Saturday, April 11, 2009

OPEN DAY - ALL DAY JOLLY DAY


Share/Bookmark
இன்னும் ரெண்டு மாசத்துல பொறியியல் இரண்டாம் ஆண்டு முடிய போகுது. அன்னிக்கு எங்க காலேஜல் Open day.. "ஓபன் டே" னோன ஓப்பனா திரியிவாய்ங்க போலருக்குன்னு தப்பா நெனச்சிடாதீங்க.. அன்னிக்கு மட்டும் ஜூனியர்ஸ் சீனியர்ஸ ராகிங் பண்ணிக்கலாம். அதுவும் காலைல ஆறு மணிக்கு ஆரம்பிச்சி சாயங்காலம் ஆறு மணிக்குள்ள தான். அதுக்கு மேல அவிங்க வேலய காட்ட ஆரம்பிச்சிருவாய்ங்க. வேற எந்த கல்லூரிலையும் இந்த பழக்கம் இருக்குமா தெரில.  So, ரிஸ்க் எடுக்குற தெல்லாம நமக்கு ரஸ்க் சப்புடுற மாதிரின்னு நெனைக்கிறவிங்களுக்கு தான் இந்த ஓபன் டே.

அன்னிக்குன்னு பாத்து எங்க டிபார்ட்மெண்ட் symposium வேற. காலைல 9 மணிக்கெல்லாம் நானும் என் நண்பனும் ஆடிடோரியத்துல attendance போட்டுட்டோம். First year லருந்து final year வரைக்கும் அத்தனை பேரும் ஆஜர் அங்க. பொண்ணுங்க எல்லாம் சேலை கட்டிக்கிட்டு குடும்ப பாங்கினிகளா காட்சி தந்தாங்க. ஹையோ ஆல் யங் கேர்ள்ஸ் னு லைட்டா ஜொள்ள
விட்டுட்டு நமக்கு புடிச்ச கடைசி வரிசைல போய் உக்காந்தோம்.

எப்பவுமே காலேஜ்ல நமக்கு immediate seniors கூடவும் immediate juniors கூடவும் எப்பவும் ப்ரச்சனையாதான் இருக்கும். ஏற்கனவே 3rd year kum எங்களுக்கும் வாய்க்கா தகறாரு வேற. அவிங்க கூட அதிகம் வச்சிக்கறதில்லை. so final year பசங்களையே புடிப்போம்னு நெனச்சி கிட்டு இருந்தா அதுக்கேத்த மாதிரி ரெண்டு final year பசங்க சிரிச்சிகிட்டே வந்து "குட் மார்னிங் சார்" ன்னாய்ங்க.

உடனே "என்ன மூதேவி இங்க வந்து பல்ல காட்டிக்கிட்டு நிக்கிற.. போய் வேலைய பாரு" ன்னதும் அதே சிரிப்போட கெளம்பிட்டாங்க. (நா இந்த டயலாக்க சொன்னதுக்கும் ஒரு காரணம் இருக்கு. நா 1st year படிக்கும் போது என்ன பாத்து ஒருத்தரு இப்புடி தான் சொன்னாரு)

கொஞ்ச நேரத்துல இன்னொரு final year பையன் வந்து எங்க முன் வரிசைல உக்காந்தான்.
"டேய் அண்ணன் உக்காந்துருக்கேன்... வணக்கம் சொல்லாம போற,.. உயிர் மேல ஆசை இல்லையா" ன்னதும்

"சாரி சார்... கவனிக்கல.. குட் மார்னிங்க் சார்" ன்னான்

"சாரி எனக்கு தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை.. தண்டனைகள் கடுமையானாதான் குற்றங்கள் குறையும். நீ இப்ப என்ன பன்ற அந்தா ரிசப்ஷன்ல ஒரு பாப்பா மல்லிகை பூ வச்சிட்டு உக்காந்துருக்குள்ள.. அதுகிட்ட போயி அதுக்கே தெரியாம அது தலைலருந்து  ஒரு மல்லிகை பூவ அப்புடியே கவ்விகிட்டு வர்ற.. இதான் உனக்கு தண்டனை" ன்னதும் அவன் எதுவும் சொல்லாம ஆப்ரேஷன்ல எறங்கிட்டான்.

இவன் மெதுவா பம்பிகிட்டே போய் அந்த புள்ளை தலையில உள்ள மல்லிகை பூவுல கைய வைக்க அந்த புள்ளை பாத்துருச்சி. "ஹலோ என்ன பண்ணுறீங்க" ன்னு லைட்ட கோவத்துல கேக்க இவன் மின்னல் வேகத்துல என்னை கைகாமிச்சி "அதோ அந்த சாருதான் எடுத்துட்டு வர சொன்னாரு" ன்னுட்டான்.

