கண்ணுக்கெட்டிய தூரம் வரை இரண்டு ஆள் மட்டத்திற்கு வளர்ந்த அடர்ந்த கரும்புக் காடு. அதற்கு நடுவில் இருக்கும் பாதி சேதமடைந்த ஒற்றை வீடு. அதில் இளம் மஞ்சள் நிறத்தைக் கக்கும் ஒருசில விளக்குகள். பட்டுப்போன ஒரு பிரம்மாண்டமான மரம். அதன் கீழே ஒரு பாழடைந்த கிணறு. அந்த வீட்டில் வெளியே செல்ல முடியாமல் மாட்டிக்கொள்ளும் ஒரு கர்பிணி. இவையனைத்தையும் ஒருசேரக் கற்பனை செய்தாலே அடிவயிற்றில் தானாகப் பயம் உண்டாகும்.
கடன் தொல்லையால்
சிலநாட்கள் யார் கண்ணிலும் படாமலிருக்க, கற்பிணிப் பெண் ஒருவரும் அவரது கணவரும் மொத்தம்
ஐந்தே வீடுகள் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அங்கு செல்வதால்
ஏற்படும் விளைவுகளை திகிலுடன் கூறியிருப்பதுதான் இந்த CHHORII.
படம் ஆரம்பித்த
ஐந்தாவது நிமிடத்தில் ஆரம்பிக்கும் திகில் கலந்த சுவாரஸ்யம் படத்தின் இறுதிநிமிடம்
வரை நம்மை அப்படியே உட்கார வைக்கிறது. இரவில் நடக்கும் காட்சிகளாகட்டும், பகலில் நடக்கும்
காட்சிகளாகட்டும்.. எந்த வேறுபாடுமில்லாமல் பயத்தை விதைத்துக் கொண்டே இருக்கின்றன.
மொத்தமே நான்கைந்து
கதாப்பத்திரங்கள் தான். ஒரே லொக்கேஷன். மொத்தப்படமும் செட் போட்டு ஸ்டூடியோவிற்குள்
தான் எடுத்திருப்பார்கள் போல. மிரட்டுகிறது.
Tumbbad
(2018) எப்படி நமக்கு ஒரு வித்யாசமான அனுபவத்தைக் கொடுத்ததோ அதே போல இந்தச் CHHORII யும் ஒரு வித்யாசமான திகில் படம்
பார்த்த அனுபவத்தைக் கொடுக்கும்.
ஹாரர் த்ரில்லர்
விரும்பிகள் கட்டாயம் பார்க்கலாம். இரவில் பார்த்தால் எஃபெக்ட் பயங்கரமாக இருக்கும்.
2 comments:
நீங்க சொன்னா நிச்சயம் ஒர்த்தா தான் இருக்கும். பார்த்து விடுகிறேன்.
உங்கள் பதிவுகள் குறைய காரணம் என்ன?
ஏன் பேஸ்புக்ல இருந்து திடீர்னு காணாம போய்டிங்க, பழைய பன்னீர் செல்வமா எப்ப திரும்ப வருவிங்க
Post a Comment