Thursday, January 30, 2014

கொஞ்சம் குடிங்க பாஸ்!!!


Share/Bookmark
குறிப்பு: இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல . திநகர் சரவணா ஸ்டோர்ஸ விட அதிகமா ஒரு கடையில கூட்டம் கூடுதுன்னா அது நம்ம டாஸ்மாக்குகள்ல தான். புதுப்படம் ரிலீஸ் ஆனா மொதநாள் மட்டும் தான் தியேட்டர்ல கூட்டம் அப்டி இருக்கும். ஆனா இங்க தினம் தினம் புதுப்பட ரிலீஸ் கூட்டம் தான். அள்ளுது. ரஜினியும் கவுண்டமணியும் மன்னன் படத்துல மொத டிக்கெட் வாங்கிட்டு கிழிஞ்ச சட்டையோட “சைனு... மோதரம்” ன்னு வர்ற மாதிரி தான் சாய்ங்காலம் இந்த கடைக்குள்ள போற ஒவ்வொருத்தரும் திரும்பி வர்றாய்ங்க.  பொங்கலுக்கு வந்த படமெல்லாம் 50 கோடி கலெக்சன் பாக்கவே நாக்கு தள்ளுது. ஆனா ரெண்டே நாளுல டாஸ்மாக்குகள்ல 235 கோடி கலெக்சன்... எப்பூடி.. அப்டி இந்த குடியில என்ன தான் இருக்கு. ஏன் மக்கள் இவ்வளவு ஆர்வாமா இருக்காங்க... மனித சமுதாய முன்னேற்றத்துக்கு இந்த குடி எவ்வளவு உறுதுணையா இருக்குன்னு  இப்போ பாப்போம்.


1. மொதல்ல கைய குடுங்க. நீங்க ஒரு குடிகாரனா ஆயிட்டாலே இந்த வெக்கம், மானம், சூடு, சொறைனை அசிங்கமான உணர்ச்சிகள்லாம் உங்கள விட்டு போயிரும். உங்க பையன் உங்கள மதிக்க மாட்டான். உங்க மனைவி உங்கள படு கேவலமா திட்டுவாங்க. ரோட்டுல போற வர்றவன்லாம் காறி துப்புவான். ஆனா நமக்கு தான் ஒண்ணுமே தெரியாதே. அதனால குடிக்க  ஆரம்பிச்சிட்டாலே நீங்க காலர தூக்கி விட்டுக்கிட்டு  பெருமையா சொல்லிக்கலாம் “NOW I AM A SHAMELESS FELLOW" ன்னு. 

2. பஸ் டிக்கெட்டு ட்ரெயின் டிக்கெட்டு ஃப்ளைட் டிக்கெட்டுன்னு எல்லாத்தையும் ஏத்திபுட்டாய்ங்க. இப்பல்லாம் பக்கத்து ஊருக்கு போகனும்னாலே காசு ரொம்ப செல்வாகுது. ஆனா நூறு ரூவா செலவு பண்ணா லண்டன், அமெரிக்கா, சுட்சர்லாந்து ஏன் நிலாவுக்கே கூட பொய்ட்டு வரலாம். ஒரு குவாட்டர போட்டுட்டு நீட்டிகிட்டா போதும். அப்டியே பசிபிக் பெருங்கடல் வழியா பறந்து போய் அமெரிக்காவுல ஒரு யூ டர்ன போட்டு அப்டியே ஷாட் கட்டுல நாசா வழிய நிலாவுல போய் லஞ்ச் சாப்டு டின்னருக்கு
திரும்ப வீட்டுக்கு வந்துடலாம். தெளிவா இருந்தா இதெல்லாம் நடக்குமா? 

3. குடிக்க ஆரம்பிச்சிட்டாலே நீங்க ஒரு திறந்த புத்தகமா மாறிடுவீங்க. ”உயிரே போனாலும் இந்த ரகசியத்த சொல்லிடாத”ன்னு ஒருத்தன் நம்மகிட்ட சொல்லிருப்பான். ஆனா ரெண்டு ரவுண்டு உள்ள போனா போதும் யார்கிட்ட அத சொல்லக்கூடாதுன்னு சொன்னானோ அவன்கிட்டயே அத்தனையும் அச்சி பிசிறாம சொல்லுவோம்.

