ஒரு
நடிகர் முழுவீச்சுல நடிக்கிறத நிறுத்தி ரொம்ப நாள் ஆகுது. ஆனா அவர் நடிச்சப்போ ஏற்படுத்துன
தாக்கம் தமிழ் சினிமாவுல இன்னும் இம்மி அளவு கூட குறையல. இப்ப வர்ற ஒவ்வொரு படத்துலயும்
ஒவ்வொரு விதத்துல அவருடைய தாக்கம் இருக்கு. நா சொல்றது எம்.ஜி.ஆரையோ சிவாஜியையோ எம்.ஆர்.ராதாவையோ
இல்லை. நம்ம வைகை புயல் வடிவேலுவத்தான் சொல்றேன். எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவுக்கு
அவர் பேசுன ஒவ்வொரு வசனமும் எல்லா தட்டு மக்களுக்கும் அவ்வளவு ரீச் ஆயிருக்கு. அவர்
வசனம் இல்லாத சமூக வலைத்தளங்கள், அவர் காமெடி இல்லாத நகைச்சுவை சேனல்கள்ல ஒரு நாள்
கூட பாக்க முடியாது. அதே மாதிரி நம்மளே டெய்லி “முடியல” “இப்பவே கண்ணக்கட்டுதே” ”தம்பி
டீ இன்னும் வரல” “சேம் ப்ளட்” ன்னு எதாவது அவர் பேசின வசனத்த பேசாம இருக்கதில்லை. மனுசன்
சரித்திரத்துல நின்னுட்டாருப்பா. அந்த வரிசையில அவர் பேசிய வசனமான க.க.க.போ வை டைட்டிலா
வச்சி அடுத்து ஒரு படம்.
ரெண்டு
மாசத்துக்கு முன்னாலதான் நானும் ரவுடி தான் வந்துச்சி. ரெண்டு வாரத்துக்கு முன்னால
தான் சேதுபதி வந்துச்சி. அடுத்து ரொம்ப குறுகிய இடைவெளில விஜய் சேதுபதிக்கு இன்னொரு
படம். இன்னும் இடம் பொருள் ஏவல் மெல்லிசை, இறைவின்னு லைன்ல நிறைய வச்சிருக்காப்டி.
போறபோக்கப் பாத்தா வருசக் கடைசில வந்த படத்துல முக்காவாசி படம் விஜய் சேதுபதி படமாத்தான்
இருக்கப்போவுது. சரி இந்த காதலும் கடந்து போகும் எப்டி இருக்குன்னு பாப்போம். '
அஞ்சி
வருசம் ஜெயில்ல இருந்துட்டு வெளில வந்து ”அண்ணன் எதாவது நமக்கு பெருசா செய்வாறு” ன்னு
ஒரு ரவுடி கும்மலோட வெட்டியா சுத்திக்கிட்டு இருக்க "ரவுடி மாதிரி" ஆளு நம்ம சேதுபதி.
அப்பா அம்மா பேச்ச கேக்காம சென்னைக்கு வேலைக்கு வந்து ஆறு மாசத்துல இருந்த வேலை போய்
அடுத்த வேலைய தேடி தனியா அலைஞ்சிட்டு இருக்க மிடில் க்ளாஸ் பொண்ணு மடோனா செபஸ்டியன்.
ரெண்டு பேரும் எதிரெதிர் வீட்டுல குடியிருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏற்படுற
நட்பு.. இல்லை காதல்.. இல்லை நட்புன்னே வச்சிக்குவோம்.. அதுதான் படம்.
ஓவராலா
பாத்தா இது நம்ம விக்ரமன் எடுத்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தோட லேட்டஸ்ட்
வெர்ஷன்னு சொல்லலாம். அதுல திருடனா இருக்க கார்த்தி ரோஜாவ கஷ்டப்பட்டு பாடகியாக்கிட்டு
கடைசில எந்த க்ரெடிட்டும் எடுத்துக்காம கூட்டத்துல நின்னு வேடிக்க பாப்பாரு. அதே மாதிரி
இங்க ரவுடி மாதிரி இருக்க நம்ம சேதுபதி வேலை தேடிகிட்டு இருக்க மடோனாவுக்கு உதவி பன்றாரு.
அதுல சினிமாத்தனமான காட்சிகள் அதிகம் இருக்கும். இதுல நிறைய காட்சிகள் யதார்த்தமானதா
வச்சிருக்காங்க. அவ்ளோதான்.
