பழக்கம் உடலுக்கு
தீங்கு விளைவிக்கும், மது
அருத்துதல் உயிரைக் குடிக்கும்... ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் புகையிலை பழக்கத்தால்
பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
"என் பேரு முகேஷ்.... எனக்கு ஒரு வருஷமா குட்கா
சாப்டுற பழக்கம் இருக்கு... இப்போ எனக்கு வாயில ஆப்ரேசன் பண்ணப் போறாங்க... இதனால
பேச்சு வராம கூட போகலாம்.... " (டாக்டர்)இதுல சோகமான விஷயம் என்னன்னா எங்களால முகேஷோட உயிர காப்பாத்த முடியல....
" அட ஒண்ணுமில்லீங்க... ஒவ்வொரு படத்துலயும்
இந்த விளம்பரத்த பாத்து பாத்து ரிவியூ எழுதும் போதும் கூடவே அதுவும் ஒட்டிகிட்டு
வந்துருச்சி... இதுல ஒரு சோகமான
விஷயம் என்னன்னா முகேஷாவது எனக்கு பேச்சு வராமா கூட போகலாம்னு தான் சொன்னான்...
ஆனா இந்தாளுக "ஆனா எங்களால முகேஷ காப்பத்த முடியலங்குறாய்ங்க...பேச்சுக்கு
பதிலா ஒரே அடியா மூச்சையே நிறுத்திபுட்டாய்ங்க...
தலைவர் படத்தோட
டைட்டிலுங்களயெல்லாம் நாசப்படுத்தனும்னு ஒரு குரூப்பே திரிஞ்சிகிட்டு இருக்காய்ங்க
போல.. கிட்டத்தட்ட அவரோட எல்லா பழைய பட டைட்டிலயும் வச்சி படம் எடுத்து
நாறடிச்சிகிட்டு இருக்காங்க இதுவரைக்கும் பில்லா1, படிக்காதவன், கழுகு படங்களை தவற மற்ற ரஜினி பட டைட்டில்ல வந்த அத்தனையுமே கப்பிங்க தான். அந்த வரிசையில
அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா. சமீப காலமா நம்மூர்ல இந்த டபுள் ஹீரோ கதைகள்
நல்லா போயிட்டு இருக்க, இன்னுமொரு
இரண்டு ஹீரோ கதை. சிவகார்த்திகேயன், விமல்னு ரெண்டு ஃபேமஸான ஹீரோஸ், மூணு படம் ஹிட் குடுத்த பாண்டி ராஜ், செம ஃபார்ம்ல இருக்குற பரோட்டா சூரி... எல்லாத்துக்கும்
மேல யுவன்... இதுக்கு மேல என்னடா வேணும்னு நம்பி படத்துக்கு போனா... வரும்போது
கழுத்த கரகரன்னு அறுத்து அனுப்பி
விடுறாங்க.
தமிழ்சினிமா
வரலாற்றில் 1150வது முறையாக, வேலையில்லாமல் ஊர் சுத்தி அப்பா அம்மாட்ட திட்டு வாங்கிட்டு இருக்க
கேரக்டர் விமலுக்கும் சிவாவுக்கும். (இன்னும் எத்தனை படத்துலப்பா) இருவரும் இணை
பிரியாத நண்பர்கள்... வழக்கம் போல அவிங்க கூட இருந்து ஓசி குடி குடிச்சிட்டு இருக்க கேரக்டர்ல பரோட்டா சூரி... "இதுவா
படத்தோட மொத சீனு?"ன்னு கேக்குற அளவு ஒரு மிக சாதாரணமான ஒரு
ஓப்பனிங் சீனு.. New year அன்னிக்கு தன்னியடிச்சிட்டு
இனிமே சத்தியமா தண்ணியே அடிக்கமாட்டேன்னு சத்தியம் பண்ற சீன்... ஒவ்வொரு வருசமும்
தண்ணி அடிக்கிற அத்தனை பேரும் பண்ற காமெடி தான் இது... இத திரும்ப
எடுத்துவச்சிகிட்டு அதுக்கு நாங்க சிரிக்கனும்னு வேற எதிர்பாத்த எப்புடிங்க..
