Friday, June 5, 2015

வாங்களேன்.. ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்!!!


Share/Bookmark
குறிப்பு: இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. முன்னெல்லாம் நாலு பேர் கொண்ட குழுவோட வெளில சுத்த போனோம்னா, நாம எடுக்குற பெரும்பாலான ஃபோட்டோக்கள்ல மூணுபேர் தான் இருப்போம். ஏன்னா நம்மல்ல ஒருத்தன் கண்டிப்பா ஃபோட்டோகிராஃபர் வேலை பாத்தே தீரனும். அப்படி நாலுபேரும் நிக்கிற மாதிரி ஃபோட்டோ வேணும்னா, அங்க வெட்டியா சுத்திக்கிட்டு இருக்க எவண்டயாச்சும், “எக்ஸ்க்யூஸ்மி பாஸ்.. ஒரு ஸ்நாப் எடுத்துத் தரமுடியுமா” ன்னு கேட்டா, அவன் நம்ம கேமராவுல பவர் பட்டன் எது, ஸ்நாப் எடுக்குற பட்டன் எதுன்னு தெரியாம கொஞ்ச நேரம் அத திருப்பி திருப்பி பாப்பான். அப்புறம் நாம அவனுக்கு இத இப்புடி அமுக்குங்கன்னு ட்யூஷன் எடுத்துட்டு போய் நின்னா, நம்ம நாலுபேர்ல எவனாச்சும் ஒருத்தன் ஃபோட்டோவுல கரெக்டா கண்ண மூடுனமாதிரியோ, இல்லை சைடுல போற ஃபிகர பாத்து வழிஞ்சி கேமராவ பாக்காத மாதிரியோ நின்னுருப்போம். அப்புறம் என்ன “இன்னொரு ஸ்நாப் பாஸ்” ன்ன உடனே அவன்கிட்ட எதோ irctc la டிக்கெடி புக்பண்ணி கேட்டா மாதிரி அவ்ளோ கஷ்டப்பட்டுக்கிட்டு எடுத்துக்குடுப்பான்.

நாலுபேரா போற குரூப்புக்கே இந்த நிலமைன்னா, தனியா வெளில போறவிங்க நிலைமைதான் ரொம்ப பரிதாபத்துக்குறியது. எல்லாத்தையும் சுத்தி சுத்தி பாக்க மட்டும்தான் முடியும். ஆசைக்கு கூட ஒரு ஃபோட்டோ எடுக்க முடியாது. அப்படி தனியா சுத்துற எவனோ கழிவறையில் கனநேரம் உக்காந்து யோசிக்கும் போது அவனுக்கு தோணின ஐடியாதான் இந்த செல்ஃபி. தொண்ணூறு பர்சண்ட் செல்ஃபிய கண்டுபுடிச்சவரு மேல ஃபோட்டோவுல இருக்க ரோவன் அட்கின்சனாத்தான் இருக்கனும்.

அப்புடி அவசரத்துக்கு யூஸ் பண்ணிக்கிறதுக்காக கண்டுபுடிக்கப்பட்ட அந்த செல்ஃபிய இன்னிக்கு ரொம்ப அத்யாவசியாமான ஒண்ணா நினைச்சிட்டு சுத்திட்டு இருக்காய்ங்க நம்மாளுக. பர்த்டே பார்ட்டியோ, கெட்டூகெதரோ, ஆஃபீஸ் பார்ட்டியோ அட ஏன் கல்யாணத்துல கூட செல்ஃபி எடுத்தாத்தான் அந்த ஃபங்ஷனுக்கே value ங்குற மாதிரி கொண்டு வந்துட்டானுங்க.

கல்யாணத்துல அம்பதாயிரம் ரூவா செலவு பண்ணி இவியிங்க வீட்டுல ஃபோட்டோகிராபர் அரேஞ்ச் பண்ணிருப்பாய்ங்க. கொடுமை என்னன்னா மாப்ளையும் பொண்ணும் மண மேடையில செல்ஃபி எடுத்துக்கிட்டு இருப்பாய்ங்க. ஏண்டா டேய்…. உங்களுக்கெல்லாம் nokia 1100 வ கையிலகுடுத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கனும்ண்டா. சரி செல்ஃபிங்குறது one of the camera angle அதுனால அடிக்கடி எடுக்குறீங்கன்னே வச்சிக்குவோம். அதுல மொகரை நல்லாவாடா இருக்கு?

நா முக்கியமா இந்த பதிவ எழுத ஆரம்பிச்சதே இந்த செல்ஃபிக்காரய்ங்க தொல்ல தாங்க முடியாமத்தான். எது எது கூட செல்ஃபி எடுக்குறது, எங்கெங்க செல்ஃபி எடுக்குறதுங்குற விவஸ்தையே கொஞ்சம் கூட இல்லாம, ஸ்மார்ட் ஃபோன் கையில கிடைச்ச உடனே கண்ட இடத்துல எடுத்து தள்ளுறாய்ங்க. ”சண்டை போட்டு சாவுற நாயிங்க வல்ல நாடு மலைப்பக்கம் போய் அடிச்சிக்கிட்டு சாவுங்கடா” ங்குற மாதிரி எடுக்குறது எடுக்குறீங்க அடுத்தவனுக்கு தொல்லை குடுக்காம எடுங்களேண்டா.