4. மனுஷங்க பலபேர்கிட்ட இல்லாத ஒரு நல்ல பழக்கம் என்னன்னா இந்த சகிப்புத்தன்மை தான்.  சரக்கு உள்ள பொய்ட்டாலே இந்த சகிப்பு தன்மை எங்கருந்து தான் வரும்னு தெரியல. தெளிவா இருந்தா ஏசி ரூம்லதான் படுப்பேன்னு சொல்லி அடம் புடிப்பாய்ங்க. அடுத்தவன் எச்சி துப்புனாலே மூஞ்ச சுழிப்பாய்ங்க. ஆனா கூட கொஞ்சம் உள்ள பொய்ட்டா அவ்ளோதான்.. ரோட்டு ஓரமா  சாக்கடைய ஒட்டி குபுக்குன்னு வாந்தி எடுத்து அது மேலயே படுத்து பொறண்டுக்குவாய்ங்க. வெரி டீசண்ட் கய்ஸ்ன்னு பேர் கூட உங்களுக்கு கிடைக்கும்.


5. எதோ கறுப்பு பணம்ன்றாங்க.. அந்நிய சலவலானிங்குறாங்க.. ஹவாலாங்குறாங்க..  வரி ஏய்ப்புங்குறாங்க.. இப்படிப்பட்டவங்க இருக்குற நாட்டுல நாடு நல்லாருக்கனும்னு நெனைக்கிற ஒரே ஜீவன்கள் இந்த குடிமகன்கள் தான். வாங்குற சம்பளத்துல கால்பகுதியோ இல்லை பாதியோ இல்லை முக்கால்வாசியோ (அவங்க அவங்க experience ah பொறுத்து) திரும்ப நாட்டுக்கு வருவாயா நாமளே குடுத்துடுறோம். நம்ம வீட்டுல சோறு இல்லைன்னாலும் பரவால்லை நாட்டு நல்லா இருக்கனும்னு நெனைக்கிறவிங்க குடிகாரய்ங்க மட்டும் தான்.

6.  இன்னொரு முக்கியமான விஷயம் ஷேரிங்ங்ங்.. அவசரம்னு கேட்டா அம்மஞ்சல்லி தரமாட்டாய்ங்க. ஆனா குடிக்கிறப்ப மட்டும் இவய்ங்க பண்ற அலும்பு இருக்கே.. “பாஸ் இத சாப்டுங்க பாஸ்”... ‘வெறும் வயித்துல குடிக்காதீங்க பாஸ்... இந்த சிக்கன லைட்டா கடிங்க பாஸ்...” ”இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்திக்குங்க பாஸ்”.. “என்ன அதுக்குள்ள எழுந்துட்டீங்க.. இன்னும் ரெண்டு பீரு இருக்கு.. அட உக்காருங்க பாஸ்” ன்னுஅவனுக்கு இல்லைன்னாலும்  அடுத்தவன் வயிறு கெட்டுப் போயிறக்கூடாதுன்னு அள்ளி அள்ளி குடுப்பாய்ங்க.

7. நம்மூர்ல வேற மக்கள் தொகை ஏறிகிட்டே போவுது. என்பது கோடி நூறு கோடி நூத்தம்பது கோடின்னு அது பாட்டுக்கு போயிகிட்டே இருக்கு. இன்கம்மிங் அதிகமா இருக்கு ஆனா அவுட் கோயிங் ரொம்ப கம்மியா இருக்கு. எதச் சொல்றேன்னு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அதனால அவுட்கோயிங்க அதிகப்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த டாஸ்மாக். வேணுங்குற அளவு குடிங்க. கொஞ்ச நாள்ள லிவரு லீவராயி கிட்னி சட்னியாயி.. அப்புறமென்ன நாமளும் முகேஷ் மாதிரி அவுட்கோயிங் தான். அதானால மக்கள் தொகை கட்டுப்பாட்டுலயும் நாட்டுக்கு உதவுறது நம்ம ”குடி”மக்கள் தான்.

8.  குடிகாரனா ஆயிட்டாலே பல குடும்பங்களை அழிக்கிற புண்ணியமெல்லாம் வந்து உங்களச் சேரும். நீங்க ஃபுல்லா குஸ்டு ரோட்டுல தெளிவா போயிட்டு இருக்க எவன் மேல வேணாலும் வண்டிய விட்டு அடிக்கலாம். சும்மா ஒரே ஒரு தடவ மட்டும் அவனுக்கு உயிர் போவும்.அவன் குடும்பம் அத்தோட காலி ஆவும். சில நேரங்கள்ல நமக்கு கூட ஒரு தடவ உயிர் போவும்.  இந்த புண்ணியமெல்லாம் யாருக்கு கெடைக்கும்?