இது மட்டும் இல்லை
படத்துல இவங்க காமெடின்னு பண்ற நிறைய விஷயம் நாம ஏற்கனவே பாத்து பழக்கப்பட்ட
விஷயங்கள்... அதுவும் பல இடங்கள்ல நாம இ-மெயில்லயும் SMS layum படிச்சி சலிச்சிப்போன வசங்களும், காமெடிங்களும். நிறைய இடங்கள்ல "அவ்ளோ
பெரிய காமெடி இல்ல இது" ன்னு நமக்கு சிரிப்பு வர மாட்டேங்குது. படத்தோட 1st half எதோ கலக்கப்போவது யாரு, லொல்லு சபா, அது இது எது ப்ரோக்ராம்கள கலந்து பாத்த ஒரு ஃபீலிங்க தருதே தவற
படம் பாத்த மாதிரி இல்லை. எல்லாமே ஒரு கோர்வையா இல்லாம பிட்டு பிட்டு காமெடிங்களா
வருது.
அதுவும் விமலும்
சிவாவும் அவிங்க அவிங்க லவ் பண்ண கதைய ஃப்ளாஷ்பேக்கா சொல்றது அருவை. ரெண்டு பேருமே
ஹீரோயின பாத்த உடனேயே பின்னாடி போயிடுறாய்ங்க... அதுங்களும் பல்ல பல்ல
காட்டிகிட்டு திரியிதுங்க. ரெண்டு ஹீரோயினுமே "பசங்க:"
சோபிகண்ணு கேரக்டரத்தான் ஞாபகப்படுத்துதுங்க... சிவகார்த்திகேயனோட ஆளு 'என்னடா ஓலைமட்டையில ஒண்ணுக்கடிச்சா மாதிரி பேசுற" ங்குது..
"நெஞ்ச நக்காதடா"ங்குது... விமலோட ஆளு என்னடான்னா "மூடிக்கிட்டு
வந்து நில்லுடா"ன்ங்குது... என்னங்கடா இது... ஹீரோயினுங்களா இல்லை வேற
எதுவுமா... சிவகார்த்திகேயனோட சில டைமிங் டயலாக்ஸ் நல்லா
இருந்தாலும் ஹீரோயிண்ட பேசுர சில டபுள் மீனிங் வசங்கள் தேவையில்லாதது. ஆரம்பத்துலருந்து லவ் பண்ணிட்டு திரியிற
விமல்ட எந்த வித எதிர்ப்பையும் சொல்லாத பிந்து மாதவி இண்டர்வலுக்கு முன்னால
திடீர்னு தூக்கி போட்டு ஜாக்கி சான் மாதிரி பறந்து பறந்து அடிக்குது...
அருவருப்புதான் வருது... இந்த பிந்து மாதவி கழுகுல செம அழகா இருந்துச்சி... இப்போ
எதோ மூக்குல ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்துருக்கும் போல... கருமமா இருக்கு.
எதோ
ஒரு படத்துல சின்ன பசங்கள வச்சி, கில்லுறது கொட்டுறதுன்னு படம்
எடுத்து சக்ஸஸ் பண்ணாரு பாண்டிராஜ்.. அதுக்காக ஒவ்வொரு படத்துலயுமா சின்னப்புள்ள
தனத்த காட்டுறது. ஒரு சீன்ல சிவகார்த்திகேயன ஒரு பத்து
ரவுடிங்க கடத்திட்டு போவாய்ங்க.. எதோ அடி பின்னி
எடுக்கபோறாய்ங்கன்னு பாத்தா முட்டி போட வச்சி தலையில கொட்டி அனுப்புறாய்ங்க...
ஏன்யா இப்புடி மொக்கைய போட்டு சாவடிக்கிறீங்க. இதே மாதிரி தான் மெரினா வுலயும் ஒரு பையன ரெண்டு போலீஸ் காராங்க தீவிரமா தேடிட்டு
இருப்பாங்க. அவன எதோ பொளந்து எடுக்க போறாய்ங்கன்னு பாத்தா இன்னொரு சின்ன பையன
கூப்டு தலையில கொட்டி அனுப்புவாய்ங்க. நம்ம போய் செவத்துல முட்டிக்க வேண்டியது
தான்.
ஆனா படத்தோட முதல்
ரெண்டு மணிநேர மொக்கைக்கும் ஆறுதலா இருக்கது கடைசி அரைமணி நேரம்தான். எலெக்ஷன்
பூத்ல ஆரம்பிச்சி அத தொடர்ந்து நடக்குற ஒரு கால் மணி நேர காமெடி செம... எலெக்ஷன் ரிசல்ட் வந்தப்புரம்
பெரிய கலவரம் நடந்துகிட்டு இருக்கும்போது கூட்டத்துக்குள்ள ஒருத்தர் "அயயய்யோ
ஆனந்தமே" ன்னு ஸ்லோமோஷன்ல பாடிகிட்டு வர்றது சூப்பர். அதே போல அதுக்கப்புறம் வர்ற செண்டிமெண்ட் காட்சிகளும்,
Background சாங்கும் லைட்டா தொண்டைய அடைக்க வச்சிருது. ஒரு பேட்டில
டி.ராஜேந்தர் சொல்லிருந்தாரு.. (அவரு ஸ்டைல்லயே படிங்க) "சார்...
