Thursday, April 4, 2013

MEPZ சிக்னல் ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் - WHAT A MAN!!!


Share/Bookmark
மாசக்கடைசி... பர்ஸ்ல ஒக்கே ஒக்க நூறு ரூவா நோட்டு தான் இருக்கும்.. சரி சமாளிப்போம் அப்டின்னு நெனைச்சிகிட்டு வண்டிய எடுத்துகிட்டு எங்கயாது போணா அந்த நூறுரூவாய ஆட்டைய போட சனியன் ட்ராஃபிக் போலீஸ் ரூபத்துல வந்துரும்.அவுங்க கைய போட்டு வண்டிய  நிறுத்திபுட்டாங்கன்னா வசூல் பண்றதுல வசூல்ராஜாவ விட மோசமானவிங்க. அவிங்க நல்ல நேரமும் நம்ம கெட்ட நேரமும் சேந்து எந்த நம்மகிட்ட இல்லையோ கரெக்கிட்ட அத கேப்பாய்ங்க..  "எனக்கு ஐ.ஜி ய நல்லா தெரியும்" ன்னு சொல்லிட்டு விவேக் ஸ்டைல்ல தப்பிக்கிற காலமெல்லாம் மலையேறிப் போச்சி கொஞ்ச நேரம் கரகாட்டக்காரன் செந்தில் மாதிரி மேலையும் கீழயும் பாத்து பம்பிகிட்டு  நின்னோம்னாலாது மனசு கரைவாங்களான்னா நம்ம நடிப்பு தான் வீணாப்போகுமே தவற அவிங்க ரியாக்சன்ல எந்த மாற்றமும் இருக்காது.... கடைசில வேற வழி இல்லாம நூறு ரூவாய குடுத்தாதான் அந்த எடத்த உட்டு நகரலாம்.

காசு குடுக்குறது கூட பரவால்ல.. அந்த நூறு ரூவாய வாங்குனதுக்கப்புறம் ஒரு ரியாக்சன் விடுவாங்க பாருங்க... "இனிமே இந்த மாதிரி டாக்குமெண்ட் இல்லாம வரக்கூடாது...என்ன புரியிதா." சரி சார்னு சொல்லிட்டு வண்டிய எடுக்குற சமயத்துல தம்பி  ஆமா எங்க போற?"ம்பாங்க. நம்ம "பீச்சுக்கு சார்" ன்னோம்னா "ட்ரிப்ளிகேன் வழியா போகாதாப்பா... செம ட்ராஃபிக்கு... அடையார் ஃபிரிட்ஜுல லெஃப்ட் எடுத்து மூணாவது ரைட்டு எடுத்துக்க... லைனு கிளியரா இருக்கும்... " ன்னு ஒரு வழி சொல்லுவாங்க பாருங்க. இய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.... ஒண்ணுமில்ல வாங்குன நூறு ரூவாய்க்கு அவரு நமக்கு நல்லது செய்யிறாராம்.  முன்னாடியாச்சும் மாசக்கடைசில செலவுக்கு காசுல்லன்னா வண்டிய நிறுத்தி வசூல் பண்ணவங்க, இப்போ இந்த HAND மெஷின் வந்தப்புறம் இவுங்க தொல்லை இன்னும் அதிகமாயிருச்சி. அன்னிக்கு ஒரு நாள் நைட் ஷோ பாத்துட்டு வந்துட்டு இருக்கேன் வழக்கம்போல ஓரம்கட்டிட்டாங்க. நல்ல வேளை நம்மகிட்ட எல்லா டாக்குமெண்டும் இருக்குன்னு எடுத்து காமிச்சப்புறமும், சரி ஒரு நூறு ரூவா கட்டிட்டு போப்பா... ன்னு அடம்புடிக்கிறாங்க... இந்த production கம்பெனிங்க மாதிரி இவுகளுக்கும் மாச target லாம் இருக்கும் போல... மாசக்கடைசில மாட்டுறவனையெல்லாம் புடிச்சி பில்ல போட்டு விட்டுறாங்க.

