
”மாறாததெல்லாம் மண்ணோடு.. மாறுவதெல்லாம் உயிரோடு” கோச்சடையானில் வரும் ஒரு பாடல் வரி. காலத்துக்கு ஏற்ப மாறாத விஷயங்கள் விரைவில் காணாமல் போய்விடும். ஒருவர் ஒரு துறையில் நாற்பது ஆண்டுகள் அசைக்கமுடியாத ஒரு சக்தியாக திகழ்கிறார் என்றால் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டதுதான் முக்கியக் காரணம். அதுபோக ஒரு நடிகர் எந்த வித குறுக்கீடும் இல்லாமல் தன்னை முழுமையாக ஒரு இயக்குனரிடம் ஒப்படைக்கும்பொழுதே அந்த நடிகனின் முழுத் திறமையும் வெளிப்படுகிறது. இதைத் அன்றிலிருண்டு இன்றுவரை கடைபிடிப்பவர் திரு.ரஜினிகாந்த்.
அதே போல ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஒரு நடிகரை இயக்கும் இயக்குனர், அவருடைய ரசிகனின் பார்வையிலிருந்து அவரை ரசித்து இயக்கும்போதே மிகப்பெரிய ஆச்சர்யங்கள் நிகழ்கிறது. “நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். நான் அவரை எப்படியெல்லாம் பாக்கனும்னு ஆசைப்பட்டேனோ அதை மனசுல வச்சி உருவாக்கியிருக்கது தான் இந்த சிவாஜி திரைப்படம்” இது சிவாஜி திரைப்பட உருவாக்கத்தின் போது ஷங்கர் சொன்னது. அவர் சொன்னது போலவே பட்த்தின் அவுட் புட்டும். ஒவ்வொரு ரசிகனும் ரஜினியை எப்படி பார்க்க நினைத்தானோ அப்படி இருந்தது திரைப்படம்.
அதே மாதிரியான ஒரு அற்புதத்தைதான் மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் நிகழ்த்தியிருக்கிறார். “அட.. இப்டி தலைவரப் பாக்காத்தானே நாங்கல்லாம் ஆசப்பட்டோம்” என படம் பார்த்துவிட்டு இப்பொழுது கூறாதவர்கள் இல்லை. நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி அத்தனையிலயும் ரஜினிவெறி ஊறிப்போன ஒரு ரசிகனுக்கு அவர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதன் வெளிப்பாடு இப்படித்தான் இருக்கும்.
பேட்ட ஆடியோ லாஞ்ச் ஃபங்க்ஷன்ல கார்த்திக் சுப்பராஜ் பேசும்போது “நாங்க தலைவர எந்தெந்த ஆங்கிள்ல காமிக்கனும்.. அவரு எப்டி வரனும்.. எப்டி நிக்கனும்னுலாம் உக்கந்து பேசிக்கிட்டே இருப்போம்” என்றார். உண்மையில் அது ஒவ்வொரு ஃப்ரேமிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. பொதுவாக ஒரு படத்தின் காட்சியில் நடிகர் ஒண்றிரண்டு ஃப்ரேம்களில் அழகாகத் தெரிவார். ஆனால் பேட்டயில் ஒவ்வொரு ப்ரேமிலுமே தலைவர் அவ்வளவு அழகாக
இருக்கிறார்.
அதற்கேற்றார்போல் கதை நடக்கும் இடம் மலைப்பிரதேசம். அந்த லொக்கேஷனுக்கும் அவருடைய காஸ்ட்யூமிற்கும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. அதுவும் ஹாஸ்டலுக்குள் வந்து மாணவர்களை
ஒழுங்கு படுத்தும் ஒன்றிரண்டு காட்சிகளையும் , இண்டர்வல் ப்ளாக்க்கில் ”உள்ளே போங்கடா” என்று அரட்டுவதையும் சிங்கத்தின் கர்ஜனையுடன் ஒப்பிட்டால் அது சற்று குறைவாகத்தான் இருக்கும்.
அவ்வப்போது தலைவர் வைத்திருக்கும் ரேடியோவில் ஒலிக்கும் பழைய பாடல்கள் காட்சிகளை
இன்னும் அழகாக்குகின்றன. ஸ்டண்ட் அதகளம். அதுவும் இண்டர்வல் ப்ளாக்கிற்கு முந்தைய பில்ட்
அப் சீன் வெறித்தனம்.
பேட்ட
ஒரு தனி திரைப்படமாக இல்லாமல் ஒரு ரஜினி ரசிகனின் ஒட்டுமொத்த ரஜினி சார்ந்த அனுபவங்களையும்,
இன்றைய ட்ரெண்டில் மூண்று மணிநேரத்தில் ரீவைண்ட் செய்து பார்க்கும் ஒரு அனுபவமாகத்தான்
இருக்கிறது. மணல் மாஃபியா, RSS, டம்மி பீஸ் சிங்காரம் என படம் முழுவதும் நிஜத்தில்
பார்க்கும் பல கதாப்பாத்திரங்களை உலவ விட்டு ஊமை குத்தாக குத்தி விட்டிருக்கிறார்.
