Friday, January 17, 2014

ஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு!!!


Share/Bookmark
இந்த படம் பாத்து முடிக்கும் போது நண்பர் ஒருத்தர் கொஞ்ச நாளுக்கு முன்னாடி இந்த படத்த ஒரு வடிவேலு காமெடிகூட கம்பேர் பண்ணி போட்ட ஸ்டேட்டஸ் தான் ஞாபகம் வந்துச்சி. வடிவேலுவ ஒரு நாலு பேர் ஒரு சந்துக்குள்ள விட்டு சாணியால அடிச்சிடுவாய்ங்க. உடனே வடிவேலு ”குருநாதா இனிமேலும் பொறுக்க முடியாது குருநாதா” ன்னு சொல்லிட்டு போய் அவரு குருநாதன்னு ஒரு  பேட்டை ரவுடிய அழைச்சிட்டு வந்து “இப்போ அடிங்கடா இப்போ அடிங்கடா” ன்னு கத்த வடிவேலுக்கு விழுந்தத விட அதிகமா அடி விழும் குருநாதனுக்கு. “குருநாதா.. எனக்காவது சாணியால அடிச்சாய்ங்க. உனக்கு மாட்டு ஐட்டத்தையும் மனுச ஐட்டத்தையும் கலந்து அடிச்சிட்டாய்ங்க குருநாதா”ன்னு அவர வடிவேலு  கலாய்க்க குருநாதன் அந்த ரவுடிங்கள விட்டுட்டு வடிவேலுவ வெட்ட தொறத்துவாறு. ஜில்லா பாத்தவங்களுக்கு வடிவேலு யாரு குருநாதன் யாருன்னு நல்லா புரிஞ்சிருக்கும். இவருக்கு விழுறது பத்தாதுன்னு “இப்ப பாருங்கடா கேரளாவுலருந்து என் குருநாதன கூப்புடுறேன்”ன்னு மோகன்லால அழைச்சிட்டு வந்து... என்னத்த சொல்ல...

அந்தாளு அந்த ஊர்ல ஒரு பெரும்புள்ளியா கெத்தா சுத்திகிட்டு இருந்தாரு. அவர இங்க கூட்டிட்டு வந்து இதுக்கு மேல இந்த பக்கமே வரமுடியாத படி ஒரு படத்துல நடிக்க வச்சிருக்காய்ங்க. என்னாப்பா.. படம் பாத்த எல்லாரும் மோகன்லால் சூப்பர், செமையா நடிச்சிருக்காரு பட்டைய கெளப்பிருக்காருங்குறாங்க நீ என்னான்னா இப்புடி சொல்றன்னு தானே கேக்குறீங்க. சத்தியமா நா உண்மையத்தாங்கோ சொல்றேன். இப்புடி ஒரு டம்மி ரோல்ல நடிக்கிறதுக்கு நம்ம மலையாள சூப்பர்ஸ்டார் சும்மாவே
இருந்துருக்கலாம்.

ராஜ்கிரன் பல படங்கள்ல நடிச்சி நசுக்கித் தூக்கிப்போட்ட ஒரு ரோல்ல நடிக்கிறதுக்கு கேரளாவரைக்கும் போய் இவர கூட்டிவந்துருக்காய்ங்க. ஆனா இத இப்போ ராஜ்கிரண்கிட்ட கொண்டு போயிருந்தா கூட பொடணிலயே அடிச்சி திருப்பி அனுப்பிருப்பாரு. அப்புடி ஒரு கரடி காரித்துப்புற மாதிரி ஒரு ரோல் மோகன்லாலுக்கு. வழக்கமா தமிழ் சினிமால ஒரு பெரிய ஹீரோ டான் கேரக்டர் பண்ணா எப்படி இருக்கும்? அவர் தப்பு செய்வாரு.. . கட்டைப் பஞ்சயத்து பண்ணுவாரு. கஞ்சா கடத்துவாரு. ஆனா ஏழைகளுக்கு ஒரு ப்ரச்சனைன்னா தட்டி கேப்பாரு. நியாயம் கேட்டு  வர்றவங்களுக்கு நியாயம் வழங்குவாரு. இதானே நம்மூர் வழக்கம். நம்ம பண்பாடு. அப்பதானே அந்த கேரக்டருக்கு ஒரு மரியாதை. வேலுநாயக்கர்லருது, நந்தா ராஜ்கிரன் வழியா கடைசியா தலைவா சத்யராஜ் வரைக்கும் இத தானே ஃபாலோ பண்ணாங்க. அப்போதானே அந்த கேரக்டருக்கு ஒரு கெத்து. ஆனா இங்க மோகன்லால ஆக்கிவிட்டுருக்காய்ங பாருங்க. தமிழ் மசாலா படங்கள்ல நடிக்கிற ஒரு தரைலோக்கல் வில்லனா அவர காமிச்சிருக்காய்ங்க. தப்பு செய்றாரு. ஏழைங்க வயித்துல அடிக்கிறாரு. நல்ல விஷயம் ஒண்ணு பண்ண மாட்டேங்குறாரு. இதுக்கு எதுக்குடா மோகன்லாலு?

