Sunday, July 25, 2010

அழகு ராஜா சைக்கிள் கடை-பாகம் II


Share/Bookmark
இடம்:ஆல் இன் ஆல் அழகு ராஜா சைக்கிள் கடை
நேரம் : காலை 11.30

கவுண்டர் : டேய் கருவாட்டு தலையா... என்னடா கடையே பாதி காலியா இருக்கு...எல்லா சைக்கிளும் எங்கடா?

செந்தில் : எல்லா சைக்கிளும் வாடகைக்கு போயிருச்சிண்ணே....
கவுண்டர் : இந்த ஊர் காரனுக சைக்கிள்ல எல்லாம் சுத்த மாட்டானுகளே... எல்லாம் கஞ்ச பயலுகளாச்சேடா..அவனுக எப்புடி இப்புடியெல்லாம்?

செந்தில் : அதெல்லாம் ஒரு தொழில் ரகசியம்ண்ணே..

கவுண்டர் : ஹய்யோ... எனக்கு சந்தோசமா இருக்கு... Blackberry செல்லம் நா உன்ன இவளோ நாளா தப்பா நெனச்சிட்டேண்டா.... நீ இவளோ நல்லா கடைய பாத்துக்குவன்னு தெரிஞ்சா நா உன்ன அடிச்சிருக்கவே மாட்டேன்... ஆமா டீ சாப்புடுரியா செல்லம்?

செந்தில் : இல்லண்ணே... அதெல்லாம் வேணாம்னே...

கவுண்டர் : இல்ல குட்டிம்மா... நீ எதாவது சாப்டே ஆகனும்... ஆமா... அப்புடி நீ என்ன பன்ன?

செந்தில் : அது ஒன்னும் இல்லண்ணே... "தமிழர்களே.. தமிழர்களே... நீங்கள் எங்க கம்பெனி சைக்கிளை குளத்தில் தூக்கி போட்டாலும் அது கட்டுமரமாகத்தான் மிதக்கும்.. அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம்" ன்னு கலைஞர் பாணில ஒரு board எழுதி போட்டேண்ணே... எல்லா பயலுகலும் ஒடனே வந்து சைக்கிள் எடுத்துட்டு பொய்ட்டாய்ங்கண்ணே...காசு கூட வண்டிய விடும் போது குடுத்தா போதும்ன்னு சொல்லிட்டேண்ணே...

கவுண்டர் : அடப்பாவி... இந்த ஊர்காரனுக ரொம்ம மோசமானவனுங்கடா... உண்மயிலயே சைக்கிள கொளத்துல தோக்கி போட்டாலும்
போட்டுருவானுங்கடா... அடேய்... வால் டியூப் வாயா... உனக்கு எப்புடா இப்புடியெல்லாம் தோணுது?

செந்தில் : அதுக்கெல்லாம் கிட்னி வேனும்னே.. அப்பறம் அந்த டீ சொல்ரேன்னு சொன்னீங்களே... சொல்றீங்களா?

கவுண்டர் : உள்ள வா... போர்ன்வீட்டாவே தர்ரேன்........

(கதவு சாத்தப்படுகிறது)

அரை மணி நேரத்துக்கு பிறகு..

கவுண்டர் : வக்காளி இனிமே இதுமாதிரி எதாவது ஐடியா உனக்கு வந்துச்சி...மண்டையில நாலே முடி விட்டு வெட்டிப்புடுவேன்...படுவா..இந்த கடைக்கு எவன் வேலைக்கு வந்தாலும் ஒரு வாரத்துக்கு மேல இருக்க மாட்டேங்ரானு நானே ஒரு டென்ஷன்ல இருக்கேன்.

செந்தில் : ஒழுங்கா சம்பளம் குடுத்தா ஏன் எல்லாம் போரானுக... உங்க டென்ஷன போக்கத்தான் இன்னிக்கு இன்னும் ரெண்டு பேர கூப்டு வந்துருக்கேன்.

கவுண்டர் : டேய்... முன்னாடி வந்தவனுக மாதிரி சொதப்ப மாட்டனுகளே...

செந்தில் : இல்லண்ணே.. கண்டிப்பா சொதப்பாது... ஏன்பா இங்க வா..

சிம்பு வர்றாரு...

கவுண்டர் : அப்பறம்... தம்பி பேர் என்ன?

சிம்பு : என் தம்பி பேரு குரளரசன் சார்..

கவுண்டர் : டேய்..Jerry mouse வாயா... என்ன டகால்டியா? நா உன் பேர் என்னன்னு கேட்டேன்டா....

சிம்பு : என் பேரு சிலம்பரசன்.. சுருக்கமா சிம்புன்னு கூப்புடுவாங்க..

கவுண்டர் : அதெப்புடி சிலம்பரசன சுருக்குனா சிம்புன்னு வருது.... அதுக்கு பதிலா சிம்பன்சி ன்னு வச்சிக்க,.. கரக்டா இருக்கும்.

சிம்பு : சார்.. மரியாதையா பேசுங்க.. நீங்க இந்த மாதிரி பேசுறது எங்கப்பாவுக்கு தெரிஞ்சிது... சும்மாருக்க மாட்டாரு ஆமா..

கவுண்டர் : ஏன் சொரி செரங்கோட இருப்பானா? அப்புடியே பின்னாடி அந்த சைக்கிள தொடைக்கிறது யாருன்னு பாரு?

