குறிப்பு: இந்த பதிவு யார்
மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. டாக்டர்
விஜய், மோகன் லால், தயாரிப்பாளர்
R.B.செளத்ரி, டைரக்டர் நேசன், இமான் இவங்க
எல்லாரும் ஜில்லா
பட கதை டிஸ்கஷனுக்காக கூடியிருக்காங்க.
என்ன நடக்குதுன்னு பாப்போம். (அவங்க அவங்க ஸ்லாங்ல படிங்க.. குறிப்பா மோகன்லால
உன்னைப்போல் ஒருவன் படத்துல வர்ற ஸ்லாங்ல படிங்க)
விஜய்: நேசன் சார்.. தலைவா
பட டென்ஷன்ல நீங்க சொன்ன கதைய
நா சரியா கேக்கல..அதனால
இன்னொருதபா சொல்றீங்களா
நேசன் : நீங்க டென்ஷனா இல்லாம இருந்தாலும்
கதைய சரியா கேட்டுருக்க முடியாது
சார்
விஜய் : ஏன்?
நேசன் : ஏன்னா என்கிட்ட தான்
கதையே இல்லையே.
விஜய் : ண்னா.. சும்மா காமெடி
பண்ணாதீங்கன்னா.. டபுள்
ஹீரோ சப்ஜெக்டு...அந்த அப்பா தாதா...
பையன் போலீசு... அதெல்லாம் எனக்கு நல்லா ஞாபகம்
இருக்குங்கண்ணா
நேசன் : ஏன் சார்... இன்னுமும்
உங்களுக்கு போலீசா நடிக்கனும்னு ஆசை
இருக்கு இல்ல? நா அன்னிக்கு
என்கிட்ட இருந்த காமெடி ஸ்கிரிப்டோட
ஒன் லைன சும்மா உங்ககிட்ட
சொல்லி பாத்தேன். நீங்க படக்குன்னு ஓக்கே
பண்ணிட்டீங்க.
விஜய் : அப்போ வழக்கம் போல
இப்பவும் கதை இல்லையா? இத
கேட்டதும் R.B.செளத்ரியும், நேசனும் கோரசா வருத்தப்படாத
வாலிபர் சங்க சிவா, சூரி
மாதிரி “ஆங்” ங்குறாங்க. உடனே மோகன்லால் கடுப்பாகி
மோகன் லால் : அப்போ ஞான் எதுக்கு
இங்க வந்துருக்கு?
விஜய் : என்ன சார் இன்னுமா
புரியல. ஏற்கனவே என் படம்
கேரளாவுல பிச்சிகிட்டு ஓடும்..
மோகன்லால் : ஞான் கேரளாவிலேதான் இருக்கு.
அப்டியெல்லாம் ஒண்ணும் ஓடலியே..
விஜய் : ன்னா.. வெளில அப்டித்தான்
சார் சொல்லி வச்சிருக்கோம். கொஞ்சம்
அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கன்னா. தமிழ்நாட்டுல படம் எடுக்குறத விட
ரிலீஸ் பண்றது ரொம்ப கஷ்டமா
இருக்குங்கண்ணா. அப்டியே ரிலீஸ் பண்ணாலும்
மக்கள தியேட்டருக்கு வர வைக்கிறது அத
விட கஷ்டமா இருக்குங்கண்ணா. அதான்
கேரளாவுலயாது...
மோகன்லால் : சரி சரி கரையண்டா
மோனே.. ஞான் பண்ணி கொடுக்கும்.
விஜய் : பன்னியெல்லாம் குடுக்க வேணாங்னா... நடிச்சி
கொடுங்க போதும்.
(மோகன்லால்
எதையோ தேட...)
விஜய் : ண்ணா.. என்னனா தேடுறீங்க...
மோகன்லால் : இல்லை என்னோட செருப்பு
இங்கதான் எங்கயோ இருந்துச்சி.. அத
தான் ஞான் தேடுது..
விஜய் : கூல்னா.. கூல்னா..
R.B.செளத்ரி
: யோவ்.. நொய் நொய்ன்னு பேசிகிட்டு
இருக்காம என்ன கண்றாவிய எடுக்க
போறீங்கன்னு சொல்லித் தொலைங்கய்யா..