9. கமலஹாசன் இன்னா சொல்லிருக்காரு. மன்னிப்பு கேக்குறவன் மனுஷன். மன்னிக்கிறவன் வீரன்ன்னு. ஒருத்தன் மனுசனாவுறதும் வீரனாவுறதும் இந்த தண்ணியாலதான். ஒருத்தன் நம்மள அசிங்க அசிங்கமா திட்டிருப்பான். வெட்டுக்குத்து ரேஞ்சுல ரெண்டு பேருக்கு சண்டை நடக்கும். ஆனா சாயங்காலம் ஒரு பாட்டில தூக்கி முன்னால வச்சா... “ஹி... ஹி...அப்புறம் மாப்ளே... சும்மா சும்மா நீ கோவப்படுவ” அப்டின்னு சொல்லிட்டு சமாதானமா 
போயிருவாய்ங்க. நா மொதல்ல சொன்ன மாதிரி மா.வெ.சூ.சொ ங்குற ஃபீலிங்கே இருக்காது.

10 .இந்த ப்ளானிங்குங்ற மேட்டர யாரு ஃபாலோ பண்றாங்களோ இல்லியோ.. நம்ம குடிமகன்கள் கரெக்டா ஃபாலோ பன்றாங்க. மறு நாள் கடை லீவுண்ணா இவிங்க ரியாக்சன பாக்கனுமே.. மொத வேலையா போய் ரெண்டு பாட்டிலு வாங்கிட்டு வந்து ஸ்டாக் வச்சா தான் நடுக்கம் நிக்கிது.

11. வாழ்க்கையில போனா வராதது லிஸ்டுல முக்கியமான ஒண்ணு நம்ம வயசு. ஆனா தண்ணியப்போட்டா அதக்கூட திரும்ப கொண்டு வந்துடலாம். ரெண்டு ரவுண்டு உள்ள விட்டா அப்டியே பச்சை கொழந்தையாவே மாறிடுவாய்ங்க. அதான் இந்த சின்னக் குழந்தை நடை பழகும் போது விழுந்து விழுந்து எந்திரிக்குமே அந்த ஸ்டேஜூ.. என்ன ஒரே ஒரு வித்யாசம்னா சின்னக்குழந்தையில விழுந்து விழுந்து எந்திரிச்சா வீட்டுல உள்ளவங்க குழந்தை நடக்க ஆரம்பிச்சிட்டான்னு சந்தோஷப்படுவாங்க. ஆனா இப்போ விழுந்தா ஒரு பய கண்டுக்க மாட்டான்.. மூக்கு முகரையெல்லாம் பேந்து போயிரும்.

12 அது மட்டுமா பல கவிஞர்கள உருவாக்குறதும் இந்த தண்ணி தான். தெளிவா இருந்தா தொடர்ந்து நாலு வார்த்தை சேத்து பேச முடியாது. ஆனா உள்ள கொஞ்சம் விட்டுட்டா... “மெளண்ட் ரோடு அண்ணா சால... சூப்பர் ஸாரு முரட்டுக்காளை” “வானமோ நீலம்.. நீ தான் என் பாலம்” ந்ன்னு அப்டியே கவிதையா கக்குவாய்ங்க. அதுவும் லவ் பண்ணிட்டு இருக்கவிங்க தண்ணியடிக்கும் போது கூட எவனாவது மாட்னா அவனுக்கு மேட்டர் ஓவர்னு அர்த்தம்.



Friday, January 17, 2014

ஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு!!!