அதுகூட பரவால்ல. வில்லத்தனத்தயாது ஒழுங்கா பண்றாரான்னு பாத்தா அதுவும் இல்லை. தெரியாத்தனமா இந்தாளுக்கு சிவன்னு பேரு வச்சிட்டாய்ங்க. ”ஷிவன் என்ன கேக்கனும்னு  நெனக்கிறானோ அத தான் நீ பேஷனும்”  “சிவன் தண்டிச்சா உஷிர் (உயிர்) இருக்காது. மன்னிச்சா உஷிர் மட்டும் தான் இருக்கும்”  “சிவனுக்கு அப்புறம் தாண்டா சக்தி” “நான் சிவன்டா.. அழிச்சிடுவேன்டா...” அப்புடிடா இப்புடிடா... டேய் கொஞ்சம் பொறுடா.. பேசுன பஞ்ச் டயலாக் அளவுக்காவது எதாவது பண்ணிருக்கியாடா? அட்லீஸ்ட் ஒரு மர்டர் பண்ணிருக்கியாடா படத்துல? அடுத்தவன கொல்லனும்னா கூட இவரு கத்திய தூக்கி கீழ போட்டுறுவாரு. அவனா வெட்டிகிட்டு செத்துடுவான். இதுக்கு எதுக்கு உனக்கு பஞ்ச் டயலாக்கு?

பெரிய ரவடியான மோகன்லால் விஜயோட அப்பா இறந்துட்டதால எடுத்து அவர கூடவே மகனா நெனைச்சி வளக்குறாரு. ”விஜய்யோட அப்பாவ ஒரு போலீஸ் கொண்ணுட்டத்தால அவருக்கு காக்கி கலருன்னாலே புடிக்காது” அப்டின்னு நம்மகிட்ட ஒரு வார்த்த சொல்லிருந்தா ஓக்கேபா.. நாங்க அப்டியே பிக்ஸ் ஆயிக்கிறோம்பான்னு பிக்ஸ் ஆயிருப்போம். ஆனா அத வெளக்குறதுக்கு ஒரு 10 நிமிஷம். கூர்க்காவ பாத்தா அடிக்கிறாரு. யூனிஃபார்ம் டவுசர கிழிக்கிறாரு. யாராவது போலீஸ் ஆவனும்னு சொன்னா அடிக்கிறாரு. அதுக்கு இமானோட ஒரு சூப்பர் BGM வேற.. “காக்கீஈஈ....காக்கீஈ” ன்னு. மிடியல. படம் ஆரம்பிச்சி அரைமணி நேரம் ஆயியும் விஜய் சின்ன வயசுலயே காமிச்சிட்டு இருக்காய்ங்க. ஏம்பா சட்டு புட்டுன்னு ஒரு சைக்கிள் பெடல சுத்த சொல்லி வளர சொல்லுங்கப்பா.... இடைவேளை வரப்போவுது இன்னும் விஜய்ய காணும்.

ஒரு வழியா விஜய்யும் வரப்போறாரு.. சம்பவ இடத்த நெருங்கிட்டோம். வச்சாய்ங்க பாருங்க தீனா பட இன்ட்ரோவ... ‘என் ஆளுங்க அத்தன பேரு உள்ள இருந்தாலும் தீனா ஒருத்தன் வெளிய இருக்கான். அது போதும்” இந்த டயலாக்க சுரேஷ் கோபி பேசுனா அது தீனா..  அதே டயலாக்க மோகன்லால் பேசுனா அது ஜில்லா.. எப்புடி. இன்னொரு கொடுமை என்னன்னா ரெண்டு வாரம் முன்னால ஜில்லா ஸ்டோரி டிஸ்கஷன்னு ஒரு போஸ்ட் எழுதுனேன். அதுல தமாசுக்கு “உங்க பேரு சக்தி.. ஆனா உங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் உங்களுக்கு ஜில்லா துரைன்னு பேரு வச்சி ஜில்லா ஜில்லான்னு கூப்டுறாங்கன்னு சொம்மா ஒரு தமாசுக்கு எழுதிருந்தேன். அட கண்றாவியே.. உண்மையிலயே அததான்யா பண்ணிருக்காய்ங்க. இவர்கிட்ட அடி வாங்குனா ஜில்லாவுலயே இருக்க மாட்டாங்கலாம். அதுனால இவரு பேரு ஜில்லாவாம்.