ஒரு
ரஜினி ரசிகனாகவும் ஒரு சினிமா ரசிகனாகவும் படத்தில் எனக்கு சில வருத்தங்கள் உண்டு.
வழக்கமாக தலைவர் படங்களில் அந்த படத்திற்கான ட்ரேட் மார்ட் ரஜினி ஸ்டைல் என்று ஒண்று
இருக்கும். பாட்ஷா “ஒருதடவ சொன்னா” , படையப்பா “சல்யூட்” , பாபா முத்திரை, சிவாஜியின்
கூல் வசனம், எந்திரனில் டாட்.. அதுபோல பேட்டைக்கென்ற ஒரு ட்ரேட் மார்க் மூவ்மெண்டோ,
பஞ்ச்சோ இருந்திருக்கலாம்.
அதேபோல
ஹீரோ எந்த அளவிற்கு கெத்தானவர் என்பது வில்லன் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லானவர் என்பதைப்
பொறுத்தே அமையும். அந்த வகையில் வில்லனின் கதாப்பாத்திரம் இன்னும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கலாம்.
நவாஸுதீன் கடைசி வரை கதாநாயகனுக்கு பயந்த ஒரு வில்லனாகத்தான் காண்பிக்கப்படுகிறார்.
அதுமட்டுமல்லாமல் அவர் எந்த அளவிற்கு பவர்ஃபுல்லானவர், அவர் செல்வாக்கு எப்படி என்பதெல்லாம்
காண்பிக்கப்படவில்லை. விஜய் சேதுபதியை இன்னும் சிறப்பான வில்லனாக உபயோகித்திருக்கலாம்.
படம்
வெளியாவதற்கு முன்பு அஜித் ரசிகர்களின் பெரும்பாலான பதிவுகள் “பேட்டயில் ரஜினியுடன்
நிறைய கதாப்பாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தல அவர்களை ஒற்றை ஆளாக எதிர்க்கிறார்”
என்பது போல இருந்தது. ஆனால் அதை அப்படியே மாற்றிக் கூற வேண்டும். படத்தில் அத்தனை பேர்
இருந்தாலும் தலைவரின் கதாப்பாத்திரத்திற்கு அடுத்து படத்தில் அடுத்த வெய்ட்டான கதாப்பாத்திரம்
யார் என்று கேட்டால் நிச்சயம் ஒருவரை குறிப்பிட்டு கூற முடியாது. ஆரம்பம் முதல் கடைசி
வரை ரஜினி மட்டுமே கதையில் நிறைந்திருக்கிறார். மற்ற எந்த கதாப்பாத்திரமும் மெருகேற்றப்படவில்லை.
சிம்ரன் கொஞ்ச நேரம், திரிசா கொஞ்ச நேரம், மேகா ஆகாஷ் கொஞ்ச நேரம் என பல கதாப்பாத்திரங்கள்
கொண்டு வரப்பட்டு அப்படியே அத்துவிடப்படுகின்றன. (தலைப்பே இன்னொரு முறை படிக்கவும்)
அடுத்து
இதற்கு முந்தைய பல பதிவுகளில் குறிப்பிட்டது போல, புறாவை மறைய வைப்பது பெரிய விஷயமில்லை.
மறைந்த புறாவை திரும்ப கொண்டுவருவதில் தான் அடங்கியிருக்கிறது prestige. மொத்தக் கதையும்
பின்னப்பட்டிருப்பது அந்த ப்ளாஷ்பேக்கை சுற்றித்தான். அப்படியிருக்க அந்த ஃப்ளாஷ்பேக்
எவ்வளவு அழுத்தமாக அமைக்க முடியுமோ அப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பேட்டயின்
ஃப்ளாஷ்பேக் இன்னும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கலாம். ரொம்ப அவசர அவசரமாக ப்ளாஷ்பேக்
ஓடி முடிந்ததைப் போல இருந்தது மட்டுமல்லாமல், சசிகுமார், திரிசா கதாப்பாத்திரங்களெல்லாம்
மனதில் ஒட்ட மறுக்கின்றன.
அதே போல பேட்டவேலனின் அடாவடிகளை எதிர்பார்த்து காத்திருந்த
நமக்கு சட்டென ஃப்ளாஷ்பேக் முடிந்ததும் ஒரு ஏமாற்றம். ஃப்ளாஷ்பேக் காட்சிகளை இன்னும்
கொஞ்சம் இழுத்து பிந்தைய பகுதி ரிவெஞ்ச் காட்சிகளை கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.