உடனேஅந்த புள்ளை என்னை முறைக்க "மச்சி டெக்கரேஷன் சூப்பரா இருக்குள்ள" ன்னுட்டு சைடுல திரும்பிட்டேன்.

விட்ரா விட்ரா.. மைனர் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்னு நெனைச்சிகிட்டு அடுத்த அடிமைக்கு வெய்ட் பண்ணிட்டுருந்தேன். கொஞ்ச நேரத்துலயே ஒருத்தன் கெடைச்சான். "இவனுக்கு ஒரு பெரிய ப்ராஜெக்ட குடுத்து எதுலையாச்சும் சிக்க வச்சிடலாம்னு நெனைச்சிகிட்டே ரைட் சைடு உக்கார்ந்துருந்த புள்ளைங்க கூட்டத்துல ஒரு தடவ தேடுனேன். ஒரு அழகான
final year பொண்ணு. "மாட்னடி மாப்ள" ன்னு நெனச்சிகிட்டு "டேய் நீ போய் அந்த
பாப்பாகிட்ட கைல ஆட்டோகிராப் வாங்கிட்டு வா" ன்னதும் அவன் கொஞ்சம்
அப்புடி இப்புடி நெளிஞ்சிகிட்டே அந்த புள்ளைகிட்ட போனான்..

"இன்னிக்கு இவனுக்கு செருப்படி நிச்சயம்... கிச்சா.... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்" ன்னு நெனைச்சிகிட்ட்டு ஆவலோட காத்துருந்தேன். அவன் அந்த் புள்ளை காதுக்குள்ள எதோ கிசு கிசுன்னு  சொல்ல, அது பர்ஸ்ல வச்சிருந்த பேனாவ எடுத்து, ஒரு கையால இவன் கைய புடிச்சிட்டு இன்னோரு கையால ஆட்டோ க்ராஃப் போட்டுச்சி பாருங்க... flaaaaaash

*********  டமால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்   **********

ஹலோ... ஹலோ essus me...பாம் எதுவும் வெடிக்கல.. வெடிச்சது என்னோட குட்டி  இதயம். .உடனே என்னோட ஆள்காட்டி விரல என் நெத்திக்கு நேரா வச்சி என்ன நானே கேட்டுகிட்டேன் "இந்த அவமானம் உனக்கு தேவையா?" 



ஆட்டோக்ராஃப் வாங்குன மகிழ்ச்சில வந்த அவன் 'சார் வாங்கிட்டேன்... எனக்கு வேற எதாவது வேல குடுங்க"ன்னான்.

"ம்ம்.. நீ மேல போயி தேவை இல்லாத ஆணியெல்லாம் புடுங்கு போ. அதான் இனிமே உனக்கு வேல " ன்னேன்.

"சரி சார்.. நா உங்கள ஆறு மணிக்கு மேல கவனிச்சிக்கறேன்" ன்னு பீதிய கெளப்பிட்டு கெளம்புனான்.

"ஆறு மணிக்கு மேல ஊர்ல இருந்தா தானடா ங்கொய்யால" ன்னு நெனச்சிகிட்டு திரும்பி பாத்தா 'நா அப்புடியே ஷாக் ஆயிட்டேன். என்ன சுத்தி ஒரு ஏழு எட்டு பேரு..

"சார்.. சார்.. சார்.. எங்களுக்கும் ஒரு சான்ஸ் குடுங்க சார்... நாங்களும் யார்டயாது ஆட்டோகிராஃப் வாங்கிட்டு வரோம்" ன்னானுங்க கோரஸா....

"டேய் ஆணியே புடுங்க வேணாம்.. டேய் எனக்கு இருக்கதே ஒரு சின்ன மனசு. அத எத்தனை  பேருடா வெடிக்க வைப்பீங்க..இனி ஒரு பய என் கண்ணு முன்னால நிக்க கூடாது.. Be careful"

"சார் நீங்க ரொம்ப பேசுறீங்க.... உங்க ரூம் நம்பெர் என்னன்னு சொல்ல முடியுமா?" ன்னான் ஒருத்தன்.

"எதுக்குடா?" ன்னேன்

"இல்ல ஆறு மணிக்கு மேலே உங்கள கொஞ்சம் கவனிக்கலாமேன்னு தான்"

அப்ப ஆறு மணிக்கு மேல என்னோட நிலைமை?

டண்டனக்கா தான்......... (அடுத்த பதிப்பில்)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...