நேசன் : சார்.. ஃபர்ஸ்ட் ஆஃப்ல
மூணு சாங்கு... ஒரு இண்ட்ரோ சாங்கு..
ரெண்டு ஃபாரின் சாங்கு. மூணு
ஃபைட்டு எடுக்க போறோம் சார்
R.B.செளத்ரி
: அட இந்த கருமம்லாம் எப்பவும்
எடுக்குறது தானய்யா... வேற என்ன எடுக்க
போற
நேசன் : மோகன்லால் சார் ஒரு பெரிய
தாதா சார். அவர் பையன்
தான் விஜய் சார். அவர் ஒரு
பொறுக்கி சார்.
R.B.செளத்ரி
: என்னது பொறுக்கி சாரா? பொறுக்கிக்கு என்னய்யா
மரியாதை.. பொறுக்கின்னு மட்டும் சொல்லு
நேசன் : அதான் சார். விஜய்
வெட்டியா ஊர சுத்திகிட்டு இருக்காரு
சார். மோகன்லாலுக்கும் இன்னொரு ரவுடி கும்பலுக்கும்
ப்ரச்சனை சார். இண்டர்வல்ல மோகன்லால
அவங்க கொன்னுடுறாங்க சார்
மோகன் லால் : (பதட்டமாக) ஞான் சாக மாட்டே...
ஞான் சாக மாட்டே..
நேசன் : சார் தமிழ் சினிமான்னாலே
செகண்ட் ஹீரோ செத்து தான்
சார் ஆகனும். அப்பதானே நாங்க செகண்ட் ஹாஃப்
கதை எழுத முடியும்
மோகன்லால் : இந்த பாரு விஜய்..
ஞான் உயிரோட இருந்தா தான்
உன் படம் கேரளாவிலே ரெண்டு
நாளாவது ஓடும். இல்லையெங்கில் ஒரு
நாளில் பேக்கப் பண்ண வேண்டியது
தான்
விஜய்: ண்ணா.. ண்ணா... கூல்ணா..
கூல்ணா... யோவ் நேசா.. ரெண்டு
பேரும் உயிரோட இருக்க மாதிரி
கதைய மாத்துய்யா..
நேசன் : அப்டி எழுதுறது ரொம்ப
கஷ்டமாச்சே சார்... யாரையாவது இண்டர்வல்ல
கொல்லனுமே...
R.B.செளத்ரி
: அதுக்கு தான் நான் இருக்கேனே..
உங்களையெல்லாம் வச்சி படம் எடுத்தா
நான் தான்யா சாவனும்..
நேசன் : இந்த தடவ நான்
எடுக்கப்போற படத்தால..
R.B.செளத்ரி
: இனிமே படமே எடுக்க முடியாதுன்னு
சொல்ல வரியா
நேசன் : இல்லை சார்..உங்க
கஷ்டமெல்லாம் தீரப்போவுது சார்.. கேளுங்க
சார். அப்போ இண்டர்வல் ஃபைட்டுல
அப்பாவுக்கு கால் போயிடுது. அதனால
அவருக்கு பதிலா அவரு பையன்
தாதா போஸ்ட ஏத்துக்குறாரு.
R.B.செளத்ரி
: ஆமா அது பெரிய மினிஸ்டர்
போஸ்டு. யோவ் நேசா… நீ
வந்த படத்துக்கு கதை சொல்றியா இல்ல
வராத படத்துக்கு கதை சொல்றியாய்யா? இந்த
படம் தான் ஏற்கனவே வந்துருச்சே...
நேசன் : என்னது வந்துருச்சா? எப்போ
சார்.
விஜய் : ண்ணா.. போன மாசந்தாங்னா
இதே கதைய தலைவாங்குற பேர்ல
நடிச்சி ரிலீஸ் பண்ணேன்.
நேசன் : அதுல சத்யராஜ் செத்துருவாரு.
இதுலதான் மோகன்லால் உயிரோட இருக்காரே..
விஜய் : அட ஆமா... பியூட்டிஃபுல்..
கண்டினியூ பண்ணுங்க. என்ன இமான் சார்
ட்யூன்ஸ் எல்லாம் ரெடியா?