Share/Bookmark
இந்த படம் பாத்து முடிக்கும் போது நண்பர் ஒருத்தர் கொஞ்ச நாளுக்கு முன்னாடி இந்த படத்த ஒரு வடிவேலு காமெடிகூட கம்பேர் பண்ணி போட்ட ஸ்டேட்டஸ் தான் ஞாபகம் வந்துச்சி. வடிவேலுவ ஒரு நாலு பேர் ஒரு சந்துக்குள்ள விட்டு சாணியால அடிச்சிடுவாய்ங்க. உடனே வடிவேலு ”குருநாதா இனிமேலும் பொறுக்க முடியாது குருநாதா” ன்னு சொல்லிட்டு போய் அவரு குருநாதன்னு ஒரு  பேட்டை ரவுடிய அழைச்சிட்டு வந்து “இப்போ அடிங்கடா இப்போ அடிங்கடா” ன்னு கத்த வடிவேலுக்கு விழுந்தத விட அதிகமா அடி விழும் குருநாதனுக்கு. “குருநாதா.. எனக்காவது சாணியால அடிச்சாய்ங்க. உனக்கு மாட்டு ஐட்டத்தையும் மனுச ஐட்டத்தையும் கலந்து அடிச்சிட்டாய்ங்க குருநாதா”ன்னு அவர வடிவேலு  கலாய்க்க குருநாதன் அந்த ரவுடிங்கள விட்டுட்டு வடிவேலுவ வெட்ட தொறத்துவாறு. ஜில்லா பாத்தவங்களுக்கு வடிவேலு யாரு குருநாதன் யாருன்னு நல்லா புரிஞ்சிருக்கும். இவருக்கு விழுறது பத்தாதுன்னு “இப்ப பாருங்கடா கேரளாவுலருந்து என் குருநாதன கூப்புடுறேன்”ன்னு மோகன்லால அழைச்சிட்டு வந்து... என்னத்த சொல்ல...

அந்தாளு அந்த ஊர்ல ஒரு பெரும்புள்ளியா கெத்தா சுத்திகிட்டு இருந்தாரு. அவர இங்க கூட்டிட்டு வந்து இதுக்கு மேல இந்த பக்கமே வரமுடியாத படி ஒரு படத்துல நடிக்க வச்சிருக்காய்ங்க. என்னாப்பா.. படம் பாத்த எல்லாரும் மோகன்லால் சூப்பர், செமையா நடிச்சிருக்காரு பட்டைய கெளப்பிருக்காருங்குறாங்க நீ என்னான்னா இப்புடி சொல்றன்னு தானே கேக்குறீங்க. சத்தியமா நா உண்மையத்தாங்கோ சொல்றேன். இப்புடி ஒரு டம்மி ரோல்ல நடிக்கிறதுக்கு நம்ம மலையாள சூப்பர்ஸ்டார் சும்மாவே
இருந்துருக்கலாம்.

ராஜ்கிரன் பல படங்கள்ல நடிச்சி நசுக்கித் தூக்கிப்போட்ட ஒரு ரோல்ல நடிக்கிறதுக்கு கேரளாவரைக்கும் போய் இவர கூட்டிவந்துருக்காய்ங்க. ஆனா இத இப்போ ராஜ்கிரண்கிட்ட கொண்டு போயிருந்தா கூட பொடணிலயே அடிச்சி திருப்பி அனுப்பிருப்பாரு. அப்புடி ஒரு கரடி காரித்துப்புற மாதிரி ஒரு ரோல் மோகன்லாலுக்கு. வழக்கமா தமிழ் சினிமால ஒரு பெரிய ஹீரோ டான் கேரக்டர் பண்ணா எப்படி இருக்கும்? அவர் தப்பு செய்வாரு.. . கட்டைப் பஞ்சயத்து பண்ணுவாரு. கஞ்சா கடத்துவாரு. ஆனா ஏழைகளுக்கு ஒரு ப்ரச்சனைன்னா தட்டி கேப்பாரு. நியாயம் கேட்டு  வர்றவங்களுக்கு நியாயம் வழங்குவாரு. இதானே நம்மூர் வழக்கம். நம்ம பண்பாடு. அப்பதானே அந்த கேரக்டருக்கு ஒரு மரியாதை. வேலுநாயக்கர்லருது, நந்தா ராஜ்கிரன் வழியா கடைசியா தலைவா சத்யராஜ் வரைக்கும் இத தானே ஃபாலோ பண்ணாங்க. அப்போதானே அந்த கேரக்டருக்கு ஒரு கெத்து. ஆனா இங்க மோகன்லால ஆக்கிவிட்டுருக்காய்ங பாருங்க. தமிழ் மசாலா படங்கள்ல நடிக்கிற ஒரு தரைலோக்கல் வில்லனா அவர காமிச்சிருக்காய்ங்க. தப்பு செய்றாரு. ஏழைங்க வயித்துல அடிக்கிறாரு. நல்ல விஷயம் ஒண்ணு பண்ண மாட்டேங்குறாரு. இதுக்கு எதுக்குடா மோகன்லாலு?

