Thursday, April 4, 2013

MEPZ சிக்னல் ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் - WHAT A MAN!!!


Share/Bookmark
மாசக்கடைசி... பர்ஸ்ல ஒக்கே ஒக்க நூறு ரூவா நோட்டு தான் இருக்கும்.. சரி சமாளிப்போம் அப்டின்னு நெனைச்சிகிட்டு வண்டிய எடுத்துகிட்டு எங்கயாது போணா அந்த நூறுரூவாய ஆட்டைய போட சனியன் ட்ராஃபிக் போலீஸ் ரூபத்துல வந்துரும்.அவுங்க கைய போட்டு வண்டிய  நிறுத்திபுட்டாங்கன்னா வசூல் பண்றதுல வசூல்ராஜாவ விட மோசமானவிங்க. அவிங்க நல்ல நேரமும் நம்ம கெட்ட நேரமும் சேந்து எந்த நம்மகிட்ட இல்லையோ கரெக்கிட்ட அத கேப்பாய்ங்க..  "எனக்கு ஐ.ஜி ய நல்லா தெரியும்" ன்னு சொல்லிட்டு விவேக் ஸ்டைல்ல தப்பிக்கிற காலமெல்லாம் மலையேறிப் போச்சி கொஞ்ச நேரம் கரகாட்டக்காரன் செந்தில் மாதிரி மேலையும் கீழயும் பாத்து பம்பிகிட்டு  நின்னோம்னாலாது மனசு கரைவாங்களான்னா நம்ம நடிப்பு தான் வீணாப்போகுமே தவற அவிங்க ரியாக்சன்ல எந்த மாற்றமும் இருக்காது.... கடைசில வேற வழி இல்லாம நூறு ரூவாய குடுத்தாதான் அந்த எடத்த உட்டு நகரலாம்.

காசு குடுக்குறது கூட பரவால்ல.. அந்த நூறு ரூவாய வாங்குனதுக்கப்புறம் ஒரு ரியாக்சன் விடுவாங்க பாருங்க... "இனிமே இந்த மாதிரி டாக்குமெண்ட் இல்லாம வரக்கூடாது...என்ன புரியிதா." சரி சார்னு சொல்லிட்டு வண்டிய எடுக்குற சமயத்துல தம்பி  ஆமா எங்க போற?"ம்பாங்க. நம்ம "பீச்சுக்கு சார்" ன்னோம்னா "ட்ரிப்ளிகேன் வழியா போகாதாப்பா... செம ட்ராஃபிக்கு... அடையார் ஃபிரிட்ஜுல லெஃப்ட் எடுத்து மூணாவது ரைட்டு எடுத்துக்க... லைனு கிளியரா இருக்கும்... " ன்னு ஒரு வழி சொல்லுவாங்க பாருங்க. இய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.... ஒண்ணுமில்ல வாங்குன நூறு ரூவாய்க்கு அவரு நமக்கு நல்லது செய்யிறாராம்.  முன்னாடியாச்சும் மாசக்கடைசில செலவுக்கு காசுல்லன்னா வண்டிய நிறுத்தி வசூல் பண்ணவங்க, இப்போ இந்த HAND மெஷின் வந்தப்புறம் இவுங்க தொல்லை இன்னும் அதிகமாயிருச்சி. அன்னிக்கு ஒரு நாள் நைட் ஷோ பாத்துட்டு வந்துட்டு இருக்கேன் வழக்கம்போல ஓரம்கட்டிட்டாங்க. நல்ல வேளை நம்மகிட்ட எல்லா டாக்குமெண்டும் இருக்குன்னு எடுத்து காமிச்சப்புறமும், சரி ஒரு நூறு ரூவா கட்டிட்டு போப்பா... ன்னு அடம்புடிக்கிறாங்க... இந்த production கம்பெனிங்க மாதிரி இவுகளுக்கும் மாச target லாம் இருக்கும் போல... மாசக்கடைசில மாட்டுறவனையெல்லாம் புடிச்சி பில்ல போட்டு விட்டுறாங்க.

