Caution : மொரட்டு ஸ்பாய்லர்ஸ் ahead!!
வின்னர் திரைப்படத்தில் கிரண் வீட்டிற்குள் ஏறிக் குதிக்கும்போது வடிவேலு கயிற்றை வைத்துக்கொண்டு எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருப்பார். என்னடா செய்ற என்பதற்கு “நா என்னமோ பன்றேன் போடா” என்பார். கிட்டத்தட்ட பொன்மாணிக்கவேல் படத்து இயக்குனரும் இந்த வடிவேலுவின் மனநிலையில் தான் இருந்திருப்பார் போல. என்ன செய்கிறார் படம் எங்கே செல்கிறது என்பது கடைசி வரைக்குமே அவருக்கே வெளிச்சம்.
ஆரம்பக் காட்சியில் நீதிபதி ஒருவர் இரண்டு வெவ்வேறு துப்பாக்கியால் சுடப்பட்டு, தலை தனியாக வெட்டபட்டு இறந்துகிடக்கிறார். விவேக் சொல்லும் கொன்னு, கொலைபண்ணி, மர்டர் பன்னிருவேண்டா டோங்க்ரே என்பது இதுதான் போல.
யார் கொலையாளி என்பதைக் கண்டறிய போலீஸ் திணற, துப்பாக்கி ஸ்பெசலிஸ்ட் பொன் மாணிக்கவேல் வரவழைக்கப்படுகிறார். அவர் எதையுமே வித்யாசமாகச் செய்பவர். அதாவது சீரியாக இன்வெஸ்டிகேஷன் செய்வதற்காக செல்லும் இடங்களில் கேஸைப் பற்றிப் பேசாமல் “டீ சாப்டுவோமா” வடை சாப்டுவோமா” என சம்மந்தம் இல்லாமல் பேசி தான் கேஷூவலாக இருப்பதை மற்றவர்களுக்கு காட்டுபவர். ஆரம்பக் காட்சிகளில் பொன்மாணிக்கவேலின் அதிகப் பிரசங்கித் தனம் தாங்காமல் நமக்கே அவர் பொடனியில் பொளேர் என்று ஒன்று வைக்கவேண்டும் என்று தோன்றும் அளவுக்கு இருக்கிறது.
நீதிபதி சுடப்பட்ட இடத்தில் புல்லட்டே கிடைக்கவில்லை என்கிறார்கள். ஆனால் ஃபோரன்ஸிக் ரிப்போர்ட்டில் சுடப்பட்டது என்ன துப்பாக்கி, எப்போது வாங்கிய துப்பாக்கி, யார் யாரிடம் அது இருக்கின்றது என்பது வரை டீட்டெய்ல் கொடுக்கிறார்கள். எப்படி என்றே தெரியவில்லை.
இது ஒரு முறையான மர்டர் இன்வெஸ்டிகேஷன் கதையாகவும் செல்லவில்லை. ஒரு கமர்ஷியல் போலீஸ் கதையாகவும் செல்லவில்லை. ஒரு மாதிரியாகச் செல்கிறது.
பல இன்வெஸ்டிகேஷன்களுக்குப் பிறகு கொலையாளி முள்ளும் மலரும் மகேந்திரன் எனக் கண்டறிகிறார்கள். வயது முதிர்ந்த மகேந்திரனின் உடல்நிலையைப் பார்த்து நமக்கே பரிதாபமாக இருக்கிறது. ஆனால் போலீஸில் கமிஷ்னர் முதல் ஐஜி வரை அவர்தான் அந்த மூன்று கொலைகளை செய்தார் என்று நம்புக்கிறார்கள். ஹியூமன்ஸாடா நீங்கல்லாம்?
ஒரு தொழிலதிபரை இன்னும் சில மணி நேரத்தில் கொலை செய்து விடுவதாக கொலைகாரன் மிரட்டுகிறான். அந்த தொழிலதிபரின் வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கில் போலீஸ் குவிக்கப்பட,பொன் மாணிக்கவேலும் அதில் இருக்கிறார்.
ஆனால் கொலைகாரன் இவற்றையெல்லாம் தாண்டி தொழிலதிபரை கொன்றுவிட, போலீஸ் மொத்தப்படையும் அந்த இடத்திற்கு விரைகிறது. பொன்மாணிக்கவேல் துப்பாக்கியும் கையுமாக “சார் கொலைகாரன் தொழிலதிபரை சுட்டுட்டான். நான் அவனை சுட்டுட்டேன்” என்கிறார். உடனே அனைவரும் “வெல்டன் பொன்மாணிக்கவேல்” “வெல்டன் பொன்மாணிக்கவேல்” என்கிறார்கள். ஏண்டா நீங்க யாரக் காப்பாத்தனும்னு வந்தீங்களோ அவன் பொனாமா கெடக்கான். இதுல என்ன வெல்டன்? எதுக்கு வந்தோம்னே தெரியாம சமயக்காரனாவே மாறிட்டீங்களேடா?
அதயெல்லாம் விட உச்சகட்ட காமெடி ஒன்று இருக்கிறது. மகேந்திரனை பொன்மாணிக்கவேல் ஒரு மார்ச்சுவரிக்கு அழைத்துச் சென்று, அங்கிருப்பவரிடம் மகேந்திரனைக் காட்டி “அண்ணே ‘ஓ’ பாசிடிவ் ப்ளட் குரூப்புல ஐயா மாதிரியே ஒரு பாடி வேணும்” என்று கேட்கிறார்.
டேய்… என்னடா துணிக்கடையில போய் ”அண்ணே 34 சைசுல ரெண்டு பேண்ட் குடுங்கண்ணேன்னு கேக்குற மாதிரி கேக்குறீங்க? பொணம்டா
”
இப்படி எக்கச்சக்கமாகப் போகும் படத்தின் படத்தின் ஒரே ஆறுதல் நிவேதா “பெத்த”ராஜ் மட்டும்தான். இமானின் பின்னணி இசை ஓகே.
மொத்தத்தில் பொன் மாணிக்கவேலின் முதல் அரைமணிநேரம் நம்மை பயங்கரமாக சோதிக்கும். அப்புறம் அதுவே பழகிரும்.
4 comments:
:-))))))))))
//விவேக் சொல்லும் கொன்னு, கொலைபண்ணி, மர்டர் பன்னிருவேண்டா டோங்க்ரே என்பது இதுதான் போல.//...//படத்தின் ஒரே ஆறுதல் நிவேதா “பெத்த”ராஜ்//...கலக்கிட்ட தல!!!
சூப்பர்
தமிழ் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தேவையான கருவிகளை www.valaithamil.com இணையதளத்தில் கண்டறியலாம்.
மேலும் வலைத்தமிழ் நடத்தும் கதை & கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு ரூ.1000 வரை பரிசு வெல்லும் வாய்ப்பையும் பெறுங்கள்.
Post a Comment