அதுகூட பரவால்ல. வில்லத்தனத்தயாது ஒழுங்கா பண்றாரான்னு பாத்தா அதுவும் இல்லை. தெரியாத்தனமா இந்தாளுக்கு சிவன்னு பேரு வச்சிட்டாய்ங்க. ”ஷிவன் என்ன கேக்கனும்னு  நெனக்கிறானோ அத தான் நீ பேஷனும்”  “சிவன் தண்டிச்சா உஷிர் (உயிர்) இருக்காது. மன்னிச்சா உஷிர் மட்டும் தான் இருக்கும்”  “சிவனுக்கு அப்புறம் தாண்டா சக்தி” “நான் சிவன்டா.. அழிச்சிடுவேன்டா...” அப்புடிடா இப்புடிடா... டேய் கொஞ்சம் பொறுடா.. பேசுன பஞ்ச் டயலாக் அளவுக்காவது எதாவது பண்ணிருக்கியாடா? அட்லீஸ்ட் ஒரு மர்டர் பண்ணிருக்கியாடா படத்துல? அடுத்தவன கொல்லனும்னா கூட இவரு கத்திய தூக்கி கீழ போட்டுறுவாரு. அவனா வெட்டிகிட்டு செத்துடுவான். இதுக்கு எதுக்கு உனக்கு பஞ்ச் டயலாக்கு?

பெரிய ரவடியான மோகன்லால் விஜயோட அப்பா இறந்துட்டதால எடுத்து அவர கூடவே மகனா நெனைச்சி வளக்குறாரு. ”விஜய்யோட அப்பாவ ஒரு போலீஸ் கொண்ணுட்டத்தால அவருக்கு காக்கி கலருன்னாலே புடிக்காது” அப்டின்னு நம்மகிட்ட ஒரு வார்த்த சொல்லிருந்தா ஓக்கேபா.. நாங்க அப்டியே பிக்ஸ் ஆயிக்கிறோம்பான்னு பிக்ஸ் ஆயிருப்போம். ஆனா அத வெளக்குறதுக்கு ஒரு 10 நிமிஷம். கூர்க்காவ பாத்தா அடிக்கிறாரு. யூனிஃபார்ம் டவுசர கிழிக்கிறாரு. யாராவது போலீஸ் ஆவனும்னு சொன்னா அடிக்கிறாரு. அதுக்கு இமானோட ஒரு சூப்பர் BGM வேற.. “காக்கீஈஈ....காக்கீஈ” ன்னு. மிடியல. படம் ஆரம்பிச்சி அரைமணி நேரம் ஆயியும் விஜய் சின்ன வயசுலயே காமிச்சிட்டு இருக்காய்ங்க. ஏம்பா சட்டு புட்டுன்னு ஒரு சைக்கிள் பெடல சுத்த சொல்லி வளர சொல்லுங்கப்பா.... இடைவேளை வரப்போவுது இன்னும் விஜய்ய காணும்.

ஒரு வழியா விஜய்யும் வரப்போறாரு.. சம்பவ இடத்த நெருங்கிட்டோம். வச்சாய்ங்க பாருங்க தீனா பட இன்ட்ரோவ... ‘என் ஆளுங்க அத்தன பேரு உள்ள இருந்தாலும் தீனா ஒருத்தன் வெளிய இருக்கான். அது போதும்” இந்த டயலாக்க சுரேஷ் கோபி பேசுனா அது தீனா..  அதே டயலாக்க மோகன்லால் பேசுனா அது ஜில்லா.. எப்புடி. இன்னொரு கொடுமை என்னன்னா ரெண்டு வாரம் முன்னால ஜில்லா ஸ்டோரி டிஸ்கஷன்னு ஒரு போஸ்ட் எழுதுனேன். அதுல தமாசுக்கு “உங்க பேரு சக்தி.. ஆனா உங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் உங்களுக்கு ஜில்லா துரைன்னு பேரு வச்சி ஜில்லா ஜில்லான்னு கூப்டுறாங்கன்னு சொம்மா ஒரு தமாசுக்கு எழுதிருந்தேன். அட கண்றாவியே.. உண்மையிலயே அததான்யா பண்ணிருக்காய்ங்க. இவர்கிட்ட அடி வாங்குனா ஜில்லாவுலயே இருக்க மாட்டாங்கலாம். அதுனால இவரு பேரு ஜில்லாவாம்.