ஃபைட்டு முடிஞ்சிதுல்ல.. பாட்டு பாட்டு... போன ஒரு மாசத்துல நா அதிக தடவ கேட்டது இந்த படத்தோட இன்ட்ரோ பாட்டு தான். என்னோட favorite SPB ஷங்கர் மகாதேவன் காம்பினேசன்ல பட்டைய கெளப்பிருந்துச்சி. சொல்லப்போன இந்த வருசம் வந்த ரொம்ப காஸ்ட்லியான பாட்டும்  இது தான். விஜய்க்கு ஷங்கர் மகாதேவன் வாய்ஸ் எந்த ப்ரச்சனையும் இல்லாம மேட்ச் ஆயிருச்சி. ஆனா SPB வாய்ஸ மோகன்லால்... கொஞ்சம் கூட லிப் சிங்கே ஆகல.. இதுக்குமேல SPB ah அசிங்கபடுத்த முடியாதுப்பா.. அத கொஞ்சம் ஒழுங்காதான் எடுத்து தொலைச்சா என்ன. மோகன்லால் ரெண்டு மூணு ஸ்டெப் போடுவாரு பாருங்க.. ப்ரமாதம்.

அத விட R.B.செளத்ரியோட மகன்கள் ஜீவா ஜித்தன் ரமேசுன்னு மொத்த குடும்பமும் வந்து ஆடிகிட்டு இருந்தாய்ங்க. இந்த ஃபேமிலி ஆடியன்ஸூ.. ஃபேமிலி ஆடியன்ஸூம்மாய்ங்களே அது நீங்க தானாடா? பாட்டு முடிஞ்சப்புறம் இவங்கல்லாம்  happy family ah இருக்காங்களாமா.. அதுக்கு ஒரு நாலஞ்சி அருவை சீன். “இவங்க happy familybaa" அப்டின்னு சொல்லிருந்தா அதுக்கும் நாங்க ஃபிக்ஸ் ஆயிருப்போம். ஏண்டா இப்டி.

இந்த மாதிரி அருவை சீன்களுக்கு நடுவுல ரெண்டு மூணு நல்லா சீனும் வந்து அப்டியே படம் ஓடிட்டு இருக்க, கெளப்புறாங்க நமக்கு ஒரு பெரிய பீதிய. மோகன்லால ஒரு போலீஸ் அரஸ்ட் பண்ணிட அதுல கடுப்பான மோகன்லால் நம்ம குருப்புலயே ஒருத்தன போலீஸ் ஆக்குங்கடா அப்டிங்குறாரு. அய்யயோ.. திரும்பவும் போலீஸா... மோகன்லால் சார் நீங்க எப்பவும் எல்லாருக்கும் ஒரு கத்திய போட்டு தற்கொலை பண்ணிக்க சொல்லுவீங்களே அது மாதிரி எங்களுக்கும் ஒண்ணு போடுங்க சார்... அந்த கொடுமைக்கு இதுவே பரவால்ல சார். கதறக் கதற விஜய் ஒரு ரவுடி போலீசா ஃபார்ம் ஆயிட ,மோகன்லாலா ஒரு பெரிய ஆக்ஸிடெண்ட் நடந்துட பலபேர் செத்துடுறாங்க.

விஜய் ஃபீல் ஆயிடுறாப்ள. ஆப் சாப்டா கூல் ஆயிடுவாப்ளேன்னு பாத்தா சீரியஸ் போலீசா பார்ம் ஆயிடுறாப்ளே.. விஜய் செத்தவங்கள பாத்து ஃபீல் பண்ணிட்டு இருக்கும் போது காஜல் வந்து “உன் மூஞ்சிய கண்ணாடில பாரு.. உனக்கே புடிக்காது”ன்னு சொன்ன உடனே போய் கண்ணாடில அவர் முகத்த பாத்ததும் உடனே கண்ணாடிய உடைச்சிடுறாரு. ஏண்டா டேய்.. 10 செகண்டே உன் மூஞ்சிய உன்னால கண்ணாடில பாக்க  முடியலயே..  எங்களை எல்லாம் பத்தி கொஞ்சம் நெனைச்சி பாருடா..