இங்க நம்ம MEPZ சிக்னல்ட்டயும் ஒரு ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் இருக்காரு. அவரு கலெக்சன்ல எப்புடியோ ஆனா எலெக்சன் வந்தா கண்டிப்பா அவர ப்ரச்சாரத்துக்கு கூட்டிகிட்டு போகலாம் போல... மைக்க வச்சிகிட்டு பேசுறாருன்னா பேச்சு... அட்வைஸ் பண்றதுல அரசியல்வாதிங்கல்லாம் தோத்து போயிருவாங்க. குறிப்பா அவரு டார்கெட் பண்ணி அட்வைஸ் பண்றது ட்ராஃபிக்ல ஃபோன் பேசிட்டு போற பொண்ணுங்களுக்கு தான்.

சில பொண்ணுங்கள பத்தி சொல்லனும்னா வேலைமுடிச்சி கார்டு ஸ்வைப் பண்றப்போ "இப்பதான் கெளம்புறேன்"ன்னு  ஆரம்பிச்சா வீடு இருக்க தெருவுக்கு போன அப்புறம்தான் "சரி அப்பா நிக்கிறாரு நா அப்புறம் பேசுறேன்" ன்னு சொல்லிட்டு தான் ஃபோன் ஆஃப் ஆகும். இந்த இடைப்பட்ட கேப்புல ட்ராஃபிக், சிக்னல்ன்னு எல்லாம் வரும் போகும்...  ஆனா ஃபோனு ஆஃப் பண்ண பாடு இருக்காது. (அதுங்கள அவ்வளவு நேரம் மொக்கை போட்டு கெடுக்குறது என்னவோ பசங்கதான்) இந்த மாதிரி பொண்ணுங்க மேல அக்கரை காட்டுர ஒருத்தர்தான் நம்ம MEPZ traffic இன்ஸ்பெக்டர். காலையில ஒன்பதரை மணியிலிருந்து 11 மணி வரைக்கும், அதே மாதிரி சாயங்காலம் 6.30 மணியிலருந்து 8.30 மணி வரைக்கும் MEPZ la வேலைபாக்குறவங்கள ரோடு க்ராஸ் பண்ணி விடுறப்போ  மைக்க வச்சிகிட்டு இஷ்டத்துக்கு பூந்து விளாடுறாரு.

"இந்தாம்மா செகப்பு சுடிதாரு... சீக்கிரம் நடந்து வா... ஏம்மா கொடைபுடிச்சிட்டு போற பொண்ணு.. பக்கத்துல வர்வறு கண்ண குத்திரபோகுது பாரு.. மடக்கிட்டு போ... ஆமை மாதிரி நடக்காம வேகமா வாங்க... வாங்க,.......எல்லாரும் க்ராஸ் பண்றதா வேண்டாமா... இந்தாம்மா... ரோடு க்ராஸ் பண்ணும்போது ஃபோன் பேசாதான்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன்... (டெய்லி அந்த புள்ளைகிட்டயே  சொல்லுவாரு போல) நீங்க பாட்டுக்கு ஃபோன் பேசிட்டே ரோட்ட பாக்காம போயிட்டு இருக்கவேண்டியது...  அப்புறம் எவனாது வண்டில தட்டிட்டான்னா யாரு பதில் சொல்றது" இதெல்லாம் ரோடு க்ராஸ் பண்ணும் போது.

