Monday, September 23, 2019

காப்பான் - நல்ல படம்!!


Share/Bookmark
அம்மா அய்யா.. தமிழ் சினிமாவுல இன்னும் யாருக்காச்சும் விவசாயிகள காப்பத்தனும்னு ஆசையிருந்தா பட்டுன்னு வந்து காப்பாத்தி விட்டு போயிருங்க. அப்புறம் லேட்டா வந்து நாங்க காப்பாத்துறதுக்கு விவசாயிகளே இல்லையின்னு ஃபீல் பன்னக்கூடாது. நம்ம ஹீரோக்கள் இருக்க வேகத்தப் பாத்தா நம்ம ஊரு விவசயிகள் மட்டும் இல்ல நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் போயி காப்பாத்துவானுக போல. விவசாயத்த கார்ப்ரேட்டுக்கிட்டருந்து காப்பாத்துறதுக்கு முன்னால மொதல்ல இந்த கார்த்தி சூர்யாகிட்டருந்து விவசாயிகளக் காப்பாத்தனும். 

காப்பான்.. இண்டர் நேஷனல் டெரரிசத்தையும், டெல்டா விவசாயிகளையும் மிக்ஸ் பன்னி ஒரு மாதிரியான கசமுசாவான கதை. இந்த கதைய கே.வி. ஆனந்த் எப்டி புடிச்சிருப்பாருன்னு நம்மலாள உண்ர முடியிது. ரெண்டே ரெண்டு வாட்ஸாப் மெசேஜ் தான். ஒண்ணு “அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள்”ன்னு ஆரம்பிக்கும். இன்னொன்னு அங்கே டெல்டாவில் விவசாயிகள் கஷ்டப்படும்பொழுது”ன்னு ஆரம்பிக்கும். இது ரெண்டாயும் ஒண்ணா மிக்ஸ் பன்னி ஒரு கதைய ரெடி பன்னிருக்காரு. 

சூர்யா special protection Groupla  ஒரு பெரிய ஆபீசர். பங்கரமா வசனமெல்லாம் பேசுவாரு.  

"குண்ட மார்புல வாங்கனும்னு SPG la எழுதப்படாத ரூல்"

யார் மார்புல

சமுத்திரக்கனி மார்புலயும், மோகன்லால் மார்புலயும். 


ஆக்சுலா படத்துல சமுத்திரக்கனி இருக்கதே எனக்கு தெரியாது. படத்துல மொத மொத பாத்தாப்ப ஷாக் ஆயிட்டேன். அய்யய்யோ.. அதான் சூர்யா இருக்காப்ளயே.. இதுல சமுத்திரக்கனி வேறயா... கருத்து சொல்லி கொல்லப்போறாய்ங்களே.. இந்தப் பாத்தா சீவலு.. அந்தப் பக்கம் பாத்தா செதறலு எந்தப்பக்கமும் எஸ்ஸாக முடியாது போலயேன்னு ஒரு பீதில இருக்கும்போது அதுக்கு ஆறுதலா சமுத்திரக்கனி படத்துல எதுவும் அட்வைஸ் பன்னல. ஆனா அதுக்கும் சேத்து சூர்யா பேசிட்டாப்ளன்றது வேற விஷயம். 


சும்மா சொல்லக்கூடாது. கே.வி. ஆனந்த் ஸ்க்ரீன்ப்ளே நல்லாவே பன்னிருக்காரு. விவசாயிகளப் பத்தி பேசுற காட்சிகளத் தவற வேற எங்கயுமே படம் போர் அடிக்கல. ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் நல்ல விறுவிறுப்பா  போய் முடியிது. கேமரா ஸ்டண்டு எல்லாமே நல்லாருக்கு.  பாட்டும் மூணு பாட்டு நல்லாருக்கு.

ஆக்சுவலா படத்துக்கு வெடிகுண்டுன்னு தான் பேரு வச்சிருக்கனும். ஆனா கே.விக்கு ன்னு முடியிற பேருதான் வைக்கனும்றதால காப்பான்னு வச்சிருக்கானுக. ஏன்னா கூட்டிக் கழிச்சி பாத்தா first half la ஒரு 300 குண்டு second half la ஒரு 200 குண்டு கூட்டி கழிச்சி பாத்தா ஒரு 500 குண்டு வெடிச்சிருக்கு.இவ்வள்வு குண்டையும் எங்க வச்சானுங்கன்னு கேக்குறீங்களா? எங்க வக்கைலன்னு கேளுங்க..  ஸ்கூல் பேக்ல குண்டு.. உக்கார்ல சேர்ல குண்டு.. புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட்டுல குண்டு.. ஆப்ரேஷன் பன்ன கைக்குள்ள குண்டு.. வில்லனா வர்றவன் நெஞ்சுக்குள்ள ஏது... அங்கயெல்லாம் இல்ல... ஒரு லெவல்ல நமக்கே பயமா இருக்கு... நம்ம சீட்டுக்கு அடிலயும் எதயும் வச்சி வெடிச்சி விட்ருவானுகளோன்னு  அப்பப செக் பன்னி பாத்துக்க வேண்டியிருக்கு. 

