Tuesday, April 7, 2009

அயன் (அய்யோ! அம்மா!!)


Share/Bookmark
சூர்யா நடிப்பில் கே.வி .ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புது வரவு. திரையரங்கம் எங்கும் சூர்யாவின் வண்ண தோரணங்கள். ரசிகர் மன்ற விளம்பர பலகைகள். கூட்டம் அலைமோதியது. இரவு காட்சிக்கு கூட பெண்களின் கூட்டம். சூர்யாவின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது தெரிந்தது. டிக்கெட் கவுண்டரில் நானும் எனது நண்பனும் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தோம். அப்போது மாலை காட்சி முடிந்து மக்கள் வெளியில் வந்தனர். வந்தவர்களில் ஒருவனை தேர்ந்தெடுத்து "அண்ணே! படம் எப்புடினே இருக்கு? என்றேன்"

"நல்லாருக்கு! கதை புதுசா இருக்கு" என்றான்.

"புது படம்ல ..... கதை புதுசாத்தான் இருக்கும். இன்னும் ரெண்டு நாள்ல பழசாயிடும்" என்றான் நான் கூட்டிட்டு வந்த குட்டி சாத்தன்.

இதை கேட்டஅவன் ஏதோ வினோத ஜந்துவ பாக்குரமாதிரி ஒரு கேவலமான லுக்கை விட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான் .

ஆஹா நமக்கு சனியன் double cot போட்டு பக்கத்துலயே படுத்துருக்கான் போலருக்கு. இனிமே யார் கிட்டயும் வாய குடுத்து வாயில புன்னோட போவக்கூடாதுடா சாமின்னு நெனச்சுகிட்டேன். ஒரு வழியா கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கிட்டு உள்ள போய்ட்டோம்.

கதை: அது என்னனு தெரிஞ்சுகத்தன் இன்னிக்கு இன்னொரு தடவ அந்த படத்துக்கு போகலாம்னு இருக்கேன். யாருக்காவது தெரிஞ்சா எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க.

ஒரு கண்ணோட்டம் : முதல் காட்சியிலிருந்தே
கே.வி.ஆனந்தின் கேமரா விளையாடத் தொடங்குகிறது. ஆகாய மார்கமாக சென்னை வருகிறார் சூர்யா. கதாநாயகனுக்குரிய அதனை அம்சங்களும் அவரது தோற்றத்தில். நுனி நாக்கில் சரளமாக விளையாடும் ஆங்கிலம், அமெரிக்காவில் பணிபுரியும் மென்பொருள் அமைப்பு கட்டுமானர் போல தோற்றமளிக்கிறார். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடனே அவரது பேச்சிலும் நடவடிக்கையிலும் முற்றிலும் மாறுபாடு. சென்னை லோக்கல் தமிழ் பேசி, அவர் கடத்தி வந்த திருட்டு VCD ஐ எடுக்கும் போது எனக்கு திரையரங்கிற்கு வெளியே அவன் சொன்னது நினைவுக்கு வந்தது, " கதை வித்யாசமா இருக்கு" . திருட்டு VCD தயாரிக்கும் கும்பலை பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த கட்சிகளில் அவ்வளவு துள்ளியம். இது போன்ற பல வித்யாசங்களை எதிர்பார்த்த எங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்.

வழக்கம் போல அடுத்து சூர்யாவுக்கு ஒரு பாடல். ஆனால் வழக்கம் இல்லாத ஒரு கேவலமான முதல் பாடல். " பளபளக்குற பகலா நீ .. திணறடிக்கிற துகுலா நீ"
ஏதோ எஸ். .ராஜ்குமார் பாடல் மாதிரி .கருமம்.... கருமம்.... துளி கூட ஒட்டவில்லை .

பிரபு வெளிநாடுகளிலிருந்து கடத்தல் பொருட்களை சென்னைக்கு கடத்தி வந்து (சூர்யா மூலம்) கமிஷன் பெரும் ஒரு பெரும் புள்ளியாக சித்தரிக்கப்படுகிறார். அனைத்து இடங்களிலும் பிரபுவின் ஆட்கள். ஆனால் அவர் தோற்றத்தை பார்த்தல் கார்ப்பரேஷன் toilet contract எடுக்குரவர் மாதிரிதான் தெரிகிறது . அவருடன் சூர்யா, கருணாஸ் மற்றும் விஜய் டி.வி ஜகன் ஆகியோர் இருக்கிறார்கள்.