முதல்
படத்துலயே ஒரு ஹீரோயின் எண்ட்ரிக்கு ஒரு தியேட்டரே கத்துதுன்னா அது இந்த புள்ளைக்காத்தான்
இருக்கும். மடோனா எண்ட்ரிக்கு செம்ம சவுண்டு. சேதுபதிக்கு கூட அவ்வளவு இல்லை. ப்ரேமம்
நம்மாளுகள என்ன பாடு படுத்தி வச்சிருக்கு பாருங்க. ஆனா சும்ம சொல்லக்கூடாது. செம அழகு.
அதோட அந்த புள்ளைக்கு கொடுத்த டப்பிங் வாய்ஸூம்
செம. முதல் பாதில பல காட்சிகள் ரொம்ப சுமார் ரகமா இருந்தாலும் அந்த புள்ளை மூஞ்சியப்
பாத்து ஆறுதல் படுத்திக்கலாம்.
இந்த
கேரக்டர் விஜய் சேதுபதிக்கு ஒண்ணும் புதுசில்லை. ஒவ்வொரு படமா இதே மாதிரி நடிச்சி பாத்திரமாவே
மாறிட்டாரு போல. முதல் பாதி முழுக்க எதப்பத்தியும்
கவலப்படாம படம் ரொம்ப கேஸூவலா ரொம்ப ஸ்லோவா போகுது. ஸ்லோவா போகுதுங்குறத ஒரு படத்துக்கு
நெகடிவ்வா சொல்ல முடியாது. நல்லா போனா போதும். இங்க நல்லா போகுதுன்னு சொல்ல முடியாது.
போகுது. ஒருசில இடத்துல லேசா சிரிப்பு வருது. விஜய் சேதுபதி மடோனா காம்பினேஷந்தான்
முதல் பாதில படத்த காப்பாத்துது. மடோனாவ ஒரு ஆங்கிள்ல பாத்தா நம்ம டொப்பி மூக்கி காதல்
சந்தியா மாதியே இருக்கு. மூக்கு பொடப்பா இருக்கதால அப்டி இருக்குமோ?
சேதுபதி
ரவுடின்னு சொல்லி சுத்திக்கிட்டு இருக்கது எல்லாம் இப்பத்தான் ”நானும் ரவுடிதான்”ல
பாத்தோம். ஆள அடிக்க போய் அடி வாங்கிட்டு வர்றது ஹீரோயிண்ட்ட ரவுடிமாதிரியே இல்லைன்னு
மொக்க வாங்குறது எல்லாமே நானும் ரவுடிதான் படத்த ஞாபகப்படுத்துது. இதுக்கு இடையில சந்தோஷ்
நாராயணன் வேற போட்ட பாட்டையே போட்டு அறுத்து கொல்றாப்டி.
ஆனா
ரெண்டாவது பாதி எல்லா விதத்துலயுமே பெட்டர். காமெடிலயும் சரி, சேதுபதி மடோனாக்கு இடையில
நெருக்கம் அதிகமாவுற காட்சிகளும் சரி ரொம்ப சூப்பர். சந்தோஷ் நாரணான் இந்த படத்துல
போட்ட ஒரே நல்ல பாட்டான “க..க க..க போ” பாட்டு எடுத்த விதமும் சூப்பர். அதே மாதிரி
க்ளைமாக்ஸும். சோகமான காட்சிகளை விட சோகத்த நல்லா பில்ட் அப் பன்னி அதுக்அடுத்து வர்ற
ஒரு சந்தோஷமான காட்சி நம்மள அழ வைச்சிடும். க்ளைமாக்ஸ்ல ஒரு செகண்ட் தொண்டை அடிச்சி
அழுகை வந்துச்சி. அடப்பாவிகளா க்ளைமாக்ஸ் கூட உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் மாதிரி
அழ வச்சிட்டீங்களேடா.
படம்
My dear Desperado ங்குற ஒரு கொரியன் படத்தோட தழுவலாம். அத நம்ம பாக்கல. ஆனா இந்தப்
படத்த பொறுத்த அளவு திரைக்கதைல ஒரு நேர்த்தி இருந்துச்சி.. பெரும்பாலான படங்கள் படம்
நல்லா இருந்தாலும் பாத்துட்டு வரும்போது ஒரு Completeness ah ஃபீல் பன்ன மாட்டோம்.
ஆனா இந்தப் படத்துல அந்த முழுமை இருந்துச்சி. தழுவல்ங்குரதால நலன் குமரசாமிய ரொம்ப
உள்ள இழுத்து பேச தேவையில்லைன்னு நினைக்கிறேன்.
