Saturday, March 12, 2016

காதலும் கடந்து போகும் – மெதுவாதான் போவும்!!!


Share/Bookmark
ஒரு நடிகர் முழுவீச்சுல நடிக்கிறத நிறுத்தி ரொம்ப நாள் ஆகுது. ஆனா அவர் நடிச்சப்போ ஏற்படுத்துன தாக்கம் தமிழ் சினிமாவுல இன்னும் இம்மி அளவு கூட குறையல. இப்ப வர்ற ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு விதத்துல அவருடைய தாக்கம் இருக்கு. நா சொல்றது எம்.ஜி.ஆரையோ சிவாஜியையோ எம்.ஆர்.ராதாவையோ இல்லை. நம்ம வைகை புயல் வடிவேலுவத்தான் சொல்றேன். எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவுக்கு அவர் பேசுன ஒவ்வொரு வசனமும் எல்லா தட்டு மக்களுக்கும் அவ்வளவு ரீச் ஆயிருக்கு. அவர் வசனம் இல்லாத சமூக வலைத்தளங்கள், அவர் காமெடி இல்லாத நகைச்சுவை சேனல்கள்ல ஒரு நாள் கூட பாக்க முடியாது. அதே மாதிரி நம்மளே டெய்லி “முடியல” “இப்பவே கண்ணக்கட்டுதே” ”தம்பி டீ இன்னும் வரல” “சேம் ப்ளட்” ன்னு எதாவது அவர் பேசின வசனத்த பேசாம இருக்கதில்லை. மனுசன் சரித்திரத்துல நின்னுட்டாருப்பா. அந்த வரிசையில அவர் பேசிய வசனமான க.க.க.போ வை டைட்டிலா வச்சி அடுத்து ஒரு படம்.

ரெண்டு மாசத்துக்கு முன்னாலதான் நானும் ரவுடி தான் வந்துச்சி. ரெண்டு வாரத்துக்கு முன்னால தான் சேதுபதி வந்துச்சி. அடுத்து ரொம்ப குறுகிய இடைவெளில விஜய் சேதுபதிக்கு இன்னொரு படம். இன்னும் இடம் பொருள் ஏவல் மெல்லிசை, இறைவின்னு லைன்ல நிறைய வச்சிருக்காப்டி. போறபோக்கப் பாத்தா வருசக் கடைசில வந்த படத்துல முக்காவாசி படம் விஜய் சேதுபதி படமாத்தான் இருக்கப்போவுது. சரி இந்த காதலும் கடந்து போகும் எப்டி இருக்குன்னு பாப்போம்.  '

அஞ்சி வருசம் ஜெயில்ல இருந்துட்டு வெளில வந்து ”அண்ணன் எதாவது நமக்கு பெருசா செய்வாறு” ன்னு ஒரு ரவுடி கும்மலோட வெட்டியா சுத்திக்கிட்டு இருக்க "ரவுடி மாதிரி" ஆளு நம்ம சேதுபதி. அப்பா அம்மா பேச்ச கேக்காம சென்னைக்கு வேலைக்கு வந்து ஆறு மாசத்துல இருந்த வேலை போய் அடுத்த வேலைய தேடி தனியா அலைஞ்சிட்டு இருக்க மிடில் க்ளாஸ் பொண்ணு மடோனா செபஸ்டியன். ரெண்டு பேரும் எதிரெதிர் வீட்டுல குடியிருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏற்படுற நட்பு.. இல்லை காதல்.. இல்லை நட்புன்னே வச்சிக்குவோம்.. அதுதான் படம்.

ஓவராலா பாத்தா இது நம்ம விக்ரமன் எடுத்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தோட லேட்டஸ்ட் வெர்ஷன்னு சொல்லலாம். அதுல திருடனா இருக்க கார்த்தி ரோஜாவ கஷ்டப்பட்டு பாடகியாக்கிட்டு கடைசில எந்த க்ரெடிட்டும் எடுத்துக்காம கூட்டத்துல நின்னு வேடிக்க பாப்பாரு. அதே மாதிரி இங்க ரவுடி மாதிரி இருக்க நம்ம சேதுபதி வேலை தேடிகிட்டு இருக்க மடோனாவுக்கு உதவி பன்றாரு. அதுல சினிமாத்தனமான காட்சிகள் அதிகம் இருக்கும். இதுல நிறைய காட்சிகள் யதார்த்தமானதா வச்சிருக்காங்க. அவ்ளோதான்.