வழக்கம் போல இவங்களுக்கு எதிராக இதே கடத்தல் தொழில் செய்யும் இன்னொரு கூட்டம். அதில் வில்லன் என்று ஒருவன் சித்தரிக்கபடுகிறான். முடி மட்டும் இடுப்பு வரைக்கும் வச்சிருக்கானே தவற நடிப்பில் ஜீரோ. சன் சில்க் ஷாம்பூ விளம்பரத்துக்கு வேணும்னா அவர நடிக்க வைக்கலாம். மத்தபடி அவர பாத்தா comedy piece மாதிரிதான் தெரியுது. அவர் ரொம்ப
சீரியசாக பேசும் வசனங்களுக்கு கூட நமக்கு சிரிப்பு தான் வருகிறது.

தமன்னா ஜெகனின் தங்கை. அனைவரையும் அழகாக காட்டும் கே.வி.ஆனந்தின் கேமரா தமன்னாவிடம் கொஞ்சம் பாரபட்சம் காட்டிவிட்டது. தமன்னா ஜெகனின் தங்கை என்றாலும், அவரே தமன்னா சூர்யா காதல் வளர துணை இருக்கிறார். சூர்யாவுடன் தமன்னாவை படத்திற்கு அனுப்புகிறார், அவர்கள் இருவரையும் பைக்கில் ஒன்றாக உட்கார வைத்து அவர் பின்னால் அமர்கிறார். "என் தங்கச்சி உனக்கு செட் ஆயிடுச்சி போலருக்கு?" என அவர் சூர்யாவிடம் கேட்கும் போதும் , சூர்யா தமன்னா முத்தமிடுவதை இவர் வீடியோ எடுக்கும் போதும் நமக்கு அருவருப்பின் உச்ச கட்டம். கருமம்....கருமம்........ இவர் தமன்னாவின் அண்ணன் தானா என முகம் சுழிக்க வைக்கிறது. இந்த கருமத்தால இடை இடையே வரும் சில நல்ல நகைச்சுவைக்கு கூட மனம் விட்டு சிரிக்க முடியவில்லை.

இதற்கிடையே சூர்யா பல நாடுகளுக்கு சென்று பல பொருட்களை கடத்தி வருகிறார். உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டுக்கு
சென்று வருவது போல் அவர் உலகை ஒரு ரவுண்டு வருகிறார், பல கெட்டப்பில். கூடவே ஜெகனும் செல்கிறார். வழக்கமா தமிழ் சினிமால எல்லாரும் மலேசியா தான் போவாங்க. இயக்குனர் சற்று வித்யாசமாக ஆப்பிரிக்கா சென்று படம் பிடித்துள்ளார். அதில் மட்டுமே வித்யாசம். இப்படி பிடிப்பில்லாமல் செல்கிறது திரைக்கதை. ஒரு கட்டத்தில் சூர்யா கடத்தல் விபரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கத்திற்கு தெரியவர எவ்வாறு தெரிகிறது என்று பார்க்கும் போது, ஜகன் வில்லனின் கையால் என்பது தெரியவருகிறது. சூர்யா தமன்னா காதலும் பிரிகிறது. உடனே இடைவேளை.

" அட பாவிகளா....... இப்ப என்ன நடந்துச்சின்னு இண்டெர்வல் விட்டீங்க" . அட இவங்க தொல்ல தான் தங்க முடியலன்னா..... இண்டெர்வல் ல திரும்பி பார்த்த என் நண்பன் ஒருத்தன் வந்திருந்தான். என்ன பாத்து ஒரு கேள்வி கேட்டான் பாருங்க.... " என்ன மச்சி.......... படம் பாக்க வந்தியா?"

" இல்ல மச்சி .....
பப்ளிக் எக்ஸாம் எழுத வந்தேன் "னு சொல்லிட்டு கெளம்புனேன்.