போலீஸ் ட்ரெஸ்ஸ போட்ட உடனே அவன் கூட இருந்த ஆளுங்களையே போட்டு அடிக்கிறாப்ளே.. அத பாத்ததும் எனக்கு போக்கிரி லொள்ளு சபா ஞாபகம் தான் வந்துச்சி. பாட்டுக்கு டான்ஸ் ஆடிகிட்டு இருக்க ஜீவா “பாட்டுன்னா பாட்டேவா ஃபைட்டு ஃபைட்டு”ன்னு ஆடியன்ஸ் கத்துனதும் கூட இருந்தவய்ங்களையே தூக்கி போட்டு மிதிப்பாரு. அதே சூட்டோட மோகன்லாலாண்ட போய் சவால் விடுறாரு. “நிறுத்து எல்லாத்தையும் நிறுத்து”ன்னு. டேய் அவருதான் எதுவுமே பண்ண மாட்டேங்குறாரேடா.. அவர நிறுத்து நிறுத்துன்னா எதடா நிறுத்துவாறு? இந்த மாதிரி பல இடைஞ்சல் களுக்கு அப்புறம் இண்டரவ்ல் போட்டாங்க. அப்போ பக்கத்துல உக்காந்துருந்தவர் கிட்ட “அண்ணேன் இந்த படத்துல first half சூப்பரா இருக்கும்னு சொன்னாங்க.. அது எப்பண்ணே வரும்”ன்னேன்... அதுக்கு அவரு “என்ன தம்பி இப்டி கேக்குறீங்க.. இப்ப போச்சுல்ல.. அது தான் first half.. நீங்க பாக்கலயா?” ன்னாரு. “ஓ இதுதான் அந்த நல்லாஇருக்க first half ah சரிண்ணே.. சரிண்ணே..’ன்னு கெளம்புனேன்.

பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் மன்சூர் அலிகான் மாதிரி பொறுக்கி தனம் பண்ணிட்டு சுத்திட்டு இருந்த விஜய் இண்டர்வலுக்கு பொய்ட்டு வந்தோன்ன துரை சிங்கம் மாதிரி பேச ஆரம்பிச்சாரு. டேய் இன்னாடா நடக்குது இங்க? அத விட ஆப்ரேசன் க்ளீன் ன்னு ஒண்ணு சொன்னாரு பாருங்க.. நா கூட மதுரையுல உள்ள கக்கூசயெல்லாம் தொடப்பமும் பக்கெட்டும் எடுத்துட்டு போய் க்ளீன் பண்ண போறாரோன்னு பயந்துட்டேன். இது வேற க்ளீனாம்.

“இவ்வளவு நாளா எங்கய்யா இருந்த.. இந்த ஆப்ரேசனுக்காக யார வேணாலும் கொல்லு.. அசிஸ்டட்ண்ட் கமிஷணரா உன்ன ப்ரோமோட் பண்றேன்.. கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியா உன்ன நியமிக்கிறேன்” என்னடா எங்கயோ கேட்ட டயலாக் மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? சிங்கம்ல விஜயகுமார் பேசுற வசனம் தான் இதெல்லாம். அதே மாதிரி டம்மியா மிச்சர் திண்ணுட்டு உக்காந்துருக்க போலீஸ் ஒருத்தர் இங்கயும் இருக்காப்ளே.. இவன எங்கயோ பாத்த மாதிரி இருக்கே.. டேய் வீரம்ல அஜித்துகிட்ட அடி வாங்கிட்டு நார்த் இந்தியா போறேன்ன்னு போனவந்தானே நீயி.. சைலண்ட்டா இங்க வந்து ஆபீசர் ஆயிட்டான்யா..

