கொரோனாவிற்குப் பிறகு திரையரங்கில் வெளியாகியிருக்கும் ஒரு
பெரிய பட்ஜெட் திரைப்படம்.
ரவிதேஜாவைப்
பொறுத்த வரையில் சென்ற பத்து வருடங்கள் சுமாரிலும் சுமாரானவை. மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர்
என எதுவும் இல்லை. ஒரு சில படங்கள் மட்டும் சுமாரான ஹிட் அடித்திருந்தன. அதற்கு முக்கியக்
காரணம் கதைக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் ஒரே மாதிரிப் படங்களாக நடித்துத்
தள்ளியது.
முதல் பாதி
காமெடி இடைவேளையின் போது கட்டாயமாக ஒரு ட்விஸ்ட் பின் இரண்டாம் பாதியில் ஒரு ஃப்ளாஷ்பேக்
இதுதான் கடந்த தசாப்த்தில் ரவிதேஜா நடித்து வெளியான படங்களின் பேட்டர்ன். பெரும்பாலான
தெலுங்குப் படங்களின் பேட்டர்ன் இதுதான் என்றாலும் ரவிதேஜா படங்களில் அந்த பேட்டர்னில்
கடுகளவு மாற்றம் கூட நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் ரொம்பவும் கராராக இருப்பார்.
ரவிதேஜாவை
வைத்து டான் சீனு, Balupu என இரண்டு திரைப்படங்களை இயக்கிய கோபிசந்த் மூன்றாவது முறையாக
ரவிதேஜாவுடன் இணைந்திருக்கிறார்.
முதலில் இந்தத்
திரைப்படம் ஆரம்பித்த பொழுது இது தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “சேதுபதி”
படத்தின் ரீமேக் என செய்திகள் பரவ, திரைப்படக் குழு உறுதியாக இல்லை என மறுத்தது.
ஆனால் க்ராக்
திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளிவந்த பொழுது சேதுபதியின் சாயல் நிறைய இடங்களில் தெரிந்தது.
“சேதுபதி”யா இருந்தா போகத்தேவையில்ல.. இல்லைன்னா போகலாம் என இரண்டு மனநிலையிலிருந்து
கடையில் ஒரு வழியாக தியேட்டருக்குப் போனால்… நல்ல வேளை சேதுபதி ரீமேக் இல்லை.. அதுவே
மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது.
ட்ரெயிலரில்
எதோ இன்ஸ்வெஸ்டிகேசன் த்ரில்லர் மாதிரியான ஒரு பில்ட் அப் கொடுத்திருந்தார்கள். ஆனால்
படம் அப்படியெல்லாம் ஒண்றும் இல்லை. ஒரு போலீஸிடம் சிக்கி சின்னாபின்னமாகும் மூண்று
தாதாக்களின் சோகக் கதைதன் இந்த க்ராக்.
ஆஹா ஓஹோ டைப்
திரைக்கதை இல்லாவிட்டாலும் அருக்காத
action packed screenplay. வழக்கம் போல ஸ்டண்ட்ஸ் அருமை. மெயின் வில்லனாக சமுத்திரக்கனி
அவருடன் வரலக்ஷ்மி. கருத்து கந்தசாமி சமுத்திரக்கனி
தெலுங்கில் வில்லனாக ஒரு ரவுண்ட் வருவார் போலிருக்கிறது.
மூன்று வில்லன்களில்
மூண்றாவது குட்டி வில்ல்னாக சாய் ரவி நடித்திருக்கிறார். தெலுங்கு திரைப்படங்களில்
ஒரே திரைப்படத்தில் மூண்று முக்கியமான கதாப்பாத்திரங்களுக்கு டப்பிங் கொடுப்பவர் சாய்
ரவி. இந்தப்படத்தில் சமுத்திரக்கனிக்கும் அவரே
டப்பிங்.. அவருக்கும் அவரே டப்பிங்.. சமுத்திரக்கனியும் சாய் ரவியும் பேசிக்கொள்ளும்
காட்சிகளில் காதல் கொண்டேன் தனுஷ் போல அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்வது போல இருந்தது.
ரவிதேஜா போலீஸ்
கெட்டப்பில் கெத்தாக, ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார். ஆங்காங்கு ஒருசில
ஒன்லைனர்ஸ் தவிற பெரிதாக நகைச்சுவை காட்சிகள் இல்லை. தமன் இசையில் பிண்ணனி இசை தரம்.
பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.
மொத்தததில்
சலிப்பை ஏற்படுத்தாத ஒரு நல்ல ஆக்ஷன் எண்டர்டெய்னர். 2021 ரவிதேஜாவிற்கு நன்றாக ஆரம்பித்திருக்கிறது.
1 comment:
என்ன சார்...ரொம்ப நாளாக காணோம்.உங்க பதிவை பார்த்து ஒரு உற்சாகம் வந்துடுச்சு
Post a Comment