இடைவேளைக்கு பிறகு புதுமையான ஒரு கடத்தலில் இறங்கும் போது ஜகன் கொலைசெய்ய படுகிறார். பழி சூர்யா மேல். வழக்கம் போல தப்பித்து விடுகிறார். முதல் பாதியில் கடத்தல்காரனாக இருந்த சூர்யா இரண்டாம் பாதியில் வில்லனை பழிவாங்குவதற்காக அவன் செய்யும் நூதன கடத்தல் முறைகளை கண்டுபிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார். கடுப்பாகும் வில்லன் அப்பாவி பிரபுவை போட்டு தள்ள......... சூர்யா வில்லனை போட்டுத்தள்ளுகிறார்.

அடப்பாவி ....... இத மொதல்லையே செஞ்சிருந்தா நாங்க அப்பவே போயிருப்போம்ல .....

ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல் அவரிடம் இருக்கும் அந்த நான்கு , ஐந்து டியூன்களை
லைட்டாக மாற்றி பாடல்களை தந்திருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார். எப்ப தான் திருந்த போறார்னு தெரியல.

அனைத்து பாடல்களையும் படமாக்கிய விதம் அருமை. குறிப்பாக நெஞ்சே நெஞ்சே நீ எங்கே பாடல் காட்சியில் கே. வி. ஆனந்தின் ஒளிப்பதிவு அற்புதம். ஒரு பாலைவனத்தை கூட இவ்வளவு வண்ணமயமாக படம் பிடிக்க முடியுமா என்று அசர வைக்கிறார்கள். பாடல் காட்சிகளில் மட்டுமே சிறிதளவு மன நிம்மதி.

படம் பார்ப்பவர்களுக்கு மற்றுமொரு குழப்பம் படத்திற்கு ஏன் "அயன்" என்று பெயர் வைத்தார்கள் என்று. அயன் என்றால் சிவபெருமான் என்று பொருள். அவருக்கும் இந்த படத்துக்கும் என்னடா சம்மந்தம்? அவருக்கு மட்டும் இது தெரிஞ்சுது ஈட்டியலையே குத்திருவாறு.

ன் பிக்சர்ஸின் காதலில் விழுந்தேன் , தெனாவெட்டு , திண்டுக்கல் சாரதி , தீ போன்ற வெற்றி படங்களின் வரிசையில் மற்றுமொரு படைப்பு அயன்.

மொத்தத்தில் அயன் ..... அய்யோ! அம்மா!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

Ashok said...

hahaha.. மாப்ள செம காமடி டா.. இத்தன நாள் கழிச்சு படிச்சாலும் நம்ம பார்த்ததை நினைச்சு சிரிப்பு வருது

Anonymous said...

ரொம்ப நாள் கழிச்சு தான் இந்த விமர்சனத்த படிச்சேன். என்ன கொடும சார் இது. புதுசா குடுக்கலாம்னு எவ்வளவு டிரை பண்ணினாலும் இந்த மாதிரி சில முட்டாள் மேதாவிகள் சப்பத் தனமா ஒன்னுமே புரியாம ஏதாவது விமர்சனத்த தட்டிவிட்டுட்டே இருப்பாங்கன்னு தெரிஞ்சுது. என்ன பெரிய்ய்ய்யயய.... விமர்சனம். இது ஒரு காமெடி விமர்சனம்னு இதுக்கு கமெண்ட் வேற. . . என்ன கொடும இது...?


என்ன தான் சொல்லியிருக்கீங்கன்னு பார்க்கலாமேனு படிச்சா விமர்சனத்தில் ஒன்னுமே இல்ல. பாதி பாரா டிக்கெட் வாங்கினதுக்கு நீங்க பட்ட பாடு. இன்னும் கொஞ்சம் இன்ட்ரவல்ல உங்க ராவடி. தாங்க முடியல.

முதல் பாடல் ஒட்டவில்லையாம். நீங்கள் விமர்சனத்தில் அள்ளிவிட்டதைப் போல அப்படி ஒன்றும் கேவலமான பாடல் இல்லை பளபளக்கிற பகலா நீ. . . 4, 5 ட்யூன்களை வைத்துக்கொண்டு மட்டும் இசையமைக்கிறவரும் ஹாரிஸ் ஜெயராஜ் அல்ல. புரிகிற அளவில் மென் தமிழ் புதிய வார்த்தைகளை இசையில் குழைத்து, ஒலி மிகையாகாமல் அழகிய ராகங்களில் படைத்தளிப்பது அவரின் புதிய முயற்சி தான். இசை என்பதைக்காட்டிலும் இந்த முயற்சி ஒரு புதிய சிந்தனை. இலக்கியத் தமிழை பாடலில் கேட்க முடிவதற்கே நாம் அவருக்கு பாராட்டுதல் செய்ய வேண்டாமா. . .