ஒரு படத்தோட 1st half காமெடியா இருக்காலாம் சார்... second half காமெடியா இருக்கலாம் சார்... ஆனா க்ளைமாக்ஸ்ல மக்களை டச் பண்ணனும்
சார்.. அவங்கள ஒரு நிமிஷமாவத்து அழ வக்கனும் சார்" ன்னு... அதெயே தான் நம்ம பாண்டிராஜ் ஃபாலோ
பண்ணிருப்பாரு போல...
படத்துல விமலோட
அப்பாவ வர்ற டெல்லி கணேஷ்க்கும், சிவாவோட
அப்பாவா வர்றவர்க்கும் characterization சூப்பர். ஒரே ஒரு நிமிட வசனம் பேசிருந்தாலும் சிவா அப்பாவா வர்றவரு
செமயா பேசிருக்காரு.
டெல்லி கணேஷ பத்தி சொல்லவே வேணாம்.. தற்பெருமை பேசுறது, ரவுசு காட்டுறது, சோகமா இருக்கது, பாசத்த காட்டுறதுன்னு பல வேரியஷன்ல பிண்ணிருக்காரு.
முக்கியமா பரோட்டா சூரி கேரக்டர். படத்தோட முதுகெலும்பே இவருதான். பட்டைய கெளப்பிருக்காரு.
நண்பர்களோட சேந்து நக்கலடிக்கும்போதும் சரி, அவரோட மனைவிட்டயும், மாமனார்ட்டயும் லந்த குடுக்கும் போதும் சரி... சூப்பர்.
சிவகார்த்திகேயன் ஆளு
சூப்பரா இருக்காரு. பட்டை முருகனா வர்ற சிவா நல்ல சிவகடாக்ஷமா படம் முழுக்க சிரிச்ச முகத்தோட வலம்
வர்றாரு. பல இடங்கள்ல டைமிங் டயலாக்ஸ்ல பிண்ணிருக்காரு. ஆனா சின்னத்திரை கேமரா
பழக்கப்பட்டதப் போல இன்னும் வெள்ளித்திரை கேமரா பழக்கப்படலயோ என்னவோ... தனியா அவர்
வர்ற காட்சிகள்ல ஒண்ணும் பெருசா தெரில... ஆனா விமலோட வர்ற காட்சிகள்ல இவர் நடிப்புல இன்னும் ஜூனியர்ங்கறது
நல்லாவே தெரியுது. குறிப்பா
முதல் பாட்டுல விமல் ரொம்ப கேசுவலா ஆடிட்டு இருக்க இவரு ரொம்ப கஷ்டப்பட்டு
மூவ்மெண்ட் காமிச்சிட்டு இருக்காரு. அதே போல அவரோட டயலாக் டெலிவரியும், ஸ்லாங்கும் கொஞ்சம் கூட மாறவே இல்லை..
முன்னாடி
கலக்கப்போவது யாருல காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி பேசுவாரு... இப்ப பல காட்சிகள்ல
இன்னும் அதே ஸ்லாங்லதான் பேசிட்டு இருக்காரு.
சிலபேர
கதைக்கு ஏத்தமாதிரி நடிக்க வச்சிறலாம். ஆனா சிலபேரு எப்புடி நடிப்பாங்களோ அதுக்கு
ஏத்த மாதிரி நாமதான் கதை எழுதனும்... இந்த ரெண்டாவது ரகத்த சேந்தவரு தான் விமல்...
நீங்க கிராமத்து நாயகன் கேரக்டர் குடுத்தாலும் அதே ஸ்லாங் அதே மாடுலேஷன் தான்
ஃபாரின் பாய் கேரக்டர் குடுத்தாலும் அதே ஸ்லாங் அதே மாடுலேஷன் தான். ஆனா இந்த
படத்து கேரக்டர் அவருக்கு ஏத்த மாதிரி இருக்கதால ஒண்ணும் பெருசா தெரியல. இவரோட
காமெடிங்க சூப்பர்ன்னு சொல்லமுடியலன்னாலும் அருக்காத டைப்.