சிக்னல் கிரீனாயி வண்டிங்கல்லாம் போக ஆரம்பிச்சிருச்சின்னா "எல்லாரும் தலைக்கவசம் அணியுங்க... நம்ம உயிர் தான் முக்கியம்... தலைக்கவசம் உயிர்கவசம்...ன்னு படம் போடுதுக்கு முன்னாடி போடுர நியூஸ் ரீலு மாதிரி விளம்பரம் பண்ண ஆரம்பிச்சிடுறாரு. திடீர்னு ஹைபிட்சுல "டேய் 3741 குவாலிஸூ... நடுரோட்டுல வண்டிய  நிறுத்திட்டு என்னடா பண்ணுற... சிகன்ல மாறி ரெண்டு நிமிசம் ஆகுது... போ... எடு எடு.... "  இடையில ரெண்டு பேரு ரோட க்ராஸ் பண்ண முயற்சி பண்ணுவான்... "யப்பா... யப்பா இந்த
பாதசாரிகள்லாம் கொஞ்சம் அமைதியா இருங்க... உங்களுக்கு கிராஸ் பண்ண டைம் குடுப்பேன்.. அதுக்குள்ள என்ன அவசரம்... நீங்களும் வீட்டுக்கு போகனும்... இங்க வண்டில இருக்கவங்களும் வீட்டுக்கு போகனும்..." அதுக்குள்ள திரும்ப சிக்னல் ரெட்டுக்கு மாறிரும்.

"வா... வா... பாதசாரிகள்லாம் க்ராஸ் பண்ணூங்க..." கரெக்டா அவரு நேரத்துக்கு கண்டிப்பா எதாவது ஒரு புள்ள ஃபோன் பேசிக்ட்டே ரோட க்ராஸ் பண்ணும்,... இந்த பாருங்க இந்த ஃபோன் பேசுற புள்ளைங்கள புடிச்சி ஒருநாள் இங்கனக்குள்ள நிறுத்தி முட்டி போட வச்சா தான் பேசாம போவீங்கன்னு நெனக்கிறேன். உங்க குடும்பத்த நெனைச்சி பாருங்க,,, உங்களுக்கெல்லாம் நல்ல குடும்பத்துல கல்யாணம் பண்ணி குடுக்கனும்... இப்பல்லாம் பொண்ணுங்க எந்த கொறையும் இல்லைன்னாலே அவ்வளவு  வரதட்சனை கேக்குறாங்க,.... நீங்க இப்புடி ரோட்டுல ஃபோன் பேசி எதாவது விபத்து நடந்து கால் கையில அடிபட்டா அவ்வளவுதான்... உங்க வீட்டுல உங்கள 100 பவுன் போட்டு கட்டி குடுத்தாலும் எல்லாத்தயும் செலவு பண்ணிட்டு உங்களை புருசன் வீட்ட விட்டு தொரத்திருவான்... அதுனால கவனமா இருங்க... ரோடு க்ராஸ் பண்ணும் போது ஃபோன் பேசாதீங்க... " ன்னாரு... அன்னிக்குதான் அவருக்குள்ள ஒரு அம்மன்கோயில் பூசாரி ஒளிஞ்சிட்டு இருக்கத கண்டுபுடிச்சேன்.

சிலருக்கு மைக்குன்னா ரொம்ப உசுரு போல... எங்க ஊர்ல ஒருத்தரு இருக்காரு. கோயில்  திருவிழா வந்துட்டா போதும்... மைச் செட் பக்கத்துலயே குத்தவச்சி,... "காவடி எடுப்பவர்கள் உடனடியாக காவடிச்சீட்டை பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" "பால்குடம் எடுப்பவர்கள் உடனடியாக குளக்கரைக்கு செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" ன்னு கேப்பு விடாம பேசி காதுல ரத்தம் வர வச்சிருவாரு. அதே மாதிரி தான் நம்மாளும்.  ஆனா அவர் சொல்ற விதம் ஒரு மாதிரியா இருந்தாலும் சொல்ல வர்ற விஷயம் பாராட்டப்பட வேண்டிய ஒண்ணு. எத்தனை சிக்னல்ல இந்த மாதிரியெல்லம் பண்றாங்க? அவர் சொன்னத  கேட்டு திருந்துனாங்களோ இல்லையோ, அவர் கண்ணுல பட்டுருவோமோ மைக்குல நம்மள  கூப்டு அசிங்கப்படுத்திருவாரோங்குற பயத்துலயாது பெரும்பாலான பொண்ணுங்க இங்க ஃபோன்  பேசாம ரோடு க்ராஸ் பண்றாங்க.