இங்க நம்ம MEPZ சிக்னல்ட்டயும் ஒரு ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் இருக்காரு. அவரு கலெக்சன்ல எப்புடியோ ஆனா எலெக்சன் வந்தா கண்டிப்பா அவர ப்ரச்சாரத்துக்கு கூட்டிகிட்டு போகலாம் போல... மைக்க வச்சிகிட்டு பேசுறாருன்னா பேச்சு... அட்வைஸ் பண்றதுல அரசியல்வாதிங்கல்லாம் தோத்து போயிருவாங்க. குறிப்பா அவரு டார்கெட் பண்ணி அட்வைஸ் பண்றது ட்ராஃபிக்ல ஃபோன் பேசிட்டு போற பொண்ணுங்களுக்கு தான்.

சில பொண்ணுங்கள பத்தி சொல்லனும்னா வேலைமுடிச்சி கார்டு ஸ்வைப் பண்றப்போ "இப்பதான் கெளம்புறேன்"ன்னு  ஆரம்பிச்சா வீடு இருக்க தெருவுக்கு போன அப்புறம்தான் "சரி அப்பா நிக்கிறாரு நா அப்புறம் பேசுறேன்" ன்னு சொல்லிட்டு தான் ஃபோன் ஆஃப் ஆகும். இந்த இடைப்பட்ட கேப்புல ட்ராஃபிக், சிக்னல்ன்னு எல்லாம் வரும் போகும்...  ஆனா ஃபோனு ஆஃப் பண்ண பாடு இருக்காது. (அதுங்கள அவ்வளவு நேரம் மொக்கை போட்டு கெடுக்குறது என்னவோ பசங்கதான்) இந்த மாதிரி பொண்ணுங்க மேல அக்கரை காட்டுர ஒருத்தர்தான் நம்ம MEPZ traffic இன்ஸ்பெக்டர். காலையில ஒன்பதரை மணியிலிருந்து 11 மணி வரைக்கும், அதே மாதிரி சாயங்காலம் 6.30 மணியிலருந்து 8.30 மணி வரைக்கும் MEPZ la வேலைபாக்குறவங்கள ரோடு க்ராஸ் பண்ணி விடுறப்போ  மைக்க வச்சிகிட்டு இஷ்டத்துக்கு பூந்து விளாடுறாரு.

"இந்தாம்மா செகப்பு சுடிதாரு... சீக்கிரம் நடந்து வா... ஏம்மா கொடைபுடிச்சிட்டு போற பொண்ணு.. பக்கத்துல வர்வறு கண்ண குத்திரபோகுது பாரு.. மடக்கிட்டு போ... ஆமை மாதிரி நடக்காம வேகமா வாங்க... வாங்க,.......எல்லாரும் க்ராஸ் பண்றதா வேண்டாமா... இந்தாம்மா... ரோடு க்ராஸ் பண்ணும்போது ஃபோன் பேசாதான்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன்... (டெய்லி அந்த புள்ளைகிட்டயே  சொல்லுவாரு போல) நீங்க பாட்டுக்கு ஃபோன் பேசிட்டே ரோட்ட பாக்காம போயிட்டு இருக்கவேண்டியது...  அப்புறம் எவனாது வண்டில தட்டிட்டான்னா யாரு பதில் சொல்றது" இதெல்லாம் ரோடு க்ராஸ் பண்ணும் போது.