நீங்கள் சொல்வது போல தங்கைக் காதலுக்குத் துணை போகும் அண்ணன் ஒன்று மட்டும் தான் நெருடலாக இருக்கிறது. ஆனாலும், அவசர உலகில் இப்பேர்ப்பட்டவர்களையும் நாம் உலகில் கண்டு நகர்கிறவர்கள் தான்.

ஆப்பிரிக்க காட்சிகல் பிளட் டைமண்ட் படத்திலிருந்து சுட்டது தான். இருந்தாலும் படத்தின் போக்கில் அது பொருந்தியே வருகிறது. மேலும் அப்படியொரு சங்கதியைத் தமிழர்களுக்கு புரியும் வண்ணம் அறிமுகம் செய்ததற்கு இவ்விடத்தில் குற்றம் சுமத்துவதை விட கே.வி.ஆனந்த்தைப் பாராட்டத்தான் தோன்றுகிறது. கடத்தல் நுட்பங்கள், அதைக் கையாளும் விதங்கள் உட்பட எல்லாமே புத்திசாலித்தனமான திரைக்கதை. இவ்வளவு நுணுக்கமான புத்திசாலித்தனங்களை எல்லோருக்கும் புரியும்படி சொல்வது தான் கடினம். பல நேரங்களில் இதை முயற்சிக்கிற போது படம் மக்களுக்குப் புரியாமல் தோல்வியடையக் கூடும். ஆனால், படம் பெரிய ஹிட்.

தமிழில் டெக்னிக்கல் கடத்தல் மற்றும் புத்திசாலித்தனமான துப்பறியும் கதைகள் மிகவும் குறைவு. இந்தவகைக் கதைகளுக்கு தமிழில் இப்படம் நல்ல உதாரணம். மிஷன் இம்பாஸிபிள் போல தமிழில் நல்ல முயற்சி. இதன் வெற்றி இன்னும் பல இதைவிட செறிவான காப்பியடிக்கப்படாத கதையம்சத்தோடு தமிழில் நாம் காணமுடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.


சூர்யா உசிலம்பட்டி பஸ்ஸடாண்டுக்கு போவது போல வெளிநாடுகளுக்கு சென்று வருகிறாராம். கேவலமான வருணனை. தமிழகத்தில் நடக்கும் சர்வதேச கடத்தல் என்பதை அதன் வீரியம் குறையாமல் தான் காட்டியிருக்கிறார்கள். அராத்து படங்களைப் போல ஹீரோக்கு பஞ்ச் டயலாக்குகளை வைத்து கடுப்பேற்றுகிற வேலையை இப்படம் செய்யவே இல்லை. ஒரு வேலை நீங்கள் 5 குத்துப்பாட்டு, ஃபைட்டு எதிர்ப்பார்க்கிற ரசிகராக இருப்பீர்கள் போல.

எப்போதும் உடனிருக்கும் தனக்கு நம்பகமான நண்பன், ஆப்பிரிக்க சம்பவங்கள் உட்பட அனைத்திலும் துரோகியாக செயல்பட்டிருக்கிறான். அவனது தங்கையை காதலிக்கிற போது
ஹீரோவின் காதலும், விசுவாசம் வைத்திருக்கும் அண்ணனின் கடத்தல் தொழிலும் என்ன ஆகும் என்கிற இடத்தில் சரியான நேரத்தில் தான் இடைவேளை. நீங்கள் ராவாக அடித்துவிட்டு நட்டு கழண்ட படி படம் பார்த்திருப்பீர்கள் போல.

இதில் தமிழ் விளக்கம் வேறு. அயன் என்றால் அயலவன் என்று பொருள். அயல்நாட்டுக்காரன் என்றும் சொல்லலாம். பிரமன் என்கிற பொருளும் உண்டு. அயல்நாடுகளுக்கெல்லாம் அடிக்கடி சென்று வரும் கதாபாத்திரம் என்பதால் சூரியாவின் கதாபாத்திரத்தைக் குறிப்பிட அயலவன் என்பதைச் சுருங்க அயன் என்று வைத்திருக்கலாம்.