அப்புறம் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒண்ணு சொன்னாரு பாருங்க... "திரும்ப திரும்ப சொன்னதுல இப்ப பொண்ணுங்கல்லாம் கொஞ்சம் பரவால்ல... எல்லாரும் ஒழுங்கா க்ராஸ் பண்றாங்க... இந்த பசங்களத்தான் இன்னும் சரிப்பட்டு வரமாட்டேங்குறாங்க... அவங்களத்தான்
கவனிக்கனும்"....

ஆத்தாடீ............ ம்ம்ம்ம் ஆரம்பிங்க....

மேலே போலீஸ் பேசுவதாக எழுதிய வசனங்கள் கொஞ்சம் ஓவராக இருக்க மாதிரியும் இவன் எதோ அவனுக்கு தோணுற டயலாக்க எழுதிட்டு இருக்கான்னும் நீங்க நெனைக்கலாம். நிச்சயமா இல்லை... எல்லாமே அவர் பேசுனதுதான்... அந்த 100 பவுன் மேட்டர் உட்பட... தாம்பரம் சேனடோரியம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து MEPZ க்கு செல்லும் பலருக்கு இந்த வசனங்கள் நிச்சயம் பரிட்சையப்பட்டிருக்கும்.  


Monday, April 1, 2013

கேடி பில்லா - அவ்ளோ பெரிய காமெடி இல்ல இது!!!


Share/Bookmark


பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், மது அருத்துதல் உயிரைக் குடிக்கும்... ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் புகையிலை பழக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.  "என் பேரு முகேஷ்.... எனக்கு ஒரு வருஷமா குட்கா சாப்டுற பழக்கம் இருக்கு... இப்போ எனக்கு வாயில ஆப்ரேசன் பண்ணப் போறாங்க... இதனால பேச்சு வராம கூட போகலாம்.... " (டாக்டர்)இதுல  சோகமான விஷயம் என்னன்னா எங்களால முகேஷோட உயிர காப்பாத்த முடியல.... " அட  ஒண்ணுமில்லீங்க... ஒவ்வொரு படத்துலயும் இந்த விளம்பரத்த பாத்து பாத்து ரிவியூ எழுதும் போதும் கூடவே அதுவும் ஒட்டிகிட்டு வந்துருச்சி... இதுல ஒரு சோகமான விஷயம் என்னன்னா முகேஷாவது எனக்கு பேச்சு வராமா கூட போகலாம்னு தான் சொன்னான்... ஆனா இந்தாளுக "ஆனா எங்களால முகேஷ காப்பத்த முடியலங்குறாய்ங்க...பேச்சுக்கு பதிலா ஒரே அடியா மூச்சையே  நிறுத்திபுட்டாய்ங்க...

தலைவர் படத்தோட டைட்டிலுங்களயெல்லாம் நாசப்படுத்தனும்னு ஒரு குரூப்பே திரிஞ்சிகிட்டு இருக்காய்ங்க போல.. கிட்டத்தட்ட அவரோட எல்லா பழைய பட டைட்டிலயும் வச்சி படம் எடுத்து நாறடிச்சிகிட்டு இருக்காங்க இதுவரைக்கும் பில்லா1, படிக்காதவன், கழுகு படங்களை தவற மற்ற ரஜினி பட டைட்டில்ல வந்த  அத்தனையுமே கப்பிங்க தான். அந்த வரிசையில அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா. சமீப காலமா நம்மூர்ல இந்த டபுள் ஹீரோ கதைகள் நல்லா போயிட்டு இருக்க, இன்னுமொரு இரண்டு ஹீரோ கதை. சிவகார்த்திகேயன், விமல்னு ரெண்டு ஃபேமஸான ஹீரோஸ், மூணு படம் ஹிட் குடுத்த பாண்டி ராஜ், செம ஃபார்ம்ல இருக்குற பரோட்டா சூரி... எல்லாத்துக்கும் மேல யுவன்... இதுக்கு மேல என்னடா வேணும்னு நம்பி படத்துக்கு போனா... வரும்போது கழுத்த கரகரன்னு அறுத்து  அனுப்பி விடுறாங்க.

