Friday, June 5, 2015

வாங்களேன்.. ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்!!!


Share/Bookmark
குறிப்பு: இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. முன்னெல்லாம் நாலு பேர் கொண்ட குழுவோட வெளில சுத்த போனோம்னா, நாம எடுக்குற பெரும்பாலான ஃபோட்டோக்கள்ல மூணுபேர் தான் இருப்போம். ஏன்னா நம்மல்ல ஒருத்தன் கண்டிப்பா ஃபோட்டோகிராஃபர் வேலை பாத்தே தீரனும். அப்படி நாலுபேரும் நிக்கிற மாதிரி ஃபோட்டோ வேணும்னா, அங்க வெட்டியா சுத்திக்கிட்டு இருக்க எவண்டயாச்சும், “எக்ஸ்க்யூஸ்மி பாஸ்.. ஒரு ஸ்நாப் எடுத்துத் தரமுடியுமா” ன்னு கேட்டா, அவன் நம்ம கேமராவுல பவர் பட்டன் எது, ஸ்நாப் எடுக்குற பட்டன் எதுன்னு தெரியாம கொஞ்ச நேரம் அத திருப்பி திருப்பி பாப்பான். அப்புறம் நாம அவனுக்கு இத இப்புடி அமுக்குங்கன்னு ட்யூஷன் எடுத்துட்டு போய் நின்னா, நம்ம நாலுபேர்ல எவனாச்சும் ஒருத்தன் ஃபோட்டோவுல கரெக்டா கண்ண மூடுனமாதிரியோ, இல்லை சைடுல போற ஃபிகர பாத்து வழிஞ்சி கேமராவ பாக்காத மாதிரியோ நின்னுருப்போம். அப்புறம் என்ன “இன்னொரு ஸ்நாப் பாஸ்” ன்ன உடனே அவன்கிட்ட எதோ irctc la டிக்கெடி புக்பண்ணி கேட்டா மாதிரி அவ்ளோ கஷ்டப்பட்டுக்கிட்டு எடுத்துக்குடுப்பான்.

நாலுபேரா போற குரூப்புக்கே இந்த நிலமைன்னா, தனியா வெளில போறவிங்க நிலைமைதான் ரொம்ப பரிதாபத்துக்குறியது. எல்லாத்தையும் சுத்தி சுத்தி பாக்க மட்டும்தான் முடியும். ஆசைக்கு கூட ஒரு ஃபோட்டோ எடுக்க முடியாது. அப்படி தனியா சுத்துற எவனோ கழிவறையில் கனநேரம் உக்காந்து யோசிக்கும் போது அவனுக்கு தோணின ஐடியாதான் இந்த செல்ஃபி. தொண்ணூறு பர்சண்ட் செல்ஃபிய கண்டுபுடிச்சவரு மேல ஃபோட்டோவுல இருக்க ரோவன் அட்கின்சனாத்தான் இருக்கனும்.

அப்புடி அவசரத்துக்கு யூஸ் பண்ணிக்கிறதுக்காக கண்டுபுடிக்கப்பட்ட அந்த செல்ஃபிய இன்னிக்கு ரொம்ப அத்யாவசியாமான ஒண்ணா நினைச்சிட்டு சுத்திட்டு இருக்காய்ங்க நம்மாளுக. பர்த்டே பார்ட்டியோ, கெட்டூகெதரோ, ஆஃபீஸ் பார்ட்டியோ அட ஏன் கல்யாணத்துல கூட செல்ஃபி எடுத்தாத்தான் அந்த ஃபங்ஷனுக்கே value ங்குற மாதிரி கொண்டு வந்துட்டானுங்க.

கல்யாணத்துல அம்பதாயிரம் ரூவா செலவு பண்ணி இவியிங்க வீட்டுல ஃபோட்டோகிராபர் அரேஞ்ச் பண்ணிருப்பாய்ங்க. கொடுமை என்னன்னா மாப்ளையும் பொண்ணும் மண மேடையில செல்ஃபி எடுத்துக்கிட்டு இருப்பாய்ங்க. ஏண்டா டேய்…. உங்களுக்கெல்லாம் nokia 1100 வ கையிலகுடுத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கனும்ண்டா. சரி செல்ஃபிங்குறது one of the camera angle அதுனால அடிக்கடி எடுக்குறீங்கன்னே வச்சிக்குவோம். அதுல மொகரை நல்லாவாடா இருக்கு?