மோகன்லால்.. செம்மையா இருக்காரு.. அந்த Prime Minister get up.. அவருக்கு எழுதப்பட்ட வசங்கள எல்லாமே நல்லாருக்கு.அவர் ஸ்க்ரீன்ல இருக்கும்போது வேற எந்த ஆக்டரோட பர்ஃபாமன்ஸூம் எடுபட மாட்டேங்குது. அதுக்காகவே அவர க்ரிச்ச் பன்ன சொல்லிட்டாங்க போல.
வழக்கமா கே.வீ.ஆனந்த் படத்துல யாராது ஒருத்தர் செத்த உடனே ஹீரோ டூயட் பாட போயிருவாரு. அதே மாதிரி இங்கயும் மோகன்லால் குண்டு வெடிச்சி செத்த அடுத்த செகண்ட் துபாய் லொக்கேஷன்ல துப்பட்டா துப்பட்டான்னு ஷாயிஷாவோட ஒரு டூயட் பாடுவாப்ளன்னு நினைச்சேன். ஏமாத்திட்டாரு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்த எடுத்து வச்சிருக்காங்க. மினிஸ்டர்ஸ் குமிஞ்சி கும்புடு போடுறதுன்ஞ் திரும்பவும் நடந்த விஷயங்களையே எடுத்து வச்சிருக்காங்க.

சூர்யா வழக்கம்போல ஆளு செம ஃபிட்... கை ரெண்டயும் இழுத்து வச்சி கான்கிரீட் போட்டுவிட்ட மாதிரி படம் முழுக்க வெரப்பா சுத்துறாரு.  ஷாயிஷாதான் அவருக்கு செட் ஆகல.. வேற ஹீரோயின் யாரயாச்சும் போட்டுருக்கலாம்.  ஏனா? ஹைட்டு ப்ரச்சனை தான்.. ஷாயிஷா மூஞ்சி மட்டுமே சூர்யா இடுப்பு உயரம் இருக்கு. தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ்.. பாடல்கள் எப்பவும் போல.. மூணு பாட்டு நல்லாருக்கு. BGM அந்த அளவுக்கு சிறப்பா இல்ல 

ஆர்யா அமெரிக்க மாப்பிள்ளைய விட கொஞ்சம் பெட்டரான ரோல். தெலுகு மார்க்கெட்டுக்காக  ஒரு சில தெலுகு நடிகர்களோட பொமன் ஈரானியும் உள்ள வந்துருக்காரு. 

நாட்ல நிறைய டைரக்டர்களுக்கு டைட்டில் ப்ரச்சனை இருக்கும். ஆனா கே.வி. ஆனந்துக்கு அந்த ப்ரச்சனையே இல்ல.  இப்ப காப்பான்னு வச்சிருக்காரு. நாளைக்கே  சமூக ஆர்வலர ஹீரோவ வச்சி எடுத்தா துடைப்பான்னு வச்சிப்பாரு. இதே ராஜமெளலி ஈய வச்சி எடுத்த மாதிரி ஒரு கரப்பான் பூச்சிய வச்சி எடுத்தாருன்னா கரப்பான்னு வச்சிப்பாரு.  ஹீரோ ஒரு பெய்ண்டர்னு வச்சிக்குங்க படத்துக்கு பேரு நிப்பான்னு வச்சிப்பாரு. டைட்டில் கைவசம் ஸ்டாக்கு நிறைய இருக்கு.

நிறைய நெகடிவ் ரிவியூஸ் பாக்க முடியிது. அதெல்லாம் இதற்கு முன்னால வந்த சூர்யா படங்களால பாதிக்கப்பட்டவங்களோட Frustration. இந்தப் படம் நல்லாதான் இருக்கு. ரொம்ப நாளுக்கப்புறம் சூர்யாகிட்டருந்து ஒரு நல்ல எண்டர்டெய்னர். 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

g venkatesan said...

விவசாயிகள் கார்ப்பரேட் னு படத்துக்கு படம் இவங்க முழங்கறது பாக்குறவங்களுக்கு எரிச்சலை தான் உண்டாக்குது. படம் எடுக்க கார்ப்பரேட் லைகா வேணும், லொகேஷனுக்கு அமெரிக்கா வேணும், கூடுதல் விலைக்கு டிக்கெட் வித்து பிளாக்கில் கொள்ளை சம்பளம் வேணும்.. ஆர்கானிக் உபதேசம் படத்தில்... இல்லாட்டி மறைமுகமாக பாஜ எதிர்ப்பு.. அது மட்டும் தைரியமாக பண்ணுவாங்க. இங்கே உள்ள மது, மணல் பத்தி இவங்க கண்ணுல படாது.சூர்யா மார்க்கெட் முடிஞ்சது.

Anonymous said...

ஒண்ணு “அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள்”ன்னு ஆரம்பிக்கும். இன்னொன்னு அங்கே டெல்டாவில் விவசாயிகள் கஷ்டப்படும்பொழுது”ன்னு ஆரம்பிக்கும். இது ரெண்டாயும் ஒண்ணா மிக்ஸ் பன்னி ஒரு கதைய ரெடி பன்னிருக்காரு.

Correct Muthu! Intha rendu Subject'la mattum idhuvaraiukum oru 2000 padam vanthuruku. Innum ethana Ayiram padam varapogudho?

Unknown said...

Ennathu. ..nalla padama.?!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...