
தெலுங்குல
மத்த ஹீரோக்களோட படங்களோட கம்பேர் பன்னும்போது நாகர்ஜூனாவோட படங்கள் கொஞ்சம் வித்யாசப்படும்.
மத்த ஹீரோக்கள் படங்கள்ல ஆக்ஷன் அடிதடி வெட்டு குத்துக்கள்லாம் கொஞ்சம் அதிகமா இருக்கும்.
இவரு படத்துல ஆக்ஷன விட ரொமான்ஸுதான் அதிகமா இருக்கும். ஆம்பள படத்துல சந்தானம் “எனக்கு சத்தம் கம்மியா இருக்கனும்.. ரத்தம் ஜாஸ்தியா
இருக்கனும்” ன்னு சொல்ற மாதிரி நாகர்ஜுனாவுக்கு “ரத்தம் கம்மியா இருக்கனும்…. முத்தம்
ஜாஸ்தியா இருக்கனும்”. ஒரு சின்ன உதாரணம். ஒரு ரெண்டு வருஷம் முன்னால “BHAI” ன்னு ஒரு
படம் வந்துச்சி. படத்த பாத்தவியிங்க ஏண்டா வந்துச்சின்னு கூட ஃபீல் பன்னாய்ங்க. அதுல
ஒரு சீன்.
ரவுடிங்க
கூட சண்டை போட்டுகிட்டு அடி பின்னிக்கிட்டு இருப்பாரு. எல்லாரையும் அடிச்சி போட்டுட்டு
வில்லன் தலையில துப்பாக்கி வைப்பாரு. ஆனா சுட மாட்டாரு. ஏன்னு கேட்டா ”மூணுங்குறது
என்னோட லஞ்ச் டயம் அப்ப அண்ணத்துல கைவைப்பேனே தவற யாரு கண்ணத்துலயும் கை வைக்க மாட்டேன்” ங்குற மாதிரி ”மணிய பாத்தியா 6 ஆயிடுச்சி. ஆறு மணிக்கு மேல Girls கூட மட்டும் தான்
விளாடுவேன்” ன்னு சொல்லிட்டு போய் பப்புல டான்ஸ் ஆடிக்கிட்டு இருப்பாரு. எல்லா படங்கள்லயும்
அப்டித்தான். ரொமான்ஸூதான் கொஞ்ச தூக்கலா இருக்கும். அதவிட இவர் படங்கள நம்பி போயிட
முடியாது. எப்பயாச்சும் தான் நல்லாருக்கும். பல சமயம் பெரிய ஆப்பா எடுத்து சொருவி விட்டுருவாரு.
நம்ம
யாவரும் நலம் எடுத்த விக்ரம்.K.குமார் இயக்கத்துல இவரோட போன படம் “Manam” தாறு மாறு
ஹிட்டு. படமும் அவ்ளோ சூப்பரா இருக்கும். ஏற்கனவே ரெண்டு மூணு பதிவுல அந்தப் படத்த
பத்தி சொல்லிருக்கேன். இப்ப கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு படத்த குடுக்க முயற்சி செஞ்சிருக்கதுதான்
இந்ந Soggade Chinni Naina.
நாகார்ஜுன்
லண்டன்ல பெரிய டாக்டர். மனைவி ப்ரியங்கா திரிபாதி. திரிபாதின்னா மீதி எங்கனு கேக்குறீங்களா?
மொத்தமே அவ்வளவுதாங்க. நாகர்ஜூனா எப்ப பாத்தாலும் வேலை வேலைன்னு மனைவிகிட்ட சரியாவே
பேசி பழகாம இருக்க திரிபாதி கடுப்பாகி டைவர்ஸ் பன்னிக்கலாம்னு சொல்லுது. நாகர்ஜூனாவும்
அதுக்கு ஒத்துக்கிட்டு டைவர்ஸ் வாங்க ஊருக்கு வர்றாங்க. ஊர்ல நாகர்ஜூனாவோட அம்மா ரம்யா
கிருஷ்ணன். சித்தப்பா சித்தி மாமா மாமின்னு வழக்கமான தெலுங்கு படத்துல வர்ற மாதிரி
ஒரு பெத்த குடும்பம். டைவர்ஸ் மேட்டர கேட்டு ரம்யா கிருஷ்ணன் செம ஃபீல் ஆயிடுறாங்க.
அழுதுக்கிட்டே
செத்துப்போன புருஷனோட ஃபோட்டோவ பாத்து (இன்னொரு நாகர்ஜூனா) வரச்சொல்லி கூப்டுறாங்க.
ஆக்சிடெண்ட்ல செத்துப்போன நாகர்ஜூனா சின்ன வயசுல ஊர்ல உள்ள அத்தனை பொன்னுங்க கூடவும்
ஒரே லூட்டி. அதே மாதிரி நரகத்துல உள்ள பொண்ணுங்கள கூட கரெக்ட் பன்னி அங்கயும் ஜாலியா
வாழ்ந்துகிட்டு இருக்காரு. ரம்யா கிருஷ்ணன் கூப்ட உடனே, அப்பா நாகர்ஜூனாவ ஒரு குறிப்பிட்ட
காலத்துக்கு ரம்யா கிருஷ்ணன் கண்ணுக்கு மட்டும் தெரியிற மாதிரி வரத்த குடுத்து கீழ
அனுப்பி விடுறாரு எமராஜா.