உயிரைப் பணயம் வைத்து கடத்தல் புரியும் கும்பல்களில் ஒருவனான ஹீரோ கடத்தல் கும்பல்களை ஒழித்து அதிலிருந்து விடுபட எடுக்கும் சிரத்தைகள் என்பது தான் நீங்கள் கேட்ட கதை. இதை பார்த்த பல கோடி பேரில், சின்னக்குழந்தையைக் கேட்டால் கூட எளிதில் சொல்லிவிடும். இப்போது தெரிகிறது நீங்கள் விமர்சித்ததன் லட்சணம்.

முத்துசிவா said...

வாங்கண்ணே.... ரொம்ப நாள் கழிச்சி "என்னது மஹாத்மா காந்தி செத்துட்டாரா" ன்னு கேக்க வந்துருக்கீங்க?

//என்ன தான் சொல்லியிருக்கீங்கன்னு பார்க்கலாமேனு படிச்சா விமர்சனத்தில் ஒன்னுமே இல்ல. பாதி பாரா டிக்கெட் வாங்கினதுக்கு நீங்க பட்ட பாடு. இன்னும் கொஞ்சம் இன்ட்ரவல்ல உங்க ராவடி. தாங்க முடியல.//

ஹி ஹி.. அண்ணேன்... எனக்கு வழக்கமா எல்லாரும் எழுதுற மாதிரி "நான் ரசித்த காட்சிகள், படத்தில் என்னை கவர்ந்த 10 வசனங்கள், படத்தின் கதை" இப்புடின்னு வழக்கமான பாணில விமர்சனம் எழுத வேண்டாமேன்னு தான் அந்த மாதிரி கலந்து எழுதிருக்கேன்.

//4, 5 ட்யூன்களை வைத்துக்கொண்டு மட்டும் இசையமைக்கிறவரும் ஹாரிஸ் ஜெயராஜ் அல்ல. புரிகிற அளவில் மென் தமிழ் புதிய வார்த்தைகளை இசையில் குழைத்து, ஒலி மிகையாகாமல் அழகிய ராகங்களில் படைத்தளிப்பது அவரின் புதிய முயற்சி தான். இசை என்பதைக்காட்டிலும் இந்த முயற்சி ஒரு புதிய சிந்தனை. இலக்கியத் தமிழை பாடலில் கேட்க முடிவதற்கே நாம் அவருக்கு பாராட்டுதல் செய்ய வேண்டாமா. . .//


ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ஹிட் ஆகுறது கண்டிப்பான உண்மை..ஆனா அவருடைய எல்லா படல்களுமே ஏற்கனவே கேட்ட சாய்லிலேயே இருப்பதை மறுக்க முடியாது.. புதிய தமிழ் வார்த்தைகளை குழைத்து அடிக்கிறாறா? நல்லா குழைச்சாரு....

"ஒ மா ஸிமீ யா ஆயா ஆயா"
"ஒக்காளி ஸ்விங் ச்சாய் ச்சாய் ச்ச ச்சைச்சா "
"அய்ய கக்கா ஆயி ஆயி ஆயியே"
" ஒ ஆயி ய்யே ஆயி ய்யே ஆயி ய்யே "

அருமையான தமிழ் வார்த்தைகளை குழைச்சிருக்கரு.. ensaaaaaaaai...

//தமிழில் டெக்னிக்கல் கடத்தல் மற்றும் புத்திசாலித்தனமான துப்பறியும் கதைகள் மிகவும் குறைவு. இந்தவகைக் கதைகளுக்கு தமிழில் இப்படம் நல்ல உதாரணம்.//

அண்ணே நீங்க பழைய கமல் படம் லாம் பாத்ததில்லையா... இந்த படத்துல வயித்துல கடத்துறத, 20 வருஷத்துக்கு முன்னாடியே பண்ணிட்டாங்க. ஹீரோயின் தொடையில operate பண்ணி அதுல போதை பொருள் கடத்துறத நீங்க பாக்கல போலருக்கு.