ஃபைட்டு முடிஞ்சிதுல்ல.. பாட்டு பாட்டு... போன ஒரு மாசத்துல நா அதிக தடவ கேட்டது இந்த படத்தோட இன்ட்ரோ பாட்டு தான். என்னோட favorite SPB ஷங்கர் மகாதேவன் காம்பினேசன்ல பட்டைய கெளப்பிருந்துச்சி. சொல்லப்போன இந்த வருசம் வந்த ரொம்ப காஸ்ட்லியான பாட்டும்  இது தான். விஜய்க்கு ஷங்கர் மகாதேவன் வாய்ஸ் எந்த ப்ரச்சனையும் இல்லாம மேட்ச் ஆயிருச்சி. ஆனா SPB வாய்ஸ மோகன்லால்... கொஞ்சம் கூட லிப் சிங்கே ஆகல.. இதுக்குமேல SPB ah அசிங்கபடுத்த முடியாதுப்பா.. அத கொஞ்சம் ஒழுங்காதான் எடுத்து தொலைச்சா என்ன. மோகன்லால் ரெண்டு மூணு ஸ்டெப் போடுவாரு பாருங்க.. ப்ரமாதம்.

அத விட R.B.செளத்ரியோட மகன்கள் ஜீவா ஜித்தன் ரமேசுன்னு மொத்த குடும்பமும் வந்து ஆடிகிட்டு இருந்தாய்ங்க. இந்த ஃபேமிலி ஆடியன்ஸூ.. ஃபேமிலி ஆடியன்ஸூம்மாய்ங்களே அது நீங்க தானாடா? பாட்டு முடிஞ்சப்புறம் இவங்கல்லாம்  happy family ah இருக்காங்களாமா.. அதுக்கு ஒரு நாலஞ்சி அருவை சீன். “இவங்க happy familybaa" அப்டின்னு சொல்லிருந்தா அதுக்கும் நாங்க ஃபிக்ஸ் ஆயிருப்போம். ஏண்டா இப்டி.

இந்த மாதிரி அருவை சீன்களுக்கு நடுவுல ரெண்டு மூணு நல்லா சீனும் வந்து அப்டியே படம் ஓடிட்டு இருக்க, கெளப்புறாங்க நமக்கு ஒரு பெரிய பீதிய. மோகன்லால ஒரு போலீஸ் அரஸ்ட் பண்ணிட அதுல கடுப்பான மோகன்லால் நம்ம குருப்புலயே ஒருத்தன போலீஸ் ஆக்குங்கடா அப்டிங்குறாரு. அய்யயோ.. திரும்பவும் போலீஸா... மோகன்லால் சார் நீங்க எப்பவும் எல்லாருக்கும் ஒரு கத்திய போட்டு தற்கொலை பண்ணிக்க சொல்லுவீங்களே அது மாதிரி எங்களுக்கும் ஒண்ணு போடுங்க சார்... அந்த கொடுமைக்கு இதுவே பரவால்ல சார். கதறக் கதற விஜய் ஒரு ரவுடி போலீசா ஃபார்ம் ஆயிட ,மோகன்லாலா ஒரு பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்துட பலபேர் செத்துடுறாங்க.

விஜய் ஃபீல் ஆயிடுறாப்ள. ஆப் சாப்டா கூல் ஆயிடுவாப்ளேன்னு பாத்தா சீரியஸ் போலீசா பார்ம் ஆயிடுறாப்ளே.. விஜய் செத்தவங்கள பாத்து ஃபீல் பண்ணிட்டு இருக்கும் போது காஜல் வந்து “உன் மூஞ்சிய கண்ணாடில பாரு.. உனக்கே புடிக்காது”ன்னு சொன்ன உடனே போய் கண்ணாடில அவர் முகத்த பாத்ததும் உடனே கண்ணாடிய உடைச்சிடுறாரு. ஏண்டா டேய்.. 10 செகண்டே உன் மூஞ்சிய உன்னால கண்ணாடில பாக்க  முடியலயே..  எங்களை எல்லாம் பத்தி கொஞ்சம் நெனைச்சி பாருடா..

