Sunday, July 4, 2010

மானாட... மங்காத்தா ஆட....


Share/Bookmark
"ஆயி மச்சா... எப்புடி இருக்கி....
நா நல்லா இருக்கி....
டான்ஸ் நல்லா இருக்கி..
பால் இருக்கி.. பலம் இருக்கி..."

ஹலோ... ஹலோ.... இது தமிழ்தாங்க... வேற எதோ மொழில எழுதிருக்கேன்னு நெனச்சி page ah close பண்ணிட்டு வேலைய பாக்க ஆரம்பிச்சிடாதீங்க... என்னடா இவன் இருக்கி.. வருக்கின்னு ஆரம்பிச்சிட்டானேன்னு பாக்குரீங்களா? தமிழ்தான் எங்கள் மூச்சி.. தமிழ்தான் எங்கள் பேச்சி...தமிழ்தான் எங்கள் வாட்ச்சின்னு சொல்லிக்கிட்டு இருக்க ஒரு டிவில வர்ர ஒரு நிகழ்ச்சியோட judge பேசுறதுதாங்க இதெல்லாம்...

அட இதுல மறைக்கிரதுக்கு என்ன இருக்கு.... கலைஞர் டிவில ஞாயித்துகிழமை ஆனா சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பிச்சி நைட்டு 12 மணி வரைக்கும் ஒரு program போடுவாயிங்களே... அதுல நம்ம நமீதாக்கா பேசுற தமிழ்தான் இதெல்லாம். எந்த Programoda பேருலயும் ஆங்கிலமே வரக்கூடாதுன்னு "பட வரிசை பத்து.. சீர் வரிசை பதினஞ்சி "ன்னு எல்லாம் பேரு வச்சிருக்காங்க.. பேரு மட்டும் வச்சா போதுமா... கொஞம் தமிழ் பேச தெரிஞ்ச ஜட்ஜுங்கள போட்டுருந்தா இன்னும் கொஞ்சம் matching ah இருந்துருக்கும்.


இந்த நிகழ்ச்சில judge ஆகனும்னா ரெண்டு முக்கியமான rules இருக்கு.. ஒன்னு அவங்களோட எடை 125 கிலோவ விட அதிகமா இருக்கனும். ஏன்னு கேக்குரீங்களா... செட்டுல எதாவது பள்ளம் மேடு இருந்தா ஜட்ஜ அங்க ஆட விட்டு சரி பண்ணிக்குவாங்க). இன்னொன்னு அவங்களுக்கு டமில் கொஞ்ஜம் கொஞ்ஜம் தான் தெரியனும்..ஏன்னா அப்பதான் program ஹைடெக்கா இருக்கும்

இந்த நிகழ்ச்சிய பொறுத்த வரைக்கும் ரொம்ப பாவப்பட்ட ஜீவன் யாருன்னா அது camera man தான்.. ஏன்னா அந்த மூணு ஜட்ஜயும் அவரால ஒண்ணா screen la காமிக்கவே முடியாது... குஷ்பூவ காமிச்சா நமீதா மறைஞ்சிடும்... நமீதாவ காமிச்சா குஷ்பூ மறைஞ்சிடும்.. ஏன்னா நம்ம வீட்டுல எல்லாம் இருக்குறது என்னவோ 21 இஞ்ச் டிவி தான். இதுங்கல்லாம் 70mm screen லயே பாதிதான் தெரியுங்க..

இதுகூட பரவால்ல... திடீர்னு என்னிக்காவது ஒரு நாள் "special performance" ன்னு ஒண்ணு போட்டு... "எலே மாஸ்டர் வர்றாருலே...எலே மாஸ்டர் வர்றாருலேம்பாயிங்க"... யாருடா அதுன்னு பாத்தா..... நெல்லு கொட்டி வைக்கிற குருது மாதிரி எதோ ஓன்னு வந்து ஆடிக்கிட்டிருக்கும்.. யார்டா இந்த syntax டேங்குன்னு பாத்தா.. டான்ஸ் மாஸ்டர் கலா....இதுக்குதான் இந்த build up ah...
அட தண்ணி வைங்கப்பா..


ஆனா இந்த program la ஜட்ஜ் எல்லாம் ரொம்ப.. strictu... strictu... strictu... (echo) ஒழுங்கா ஆடுனாதான் six marks. ஒழுங்கா ஆடல...அவங்களுக்கு ஆறு மார்க் தான்.

Excellent, Mind blowing, Fantastic, Super... இந்த வார்த்தைங்கள எல்லாம் அத கண்டுபுடிச்சவங்கல விட இவுங்கதான் அதிகமா use பண்றாயிங்க..ஓரு program ah அரை மணி நேரம் போடலாம்... ஒரு மணி நேரம் போடலாம்... மூணு மணி நேரம் இத போடுராயிங்கய்யா... show முடியிரதுக்குகொஞ்சம் முன்னாடி

" இந்த ஷோவுல இந்த வாரம் eliminate ஆக போறது யார்னு தெரியுமா?.. Keep Guessing.. அதுக்கு முன்னாடி ஒரு shortcommercial break" ன்னு சொல்லிட்டு ஒரு 20 நிமிஷம் விளம்பரத்துக்கு அப்பறம் வருவாயிங்க..