தமிழ்சினிமா வரலாற்றில் 1150வது முறையாக, வேலையில்லாமல் ஊர் சுத்தி அப்பா அம்மாட்ட திட்டு வாங்கிட்டு இருக்க கேரக்டர் விமலுக்கும் சிவாவுக்கும். (இன்னும் எத்தனை படத்துலப்பா) இருவரும் இணை பிரியாத நண்பர்கள்... வழக்கம் போல அவிங்க கூட இருந்து ஓசி குடி  குடிச்சிட்டு இருக்க கேரக்டர்ல பரோட்டா சூரி... "இதுவா படத்தோட மொத சீனு?"ன்னு கேக்குற அளவு ஒரு மிக சாதாரணமான ஒரு ஓப்பனிங் சீனு.. New year அன்னிக்கு தன்னியடிச்சிட்டு இனிமே சத்தியமா தண்ணியே அடிக்கமாட்டேன்னு சத்தியம் பண்ற சீன்... ஒவ்வொரு வருசமும் தண்ணி அடிக்கிற அத்தனை பேரும் பண்ற காமெடி  தான் இது... இத திரும்ப எடுத்துவச்சிகிட்டு அதுக்கு நாங்க சிரிக்கனும்னு வேற எதிர்பாத்த எப்புடிங்க..

இது மட்டும் இல்லை படத்துல இவங்க காமெடின்னு பண்ற நிறைய விஷயம் நாம ஏற்கனவே பாத்து பழக்கப்பட்ட விஷயங்கள்... அதுவும் பல இடங்கள்ல நாம இ-மெயில்லயும் SMS layum படிச்சி சலிச்சிப்போன வசங்களும், காமெடிங்களும். நிறைய இடங்கள்ல "அவ்ளோ பெரிய காமெடி இல்ல இது" ன்னு நமக்கு சிரிப்பு வர மாட்டேங்குது. படத்தோட 1st half எதோ கலக்கப்போவது யாரு, லொல்லு சபா, அது இது எது ப்ரோக்ராம்கள கலந்து பாத்த ஒரு ஃபீலிங்க தருதே தவற படம் பாத்த மாதிரி இல்லை. எல்லாமே ஒரு கோர்வையா இல்லாம பிட்டு பிட்டு காமெடிங்களா வருது.

அதுவும் விமலும் சிவாவும் அவிங்க அவிங்க லவ் பண்ண கதைய ஃப்ளாஷ்பேக்கா சொல்றது அருவை. ரெண்டு பேருமே ஹீரோயின பாத்த உடனேயே பின்னாடி போயிடுறாய்ங்க... அதுங்களும் பல்ல பல்ல காட்டிகிட்டு திரியிதுங்க. ரெண்டு ஹீரோயினுமே "பசங்க:" சோபிகண்ணு கேரக்டரத்தான் ஞாபகப்படுத்துதுங்க... சிவகார்த்திகேயனோட ஆளு 'என்னடா ஓலைமட்டையில ஒண்ணுக்கடிச்சா மாதிரி பேசுற" ங்குது.. "நெஞ்ச நக்காதடா"ங்குது... விமலோட ஆளு என்னடான்னா "மூடிக்கிட்டு வந்து நில்லுடா"ன்ங்குது... என்னங்கடா இது... ஹீரோயினுங்களா இல்லை வேற எதுவுமா...  சிவகார்த்திகேயனோட சில டைமிங் டயலாக்ஸ் நல்லா இருந்தாலும் ஹீரோயிண்ட பேசுர சில டபுள் மீனிங் வசங்கள் தேவையில்லாதது.  ஆரம்பத்துலருந்து லவ் பண்ணிட்டு திரியிற விமல்ட எந்த வித எதிர்ப்பையும் சொல்லாத பிந்து மாதவி இண்டர்வலுக்கு முன்னால திடீர்னு தூக்கி போட்டு ஜாக்கி சான் மாதிரி பறந்து பறந்து அடிக்குது... அருவருப்புதான் வருது... இந்த பிந்து மாதவி கழுகுல செம அழகா இருந்துச்சி... இப்போ எதோ மூக்குல ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்துருக்கும் போல... கருமமா இருக்கு.