போலீஸ் ட்ரெஸ்ஸ போட்ட உடனே அவன் கூட இருந்த ஆளுங்களையே போட்டு அடிக்கிறாப்ளே.. அத பாத்ததும் எனக்கு போக்கிரி லொள்ளு சபா ஞாபகம் தான் வந்துச்சி. பாட்டுக்கு டான்ஸ் ஆடிகிட்டு இருக்க ஜீவா “பாட்டுன்னா பாட்டேவா ஃபைட்டு ஃபைட்டு”ன்னு ஆடியன்ஸ் கத்துனதும் கூட இருந்தவய்ங்களையே தூக்கி போட்டு மிதிப்பாரு. அதே சூட்டோட மோகன்லாலாண்ட போய் சவால் விடுறாரு. “நிறுத்து எல்லாத்தையும் நிறுத்து”ன்னு. டேய் அவருதான் எதுவுமே பண்ண மாட்டேங்குறாரேடா.. அவர நிறுத்து நிறுத்துன்னா எதடா நிறுத்துவாறு? இந்த மாதிரி பல இடைஞ்சல் களுக்கு அப்புறம் இண்டரவ்ல் போட்டாங்க. அப்போ பக்கத்துல உக்காந்துருந்தவர் கிட்ட “அண்ணேன் இந்த படத்துல first half சூப்பரா இருக்கும்னு சொன்னாங்க.. அது எப்பண்ணே வரும்”ன்னேன்... அதுக்கு அவரு “என்ன தம்பி இப்டி கேக்குறீங்க.. இப்ப போச்சுல்ல.. அது தான் first half.. நீங்க பாக்கலயா?” ன்னாரு. “ஓ இதுதான் அந்த நல்லாஇருக்க first half ah சரிண்ணே.. சரிண்ணே..’ன்னு கெளம்புனேன்.

பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் மன்சூர் அலிகான் மாதிரி பொறுக்கி தனம் பண்ணிட்டு சுத்திட்டு இருந்த விஜய் இண்டர்வலுக்கு பொய்ட்டு வந்தோன்ன துரை சிங்கம் மாதிரி பேச ஆரம்பிச்சாரு. டேய் இன்னாடா நடக்குது இங்க? அத விட ஆப்ரேசன் க்ளீன் ன்னு ஒண்ணு சொன்னாரு பாருங்க.. நா கூட மதுரையுல உள்ள கக்கூசயெல்லாம் தொடப்பமும் பக்கெட்டும் எடுத்துட்டு போய் க்ளீன் பண்ண போறாரோன்னு பயந்துட்டேன். இது வேற க்ளீனாம்.

“இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த.. இந்த ஆப்ரேசனுக்காக யார வேணாலும் கொல்லு.. அசிஸ்டட்ண்ட் கமிஷணரா உன்ன ப்ரோமோட் பண்றேன்.. கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியா உன்ன நியமிக்கிறேன்” என்னடா எங்கயோ கேட்ட டயலாக் மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? சிங்கம்ல விஜயகுமார் பேசுற வசனம் தான் இதெல்லாம். அதே மாதிரி டம்மியா மிச்சர் திண்ணுட்டு உக்காந்துருக்க போலீஸ் ஒருத்தர் இங்கயும் இருக்காப்ளே.. இவன எங்கயோ பாத்த மாதிரி இருக்கே.. டேய் வீரம்ல அஜித்துகிட்ட அடி வாங்கிட்டு நார்த் இந்தியா போறேன்ன்னு போனவந்தானே நீயி.. சைலண்ட்டா இங்க வந்து ஆபீசர் ஆயிட்டான்யா..

செகண்ட் ஹாஃப்ல என்னத்த எடுக்குறதுன்னே தெரியாம கண்ட மேனிக்கு என்னென்னவோ எடுத்து வச்சிருந்தாய்ங்க. அப்போ தான் எனக்கும் புரிஞ்சிது ஏன் எல்லாரும் ஃபர்ட்ஸ் ஹாஃப் நல்லா இருக்குன்னு சொன்னாய்ங்கன்னு. இடைவேளைக்கு அப்புறம்லாம் படம் தலைவா படத்துக்கு இணையான ஒரு படமாக இருந்ததுன்னு சொன்னால் அது மிகையாகாது. ?

தங்கச்சிக்கு கல்யாணம். விஜய்ய யாருமே கூப்புடல. சோகமா அம்மாகிட்ட ஃபோன் பண்ணி பேசுறாரு. சரி எப்புடியும் தங்கச்சிக்கு தாலி கட்டுறத ஓரமா நின்னாவது பாக்க வந்துருவாருன்னு பாத்தா தாலி கட்டும் போது விஜய்யவே காணும். எங்கடா ஆள காணுமேன்னு பாத்தா நம்மாளு பந்தில உக்காந்து ஃபுல் மீல்ஸ போட்டுகிட்டு இருக்காரு. இதுல எங்களு RK வ வேற வலுக் காட்டாயமா அழைச்சிட்டு வந்து அடிச்சி அனுப்பிருக்காய்ங்க. டேய் எங்காள பாத்தா அடிவாங்குறதுக்குன்னு அளவெடுத்து செஞ்சா மாதிரி இருக்காரா என்ன?