அப்புறம்
என்ன கீழ வந்த அப்பா நாகர்ஜூனா தத்தியான அவரோட பையன் நாகர்ஜூனாவுக்குள்ள அப்பப்ப போயி
வந்து அவனுக்கும் பிரியங்க திரிபாதிக்கும்
இடையில லவ்வ டெவலப் பன்னி விடுறாரு. ஒரு சீன்ல பையன் நாகர்ஜூனா உடம்புக்குள்ள அப்பா
ஆவி போய் பிரியங்கா திரிபாதிகிட்ட ரொமான்ஸ் பன்ன ஸ்டார்ட் பன்னுவாரு. நாகூட என்னடா
சிந்து சமவெளிய விட கேவலமா இறங்கிட்டாய்ங்களேன்னு நினைச்சேன். நல்ல வேளை அந்த அளவுக்கு
போகல.
இந்தப்
படத்துலயும் நிறைய ஆக்ஷன் காட்சிகள் வைக்க வாய்ப்பு இருந்தா கூட இதுலயும் ரொமான்ஸ்
தான் தூக்கல். வாய தொறந்த மேனிக்கு வைச்சிக்கிட்டே எல்லா புள்ளைங்களையும் கரெக்ட் பன்னிடுறாப்ள.
ரம்யா கிருஷ்ணன் செம. அப்ப இருந்த மாதிரியே இப்பயும்.
படத்துல
மிகப்பெரிய பலம் என்னன்னா அனூப் ரூபன்ஸோட மியூசிக் தான். எல்லா பாட்டுமே செம. மனம்
படத்துக்கும் இவர்தான் மியூசிக். இப்ப இருக்க மியூசிக் டைரக்டர்கள்ல இவர் கொஞ்சம் பரவால்ல.
DSP யையும் S.S.தமனையும் மிக்ஸ் பன்ன மாதிரியான இசை. ரொம்பவே நல்லாருக்கு.
எப்பவுமே
ஒரு படத்தோட ஆடியோ டவுன்லோட் பன்னும்போது முதல்ல SPB, மனோ , ஷங்கர் மஹா தேவன், ஹரிஹரன்,
சாதனா சர்க்கம், மது ஸ்ரீ இவங்க பாடுன பாட்டுங்க எதாவது இருக்கான்னு பாத்து அதத்தான்
டவுன்லோட் பன்னுவேன். ஆனா சமீப காலமா நம்மூர் இசையமைப்பாளர்கள் இவங்களையெல்லாம் சுத்தமா
மறந்துட்டாய்ங்க. நாங்களே இசை.. நாங்களே பாடிக்கிறோம்னு பெரிய சிங்கர்களை இப்பல்லாம்
சுத்தமா யூஸ் பன்றதே இல்லை. நம்மல்லாம் 60
படத்துக்கிட்ட இசையமைச்ச DSP ய நக்கல் அடிச்சிட்டு இருக்கோம். ஆனா இப்ப வந்த அனிரூத்து,
சந்தோஷ் நாராயணனுக்கெல்லாம் நாலு படத்துலயே ட்யூனு ரிப்பீட் ஆக ஆரம்பிச்சிருச்சி. இந்தப்
படத்துல ரொம்ப நாளுக்க்கப்புறம் ஹரிஹரன் பாடுன பாட்ட கேட்டதும் எனக்கு ரொம்ப புடிச்சிருச்சி.
20 தடவைக்கு மேல அன்னிக்கே கேட்டுட்டேன். வீடியோ
லின்க் கீழ.
.
”நீ நவ்வே ஹாய்கா உந்தி” ன்னு ஷ்ரேயா கோஷல் ஒரு பாட்டு பாடிருக்கு. அதுவும் செம. நாகர்ஜூனா
ஆளு செமையா இருக்காரு. திரிபாதியும் செம்ம அழகு. நம்ம ப்ரம்மன் படத்துல சசி குமாருக்கு
ஹீரோயினா நடிச்ச புள்ளை தான். அதுல சுமார் பீஸா இருந்தது இதுல சூப்பரா இருக்கு.
இந்த
கதையை இன்னும் சுவாரஸ்யமா காமிச்சிருக்கலாம். ஆனா திரைக்கதை சற்று டொம்மை தான். பெரும்பாலான
காட்சிகள் நாகர்ஜூனா புள்ளைங்கள கரெக்ட் பன்றதத்தான் காமிக்கிறாய்ங்க. இந்த பொங்கலுக்கு
வந்த Nannaku Prematho, Dictator படங்களை விட இந்தப்படம்தான் செம ஹிட்டு. ஆனா படம்
ரொம்ப சுமார் ரகம் தான்.
2 comments:
மொழி புரியாவிட்டாலும் நேரம் ஒதுக்கி பார்க்கின்றேன்[[
பல சமயம் பெரிய ஆப்பா எடுத்து சொருவி விட்டுருவாரு.//
உண்மைதான் நானும் பல படங்களில் பார்த்து அனுபவிச்சிருக்கேன்.
Post a Comment