"பொறுமையா இருப்பா... நீ இப்புடி கோவப்படுறதால கடைசில பாதிப்பு யாருக்குன்னா நமக்குதான்... உன்ன விட வயசுல மூத்தவன் சொல்றேன்... தயவு செஞ்சு கேளுப்பா..." என்றார் அந்த பெரியவர்..
"அதெப்புடிங்க முடியும்... பாதிக்கபட்டது நாங்க.. அதுக்கு சரியான பழி வாங்குனாதான் என் மனசு ஆறும்...எங்க அண்ணன அடிச்சே
கொன்னவன சும்மா விட்டு வைக்க சொல்றீங்களா?" கொதித்தான் பக்கிரி...
"சும்மா தான் இருக்கனும்....இப்ப உன்ன நம்பிதான் உன்னோட குடும்பமே இருக்கு...அதோட இங்க இருக்கவங்களுக்கெல்லாம் நீ தான்
தொழில் சொல்லித்தர்ற.. உனக்கு ஒன்னு கெடக்க ஒண்ணு ஆயிடுச்சின்னா இவங்களோட கதி.. நீ தானே அவங்களயெல்லாம் கரை சேக்கனும்...."
"எங்க அண்ணனோட சாவு இன்னும் என் கண்ணு முன்னாடியே இருக்கு... என்ன தடுக்காதீங்க...... அவன இப்புடியே விட்டா நாளைக்கு நம்ம பேரு சொல்றதுக்கு கூட யாரும் இருக்க மாட்டாங்க....எங்க அண்ணனோட ஆத்மா சாந்தி அடைய இத நாங்க செஞ்சே ஆகனும்..என்னடா சொல்றீங்க..."
"ஆமா... கண்டிப்பா செய்யிறோம்... " என்றனர் அவனுக்குப்பின்னால் இருந்தவர்கள்.
"என்னமோ நா சொல்றத சொல்லிப்புட்டேன்.. அதுக்கு மேல உங்க இஷ்டம்...செய்யிறத பாத்து செய்யிங்கடா... உசுற காப்பாத்திக்குங்க..."
என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் அந்த பெரியவர்,
ஓரு வழியாக உத்தரவு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில்
"டேய் எங்கூட ஒரு நாளு பேரு வரனும் இத செய்ய.. யார் யார் வர்ரீங்க..."
"கூட்டத்தில் உயர்த்தப்பட்ட கைகளில் நான்கு பேரை அழைத்தான்..
அவர்கள் கஜா, சாமி, திரு, மாண்டி..
"நா ஏன் உங்கள கூப்டேன்னா நீங்களும் அவனால பாதிக்கப்பட்டுருக்கீங்கன்னு தெரிஞ்சி தான்"
"ஆமாண்ணே.... எங்க உயிர் போனாலும் பரவால்லண்ணே... அவன செய்யிரோம்ணே..."
"எடுத்தோம் குவுத்தோம்னு எதயும் பண்ணக்கூடாது....அவன செய்யிறதுக்கு நாளைக்கு நைட் பத்து மணி சரியாஇருக்கும்..அவனுக்கு முன்னாடியே அவன் வீட்டுக்கு போயி நாம பதுங்கி இருக்கனும். சரியா பத்து மணிக்கு லைன் மாத்துறதுக்காக கரண்ட் கட் ஆகும். அந்த சமயத்த தான் நாம யூஸ் பண்ணனும்... ஒரே சமயத்துல தாக்குனாதான் அவனால சமாளிக்க முடியாது.. கஜா நீ அவன் கழுத்துல போடு... சாமி நீ கைல போடு...மாண்டி நீ முதுகுல போடு.... திரு நீ கதவுக்கு பிண்ணால நின்னு அவன் வரும் போது சிக்னல் தரனும்..ஒகே வா.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் மொத்தமும் சொதப்பிடும்.. சரியா..."
"சரிண்ணே..."
மறுநாள்... இரவு ஒன்பது மணி... மனோகர் வீட்டின் sofa விற்கு பின்பு ஒருவன்.. கட்டிலுக்கு அடியில் ஒருவன்...கதவிடுக்கில் ஒருவனாக
பதுங்கி இருந்தனர்.
சரியாக ஒன்பதரை மணி... மனோகர் வீட்டுக்குள் நுழைந்தான்... முகம் கை கால் அலம்பிவிட்டு நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்கத்தொடங்கினான்.
மணி 9.55. 9.56...... 9.59..... 10.00
கரண்ட் கட்..... ட்ர்ர்ர்ர்ர்ர்ர்... என்ற சத்தத்துடன் டிவி அணைந்தது....
மறைந்திருந்தவர்கள் வெளிப்பட்டு திட்டமிட்ட படி தாக்க தொடங்கினர்.. கையில் ஒருவன் கழுத்தில் ஒருவன்... முதுகில் ஒருவனாக.."
"சாந்தி... அந்த கொசுவர்த்திய எடுத்துட்டு வா.... கரண்ட் கட் ஆனிச்சின்னா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியால என்று சொல்லிக்கொண்டே
கையில் கடித்த சாமியை ஓங்கி ஒரு அடி அடித்தான் மனோகர்... குடித்த ரத்தத்தை கக்கிவிட்டு சுருண்டு விழுந்தான் சாமி...
மற்ற நால்வரும் மனோகரை கடித்துவிட்ட திருப்தியில் பறந்து வெளியே சென்றன....
அரைமணி நேரத்துக்கு பிறகு
"அண்ணே... நாம திட்டப்படி அவன் ஒடம்புல மலேரியா கலந்த ரத்தத ஏத்தியாச்சி.. கண்டிப்பா மலேரியா வந்து ஒரு வாரம் படுத்துடுவான்..
அப்ப தெரியும் நம்ம யாருன்னு...ஆனா இந்த operation la நம்ம சாமி செத்துட்டானேண்ணே..." என்றான் திரு..
அவர்கள் முன் வந்து அவன் தோளை இருக்கி பிடித்தபடி பக்கிரி சொன்னான் இருக்கம் கலந்த பெருமிதத்தோடு
"சத்ரியனுக்கு சாவுல்லடா"
4 comments:
"சத்ரியனுக்கு சாவுல்லடா" //
idhaaan weighttttu
அடங்கப்ப பில்டப்பு தாங்கமுடியல ....
இருந்தாலும் கடைசி வரை அந்த பையன் யாருன்னு சொல்லாம முடிசுது மசசு....
அவன் ....!!!!!!!!??????????
செம...! சூப்பரா இருந்தது...கதை...
நன்றி
Post a Comment