

டேய் மணி எட்டு ஆச்சுடா. School ku நேரம் ஆச்சு எழுந்திரிடா......
போம்மா..... நா இன்னிக்கு School போகல.
ஏண்டா இன்னிக்கு போகல?
எனக்கு school போகவே புடிக்கலம்மா......
என் செல்லம் இல்ல....... இன்னிக்கு வெள்ளி கிழமை. இன்னிக்கு மட்டும் School போயிட்டு வந்தான்னா இன்னும் ரெண்டு நாள் leave தானே. எந்திரிடா கண்ணா.......
எனக்கு school ah நெனச்சாலே ஒரே எரிச்சலா வருதும்மா......
ஏண்டா கண்ணா?
என்ன அங்க இருக்கவங்க யாருக்கும் புடிக்கல..... எனக்கும் அங்க இருக்குறவங்க யாரையும் புடிக்கலம்மா ....
டேய் உனக்கு இன்னும் ரெண்டு வருஷம் Service இருக்கு..... இதுல நீ School Head master வேற..... நீயே School க்கு ஒழுங்கா போகலன்னா உன்கிட்ட படிக்கிற பசங்க எப்புடிடா வருவாங்க........ ஒழுங்கா எழுந்து ஸ்கூல் கு கெளம்பு....
சரிம்மா....... :)
1 comment:
அட.... அசத்தல்.. நானும் பையனோட கதையா இருக்கும்ோனு நினச்சேன். முடிவு அருமை. நமது வலைத்தளம் : சிகரம்
Post a Comment