முதல் படத்துலயே ஒரு ஹீரோயின் எண்ட்ரிக்கு ஒரு தியேட்டரே கத்துதுன்னா அது இந்த புள்ளைக்காத்தான் இருக்கும். மடோனா எண்ட்ரிக்கு செம்ம சவுண்டு. சேதுபதிக்கு கூட அவ்வளவு இல்லை. ப்ரேமம் நம்மாளுகள என்ன பாடு படுத்தி வச்சிருக்கு பாருங்க. ஆனா சும்ம சொல்லக்கூடாது. செம அழகு. அதோட அந்த புள்ளைக்கு கொடுத்த டப்பிங் வாய்ஸூம்  செம. முதல் பாதில பல காட்சிகள் ரொம்ப சுமார் ரகமா இருந்தாலும் அந்த புள்ளை மூஞ்சியப் பாத்து ஆறுதல் படுத்திக்கலாம்.

இந்த கேரக்டர் விஜய் சேதுபதிக்கு ஒண்ணும் புதுசில்லை. ஒவ்வொரு படமா இதே மாதிரி நடிச்சி பாத்திரமாவே மாறிட்டாரு போல.  முதல் பாதி முழுக்க எதப்பத்தியும் கவலப்படாம படம் ரொம்ப கேஸூவலா ரொம்ப ஸ்லோவா போகுது. ஸ்லோவா போகுதுங்குறத ஒரு படத்துக்கு நெகடிவ்வா சொல்ல முடியாது. நல்லா போனா போதும். இங்க நல்லா போகுதுன்னு சொல்ல முடியாது. போகுது. ஒருசில இடத்துல லேசா சிரிப்பு வருது. விஜய் சேதுபதி மடோனா காம்பினேஷந்தான் முதல் பாதில படத்த காப்பாத்துது. மடோனாவ ஒரு ஆங்கிள்ல பாத்தா நம்ம டொப்பி மூக்கி காதல் சந்தியா மாதியே இருக்கு. மூக்கு பொடப்பா இருக்கதால அப்டி இருக்குமோ?



சேதுபதி ரவுடின்னு சொல்லி சுத்திக்கிட்டு இருக்கது எல்லாம் இப்பத்தான் ”நானும் ரவுடிதான்”ல பாத்தோம். ஆள அடிக்க போய் அடி வாங்கிட்டு வர்றது ஹீரோயிண்ட்ட ரவுடிமாதிரியே இல்லைன்னு மொக்க வாங்குறது எல்லாமே நானும் ரவுடிதான் படத்த ஞாபகப்படுத்துது. இதுக்கு இடையில சந்தோஷ் நாராயணன் வேற போட்ட பாட்டையே போட்டு அறுத்து கொல்றாப்டி.

ஆனா ரெண்டாவது பாதி எல்லா விதத்துலயுமே பெட்டர். காமெடிலயும் சரி, சேதுபதி மடோனாக்கு இடையில நெருக்கம் அதிகமாவுற காட்சிகளும் சரி ரொம்ப சூப்பர். சந்தோஷ் நாரணான் இந்த படத்துல போட்ட ஒரே நல்ல பாட்டான “க..க க..க போ” பாட்டு எடுத்த விதமும் சூப்பர். அதே மாதிரி க்ளைமாக்ஸும். சோகமான காட்சிகளை விட சோகத்த நல்லா பில்ட் அப் பன்னி அதுக்அடுத்து வர்ற ஒரு சந்தோஷமான காட்சி நம்மள அழ வைச்சிடும். க்ளைமாக்ஸ்ல ஒரு செகண்ட் தொண்டை அடிச்சி அழுகை வந்துச்சி. அடப்பாவிகளா க்ளைமாக்ஸ் கூட உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் மாதிரி அழ வச்சிட்டீங்களேடா.

