? சொல்றேன்.. வேங்கை மகன் ஒத்தைல நிக்க சீன்ல அவரு ஒத்தையாவே இல்ல.. மொத்தமா வாங்கலேன்னு அவரு கூப்டப்போ.. அடியாளுங்க கிட்ட இருந்து காலாவ காப்பாதுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.. எமகா வண்டிக்காரன் எவ்ளோ அழகா காலாவ காப்பாத்தி சந்து பொந்துல கூட்டிட்டு போனான்.. ஆனா அவன அம்போனு தொங்க விட்டப்போ அவன காப்பாத்தாம கை விட்டத நினைக்குறப்போ.. வண்டில காலா கூட பத்திரமா வரும்போதே அவரோட மனைவிய கொல்றப்போ.. ஏன் எதுக்காக இந்த இழப்பு? தாதான்னா இழப்பே இருக்க கூடாதான்னு நீங்க கேக்குறது சரிதான் அதுக்காக கொல்லலாமா? அந்த விபத்துல மயிரிழைல பிழைச்சிருந்துருக்கலாம்.. அதுதான் காலாங்குற தாதாவுக்கு கெத்தா இருந்துருக்கும்.. மேலும் மக்களோட இடம் மக்களுக்கேதான்.. அதுல அவங்களுக்கே சொந்தமா வீடு கட்டிக்கொடுக்க காலா ஏன் முயற்ச்சி பண்ண மாட்டிக்கிறாரு? வீடு கட்ட முயற்சி பண்ற வில்லனுக்கும் இவரு தடையா இருந்துகிட்டு இருப்பாரு போல? அடுக்குமாடி குடியிருப்பா இருந்தா மக்கள் சகிச்சிட்டு வாழ மாட்டாங்களா? அதுக்கான முயற்சிய ஏன் தடுக்குறாங்க? எனக்கு சரியா புரியவே இல்ல.. நீங்க யாராவது நல்லா படம் பாத்து இருந்தா அதுக்கான விளக்கத்த சொல்லுங்க ஏன்னா ஒருவேளை நா சரியா பாக்காம இருந்துக்கலாம்.. அப்புறம் படம் முடியும் போது.. காலா ஒரு வழியா தாராவி மக்கள காப்பாதிட்டதா நம்மளோட உள்மனசுல நினைக்க வைக்க முயற்சி பண்ணுறங்கன்னு எனக்கு மட்டும் தோணுச்சுன்னு நினைக்குறேன்.. மத்தபடி காலாவ தவிர ரஜினின்ற நடிகர் உண்மைக்கும் செமயா நடிச்சு அவருக்கு கொடுக்கப்பட்ட வேலைய செம்மையா பண்ணி இருக்காரு.. அதுதான் படத்த காப்பாத்தி இருக்குன்னு நினைக்குறேன்.. ஏதும் நா சொன்னதுல தப்பு இருந்தா கொஞ்சம் என்ன தப்புன்னு சொல்லுங்க.. ஏன்னா அது என்ன தப்புன்னு தெரிஞ்சுக்கணும்னு எனக்கும் ஆர்வமா இருக்கு அதனாலதான்..
nee enna than muttu kuduthalum kaala avlo worth illa!!
Post a Comment