எதோ ஒரு படத்துல சின்ன பசங்கள வச்சி, கில்லுறது கொட்டுறதுன்னு படம் எடுத்து சக்ஸஸ் பண்ணாரு பாண்டிராஜ்.. அதுக்காக ஒவ்வொரு படத்துலயுமா சின்னப்புள்ள தனத்த காட்டுறது.  ஒரு சீன்ல சிவகார்த்திகேயன ஒரு பத்து ரவுடிங்க கடத்திட்டு  போவாய்ங்க.. எதோ அடி பின்னி எடுக்கபோறாய்ங்கன்னு பாத்தா முட்டி போட வச்சி தலையில கொட்டி அனுப்புறாய்ங்க... ஏன்யா இப்புடி மொக்கைய போட்டு சாவடிக்கிறீங்க. இதே மாதிரி தான் மெரினா வுலயும் ஒரு  பையன ரெண்டு போலீஸ் காராங்க தீவிரமா தேடிட்டு இருப்பாங்க. அவன எதோ பொளந்து எடுக்க போறாய்ங்கன்னு பாத்தா இன்னொரு சின்ன பையன கூப்டு தலையில கொட்டி அனுப்புவாய்ங்க. நம்ம போய் செவத்துல முட்டிக்க வேண்டியது தான்.

ஆனா படத்தோட முதல் ரெண்டு மணிநேர மொக்கைக்கும் ஆறுதலா இருக்கது கடைசி அரைமணி நேரம்தான். எலெக்ஷன் பூத்ல ஆரம்பிச்சி அத தொடர்ந்து நடக்குற ஒரு கால் மணி நேர காமெடி செம...  எலெக்ஷன் ரிசல்ட் வந்தப்புரம் பெரிய கலவரம் நடந்துகிட்டு இருக்கும்போது கூட்டத்துக்குள்ள ஒருத்தர் "அயயய்யோ ஆனந்தமே" ன்னு ஸ்லோமோஷன்ல பாடிகிட்டு வர்றது  சூப்பர். அதே போல அதுக்கப்புறம் வர்ற செண்டிமெண்ட் காட்சிகளும், Background சாங்கும் லைட்டா  தொண்டைய அடைக்க வச்சிருது. ஒரு பேட்டில டி.ராஜேந்தர் சொல்லிருந்தாரு.. (அவரு ஸ்டைல்லயே படிங்க) "சார்... ஒரு படத்தோட 1st half காமெடியா இருக்காலாம் சார்... second half காமெடியா இருக்கலாம் சார்... ஆனா க்ளைமாக்ஸ்ல மக்களை டச் பண்ணனும் சார்.. அவங்கள ஒரு நிமிஷமாவத்து அழ வக்கனும் சார்" ன்னு... அதெயே தான் நம்ம பாண்டிராஜ் ஃபாலோ பண்ணிருப்பாரு போல... 