படம் My dear Desperado ங்குற ஒரு கொரியன் படத்தோட தழுவலாம். அத நம்ம பாக்கல. ஆனா இந்தப் படத்த பொறுத்த அளவு திரைக்கதைல ஒரு நேர்த்தி இருந்துச்சி.. பெரும்பாலான படங்கள் படம் நல்லா இருந்தாலும் பாத்துட்டு வரும்போது ஒரு Completeness ah ஃபீல் பன்ன மாட்டோம். ஆனா இந்தப் படத்துல அந்த முழுமை இருந்துச்சி. தழுவல்ங்குரதால நலன் குமரசாமிய ரொம்ப உள்ள இழுத்து பேச தேவையில்லைன்னு நினைக்கிறேன்.

என்னப் பொறுத்த அளவு படத்துல மொக்கையா நா ஃபீல் பன்னது சந்தோஷ் நாராயணனத்தான். ”கககக போ”  பாட்டத்தவற மத்த எல்லாம் மொக்கை. “ஏ பங்காளி” ன்னு ஒரு பாட்டு அப்புடியே ”சேதுபதி” படத்துல வர்ற “நா யாரு” பாட்டோட ட்யூன். இதுல BGM க்கு வேற அந்தப் பாட்ட போட்டு காது ஜவ்வு பிஞ்சிருச்சி.

அப்புறம் விஜய் சேதுபதிய கொஞ்சம் சீரியஸான ரவுடியாவே காமிச்சிருக்கலாம். அவர டம்மி ரவுடியா காமிச்சதால ஒண்ணு ரெண்டு காமெடிக்கு யூஸ் ஆச்சே தவற வேற எந்த புரயோஜனமும் இருந்த மாதிரி தெரியல. சீரியஸா காமிச்சி அந்த ரவுடி கும்பல் சம்பந்தமான ரெண்டு மூணு காட்சிகள கொஞ்சம் எஃபெக்டிவ்வா காமிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும். சத்யா “சுந்தர்” ரொம்ப நாளுக்கப்புறம் நடிச்சிருக்காரு. ஆனா Body la வெய்ட்டு இருக்கே தவற கேரக்டர்ல பெரிய வெய்ட்டு ஒண்ணும் இல்லை. சமுத்திரக்கணிய ட்ரெயிலர்ல பாத்தோன ஜாலியா இருந்தேன். ஆனா ரெண்டு நாள் கால்ஷீட் வாங்கி நாலு சீன் எடுத்து அனுப்பி விட்டாய்ங்க போல.

மொத்தத்துல ட்ரெயிலர பாத்துட்டு சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மாதிரியான ஒரு எதிர்பார்ப்போட போனா கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா நிச்சயம் காதலும் கடந்து போகும் நல்ல படம்ங்குறதுல எந்த டவுட்டும் இல்லை. கண்டிப்பா பாக்கலாம்.



Thursday, March 10, 2016

Soggade Chinni Nayana !!!


Share/Bookmark
தெலுங்குல மத்த ஹீரோக்களோட படங்களோட கம்பேர் பன்னும்போது நாகர்ஜூனாவோட படங்கள் கொஞ்சம் வித்யாசப்படும். மத்த ஹீரோக்கள் படங்கள்ல ஆக்‌ஷன் அடிதடி வெட்டு குத்துக்கள்லாம் கொஞ்சம் அதிகமா இருக்கும். இவரு படத்துல ஆக்‌ஷன விட ரொமான்ஸுதான் அதிகமா இருக்கும். ஆம்பள படத்துல சந்தானம்  “எனக்கு சத்தம் கம்மியா இருக்கனும்.. ரத்தம் ஜாஸ்தியா இருக்கனும்” ன்னு சொல்ற மாதிரி நாகர்ஜுனாவுக்கு “ரத்தம் கம்மியா இருக்கனும்…. முத்தம் ஜாஸ்தியா இருக்கனும்”. ஒரு சின்ன உதாரணம். ஒரு ரெண்டு வருஷம் முன்னால “BHAI” ன்னு ஒரு படம் வந்துச்சி. படத்த பாத்தவியிங்க ஏண்டா வந்துச்சின்னு கூட ஃபீல் பன்னாய்ங்க. அதுல ஒரு சீன்.