பொணத்துகூட செல்ஃபி எடுத்து “எங்க பெரியப்பா இன்னிக்கு செத்துப் பொய்ட்டாரு” ன்னு ஒருத்தன் கொஞ்ச நாள் முன்னால போட்ட செல்ஃபிய பாத்துருப்பீங்க. அவன கூட ஒரு வகையில சேத்துக்கலாம். ஆனா, தியேட்டருக்குள்ள படம் ஓடிக்கிட்டு இருக்கும்போது  பளிச் பளிச்ன்னு வெளிச்சம் அடிச்சிக்கிட்டே இருக்கு. என்னடான்னு பாத்தா இந்த சனியன் புடிச்சவய்ங்க. அதுவும் நாலு பேர் சேந்து வந்துட்டாய்ங்கன்னா (ஒரு பொண்ணும் அந்த குரூப்புல) அய்யயோ..  அத ஃபோட்டோ எடுத்து fb la ‘me watching avengers at satyam with Preeti Iyer and 3 others" ன்னு போட்டாத்தான் அவிங்களுக்கு நிம்மதி. அதுவும் இப்ப தியேட்டர்ல சினிமா பாக்குறவய்ங்கல்லாம், படத்த பாக்குறாய்ங்களோ இல்லையோ, அவர் படம் பாக்குறது எதோ சரித்திர நிகழ்வு மாதிரி அத FB ல போட்டுட்டு தான் மறு வேலை.

நம்ம என்ன பண்ணாலும் யாரும் எதுவும் கண்டுக்கபோறதில்லை. ஏண்டா இதுக்கு முன்னால நீங்கல்லாம் சினிமா பாத்ததே இல்லையா? இல்லை இதுக்கு முன்னால் நீங்க சினிமா பாத்தப்பல்லாம் எல்லாரையும் கூப்டு நா சினிமா பாக்குறேன் சினிமா பாக்குறேன்னு டமாரம் அடிச்சி சொல்லிக்கிட்டு இருந்தீங்களா? அந்த தியேட்டருக்குள்ள உன்ன நீயே செல்ஃபி எடுத்துக்கிட்டு அத யார்கிட்ட கொண்டு போய் காமிக்க போற? சத்தியமா உன்னத் தவற அத யாரும் திரும்பி கூட பாக்கப்போறதில்லை. அப்புடி எடுத்துத் தொலையனும்னா அத தியேட்டருக்கு வெளில எடுத்துட்டு, உள்ள வந்து பொத்துனாப்புல படத்தப் பாருங்க. நீங்க செல்ஃபி எடுக்குறேன்னு அடுத்தவனுக்கு ஏண்டா தொல்லை குடுக்குறீங்க.



போன வாரம் ஒரு நாள் ராத்திரி வட பழனி முருகன் கோயிலுக்கு போயிருந்தேன். அன்னிக்கு, யாரோ தங்கத்தேர் இழுக்க வேண்டிக்கிட்டு, தேர் இழுக்க ரெடியா இருக்காங்க. முருகன் இருக்க அந்தத்தேர் முழு அலங்காரத்தோட ஸ்க்ரீன் போட்டு ரெடியா இருக்கு. ஸ்க்ரீன் எப்போ விலகும்னு ஒரு 50 பேர் முருகன தரிசிக்க வெய்ட்டிங். திடீர்னு அந்த ஸ்கீரீன் ஓப்பன் ஆனது தான் தாமதம். அந்த கூட்டத்துலருந்து ஒரு பத்து பேர்தான் முருகன கையெடுத்து கும்புடுறாங்க. மிச்ச ஆளுங்களெல்லாம் செங்கல் சைஸ் மொபைல வச்சி முருகன வீடியோ எடுத்துக்க்கிட்டு இருக்காய்ங்க.. அதுலயும் ஒருத்தன் பின்பக்கமா திரும்பி நின்னு முருகன் கூடவே செல்ஃபி எடுத்துக்கிட்டு இருக்கான்.

அடப் பதர்களா, எப்பவாவது திறக்குறாங்கங்குறதுக்காகத் தான் அந்த தேர்ல இருக்க முருகனுக்கே ஒரு மதிப்பு. நமக்கும் தரிசனம் கிடைச்ச ஒரு சந்தோஷம். ஆன அத இவய்ங்க ஃபோட்டோ எடுத்துடுறாய்ங்களாம். இது கூட பரவால்ல. லிங்கா படத்தோட முதல் காட்சி பாக்குறாவன், “super star rajni” ன்னு போடுறத ஃபோட்டோ எடுத்து அனுப்பிகிட்டு இருக்கான். ஃபோட்டோ எடுக்க வேண்டிய நேரமாடா அது? அதயே நீ ஃபோட்டோ எடுத்துக்கிட்டு உக்காந்துருக்கியன்னா, நீயெல்லாம் எதுக்கு ஃபர்ஸ்ட் ஷோ போற?

சில தினித்தன்மையான விஷயங்களுக்கு உண்டான மதிப்பை நாம குடுத்துத் தான் ஆகனும். அப்போதான் கடைசி வரைக்கும் அது நமக்கு முக்கியமான விஷயமா தெரியும். சின்ன சின்ன சந்தோஷம் , சர்ப்ரைஸ்ல தான் நம்ம வாழ்க்கையே ஓடிக்கிட்டு இருக்கு. அந்த நேரத்துலயெல்லாம் மொபைல தூக்கி வச்சிக்கிட்டு செல்ஃபி எடுக்குறேன்னு ஆடு கக்கா போன  மாதிரி வத வதன்னு எடுத்துட்டு இருந்தோம்னா, அந்த முக்கியமான தருணத்தையும் இழந்துடுவோம்  ஃபோட்டோங்குற ஒரு விஷயத்து மேல இருக்க சந்தோஷத்தையும், ஆர்வதையும் கூட இழந்துடுவோம்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

Unknown said...

As usual attagasam boss. 100% agree with your view.

Regards,
A Yusuf

Anonymous said...

why very smaller post siva ? Day by day expectation is increasing on you. Do you know that ?

Unknown said...

Super boss

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...