நா முக்கியமா இந்த பதிவ எழுத ஆரம்பிச்சதே இந்த செல்ஃபிக்காரய்ங்க தொல்ல தாங்க முடியாமத்தான். எது எது கூட செல்ஃபி எடுக்குறது, எங்கெங்க செல்ஃபி எடுக்குறதுங்குற விவஸ்தையே கொஞ்சம் கூட இல்லாம, ஸ்மார்ட் ஃபோன் கையில கிடைச்ச உடனே கண்ட இடத்துல எடுத்து தள்ளுறாய்ங்க. ”சண்டை போட்டு சாவுற நாயிங்க வல்ல நாடு மலைப்பக்கம் போய் அடிச்சிக்கிட்டு சாவுங்கடா” ங்குற மாதிரி எடுக்குறது எடுக்குறீங்க அடுத்தவனுக்கு தொல்லை குடுக்காம எடுங்களேண்டா.

பொணத்துகூட செல்ஃபி எடுத்து “எங்க பெரியப்பா இன்னிக்கு செத்துப் பொய்ட்டாரு” ன்னு ஒருத்தன் கொஞ்ச நாள் முன்னால போட்ட செல்ஃபிய பாத்துருப்பீங்க. அவன கூட ஒரு வகையில சேத்துக்கலாம். ஆனா, தியேட்டருக்குள்ள படம் ஓடிக்கிட்டு இருக்கும்போது  பளிச் பளிச்ன்னு வெளிச்சம் அடிச்சிக்கிட்டே இருக்கு. என்னடான்னு பாத்தா இந்த சனியன் புடிச்சவய்ங்க. அதுவும் நாலு பேர் சேந்து வந்துட்டாய்ங்கன்னா (ஒரு பொண்ணும் அந்த குரூப்புல) அய்யயோ..  அத ஃபோட்டோ எடுத்து fb la ‘me watching avengers at satyam with Preeti Iyer and 3 others" ன்னு போட்டாத்தான் அவிங்களுக்கு நிம்மதி. அதுவும் இப்ப தியேட்டர்ல சினிமா பாக்குறவய்ங்கல்லாம், படத்த பாக்குறாய்ங்களோ இல்லையோ, அவர் படம் பாக்குறது எதோ சரித்திர நிகழ்வு மாதிரி அத FB ல போட்டுட்டு தான் மறு வேலை.

நம்ம என்ன பண்ணாலும் யாரும் எதுவும் கண்டுக்கபோறதில்லை. ஏண்டா இதுக்கு முன்னால நீங்கல்லாம் சினிமா பாத்ததே இல்லையா? இல்லை இதுக்கு முன்னால் நீங்க சினிமா பாத்தப்பல்லாம் எல்லாரையும் கூப்டு நா சினிமா பாக்குறேன் சினிமா பாக்குறேன்னு டமாரம் அடிச்சி சொல்லிக்கிட்டு இருந்தீங்களா? அந்த தியேட்டருக்குள்ள உன்ன நீயே செல்ஃபி எடுத்துக்கிட்டு அத யார்கிட்ட கொண்டு போய் காமிக்க போற? சத்தியமா உன்னத் தவற அத யாரும் திரும்பி கூட பாக்கப்போறதில்லை. அப்புடி எடுத்துத் தொலையனும்னா அத தியேட்டருக்கு வெளில எடுத்துட்டு, உள்ள வந்து பொத்துனாப்புல படத்தப் பாருங்க. நீங்க செல்ஃபி எடுக்குறேன்னு அடுத்தவனுக்கு ஏண்டா தொல்லை குடுக்குறீங்க.