ரவுடிங்க கூட சண்டை போட்டுகிட்டு அடி பின்னிக்கிட்டு இருப்பாரு. எல்லாரையும் அடிச்சி போட்டுட்டு வில்லன் தலையில துப்பாக்கி வைப்பாரு. ஆனா சுட மாட்டாரு. ஏன்னு கேட்டா ”மூணுங்குறது என்னோட லஞ்ச் டயம் அப்ப அண்ணத்துல கைவைப்பேனே தவற யாரு கண்ணத்துலயும் கை வைக்க மாட்டேன்” ங்குற மாதிரி ”மணிய பாத்தியா 6 ஆயிடுச்சி. ஆறு மணிக்கு மேல Girls கூட மட்டும் தான் விளாடுவேன்” ன்னு சொல்லிட்டு போய் பப்புல டான்ஸ் ஆடிக்கிட்டு இருப்பாரு. எல்லா படங்கள்லயும் அப்டித்தான். ரொமான்ஸூதான் கொஞ்ச தூக்கலா இருக்கும். அதவிட இவர் படங்கள நம்பி போயிட முடியாது. எப்பயாச்சும் தான் நல்லாருக்கும். பல சமயம் பெரிய ஆப்பா எடுத்து சொருவி விட்டுருவாரு.

நம்ம யாவரும் நலம் எடுத்த விக்ரம்.K.குமார் இயக்கத்துல இவரோட போன படம் “Manam” தாறு மாறு ஹிட்டு. படமும் அவ்ளோ சூப்பரா இருக்கும். ஏற்கனவே ரெண்டு மூணு பதிவுல அந்தப் படத்த பத்தி சொல்லிருக்கேன். இப்ப கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு படத்த குடுக்க முயற்சி செஞ்சிருக்கதுதான் இந்ந Soggade Chinni Naina.

நாகார்ஜுன் லண்டன்ல பெரிய டாக்டர். மனைவி ப்ரியங்கா திரிபாதி. திரிபாதின்னா மீதி எங்கனு கேக்குறீங்களா? மொத்தமே அவ்வளவுதாங்க. நாகர்ஜூனா எப்ப பாத்தாலும் வேலை வேலைன்னு மனைவிகிட்ட சரியாவே பேசி பழகாம இருக்க திரிபாதி கடுப்பாகி டைவர்ஸ் பன்னிக்கலாம்னு சொல்லுது. நாகர்ஜூனாவும் அதுக்கு ஒத்துக்கிட்டு டைவர்ஸ் வாங்க ஊருக்கு வர்றாங்க. ஊர்ல நாகர்ஜூனாவோட அம்மா ரம்யா கிருஷ்ணன். சித்தப்பா சித்தி மாமா மாமின்னு வழக்கமான தெலுங்கு படத்துல வர்ற மாதிரி ஒரு பெத்த குடும்பம். டைவர்ஸ் மேட்டர கேட்டு ரம்யா கிருஷ்ணன் செம ஃபீல் ஆயிடுறாங்க.

அழுதுக்கிட்டே செத்துப்போன புருஷனோட ஃபோட்டோவ பாத்து (இன்னொரு நாகர்ஜூனா) வரச்சொல்லி கூப்டுறாங்க. ஆக்சிடெண்ட்ல செத்துப்போன நாகர்ஜூனா சின்ன வயசுல ஊர்ல உள்ள அத்தனை பொன்னுங்க கூடவும் ஒரே லூட்டி. அதே மாதிரி நரகத்துல உள்ள பொண்ணுங்கள கூட கரெக்ட் பன்னி அங்கயும் ஜாலியா வாழ்ந்துகிட்டு இருக்காரு. ரம்யா கிருஷ்ணன் கூப்ட உடனே, அப்பா நாகர்ஜூனாவ ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ரம்யா கிருஷ்ணன் கண்ணுக்கு மட்டும் தெரியிற மாதிரி வரத்த குடுத்து கீழ அனுப்பி விடுறாரு எமராஜா.