இமான் : என்ன சார் விளையாடுறீங்க..
இன்னும் கதையே சொல்லாம ட்யூன்
கேட்டா எப்டி?
விஜய் : என்ன சார் உலகம்
தெரியாத ஆளா இருக்கீங்க. நம்ம
படம்னு சொன்னதுமே நீங்களா கதை
எப்டி இருக்கும்னு தெரிஞ்சிகிட்டு ட்யூன போட்டு கொண்டு
வர்றதில்லையா
இமான்: ஓக்கே சார்.. வெஸ்டர்னையும்,
கர்நாட்டிக் மியூசிக்கையும் கலந்து ஒரு ட்யூன்
போட்டு தர்றேன் பாருங்க
நேசன் : யோவ் யோவ்.. யோவ்..
என்னது கர்நாட்டிகு வெஸ்டர்னா.. சும்மா காமெடி பண்ணிகிட்டு.
தரை லோக்கலுக்கு நாலு ட்யூன் போட்டுக்
குடுய்யா... டகர டகர டகரன்னு
சவுண்டு கிழியனும்.
இமான் : ஓக்கே முடிச்சிடுறேன்.
நேசன் : அப்புறம் படத்துல ஒரு 5 பஞ்ச்
டயலாக் வச்சிருக்கேன் பாருங்க.
விஜய் : (பயங்கர பதட்டமாக) யோவ்
யோவ் யோவ்... நா பஞ்ச்
டயலாக் பேசுறதயெல்லாம் நிறுத்திட்டேன்.
நேசன் : அப்டியா.. எப்பலருந்து சார்..
விஜய் : கொட நாட்டுக்கு போய்
உள்ள போக முடியாம திரும்பி
வந்ததுலருந்து.
நேசன் : (மனசுக்குள்) எஸ்கேப் ஆயிட்டாண்டா..
விஜய்
: ஆமா படத்துக்கு பேர் என்ன வச்சிருக்கீங்க.
நேசன் : படத்துக்கு பேரு ஜில்லா... கேப்ஷன்ல
Collector. ஜில்லா கலெக்டர்னு வக்கிறோம்.
R.B.செளத்ரி
: (கடுப்பாகி) டேய்.. நீங்க தலைப்பு
என்ன வேணாலும் வைங்க.. வக்காளி கேப்ஷன்
மட்டும் வச்சீங்க கொலைவெறி ஆயிடுவேன்.. பணம் போடுறது நாணு...
பணம் போடுறது நாணு... அவ்வ்வ்வ்
விஜய் : படத்துல என் கேரக்டர்
பேரு என்ன சார்?
நேசன் : உங்க அப்பா பேரு
சிவன். உங்க பேரு சக்தி.
ஆனா உங்க ஃப்ரண்ட்ஸ் உங்களுக்கு
ஜில்லா துரைன்னு ஒரு பேரு வச்சி
உங்கள ஜில்லா ஜில்லான்னு செல்லமா
கூப்புடுறாங்க..
விஜய் : அப்போ இந்த படத்துலயும்
தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்க..
நேசன் : க.க.க.
போங்க சார்...
அனைவரும்
சிரிக்க R.B.செளத்ரி மட்டும் மரண
பீதியில் பேந்தப் பேந்த முழிச்சிகிட்டு
இருக்காரு.
10 comments:
Otha kalachidam enga thalapathya, porambokku payya
ஓ நான் பொறம்ப்போக்கா? இவ்ளோ டீசண்ட்டா பேசுறீங்களே நீங்க யாரு சார்?
ஹா...ஹா.. செம..
super thala
sir unga adress konjam thareengala ?
@Anonymous
//sir unga adress konjam thareengala ?//
no.6, viveganandar theru
dubai kurukku santhu
dubai main rd
dubai
nice comedy... ithe mathiri veeram film story discussions eluthunga.
கலக்கல்.....
தொடரட்டும் கதை டிஸ்கஷன்....
dey Anonymous... Vayila Nalla varuthu... Adress? NKo... Nee per pu kooda podama enna adress keppa.. ?
Sema Sema.. Super
Post a Comment