அப்றம் டைரக்டர்
பாண்டிராஜ்.. இவரோட "பசங்க" படத்த விட வம்சமும், மெரினாவும் எனக்கு ரொம்ப புடிச்ச படங்க. ஆனா இந்த படம்
என்னவோ அந்த அளவு புடிக்கல... படம் முழுக்க அத்தனை காட்சிலயும் பின்னால ட்ரெயின்
வந்துட்டே இருக்கு. சிவா அப்பா ஸ்டேஷன்ல வேலைபாக்குறாருங்கரத்துக்காக எல்லா சீன்லயும் ட்ரெயின் வர்ற
மாதிரி காமிச்சிருக்காங்க. அதுக்கூட பரவால்ல... ஹீரோயின் வீட்டு மொட்ட மாடில
நின்னு பேசும் போது கூட பின்னாடி ட்ரெயின் போயிட்டு இருக்கு. இத ஏன் சொல்றேன்னா
அந்த ஹீரோயின் வீட்டு மொட்ட மாடில நின்னு பேசுற மாதிரியான காட்சிங்க தாம்பரத்துல
எங்க வீட்டுக்கு அடுத்த வீட்டுலதான் எடுத்தாங்க. வீட்டுக்கு பின்னாலயே ரயில்வே
ட்ராக் இருக்கதால அங்க எடுத்தாங்க. என்ன கொடுமைன்னா ஒவ்வொரு காட்சி
எடுக்குறதுக்கும் பின்னால எக்ஸ்ப்ரஸ் ட்ரெயின் போற டைம்லயே எடுத்தாங்க. அதவிட
சாயங்காலம் 7 மணிக்கு ஹீரோயின terrace
wall la உக்கார வச்சிட்டு எக்ஸ்ப்ரஸ்
ட்ரெயினுக்காக வெய்ட் பண்ணிட்டே இருக்காங்க... கருமம் அந்த சமயம்னு ஒரே லோக்கல்
எலெக்ட்ரிக் ட்ரெய்னா வருது எக்ஸ்ப்ரஸ் எதயும் காணும்.. அப்புறம் கடைசில முக்கா
மணிநேரம் கழிச்சி ஒரு எக்ஸ்ப்ரஸ் வந்தப்புறம் அந்த சீன எடுத்தாங்க.
ஏம்பா
ஹீரோயின் பேசும்போது ஏன் பின்னால ட்ரெயின் வரலன்னு நாங்க யாராது கேட்டமா? ஒரு சீனுக்கே இவ்ளோ நேரம் வீணடிச்சிருந்தீங்கன்னா படத்துல வர்ற
மத்த ட்ரெயின் காட்சிகளுக்கெல்லாம் எவ்வளவு நேரம் வீணடிச்சிருப்பீங்க... Perfection காட்டுறதா நீங்களா ஒண்ணா நெனச்சிட்டு இப்புடி எதாவது கப்பித்தனம்
பண்ண வேண்டியது.
அப்புறம்
படத்துல மிகப்பெரிய மொன்னை யாருன்னா அது நம்ம யுவன் சார் தான். சிம்பு பாடுற
டைட்டில் சாங்க தவற வேற எந்த சாங்கும் தேறல... "கொஞ்சும் கிளி" பாட்டும்
"சுட சுட மேகம்" பாட்டும் பரவால்லாம இருக்கு ஆனா அதுக்கெல்லாம் choreography செம கப்பி. BGM லாம் யுவன் படம் மாதிரியே இல்லை. வழக்கமா யுவன் படங்கள்ல ஒவ்வொரு
படத்துலயும் BGM ku தனியா ஒரு
தீம் வச்சிருப்பாரு.. இதுல BGM இருக்காங்குறதே
டவுட்டா இருக்கு.
இரண்டாவது பாதில
வர்றது போல முதல் பாதியிலயும் காட்சிகளோட ஒன்றி continues comedy ya இருந்துருந்தா படம் இன்னும் சூப்பரா
வந்துருக்கும். ஆனாலும் நிறைய பேருக்கு படம் மிகவும்
பிடிச்சிருக்கு... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சதா சொல்றாங்க... நமக்கு அந்த
மாதிரி சம்பவங்கள் எதுவும் நடக்கல... மத்தவங்க மாதிரி இல்லாம வக்காளி நாம தான்
ஓவர் expectation noda போய் ஏமாந்துடுறோமோ?
படம் பாத்தப்புறம்
ஒண்ணு மட்டும் கரெக்டா தெரிஞ்சுது... காமெடி படங்களல் தல சுந்தர்.சிய அடிச்சிக்க
ஆளே இல்ல…
4 comments:
good review
படம் காமெடியா இல்லைன்னா விடுங்க பாஸ் உங்க விமர்சனம் தன காமெடி யா இருக்குல்லே விடுங்க பாஸ்
//ஓவர் expectation noda போய் //
ஏன் இப்படி...????!!!! தமிழ்-ஆங்கிலம் கொலை...????
-சகஸ்ரநாமம்.
செம மொக்கை படம்
Post a Comment