சிக்னல் கிரீனாயி வண்டிங்கல்லாம் போக ஆரம்பிச்சிருச்சின்னா "எல்லாரும் தலைக்கவசம் அணியுங்க... நம்ம உயிர் தான் முக்கியம்... தலைக்கவசம் உயிர்கவசம்...ன்னு படம் போடுதுக்கு முன்னாடி போடுர நியூஸ் ரீலு மாதிரி விளம்பரம் பண்ண ஆரம்பிச்சிடுறாரு. திடீர்னு ஹைபிட்சுல "டேய் 3741 குவாலிஸூ... நடுரோட்டுல வண்டிய  நிறுத்திட்டு என்னடா பண்ணுற... சிகன்ல மாறி ரெண்டு நிமிசம் ஆகுது... போ... எடு எடு.... "  இடையில ரெண்டு பேரு ரோட க்ராஸ் பண்ண முயற்சி பண்ணுவான்... "யப்பா... யப்பா இந்த
பாதசாரிகள்லாம் கொஞ்சம் அமைதியா இருங்க... உங்களுக்கு கிராஸ் பண்ண டைம் குடுப்பேன்.. அதுக்குள்ள என்ன அவசரம்... நீங்களும் வீட்டுக்கு போகனும்... இங்க வண்டில இருக்கவங்களும் வீட்டுக்கு போகனும்..." அதுக்குள்ள திரும்ப சிக்னல் ரெட்டுக்கு மாறிரும்.

"வா... வா... பாதசாரிகள்லாம் க்ராஸ் பண்ணூங்க..." கரெக்டா அவரு நேரத்துக்கு கண்டிப்பா எதாவது ஒரு புள்ள ஃபோன் பேசிக்ட்டே ரோட க்ராஸ் பண்ணும்,... இந்த பாருங்க இந்த ஃபோன் பேசுற புள்ளைங்கள புடிச்சி ஒருநாள் இங்கனக்குள்ள நிறுத்தி முட்டி போட வச்சா தான் பேசாம போவீங்கன்னு நெனக்கிறேன். உங்க குடும்பத்த நெனைச்சி பாருங்க,,, உங்களுக்கெல்லாம் நல்ல குடும்பத்துல கல்யாணம் பண்ணி குடுக்கனும்... இப்பல்லாம் பொண்ணுங்க எந்த கொறையும் இல்லைன்னாலே அவ்வளவு  வரதட்சனை கேக்குறாங்க,.... நீங்க இப்புடி ரோட்டுல ஃபோன் பேசி எதாவது விபத்து நடந்து கால் கையில அடிபட்டா அவ்வளவுதான்... உங்க வீட்டுல உங்கள 100 பவுன் போட்டு கட்டி குடுத்தாலும் எல்லாத்தயும் செலவு பண்ணிட்டு உங்களை புருசன் வீட்ட விட்டு தொரத்திருவான்... அதுனால கவனமா இருங்க... ரோடு க்ராஸ் பண்ணும் போது ஃபோன் பேசாதீங்க... " ன்னாரு... அன்னிக்குதான் அவருக்குள்ள ஒரு அம்மன்கோயில் பூசாரி ஒளிஞ்சிட்டு இருக்கத கண்டுபுடிச்சேன்.

சிலருக்கு மைக்குன்னா ரொம்ப உசுரு போல... எங்க ஊர்ல ஒருத்தரு இருக்காரு. கோயில்  திருவிழா வந்துட்டா போதும்... மைச் செட் பக்கத்துலயே குத்தவச்சி,... "காவடி எடுப்பவர்கள் உடனடியாக காவடிச்சீட்டை பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" "பால்குடம் எடுப்பவர்கள் உடனடியாக குளக்கரைக்கு செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" ன்னு கேப்பு விடாம பேசி காதுல ரத்தம் வர வச்சிருவாரு. அதே மாதிரி தான் நம்மாளும்.  ஆனா அவர் சொல்ற விதம் ஒரு மாதிரியா இருந்தாலும் சொல்ல வர்ற விஷயம் பாராட்டப்பட வேண்டிய ஒண்ணு. எத்தனை சிக்னல்ல இந்த மாதிரியெல்லம் பண்றாங்க? அவர் சொன்னத  கேட்டு திருந்துனாங்களோ இல்லையோ, அவர் கண்ணுல பட்டுருவோமோ மைக்குல நம்மள  கூப்டு அசிங்கப்படுத்திருவாரோங்குற பயத்துலயாது பெரும்பாலான பொண்ணுங்க இங்க ஃபோன்  பேசாம ரோடு க்ராஸ் பண்றாங்க.