"என்ன எல்லாரும் ரொம்ப ஆவ்லா இருக்கீங்களா?"

கிழிச்சாங்க... சொல்லி தொலைங்கடா.. அப்பதான் வீட்டுல டிவிய off பண்ணுவாங்க... தூக்கம் வருது...

"அத நம்ம judges டயே கேப்போம்..சொல்லுங்க judges.. யார் யாரு இந்த வாரம் eliminate ஆக போராங்க?"

உடனே அவுங்க "எங்களுக்கே அத சொல்ல கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு.. but வேற வழி இல்ல." ன்னு இது மாதிரி எக்க சக்க build up அஹ குடுப்பாயிங்க.. Contestants எல்லாம் ரொம்ப டென்ஷனா இருப்பாங்க.... கடைசியா

" இந்த வாரம் எல்லாரும் சூப்பரா ஆடுனதுனால யாருமே eliminate ஆகல" ன்னு ஒரு அறுமையான தீர்ப்ப சொல்லி முடிச்சிடுவாயிங்க.. அட திரும்பவும் மொதல்ல இருந்தா...

"அப்பாடா நல்ல வேளை.. இந்த வாரமும் யாரும் வெளிய போகல... நா வேற பயந்துட்டேன்" ன்னு சொல்லிகிட்டு எங்கம்மா டிவிய off பண்ணிச்சி.

என்னது இந்த வாரமுமா? அப்ப எப்பவுமே இப்புடித்தானா.. அட வெக்கங்கெட்டவியிங்களா.. இந்த program ku எதுக்குடா மூணு judge? நீங்க அப்புடியே வந்து ஆடிட்டு போகலாமேடா...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

வந்தியத்தேவன் said...

உந்தக் கொடுமை 150 வாரம் தாண்டியும் போகின்றது. செம்மொழிப் பாடலுக்கு நம்ம கலா அக்கா ஒரு குத்து குத்தினாரு கிழி கிழி கிழி தான்

நான் இதனைப் பற்றி எழுதியது உங்கள் பார்வைக்கு

http://enularalkal.blogspot.com/2009/09/v-11.html

Anonymous said...

மச்சி. நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஆபாசமும் அதுல வர்ற பெண்களும் தலை விரிச்சு ஆடுது. அனுராதா, ஜெயமாலினி, ரகசியா எல்லாம் பிச்ச வாங்கனும். இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்தா நல்லாருக்கும். நிகழ்ச்சில மட்டும் ஆபாசம் இல்ல, மானாட மயிலாட குழு ராத்திரீல தண்ணியப் போட்டு பெசன்ட் நகர்ல அசிங்கம் பண்றாங்களாம் எல்லா வார இறுதியிலும். ஆளுங்கட்சி டீவினால போலீசுனால ஒன்னும் பண்ண முடியலையாம்("இல்லைனா கிழிச்சுருவாய்ங்களா?"னு கேக்க கூடாது)!!!

அ.சந்தர் சிங். said...

intha programukku 18 vayathu

vanthavargal mattume paarkka


vendum endru kattaaya paduththa

vendum.illai endraal intha

nigazhchchi start agum munnare oru

add oodalam.intha vaaram programil

nameethavin costume paarthu alari

vitten.udane tv yai off seithu

vitten.yeano theriyavillai,intha

programmai paarkkum pothu oru kutra

unarchi ennai uruththugirathu.

தனி காட்டு ராஜா said...

//நெல்லு கொட்டி வைக்கிற குருது மாதிரி எதோ ஓன்னு வந்து ஆடிக்கிட்டிருக்கும்.. யார்டா இந்த syntax டேங்குன்னு பாத்தா.. டான்ஸ் மாஸ்டர் கலா....இதுக்குதான் இந்த build up ah...
அட தண்ணி வைங்கப்பா..//

தடம் மாறிய யாத்ரீகன் said...

என் மனசுல இருந்ததை எல்லாம் நீங்க கொட்டிடீங்க !! கலா மாஸ்டர் பண்ற தொல்ல இருக்கே எப்பா!!! நல்லா ஆடுனா உடனே 500 ரூபா கொடுப்பாங்களாம் !! என்னா கூத்து !!

Anonymous said...

நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

ravin said...

தமிழ்தான் எங்கள் மூச்சி.. தமிழ்தான் எங்கள் பேச்சி...தமிழ்தான் எங்கள் வாட்ச்சின்னு
sema line epudi ipudi ellam!!!!

ravin said...

எந்த Programoda பேருலயும் ஆங்கிலமே வரக்கூடாதுன்னு "பட வரிசை பத்து.. சீர் வரிசை பதினஞ்சி "ன்னு எல்லாம் பேரு வச்சிருக்காங்க


Super!!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...