படத்துல விமலோட அப்பாவ வர்ற டெல்லி கணேஷ்க்கும், சிவாவோட அப்பாவா வர்றவர்க்கும் characterization சூப்பர். ஒரே ஒரு நிமிட வசனம் பேசிருந்தாலும் சிவா அப்பாவா வர்றவரு
செமயா பேசிருக்காரு. டெல்லி கணேஷ பத்தி சொல்லவே வேணாம்.. தற்பெருமை பேசுறது,  ரவுசு காட்டுறது, சோகமா இருக்கது, பாசத்த காட்டுறதுன்னு பல வேரியஷன்ல பிண்ணிருக்காரு. முக்கியமா பரோட்டா சூரி கேரக்டர்.  படத்தோட முதுகெலும்பே இவருதான். பட்டைய கெளப்பிருக்காரு. நண்பர்களோட சேந்து நக்கலடிக்கும்போதும் சரி, அவரோட மனைவிட்டயும், மாமனார்ட்டயும் லந்த குடுக்கும் போதும் சரி... சூப்பர். 

சிவகார்த்திகேயன் ஆளு சூப்பரா இருக்காரு. பட்டை முருகனா வர்ற சிவா  நல்ல சிவகடாக்ஷமா படம் முழுக்க சிரிச்ச முகத்தோட வலம் வர்றாரு. பல இடங்கள்ல டைமிங் டயலாக்ஸ்ல பிண்ணிருக்காரு. ஆனா சின்னத்திரை கேமரா பழக்கப்பட்டதப் போல இன்னும் வெள்ளித்திரை கேமரா பழக்கப்படலயோ என்னவோ... தனியா அவர் வர்ற காட்சிகள்ல ஒண்ணும் பெருசா  தெரில... ஆனா விமலோட வர்ற காட்சிகள்ல இவர் நடிப்புல இன்னும் ஜூனியர்ங்கறது நல்லாவே தெரியுது.  குறிப்பா முதல் பாட்டுல விமல் ரொம்ப கேசுவலா ஆடிட்டு இருக்க இவரு ரொம்ப கஷ்டப்பட்டு மூவ்மெண்ட் காமிச்சிட்டு இருக்காரு. அதே போல அவரோட டயலாக் டெலிவரியும், ஸ்லாங்கும் கொஞ்சம் கூட மாறவே இல்லை..
முன்னாடி கலக்கப்போவது யாருல காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி பேசுவாரு... இப்ப பல காட்சிகள்ல இன்னும் அதே ஸ்லாங்லதான் பேசிட்டு  இருக்காரு.

சிலபேர கதைக்கு ஏத்தமாதிரி நடிக்க வச்சிறலாம். ஆனா சிலபேரு எப்புடி நடிப்பாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி நாமதான் கதை எழுதனும்... இந்த ரெண்டாவது ரகத்த சேந்தவரு தான் விமல்... நீங்க கிராமத்து நாயகன் கேரக்டர் குடுத்தாலும் அதே ஸ்லாங் அதே மாடுலேஷன் தான் ஃபாரின் பாய் கேரக்டர் குடுத்தாலும் அதே ஸ்லாங் அதே மாடுலேஷன் தான். ஆனா இந்த படத்து கேரக்டர் அவருக்கு ஏத்த மாதிரி இருக்கதால ஒண்ணும் பெருசா தெரியல. இவரோட காமெடிங்க சூப்பர்ன்னு சொல்லமுடியலன்னாலும் அருக்காத டைப்.