அப்புறம் என்ன கீழ வந்த அப்பா நாகர்ஜூனா தத்தியான அவரோட பையன் நாகர்ஜூனாவுக்குள்ள அப்பப்ப போயி வந்து அவனுக்கும்  பிரியங்க திரிபாதிக்கும் இடையில லவ்வ டெவலப் பன்னி விடுறாரு. ஒரு சீன்ல பையன் நாகர்ஜூனா உடம்புக்குள்ள அப்பா ஆவி போய் பிரியங்கா திரிபாதிகிட்ட ரொமான்ஸ் பன்ன ஸ்டார்ட் பன்னுவாரு. நாகூட என்னடா சிந்து சமவெளிய விட கேவலமா இறங்கிட்டாய்ங்களேன்னு நினைச்சேன். நல்ல வேளை அந்த அளவுக்கு போகல.

இந்தப் படத்துலயும் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் வைக்க வாய்ப்பு இருந்தா கூட இதுலயும் ரொமான்ஸ் தான் தூக்கல். வாய தொறந்த மேனிக்கு வைச்சிக்கிட்டே எல்லா புள்ளைங்களையும் கரெக்ட் பன்னிடுறாப்ள. ரம்யா கிருஷ்ணன் செம. அப்ப இருந்த மாதிரியே இப்பயும்.

படத்துல மிகப்பெரிய பலம் என்னன்னா அனூப் ரூபன்ஸோட மியூசிக் தான். எல்லா பாட்டுமே செம. மனம் படத்துக்கும் இவர்தான் மியூசிக். இப்ப இருக்க மியூசிக் டைரக்டர்கள்ல இவர் கொஞ்சம் பரவால்ல. DSP யையும் S.S.தமனையும் மிக்ஸ் பன்ன மாதிரியான இசை. ரொம்பவே நல்லாருக்கு.

எப்பவுமே ஒரு படத்தோட ஆடியோ டவுன்லோட் பன்னும்போது முதல்ல SPB, மனோ , ஷங்கர் மஹா தேவன், ஹரிஹரன், சாதனா சர்க்கம், மது ஸ்ரீ இவங்க பாடுன பாட்டுங்க எதாவது இருக்கான்னு பாத்து அதத்தான் டவுன்லோட் பன்னுவேன். ஆனா சமீப காலமா நம்மூர் இசையமைப்பாளர்கள் இவங்களையெல்லாம் சுத்தமா மறந்துட்டாய்ங்க. நாங்களே இசை.. நாங்களே பாடிக்கிறோம்னு பெரிய சிங்கர்களை இப்பல்லாம் சுத்தமா யூஸ் பன்றதே இல்லை.  நம்மல்லாம் 60 படத்துக்கிட்ட இசையமைச்ச DSP ய நக்கல் அடிச்சிட்டு இருக்கோம். ஆனா இப்ப வந்த அனிரூத்து, சந்தோஷ் நாராயணனுக்கெல்லாம் நாலு படத்துலயே ட்யூனு ரிப்பீட் ஆக ஆரம்பிச்சிருச்சி. இந்தப் படத்துல ரொம்ப நாளுக்க்கப்புறம் ஹரிஹரன் பாடுன பாட்ட கேட்டதும் எனக்கு ரொம்ப புடிச்சிருச்சி.  20 தடவைக்கு மேல அன்னிக்கே கேட்டுட்டேன். வீடியோ லின்க் கீழ.


. ”நீ நவ்வே ஹாய்கா உந்தி” ன்னு ஷ்ரேயா கோஷல் ஒரு பாட்டு பாடிருக்கு. அதுவும் செம. நாகர்ஜூனா ஆளு செமையா இருக்காரு. திரிபாதியும் செம்ம அழகு. நம்ம ப்ரம்மன் படத்துல சசி குமாருக்கு ஹீரோயினா நடிச்ச புள்ளை தான். அதுல சுமார் பீஸா இருந்தது இதுல சூப்பரா இருக்கு.



இந்த கதையை இன்னும் சுவாரஸ்யமா காமிச்சிருக்கலாம். ஆனா திரைக்கதை சற்று டொம்மை தான். பெரும்பாலான காட்சிகள் நாகர்ஜூனா புள்ளைங்கள கரெக்ட் பன்றதத்தான் காமிக்கிறாய்ங்க. இந்த பொங்கலுக்கு வந்த Nannaku Prematho, Dictator படங்களை விட இந்தப்படம்தான் செம ஹிட்டு. ஆனா படம் ரொம்ப சுமார் ரகம் தான். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...