படம் ஃபுல்லா இப்படி நகைச்சுவை கொட்டிக்கிடந்தாலும் அங்கங்க உருப்படியா தெரியிற சில விஷய்ம்னா விஜய், இமான், ஸ்டண்ட் சில்வா, கேமரா மேன். விஜய் ஆளு செம ஃபிட். பாட்டோ, ஃபைட்டோ இல்லை காமெடியோ.. வழக்கம்போல அசால்டான நடிப்புல  பூந்து விளையாடிருக்காரு. ஆனா ஒரு கெட்டப் சேஞ்ச் பண்ணிருக்காரு பாருங்க. போன படத்த விட ஒரு 5mm க்கு தாடிய எறக்கி shave பண்ணிருக்காரு. இதுதான் இந்த படத்துக்கான
கெட்டப் சேஞ்ச்.

 பரோட்ட சூரி அவ்வளவு சிறப்பா ஒண்ணும் இல்லை. காஜல் அகர்வால் சூப்பர். பாட்டுலயெல்லாம் பாரபட்சம் பாக்காம ஆடியிருக்கு. ஆனா லவ் சீனுன்னு அதோட back ah இவரு புடிச்சி அமுக்குறதும் விஜய்யோட back ah அது புடிச்சி அழுத்துறதும்... டேய் என்னடா பதினொரு மணிக்காட்சி ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்க..

இமான் பாட்டுலயும் சரி BGM மும் சரி.. சூப்பர். ஸ்டண்ட் சில்வாவும், கேமரா மேனும் பட்டைய கெளப்பிருக்காய்ங்க. விஜய்யோட இன்ட்ரோ சீனும் சரி அந்த ஃபைட்டும் சரி, இண்டர்வல்  சீன் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட்டோட  picturization சரி அந்த ஃபைட்டும் சரி.. தாறு மாறு. ஸ்லோ மோஷன் சீன்ஸ்லாம் செமையா இருக்கு. எல்லா பாட்டுமே நல்லாருந்துச்சி. குறிப்பா வெரசா போகையிலே பாட்டு Choreography செம. 

டைரக்டரு ஓக்கே தான். மோகன்லால், விஜய், RB செளத்ரின்னு பெரிய படம் கெடைச்சும் அத அவ்வளவு சிறப்பா செய்யல. எப்ப மாமா மாமா ட்ரீட்டு பாட்டுல அப்பப்போ நேசன் வந்து “இன்னோர் தபா.” “இன்னோர் தபா”ங்குறாரு.  வக்காளி இன்னொர் தபா இந்த மாதிரி மொக்கையா படம் எடுத்தா இன்னோர் தபா உங்கள இந்தப்படத்த போட்டு விட்டு தனியா பாக்க சொல்லிருவோம் ஆமா..

மொத்தத்துல ஜில்லா ஒரு ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு டைப் படம் தான். பல இடத்துல செமை அறுவை அறுக்குது. அஜித்தோட வீரம் புதுசா இல்லைன்னாலும் எந்த இடத்துலயும் கொஞ்சம் கூட போர் அடிக்கல. ஜில்லா நல்லா இல்லை வீரம் நல்லா இருக்குன்னு சொல்ல முடியாத பல பேரு ஜில்லவும் சுமாரா இருக்கு வீரமும் சுமாரா இருக்குன்னு பூசி மொழுகுறாய்ங்க. இந்த தடவ போட்டில ஜெயிச்சது என்னவோ அஜித்தான். தயவு செஞ்சி யாரும் ஜில்லா கலெக்சன் 34 கோடி.. வீரத்தோட கலெக்‌ஷன் 30 கோடின்னு கமெண்டு போடாதீங்க.

படம் முடிஞ்சப்புறம் என் கூட வந்தவரு உக்காந்துட்டே இருந்தாரு.. ஏங்கன்னு கேட்டதுக்கு ”இருப்பா.. behind the scenes போடுவாங்க.. பாத்துட்டு போலாம்ன்னாரு... “அட நீங்க வேற சீரியஸான படத்துக்கு தான் கடைசில காமெடிக்காக கொஞ்சம் behind the scene போடுவாங்க... முழுக்க முழுக்க காமெடியான படத்துக்கு எதுக்கு behind the scenes... வாங்க போவோம்னு அழைச்சிட்டு வந்தேன்.

ஜில்லா ஸ்டோரி டிஸ்கஷன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...