அப்புறம் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒண்ணு சொன்னாரு பாருங்க... "திரும்ப திரும்ப சொன்னதுல இப்ப பொண்ணுங்கல்லாம் கொஞ்சம் பரவால்ல... எல்லாரும் ஒழுங்கா க்ராஸ் பண்றாங்க... இந்த பசங்களத்தான் இன்னும் சரிப்பட்டு வரமாட்டேங்குறாங்க... அவங்களத்தான்
கவனிக்கனும்"....

ஆத்தாடீ............ ம்ம்ம்ம் ஆரம்பிங்க....

மேலே போலீஸ் பேசுவதாக எழுதிய வசனங்கள் கொஞ்சம் ஓவராக இருக்க மாதிரியும் இவன் எதோ அவனுக்கு தோணுற டயலாக்க எழுதிட்டு இருக்கான்னும் நீங்க நெனைக்கலாம். நிச்சயமா இல்லை... எல்லாமே அவர் பேசுனதுதான்... அந்த 100 பவுன் மேட்டர் உட்பட... தாம்பரம் சேனடோரியம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து MEPZ க்கு செல்லும் பலருக்கு இந்த வசனங்கள் நிச்சயம் பரிட்சையப்பட்டிருக்கும்.  


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

சுபத்ரா said...

Ha ha ha :))

Unknown said...

முத்து கலக்கிட்டீங்க

Anonymous said...

nanum kettu eruken....

குட்டிபிசாசு said...

முத்து,

…எங்க ஊருல மாடுவிடும் திருவிழா நடந்தால் இப்படி ஒருத்தர் மைக்கை முழுங்கற மாதிரி கத்துவார்.

Unknown said...

பாஸ் சூப்பர் பாஸ் நாங்கலாம் உங்கள்ட கத்துக்க நெறைய இருக்கு சிரிப்பா அடக்க முடில்ல படிச்சுட்டு

எல் கே said...

I dont think there is anything to be sarcastic about that Inspector. He is doing his duty., recently i was in kolkata, you need to pay fine if you talk in mobile while crossing the scan

சங்கர் said...

உங்க பதிவுல எனக்கு உடன்பாடு இல்லை, நான் தினமும் அந்த வழியா இரண்டு தடவை க்ராஸ் பண்றேன், அவரு பண்ணுறது ரொம்ப நல்ல விஷயம், நம்ம ஊர்ல அன்பா சொல்லி பார்த்தா யாரும் கேக்குறது இல்லை, ரெண்டு வார்த்தை சூடா சொன்னாத்தான் கொஞ்சமாவது உரைக்கும், இது இன்ஸ்பெக்டர் ஒருத்தர் மட்டும் பண்ணுற வேலை இல்லை, ஒரு டீமே இருக்கு, பாராட்டாலும் பரவால்லை கிண்டல் பண்ணாம இருந்தா போதும்

சங்கர் said...

உங்க பதிவுல எனக்கு உடன்பாடு இல்லை, நான் தினமும் அந்த வழியா இரண்டு தடவை க்ராஸ் பண்றேன், அவரு பண்ணுறது ரொம்ப நல்ல விஷயம், நம்ம ஊர்ல அன்பா சொல்லி பார்த்தா யாரும் கேக்குறது இல்லை, ரெண்டு வார்த்தை சூடா சொன்னாத்தான் கொஞ்சமாவது உரைக்கும், இது இன்ஸ்பெக்டர் ஒருத்தர் மட்டும் பண்ணுற வேலை இல்லை, ஒரு டீமே இருக்கு, பாராட்டாலும் பரவால்லை கிண்டல் பண்ணாம இருந்தா போதும்

Anonymous said...

Now, that signal has been closed. An escalator in front of MEPZ gate has been made operational.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...