பின்னணி
இசையில் அனிரூத் கலக்கியிருக்கிறார். கடந்த சில படங்களில் இல்லாத அளவுக்கு பாடல்கள்
பேட்டயில் அதகளம். ஐந்து பாடல்களையும் முழுவதுமாக உபயோகித்திருக்கலாம். ஆஹா கல்யாணமும்,
பேட்ட பராக்கும் முழுவதுமாக இல்லாதது வருத்தமளித்தது.
ஒரே
ஒரு பாட்ஷா தான். அதை யாராலும் உடைக்க முடியாது. நானே நினைச்சாலும் அந்த மாதிரி படம்
எடுக்க முடியாது என தலைவர் முன்பொரு முறை சொல்லியிருந்தார். நூறு சதவிகித உண்மை. ஆனால் பேட்டயில் ஃப்ளாஷ்பேக்கும் வில்லனும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்பட்டிருந்தால் கண்டிப்பாக இதை
அடுத்த பாட்ஷா என்றே கூறலாம்.
பேட்டயின்
ட்ரெயிலரைப் பார்த்து உற்சாகமான நண்பர் ஒருவர் “நண்பா… நம்ம தலைவரு ஃப்ளாஷ்பேக்குல
தலைவர் ரசிகராவே வந்தா எப்டி இருக்கும்.. முரட்டுக்காளை படத்துக்கு தலைவர் முதல் நாள்
அளப்பரையா போய் படம் பாக்குற மாதிரி சீன் வச்சா செமையா இருக்கும்ல…”ன்னாரு… மெரண்டுட்டேன்.
உண்மையிலயே செம மேட்டர்.. அப்படி காட்சி அமைக்கப்பட்டால் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்
நண்பான்னு சொல்லியிருந்தேன். நானும் அப்படி இருக்காதா என எதிர்பார்த்துதான் காத்திருந்தேன்.
சிறிய ஏமாற்றம்.
”இதான்யா
ரஜினி படம்.. அவர வச்சி இப்டித்தான் எடுக்கனும்” என்கிற வாசங்களை படம் பார்த்துவிட்டு
வெளியில் வரும்போது கேட்ட முடிகிறது. அதேபோல
படம் முடிந்து வெளியில் வரும் அனைவர் முகத்திலும் பல நாட்களுக்கு முன் தொலைத்த எதோ
ஒண்று மீண்டும் கிடைத்துவிட்ட திருப்தியும் மகிழ்ச்சியும் காண முடிகிறது. கண்டிப்பாக
சிவாஜிக்குப் பிறகு முழுக்க முழுக்க ரஜினி படமாக வெளிவந்திருக்கும் இந்த பேட்ட அத்தனை
பேருக்கும் பிடித்த படமாக இருக்கும்.
14 comments:
I go to see every day a few web sites and sites to read articles,
but this weblog presents feature based content.
Hi there, ϳust beсamе аwaгe of your blog through Gooցle, and found that it's trulү
infߋrmative. I'm going to watch out for brussels.
I will be grateful if you cօntinue thіs inn future.
Numeroᥙs peoρle will be benefitеd from your writing.
Cheers!
Gгеatt delіvery. Solіd argumentѕ. Ꮶeеp up the good
work.
Ƭoday, I went to the beach front with mmy children. I found а sea shell and gavee it to
my 4 year old daughter and said "You can hear the ocean if you put this to your ear." She put the shell to
her eaг and screamed. There waas a ermit crab inside аnd it pinched her ear.
She never wants to go back! LoL I know this is totally off topic but Ӏ had
tⲟ tell ѕomeօne!
Good and honest review.. I felt the same..
ரஜினி மட்டுமே திரைப்படமாக முடியாது என்பதை இயக்குனர் உணர வேண்டும்.
ரஜினி ரசிகர்களை படம் திருப்திபடுத்தலாம் .
ஆனால் மக்களை இந்தப்படம் திருப்திபடுத்தாது என்பதே உண்மை .
Sarkar review enga....
Sarkar review enga....
when compared with jiguruthanda and pizza its worst karthik subburaj movie,uppum illa sappum illa storyum illa mokka movie
I love your writing style genuinely loving this site.
This movie may another hit for Rajini. But for Karthik subburaj this is the worst movie he ever made. Padam avlo worth illa!
Hello, you used to write magnificent, but the last several posts have been kinda boring...
I miss your tremendous writings. Past several
posts are just a little bit out of track! come on!
Very nice article. I certainly love this website.
Thanks!
Write more, thats all I have to say. Literally, it seems as though
you relied on the video to make your point.
You clearly know what youre talking about,
why waste your intelligence on just posting videos to your weblog when you could be
giving us something enlightening to read?
Post a Comment