போன வாரம் ஒரு நாள் ராத்திரி வட பழனி முருகன் கோயிலுக்கு போயிருந்தேன். அன்னிக்கு, யாரோ தங்கத்தேர் இழுக்க வேண்டிக்கிட்டு, தேர் இழுக்க ரெடியா இருக்காங்க. முருகன் இருக்க அந்தத்தேர் முழு அலங்காரத்தோட ஸ்க்ரீன் போட்டு ரெடியா இருக்கு. ஸ்க்ரீன் எப்போ விலகும்னு ஒரு 50 பேர் முருகன தரிசிக்க வெய்ட்டிங். திடீர்னு அந்த ஸ்கீரீன் ஓப்பன் ஆனது தான் தாமதம். அந்த கூட்டத்துலருந்து ஒரு பத்து பேர்தான் முருகன கையெடுத்து கும்புடுறாங்க. மிச்ச ஆளுங்களெல்லாம் செங்கல் சைஸ் மொபைல வச்சி முருகன வீடியோ எடுத்துக்க்கிட்டு இருக்காய்ங்க.. அதுலயும் ஒருத்தன் பின்பக்கமா திரும்பி நின்னு முருகன் கூடவே செல்ஃபி எடுத்துக்கிட்டு இருக்கான்.

அடப் பதர்களா, எப்பவாவது திறக்குறாங்கங்குறதுக்காகத் தான் அந்த தேர்ல இருக்க முருகனுக்கே ஒரு மதிப்பு. நமக்கும் தரிசனம் கிடைச்ச ஒரு சந்தோஷம். ஆன அத இவய்ங்க ஃபோட்டோ எடுத்துடுறாய்ங்களாம். இது கூட பரவால்ல. லிங்கா படத்தோட முதல் காட்சி பாக்குறாவன், “super star rajni” ன்னு போடுறத ஃபோட்டோ எடுத்து அனுப்பிகிட்டு இருக்கான். ஃபோட்டோ எடுக்க வேண்டிய நேரமாடா அது? அதயே நீ ஃபோட்டோ எடுத்துக்கிட்டு உக்காந்துருக்கியன்னா, நீயெல்லாம் எதுக்கு ஃபர்ஸ்ட் ஷோ போற?

சில தினித்தன்மையான விஷயங்களுக்கு உண்டான மதிப்பை நாம குடுத்துத் தான் ஆகனும். அப்போதான் கடைசி வரைக்கும் அது நமக்கு முக்கியமான விஷயமா தெரியும். சின்ன சின்ன சந்தோஷம் , சர்ப்ரைஸ்ல தான் நம்ம வாழ்க்கையே ஓடிக்கிட்டு இருக்கு. அந்த நேரத்துலயெல்லாம் மொபைல தூக்கி வச்சிக்கிட்டு செல்ஃபி எடுக்குறேன்னு ஆடு கக்கா போன  மாதிரி வத வதன்னு எடுத்துட்டு இருந்தோம்னா, அந்த முக்கியமான தருணத்தையும் இழந்துடுவோம்  ஃபோட்டோங்குற ஒரு விஷயத்து மேல இருக்க சந்தோஷத்தையும், ஆர்வதையும் கூட இழந்துடுவோம்.


Monday, June 1, 2015

மாசு (எ) மாசிலாமணி – SURYA’S COME BACK!!!


Share/Bookmark
விஜய் படம் ஒண்ணு ரிலீஸ் ஆகும்போது அத அஜித் ரசிகர்கள் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுறதும், அஜித் படம் ரிலீஸ் ஆகும்போது அத விஜய் ரசிகர்கள் கிழி கிழின்னு கிழிச்சி தொங்க விடுறதும் தொன்றுதொட்டு நடந்து வர்ற விஷயம் தான். ஆனா முன்னடியெல்லாம் படம் நல்லா இல்லைன்னா மட்டும் கிண்டல் பண்ணவய்ங்க. ஆனா இப்போ ஒரு 30 செகண்டுக்கு டீசர் வந்துச்சின்னாலே அத ஃப்ரேம் பை ஃப்ரேம் என்னென்ன வடிவேலு, கவுண்டமணி வசங்களை வச்சி ஓட்ட முடியுமோ அவ்வளவு ஓட்டுறாய்ங்க. இது ரொம்ப சின்னப்புள்ளை தனமாத்தான் தெரியிது. அப்படி சும்மா கிண்டல் பண்ணனும்னு பண்றவங்களுக்கு சில நல்ல படங்களை ரசிக்கிற மனநிலையே போயிடும். அதுமட்டும் இல்லாம ஒரு நல்ல படத்துக்கு உண்டான அங்கீராம், சில படங்களுக்கு முழுமையா கிடைக்காமலேயே போயிடும். இது அவ்வளவு சிறப்பான ஒரு சைன் இல்ல. சரி அது எப்படியோ போவட்டும்.   