செகண்ட் ஹாஃப்ல என்னத்த எடுக்குறதுன்னே தெரியாம கண்ட மேனிக்கு என்னென்னவோ எடுத்து வச்சிருந்தாய்ங்க. அப்போ தான் எனக்கும் புரிஞ்சிது ஏன் எல்லாரும் ஃபர்ட்ஸ் ஹாஃப் நல்லா இருக்குன்னு சொன்னாய்ங்கன்னு. இடைவேளைக்கு அப்புறம்லாம் படம் தலைவா படத்துக்கு இணையான ஒரு படமாக இருந்ததுன்னு சொன்னால் அது மிகையாகாது. ?

தங்கச்சிக்கு கல்யாணம். விஜய்ய யாருமே கூப்புடல. சோகமா அம்மாகிட்ட ஃபோன் பண்ணி பேசுறாரு. சரி எப்புடியும் தங்கச்சிக்கு தாலி கட்டுறத ஓரமா நின்னாவது பாக்க வந்துருவாருன்னு பாத்தா தாலி கட்டும் போது விஜய்யவே காணும். எங்கடா ஆள காணுமேன்னு பாத்தா நம்மாளு பந்தில உக்காந்து ஃபுல் மீல்ஸ போட்டுகிட்டு இருக்காரு. இதுல எங்களு RK வ வேற வலுக் காட்டாயமா அழைச்சிட்டு வந்து அடிச்சி அனுப்பிருக்காய்ங்க. டேய் எங்காள பாத்தா அடிவாங்குறதுக்குன்னு அளவெடுத்து செஞ்சா மாதிரி இருக்காரா என்ன?

படம் ஃபுல்லா இப்படி நகைச்சுவை கொட்டிக்கிடந்தாலும் அங்கங்க உருப்படியா தெரியிற சில விஷய்ம்னா விஜய், இமான், ஸ்டண்ட் சில்வா, கேமரா மேன். விஜய் ஆளு செம ஃபிட். பாட்டோ, ஃபைட்டோ இல்லை காமெடியோ.. வழக்கம்போல அசால்டான நடிப்புல  பூந்து விளையாடிருக்காரு. ஆனா ஒரு கெட்டப் சேஞ்ச் பண்ணிருக்காரு பாருங்க. போன படத்த விட ஒரு 5mm க்கு தாடிய எறக்கி shave பண்ணிருக்காரு. இதுதான் இந்த படத்துக்கான
கெட்டப் சேஞ்ச்.

 பரோட்ட சூரி அவ்வளவு சிறப்பா ஒண்ணும் இல்லை. காஜல் அகர்வால் சூப்பர். பாட்டுலயெல்லாம் பாரபட்சம் பாக்காம ஆடியிருக்கு. ஆனா லவ் சீனுன்னு அதோட back ah இவரு புடிச்சி அமுக்குறதும் விஜய்யோட back ah அது புடிச்சி அழுத்துறதும்... டேய் என்னடா பதினொரு மணிக்காட்சி ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்க..

இமான் பாட்டுலயும் சரி BGM மும் சரி.. சூப்பர். ஸ்டண்ட் சில்வாவும், கேமரா மேனும் பட்டைய கெளப்பிருக்காய்ங்க. விஜய்யோட இன்ட்ரோ சீனும் சரி அந்த ஃபைட்டும் சரி, இண்டர்வல்  சீன் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட்டோட  picturization சரி அந்த ஃபைட்டும் சரி.. தாறு மாறு. ஸ்லோ மோஷன் சீன்ஸ்லாம் செமையா இருக்கு. எல்லா பாட்டுமே நல்லாருந்துச்சி. குறிப்பா வெரசா போகையிலே பாட்டு Choreography செம. 

டைரக்டரு ஓக்கே தான். மோகன்லால், விஜய், RB செளத்ரின்னு பெரிய படம் கெடைச்சும் அத அவ்வளவு சிறப்பா செய்யல. எப்ப மாமா மாமா ட்ரீட்டு பாட்டுல அப்பப்போ நேசன் வந்து “இன்னோர் தபா.” “இன்னோர் தபா”ங்குறாரு.  வக்காளி இன்னொர் தபா இந்த மாதிரி மொக்கையா படம் எடுத்தா இன்னோர் தபா உங்கள இந்தப்படத்த போட்டு விட்டு தனியா பாக்க சொல்லிருவோம் ஆமா..