அப்றம் டைரக்டர் பாண்டிராஜ்.. இவரோட "பசங்க" படத்த விட வம்சமும், மெரினாவும் எனக்கு ரொம்ப புடிச்ச படங்க. ஆனா இந்த படம் என்னவோ அந்த அளவு புடிக்கல... படம் முழுக்க அத்தனை காட்சிலயும் பின்னால ட்ரெயின் வந்துட்டே இருக்கு. சிவா அப்பா  ஸ்டேஷன்ல வேலைபாக்குறாருங்கரத்துக்காக எல்லா சீன்லயும் ட்ரெயின் வர்ற மாதிரி காமிச்சிருக்காங்க. அதுக்கூட பரவால்ல... ஹீரோயின் வீட்டு மொட்ட மாடில நின்னு பேசும் போது கூட பின்னாடி ட்ரெயின் போயிட்டு இருக்கு. இத ஏன் சொல்றேன்னா அந்த ஹீரோயின் வீட்டு மொட்ட மாடில நின்னு பேசுற மாதிரியான காட்சிங்க தாம்பரத்துல எங்க வீட்டுக்கு அடுத்த வீட்டுலதான் எடுத்தாங்க. வீட்டுக்கு பின்னாலயே ரயில்வே ட்ராக் இருக்கதால அங்க எடுத்தாங்க. என்ன கொடுமைன்னா ஒவ்வொரு காட்சி எடுக்குறதுக்கும் பின்னால எக்ஸ்ப்ரஸ் ட்ரெயின் போற டைம்லயே எடுத்தாங்க. அதவிட சாயங்காலம் 7 மணிக்கு ஹீரோயின terrace wall la உக்கார வச்சிட்டு எக்ஸ்ப்ரஸ் ட்ரெயினுக்காக வெய்ட் பண்ணிட்டே இருக்காங்க... கருமம் அந்த சமயம்னு ஒரே லோக்கல் எலெக்ட்ரிக் ட்ரெய்னா வருது எக்ஸ்ப்ரஸ் எதயும் காணும்.. அப்புறம் கடைசில முக்கா மணிநேரம் கழிச்சி ஒரு எக்ஸ்ப்ரஸ் வந்தப்புறம் அந்த சீன எடுத்தாங்க. 

ஏம்பா ஹீரோயின் பேசும்போது ஏன் பின்னால ட்ரெயின் வரலன்னு நாங்க யாராது கேட்டமா?  ஒரு சீனுக்கே இவ்ளோ நேரம் வீணடிச்சிருந்தீங்கன்னா படத்துல வர்ற மத்த ட்ரெயின் காட்சிகளுக்கெல்லாம் எவ்வளவு நேரம் வீணடிச்சிருப்பீங்க... Perfection காட்டுறதா நீங்களா ஒண்ணா நெனச்சிட்டு இப்புடி எதாவது கப்பித்தனம் பண்ண வேண்டியது.




அப்புறம் படத்துல மிகப்பெரிய மொன்னை யாருன்னா அது நம்ம யுவன் சார் தான். சிம்பு பாடுற டைட்டில் சாங்க தவற வேற எந்த சாங்கும் தேறல... "கொஞ்சும் கிளி" பாட்டும் "சுட சுட மேகம்" பாட்டும் பரவால்லாம இருக்கு ஆனா அதுக்கெல்லாம் choreography  செம கப்பி. BGM லாம் யுவன் படம் மாதிரியே இல்லை. வழக்கமா யுவன் படங்கள்ல ஒவ்வொரு படத்துலயும் BGM ku தனியா ஒரு தீம் வச்சிருப்பாரு.. இதுல BGM இருக்காங்குறதே டவுட்டா இருக்கு.

இரண்டாவது பாதில வர்றது போல முதல் பாதியிலயும் காட்சிகளோட ஒன்றி continues comedy ya  இருந்துருந்தா படம் இன்னும் சூப்பரா வந்துருக்கும். ஆனாலும் நிறைய பேருக்கு படம் மிகவும் பிடிச்சிருக்கு... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சதா சொல்றாங்க... நமக்கு அந்த மாதிரி சம்பவங்கள் எதுவும் நடக்கல... மத்தவங்க மாதிரி இல்லாம வக்காளி நாம தான் ஓவர் expectation noda போய் ஏமாந்துடுறோமோ?   

படம் பாத்தப்புறம் ஒண்ணு மட்டும் கரெக்டா தெரிஞ்சுது... காமெடி படங்களல் தல சுந்தர்.சிய அடிச்சிக்க ஆளே இல்ல
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...