ஆன்னா ஊன்னா அஜித் விஜய்ன்னு அடிச்சிக்கிறானுக. ஆனா  சூர்யா படம் ரிலீஸ் ஆகும்போது அவிங்க ரெண்டு பேரும் ஒண்ணுகூடி அவன மரண ஓட்டு ஓட்ட ஆரம்பிச்சிடுறாய்ங்க. உலக வரலாற்றுலயே அதிக அளவு  கலாய்க்கப்பட்ட படம்னா அது  அது நம்ம அஞ்சான் தான். சூர்யாவும், லிங்குவும் கிட்டத்தட்ட வாழ்க்கையோட ரொம்ப மோசமான நாட்களை போனவருஷம் பாத்துருப்பாங்க. அதுலருந்து மீண்டு, சூர்யா ஒரு சூப்பர் படத்தோட திரும்பி வந்துருக்காருன்னு தான் சொல்லனும். வாங்க மாசு என்கிற மாசிலாமணிய லைட்டா ஓட்டுவோம். அட அந்த ”ஓட்டுவோம்” இல்லீங்க. படம் எப்டின்னு கொஞ்சம் ஓட்டிப்பாப்போம். தொடர்ந்து படிச்சா, படம் பாக்குறவங்களுக்கு கொஞ்சம் சுவாரஸ்யம் குறைய வாய்ப்பு இருக்கதால, படம் பாக்குற ஐடியாவுல இருக்கவங்க அப்டியே ஸ்கிப் பண்ணி கடைசி பாராவுக்கு செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மனோஜ் நைட் ஷாமலனோட Sixth Sense ங்குற படம் பெரும்பாலானவங்க பாத்துருப்பீங்க.  அந்தப் படத்துல ஒரு சின்னப் பையன் இருப்பான். ரொம்ப பயந்த சுபாவம். எதப்பாத்தாலும் பயந்து ஓடுவான். யார் கூடவும் அதிகமா பேச மாட்டான். அவன்கூட ஸ்கூல்ல படிக்கிற பசங்க அவன பைத்தியம்னு தான் சொல்லுவாங்க. அந்தப் பையன் அவனுக்கு என்ன ப்ரச்சனைங்குறத அவங்க அம்மாகிட்ட கூட சொல்லிருக்க மாட்டான். அப்போ அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்குற டாக்டரா ப்ரூஸ் வில்ஸ் வருவாரு.

அந்தப் பையன் கூட கொஞ்சம் கொஞ்சமா பழகி அவனோட கொஞ்சம் க்ளோஸாகி அவனுக்கு என்னப் ப்ரச்சனைன்னு கேப்பாரு. அப்பதான் அவன் சொல்லுவான் “எனக்கு செத்துப் போனவங்கல்லாம் தெரியிறாங்க” ன்னு. ஸாக் ஆயிப் போற ப்ரூஸ்வில்ஸ் “சரி அதுங்க உன் கண்ணுக்கு தெரியிதுன்னா அதுங்க உன்கிட்ட எதோ எதிர் பாக்குதுன்னு அர்த்தம். அடுத்த தடவ பயப்படாம பேசு” ம்பாரு. அதுக்கப்புறம் பேயப்பாத்தா தைரியமா பேசிட்டு இருப்பான். ஒவ்வொரு பேயும் ஒரு ஒரு உதவி கேட்டுத்தான் அந்தப் பையன்கிட்ட வரும். எல்லாத்தையும் செஞ்ச உடனே எல்லா பேய்களும் அப்புறம் இவனுக்கு ஃப்ரண்ட்ஸ் ஆயிடும்.