மொத்தத்துல ஜில்லா ஒரு ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு டைப் படம் தான். பல இடத்துல செமை அறுவை அறுக்குது. அஜித்தோட வீரம் புதுசா இல்லைன்னாலும் எந்த இடத்துலயும் கொஞ்சம் கூட போர் அடிக்கல. ஜில்லா நல்லா இல்லை வீரம் நல்லா இருக்குன்னு சொல்ல முடியாத பல பேரு ஜில்லவும் சுமாரா இருக்கு வீரமும் சுமாரா இருக்குன்னு பூசி மொழுகுறாய்ங்க. இந்த தடவ போட்டில ஜெயிச்சது என்னவோ அஜித்தான். தயவு செஞ்சி யாரும் ஜில்லா கலெக்சன் 34 கோடி.. வீரத்தோட கலெக்‌ஷன் 30 கோடின்னு கமெண்டு போடாதீங்க.

படம் முடிஞ்சப்புறம் என் கூட வந்தவரு உக்காந்துட்டே இருந்தாரு.. ஏங்கன்னு கேட்டதுக்கு ”இருப்பா.. behind the scenes போடுவாங்க.. பாத்துட்டு போலாம்ன்னாரு... “அட நீங்க வேற சீரியஸான படத்துக்கு தான் கடைசில காமெடிக்காக கொஞ்சம் behind the scene போடுவாங்க... முழுக்க முழுக்க காமெடியான படத்துக்கு எதுக்கு behind the scenes... வாங்க போவோம்னு அழைச்சிட்டு வந்தேன்.

ஜில்லா ஸ்டோரி டிஸ்கஷன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

14 comments:

Ramesh said...

நல்ல ரிவ்யூ. ஆனா இதிலும் பத்து நிமிசம் கட் பண்ணிருக்கலாம். கொஞ்சம் லெங்க்த்தா போயிருச்சி.... ஆனாலும் லந்தா இருந்திச்சி

Philosophy Prabhakaran said...

உங்க sidebarல இருக்குற 'அடுத்து பாக்கலாம்'ன்னு இருக்கேன்' செக்ஷன் ஐடியா சூப்பர்... நான் சுட்டுக்குறேன்...

"ராஜா" said...

பாஸ் விஜய் ரசிகர்களை விடுங்க இந்த உலக சினிமா ரசிகனுங்க தொல்லைதான் ரொம்ப ஓவரா இருக்கு மசாலா படங்களெல்லாம் முட்டா பய பாக்பய்கிறதுங்கிற ரேஞ்சுககு ஓவரா கூவுதுங்க எனக்கு அவனுங்கள பாக்கிறப்ப அட்டகத்தி படத்துல ஹீரோ வடை சாப்பிடுற சீன்தான் ஞாபகம் வருது

Anonymous said...

nanba, review ok.. but padam nallathan irunthuchu, sema entertaining... vidunga ovvorutharukkum oru feeling...

Unknown said...

அண்ணே ராஜா அண்ணே முத்து சிவா அவர்கள் விஜய் அஜித் என்று பாரமால் பொதுவான விமர்சனத்தை தான் எழுதுவார். ஜில்லாவை விட வீரம் நன்றாக இருக்கிறது என்பது உண்மைதான் ஆனால் அதற்கு நீங்கள் ஜால்ரா அடித்து இருக்கிறீர்களே அது தான் கேவலமாக உள்ளது. இதே முத்துசிவா தான் ஆராம்பம் படத்தை மொக்கை என்று எழுதினார் அப்போது தாங்கள் எங்கு சென்றீர்கள். நான் சொல்லட்டுமா யாரெல்லாம் ஆரம்பம் சூப்பர் என்று ஜால்ரா அடித்தார்களோ அவர்கள் விமர்சனத்தை மட்டும் தேடி படித்து கொண்டிருந்தீர்கள் சரி தானே....

Unknown said...

அண்ணே ராஜா அண்ணே முத்து சிவா அவர்கள் விஜய் அஜித் என்று பாரமால் பொதுவான விமர்சனத்தை தான் எழுதுவார். ஜில்லாவை விட வீரம் நன்றாக இருக்கிறது என்பது உண்மைதான் ஆனால் அதற்கு நீங்கள் ஜால்ரா அடித்து இருக்கிறீர்களே அது தான் கேவலமாக உள்ளது. இதே முத்துசிவா தான் ஆராம்பம் படத்தை மொக்கை என்று எழுதினார் அப்போது தாங்கள் எங்கு சென்றீர்கள். நான் சொல்லட்டுமா யாரெல்லாம் ஆரம்பம் சூப்பர் என்று ஜால்ரா அடித்தார்களோ அவர்கள் விமர்சனத்தை மட்டும் தேடி படித்து கொண்டிருந்தீர்கள் சரி தானே....