//சூர்யா உசிலம்பட்டி பஸ்ஸடாண்டுக்கு போவது போல வெளிநாடுகளுக்கு சென்று வருகிறாராம். கேவலமான வருணனை. தமிழகத்தில் நடக்கும் சர்வதேச கடத்தல் என்பதை அதன் வீரியம் குறையாமல் தான் காட்டியிருக்கிறார்கள்//

சூர்யா ஒரு இருபத்தைஞ்சி கெட் அப் ல போலீஸ ஏமாத்திட்டு நாடு நாடா சுத்துவாரு. எதோ நுனுக்கம் நுனுக்கம்னு ஒப்பிக்கிறீங்களே, இதைவிட ஒரு அபத்தமான காட்சி வேற தேவையா? சூர்யா பெரிப்பாதான் பாஸ்போர்ட் ஆப்பீஸரா?

//ஒரு வேலை நீங்கள் 5 குத்துப்பாட்டு, ஃபைட்டு எதிர்ப்பார்க்கிற ரசிகராக இருப்பீர்கள் போல.//

ஆமாண்ணே... நா 5 குத்து பாட்டு 4 ஃபைட்டு எதிர்பாக்குறவன் தான். அயன்ல 4 குத்து பாட்டு, 5 ஃபைட்டு இருந்துச்சா... அதான் எனக்கு புடிக்கல..


//நீங்கள் ராவாக அடித்துவிட்டு நட்டு கழண்ட படி படம் பார்த்திருப்பீர்கள் போல.//

எனக்கென்னமோ கழண்டது உங்களுக்கு தான்னு தோனுது.

//இதில் தமிழ் விளக்கம் வேறு. அயன் என்றால் அயலவன் என்று பொருள். அயல்நாட்டுக்காரன் என்றும் சொல்லலாம். பிரமன் என்கிற பொருளும் உண்டு. ///

தயவு செஞ்சி இந்த விஷயத்த கே.வி.ஆனந்த் கிட்ட சொல்லிருங்க. ஏன்னா அவரு தான் அயன் னா 'சிவன்' னு பேப்பர்லலாம் சொல்லிருந்தாரு.


உங்க பேரை சொல்லவே இல்லையேண்ணே....

Anonymous said...

Ayan means Brammah, not Shiva. (however no connection with movie)..

santhosh-chennai said...

amazing muthusiva....sorry i dont have tamil fonts and i nvr tried too..so i wil write in english..this is what i exactly felt when i watched the movie...i was like"what the hell is going on here"..just because each and every scene goes fast and put on some intelligence,it was really stupid...this movie shud have come in 1970's to beleive this kinda cheap tricks happening in Airport...OMG!!! u hav xplained about the music very well...crappy music with the same old songs of his..even in our music industry everyone copies,atleast some people has style...but this harris jayaraj...he sucks..he dusn have his own trademark or style or anything..he jus simply raise the tempo and some notes of his own songs or other music directors songs,especially english choir albums...its even totaly useless to spk abt him...all knows he is a copycat and he has some jalras too..let leve him..coming to the story of the movie.."what te hell"....and one more thing muthu,the fight sequence were copied from "bourne identity: series...camera work was good...but not great...just because its a K.V Anand movie,that doesnt mean the camera work is good...VTV camera work was picture perfect..when i told many of my friends about this crap movie,they said..some said..omg..ayana?..cha enna padam da adhu...hollywood style....surya six pack..thu thu....and some were kinda "ya..ok ok film"..but when i read your review now,i was heartfelt and it was the exact way i felt about this movie..also dont worry about these crap people who gives negative comment...they mi8 b fans of surya or haris copyraj...u carry on with ur work..its refreshing to read ur reviews...i appreciate the fact...."idhu nalla ilanae idhu nalla illa dhan"..ooore nalla irukunu sonnalum..."idhu mokka padam dhan"...u stood at wat u said..i liked it...and the real fact is ,sun tv ...ayo mudila da saami...enna hype..inda mokka padathuku...and buddy..am waiting for 7th sense review from your end....xcuse my sms language n englsih in this pakka tamil blog..hope u dont mind:)

santhosh-chennai said...

Sorry friend...just searched and found out the review of 7th sense.....as usual..two words...sema kalaai....

சிகரம் பாரதி said...

அருமை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...