கடைசில அம்மாகிட்ட சொல்லலாம்னு முடிவு பண்ணி, அம்மாவும் அந்தப் பையனும் கார்ல போயிட்டு இருப்பாங்க. அரை கிலோ மீட்டர் நீள ட்ராஃபிக் ஜாம்ல கடைசில நிக்கும் இவங்க கார். என்னன்னு பாத்தா, முன்னால ஒரு கார் ஆக்ஸிடெண்ட் ஆயிருக்கும். பையன் அப்பதான் அம்மகிட்ட சொல்லுவான். அம்மா நம்ம முடியாம அழுகும். அப்போ அந்தப் பையன், “அம்மா முன்னால கார் ஆக்ஸிடெண்ட் ஆச்சுல்ல.. அதுல இருந்த பொண்ணு செத்துருச்சி” ம்பான். உடனே அம்மா “அது எப்டி உனக்கு தெரியும்”ன்னு கேக்க, “அந்தப் பொண்ணு இப்ப நம்ம காருக்கு வெளிலதான் நின்னுகிட்டு இருக்கு” ன்ன உடனே அம்மாவும் மெர்சலாயிருவாங்க. அப்புறம் இன்னொரு ட்விஸ்டயும் வச்சி படத்த முடிப்பாங்க. ஷாமலனுக்கு பெரிய பேர் வாங்கிக் குடுத்தது அந்தப்படம்.
அய்யய்யோ.. 

இது மாசு விமர்சனம்ல. மறந்துட்டு சிக்ஸ்த் சென்ஸ ரொம்ப நேரம் ஓட்டிட்டேனே… சரி விடுங்க.. ஒண்ணும் இல்லை. மேல சொன்ன Sixth Sense கதைய, நம்மூர் மண் வாசனை  கொழம்பு வாசனைக்கு ஏத்தா மாதிரி மசாலாவ அங்க இங்க சேத்து, ரெண்டு மூணு வில்லன்கள அள்ளி உள்ளபோட்டு ரெடி பண்ணா அது தான் மாசு என்கிற மாசிலாமணி. என்னது சூர்யா என்ன ரோல் பண்ணிருக்காரா? அட Sixth Sense ல உள்ள அந்தக் கொழந்தையே சூர்யா தான்பா.

முதல் கால்மணி நேரம் பாக்கும் போது பாட்டுன்னா பாட்டேவா ஃபைட்டு ஃபைட்டு… ஃபைட்டுன்னா ஃபைட்டேவா பாட்டு பாட்டுன்னு அஞ்சானோட அடுத்த பார்ட்டு போலன்னு தான் தோணுச்சி. ஆனா கொஞ்ச நேரத்துலயே படம் வேற ட்ராக்ல மாறி, செம ஜாலியா போக ஆரம்பிக்கிது. கடைசி வரைக்குமே அத அப்டியே மெய்ண்டெய்ண் பன்னி முடிச்சிருக்காங்க.
இந்தப் படத்துல சூர்யாவுக்கு ஜோடியா ப்ரேம்ஜி நடிச்சிருக்காரு. என்ன ஹோமோ பத்தின கதையோன்னு வெறியாயிடாதீங்க. . படம் முழுக்க சூர்யா இருக்க எல்லா சீன்லயும் இவனும் இருக்கான். அதான் அப்டிச் சொன்னேன். வழக்கமா கடுப்பேத்துற மாதிரி காமெடி பண்ற ப்ரேம்ஜி இந்தப் படத்துல அப்படி எதுவும் பண்ணாம இருக்கதே படத்துக்கு பெரிய ப்ளஸ். அது மட்டும் இல்லாம இதுவரைக்கும் ப்ரேம்ஜ பண்ணதுலயே இது தான் பெஸ்ட் ரோல்.

சூர்யா ஆளு செமையா இருக்காரு. அஞ்சான்ல இருந்த முள்ளம்பண்றித் தலையெல்லாம் நல்லா படியவச்சி, பாக்குறதுக்கு இதுலதான் மனுசன் மாதிரி இருக்காரு. அதுமட்டும் இல்லாம ரெண்டாது கெட்டப்புல ஆளு செம்ம ஸ்மார்ட்டா இருக்காரு. நடிப்ப பத்தியெல்லாம் சொல்லவே தேவையில்லை.  நயன்தாரா… இருக்காங்க. அவ்வளவு தான். ஹீரோயின் கணக்குக்காக. ப்ரனிதா செம்ம அழகு.