"ராஜா" said...

ஆண்டனி
நரிக்கு பொறி வச்சா ஆடு வந்து மாட்டுது கிடைச்சத பொங்கி பொழுத போக்குவோம் தம்பி நம்ம ஏரியா பக்கம் போவோமா?

Anonymous said...

With regard to the blogging manager, can I ask just how do you control spammy posts?
We're happy to pay for information to be able to resolve it!


Feel free to visit my web page ... Hair Again eBook Free Download

கோவை நேரம் said...

உங்க விமர்சனம் நல்லா இருக்கு...படம் இன்னும் நான் பார்க்கலை...ஆனா கேரளாவில் செம ஹிட்...மோகன்லால் ரசிகர்கள் சொன்னது ரொம்ப நல்லா இருக்குன்னு....

Anonymous said...

mokka padam...

selvan said...

DAI MUTHUSHIVA.,IF YOU ARE A RAINI MOVIE THEN YOU ARE NOT ELIGIBLE TO COMMENT ANY VIJAY / MASALA MOVIES. AS FAR NOW, IN THEATORS I CAN SEE MOSTLY FAMILY ENOYING THE JILLA MOVIE. PERSONALLY ASKED MY PARENTS AND MY RELATIVE PARENTS. THEY TOLD IT IS A NICE MOVIE... WHAT ELSE YOU WANT MORE THAN THAT??? IF YOU WANT DIFFERENT MOVIE..... GO AND WATCH "ENTER NO WHERE" , "IN TIME" KIND OF ENGLSH MOVIES BUT IF YOU EXPECT THE SAME IN VIJAY OR RAJINI MOVIE YOU WIL NOT FIND IT.... SO IN ONE LINE 'JILLA HAVE ALL TO SATISFY'

selvan said...

DAI MUTHUSHIVA.,IF YOU ARE A RAINI MOVIE THEN YOU ARE NOT ELIGIBLE TO COMMENT ANY VIJAY / MASALA MOVIES. AS FAR NOW, IN THEATORS I CAN SEE MOSTLY FAMILY ENOYING THE JILLA MOVIE. PERSONALLY ASKED MY PARENTS AND MY RELATIVE PARENTS. THEY TOLD IT IS A NICE MOVIE... WHAT ELSE YOU WANT MORE THAN THAT??? IF YOU WANT DIFFERENT MOVIE..... GO AND WATCH "ENTER NO WHERE" , "IN TIME" KIND OF ENGLSH MOVIES BUT IF YOU EXPECT THE SAME IN VIJAY OR RAJINI MOVIE YOU WIL NOT FIND IT.... SO IN ONE LINE 'JILLA HAVE ALL TO SATISFY'

முத்துசிவா said...

@selvan:

டேய்..மொதல்ல நீ விஜய்ய ரஜினி கூட கம்பேர் பண்றத நிறுத்து... ரஜினியோட மசாலா படமும் விஜய்யோட மசாலா படமும் என்னிக்குமே ஒண்ணாகாது.

// PERSONALLY ASKED MY PARENTS AND MY RELATIVE PARENTS. THEY TOLD IT IS A NICE MOVIE... WHAT ELSE YOU WANT MORE THAN THAT???//

டேய் உங்க ஃபேமிலிய கடைசியா நீ என்ன படத்துக்கு அழைச்சிட்டு போன? அலிபாபாவும் நாற்பது திருடர்களுமா?

//WHAT ELSE YOU WANT MORE THAN THAT???//

அதே மாதிரி நீயும் நானும் ஒண்ணு இல்லை கன்னா... உனக்கு புடிச்சா உன்னோட வச்சிக்க.

//ஈF YOU WANT DIFFERENT MOVIE..... GO AND WATCH "ENTER NO WHERE" , "IN TIME" KIND OF ENGLSH MOVIES //

டேய் எங்களுக்கு வித்யாசமான படமெல்லாம் வேணாம்டா.. பாக்குறமாதிரி படம் எடுங்கடா அது போதும்...

// IF YOU EXPECT THE SAME IN VIJAY OR RAJINI MOVIE //

திரும்பவும் பார்றா..

Anonymous said...

I blog often and I seriously thank you for your content.
The article has truly peaked my interest.
I am going to take a note of your blog and keep checking for new details about once a week.
I opted in for your RSS feed too.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...