என்னப்
பொறுத்த அளவு படத்துல மொக்கையா நா ஃபீல் பன்னது சந்தோஷ் நாராயணனத்தான். ”கககக போ” பாட்டத்தவற மத்த எல்லாம் மொக்கை. “ஏ பங்காளி” ன்னு
ஒரு பாட்டு அப்புடியே ”சேதுபதி” படத்துல வர்ற “நா யாரு” பாட்டோட ட்யூன். இதுல BGM க்கு
வேற அந்தப் பாட்ட போட்டு காது ஜவ்வு பிஞ்சிருச்சி.
அப்புறம்
விஜய் சேதுபதிய கொஞ்சம் சீரியஸான ரவுடியாவே காமிச்சிருக்கலாம். அவர டம்மி ரவுடியா காமிச்சதால
ஒண்ணு ரெண்டு காமெடிக்கு யூஸ் ஆச்சே தவற வேற எந்த புரயோஜனமும் இருந்த மாதிரி தெரியல.
சீரியஸா காமிச்சி அந்த ரவுடி கும்பல் சம்பந்தமான ரெண்டு மூணு காட்சிகள கொஞ்சம் எஃபெக்டிவ்வா
காமிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும். சத்யா “சுந்தர்” ரொம்ப நாளுக்கப்புறம்
நடிச்சிருக்காரு. ஆனா Body la வெய்ட்டு இருக்கே தவற கேரக்டர்ல பெரிய வெய்ட்டு ஒண்ணும் இல்லை.
சமுத்திரக்கணிய ட்ரெயிலர்ல பாத்தோன ஜாலியா இருந்தேன். ஆனா ரெண்டு நாள் கால்ஷீட் வாங்கி
நாலு சீன் எடுத்து அனுப்பி விட்டாய்ங்க போல.
மொத்தத்துல
ட்ரெயிலர பாத்துட்டு சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மாதிரியான
ஒரு எதிர்பார்ப்போட போனா கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா நிச்சயம் காதலும் கடந்து போகும்
நல்ல படம்ங்குறதுல எந்த டவுட்டும் இல்லை. கண்டிப்பா பாக்கலாம்.
3 comments:
ஆனால் உங்கள் விமர்சனத்தை அவ்வளவு சீக்கிரத்தில் கடந்து போக முடியாது
unga review and movie vida, post ku vekkira title semaiya iruku boss...
முத்துசிவா. நேற்று பேஸ்புக்ல நான் தான் உங்ககிட்ட பேசினேன்.
காதலும் கடந்து போகும் என்னை பொருத்த வரை காவிய படைப்பு. ரொம்ப அழகா எடுத்துருக்காரு இயக்குநர். சில படங்கள் சில நாள் கழிச்சு நமக்கு ரொம்ப பிடிக்கும் அப்படி இந்த படமும் இப்போ பார்த்தா உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். எல்லோரும் படம் பார்த்துட்டு மொக்க, சுமார்னு தான் சொன்னாங்க. ஆனால் நான் படம் பார்த்து விட்டு அசந்து விட்டேன். வழக்கமாக தமிழ் சினிமா கதைப்படி ஹீரோயின் மேல் பார்த்த உடன் காதல் 4 டூயட் சாங். 4 ஃபைட்னு இல்லாமல் ரொம்ப எதார்த்தமா இருக்கு இந்த படம். பாடல் பற்றி நீங்க சொன்னது கூட நீங்க இப்ப மறுபரிசீலனை பண்ணனும்னு கேட்டுக்கிறேன். (ஏனோ தானோ, போங்கு அய்யா போங்கு) பாடல்கள் எல்லாம் வித்தியாசமான அனுபவம் தரும் பாடல்கள். இப்போதும் சன்மியூசிக்கில் இந்த பாடல் பார்க்கும் போது என்னவென்று சொல்ல முடியாத ஒரு ஃபீல் வருகிறது இந்த பாடல்களை கேட்கும் போது. பின்னணி இசை தான் இந்த படத்தின் பலம். அந்த க்ளைமாக்ஸில் மடோனா காரில் இருந்து விஜய்சேதுபதியை பார்க்கும் போது வருமே ஓரு மியூசிக். ஆகா ஆகா. இதுவல்லவோ தரமான படம். இந்த படத்தை பற்றி உங்களின் விமர்சனத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். மீண்டும் இந்த படத்தை ஒரு முறை பாருங்கள். உங்கள் ரசிகனுக்காக காதலும் கடந்து போகும் படத்தை மீண்டும் விமர்சனம் எழுத கேட்டுக்கொள்கிறேன். நன்றி முத்துசிவா
Post a Comment