வெங்கிக்கு ஒவ்வொரு படத்துலயும் எதாவது பழைய ஹீரோக்கள கொண்டு வந்து இறக்கிவிட்டு டம்மியாக்குறதே வேலையாப்போச்சி. ஜெயராம், அர்ஜுன் வரிசையில இப்ப பார்த்திபன். ரொம்பப் பெரிய ரோலெல்லம் இல்லை. ஆனா அங்கங்க அவர் ஸ்டைல் வசனங்கள் சிலதுல அசத்துறாரு. ஒரு சீன்ல ஒரு ரவுடிய கட்டி வச்சி அடிக்கும்போது சொல்வாரு “ஏண்டா செந்திலே (இன்னொரு ரவுடி) என்னை நம்பி வந்து பணம் குடுத்துட்டான். நீ என்னா அவனவிட பெரிய ஆளா? கவுண்டமணியா நீ?” ன்னு அசால்ட்டா சொல்லுவாரு. ரொம்ப நேரம் நினைச்சி நினைச்சி சிரிச்சேன். அதவிட கடைசில சண்டை நடக்கும்போது கருணாஸ் இவரப்பாத்து “அய்யோ பாவம். அவரு ஹீரோங்குறத அவரே மறந்துட்டாரு”ன்னு நக்கலடிக்கிறது வெங்கி பஞ்ச். ஜெய் ஒரு சீன் வந்தாலும் சூப்பர். கருணாஸும் இருக்காரு. அவ்வளவு தான். ஸ்ரீமன் வழக்கம்போல கலக்கல்.

வெங்கட் ப்ரபு சென்னை 28 ல எதோ லக்குல க்ளிக் ஆயிரிச்சின்னு நினைச்சோம். அடுத்து சரோஜால அசத்துனாரு. கோவால லைட்டா மட்டையானாலும், அஜித்தோட பெஸ்டான மங்காத்தாவ குடுத்தாரு. கார்த்திக்கு ஒரு பிரியாணிய கிண்டிட்டு இப்போ சூர்யாவுக்கு கை குடுத்துருக்காரு. நிறைய இடத்துல சின்ன சின்ன நக்கல கமெண்ட்ஸ்ல வெங்கி தனியா தெறியிறாரு. ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில சூர்யா மாட்டிட்டு கஷ்டப்படும்போது  ப்ரேம்ஜி  exhaust fan க்கு உள்ளயும் வெளியயும் பூந்து பூந்து விளையாடி “மாஸூ மாஸூ நீயும் வாயேன்” ங்குறதெல்லாம் அசல் வெங்கி பார்முலா காமெடி. யுவன் பாட்டெல்லாம் செமயா போட்டுருக்காரு. அதுவும் பூச்சு பூச்சு பூ பூச்சாண்டி பாட்டுதான் இந்த ஆல்பத்துலயே என் ஃபேவரிட். BGM பெருசா சொல்ற மாதிரி ஒண்ணும் இல்லை. 

வில்லன்கள் குரூப்ப மட்டும் வழக்கமான தமிழ்சினிமா மூணு வில்லன் கான்செப்ட்லருந்து கொஞ்சம் வேற மாதிரி வச்சிருக்கலாம். அதுவும் ஒரு போலீஸ் ஒரு அரசியல்வாதி, ஒரு வக்கீல்னு ஓவ்வொரு ஃபீல்டுல வில்லன வக்கிற காம்பினேஷன எப்ப மாத்தப்போறாய்ங்கன்னு தெரியல. சமுத்திரக்கனி இந்த மாதிரி ரஃப் வில்லன் ரோலுக்கு கொஞ்சம் கூட செட் ஆகல. சுப்ரமணியபுரம் மாதிரி சைலண்ட் வில்லன்ரோல் தான் நம்மாளுக்கு செட் ஆகும்.  வரிசையா ஜெயப்ப்ரகாஷ எல்லா படங்கள்லயும் டம்மி ஆக்கிக்க்ட்டே வர்றாய்ங்க..


படம் பாத்த பெரும்பாலான நண்பர்கள் படம் ரொம்ப ஆவரேஜ்ன்னும், ரொம்ப மொக்கைன்னும் தான் சொல்றாங்க. ஆனா என்னப் பொறுத்த அளவு படம் நல்லாவே இருக்கு. கொஞ்சம் கூட போரடிக்கல, ஜாலியாவும் போகுது. நிச்சயம் ஒரு நல்ல மசாலா படம் பாத்த ஃபீல் குடுக்கும். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...