சிம்பு : சார்.. நா கூட உங்கள என்னமோன்னு நெனச்சிட்டேன் சார்... கரடிய வச்செல்லாம் வேல வாங்குரீங்க.. பெரிய ஆளு சார் நீங்க..ஆமா... ஏன் சார் அது வாயில பிளாஸ்திரி போட்டு ஒட்டிருக்கீங்க?

கவுண்டர் : டேய்... ஹெட் லைட் கண்ணா... நல்லா பாருடா.. அதான்டா உன்கொப்பன். ரெண்டடி தூரத்துல நின்னா அப்பாவயே அடையாளம் தெரியலயா உனக்கு? போனா போகுதேன்னு அவன வேலைக்கு சேத்தா, வந்ததுலருந்து, "சைக்கிள்ல இருக்கது ரிம்மு, நா நைட்டுல அடிக்கிறது ரம்மு, தமன்னா ரொம்ப ஸ்லிம்மு" ன்னு ஒரே அடுக்குமொழிலயே பேசிக்கிட்டு இருந்தான். அதான் வாயில ப்ளாஸ்திரிய போட்டு விட்டுட்டேன். உங்கப்பன் ஒருதனையே என்னால சமாளிக்க முடியல... உனக்கு இங்க வேல கெடயாது... அப்புடியே எந்திரிச்சி
ஓடிப்போயிரு..

சிம்பு : நா அழுகுறேன் சார்...

கவுண்டர் : டேய்... மங்கூஸ் மண்டையா.. நீ எந்தெந்த வேலைக்கு முழிய எப்புடி டைப் டைப்பா மாத்துவன்னு தெரியும்டி... இது ஒன்னும் டிவி நிகழ்ச்சி இல்ல. எனக்கு வெறி வர்ரதுகுள்ள ஓடிப்போயிரு.. டேய் அழகேசா அடுத்தவன் யார்டா?...

செந்தில் : அண்ணே.. இவருதாண்ணே எஸ்.ஜே.சூர்யா..

கவுண்டர் : என்ன எச்சக்கல சூர்யாவா?

செந்தில் : அய்யோ இல்லண்ணே... s.j.சூர்யா..

கவுண்டர் : ஒ.... சரி.. உன்ன பத்தி கொஞ்ஜம் சொல்லு..

S.J.சூர்யா: எத சார் சொல்ல சொல்ரீங்க... நா சின்ன வயசுல பெட்ல ஒண்ணுக்கு அடிச்சி வச்சப்ப எங்கம்மா அத பாத்து ஏண்டா ஏழு கழுதை வயசாகுது இன்னும் பெட்ல ஒண்ணுக்கு அடிச்சி வக்கிரியேன்னு என்ன பாதி தூக்கத்துல அழ அழ தர தர ன்னு பாத் ரூமுக்கு இழுத்துட்டு போவாங்களே... u want me to tell u abt thaaaaaaaaat....... எங்க பெரிய அண்ணன் birthday ku பைக் வாங்கி குடுத்தப்ப நானும் பைக் வேனும்னு எங்க அப்பாட்ட கேட்டு அழுதப்ப அந்த வழியா வந்த எங்கம்மா இவன் ஏன் அழுகுரான்னு கேட்டப்ப இவனுக்கும் பைக் வேணுமாம்னு எங்கப்பா சொன்னப்ப, இந்த வயசுலயே உனக்கு எதுக்குடா பைக்கு ன்னு என்ன எங்க
அம்மா என்ன போட்டு அடி அடின்னு அடிச்சப்ப.. எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது நா மட்டும் அழுதுக்கிட்டு இருந்தானே u want me to tell u abt thaaaaaaaaaaaaaaaaaaat.....

கவுண்டர் : அடங்கப்பா.. suchitra வாயா... ஒட்டுனது போதும்டா... ரீலு அந்து போச்சி.. நீ பேச ஆரம்பிச்சா நிருத்தவே மாட்டியா? இனிமே உனக்கு no more questions.. straight ah appoinment தான். u r selected. போய் வேலய பாரு.

S.J.சூர்யா : தேங்க் யூ சார்...ஆனா ஒரு கண்டிஷன்

கவுண்டர் : ஓ... இது வேறயா? என்ன கண்டிஷன்?

S.J.சூர்யா : லேடீஸ் staffs யாராவது இருந்தாதான் நா வேலை செய்வேன்.. ஆமா இங்க எத்தன லேடீஸ் staffs இருக்காங்க?

கவுண்டர் : ஆமா.. இது tata consultancy.. முன்னூறு gents staffs ah யும் 250 லேடீஸ் staffs ah யும் வச்சி நா வேல வாங்கிகிட்டுருக்கேன்.. காலையில கடைய கூட்டுறதுக்கு 80 வயசுல பல்லுபோன கெழவி ஒன்னு வரும். அதான் இங்க உள்ள ஒரே லேடி staff.
S.J.சூர்யா : ஒகே. அது போதும்.. நா இன்னிக்கே டூட்டில join பன்றேன்..

கவுண்டர் : அடப்பாவி... அந்த கெழவியயும் நீ விட மாட்டியா.. எப்புடியோ ஒழிஞ்சி போ நாயே..

செந்தில் : இந்தாங்கண்ணே..

கவுண்டர் : என்னடா லெட்டர் இது?

செந்தில் : என்னுடைய ராஜினாமா கடிதம்

கவுண்டர் : இருக்குற வேலைய ராஜினாமா பண்ணிட்டு சோத்துக்கு என்ன நாயே பண்ணுவ?

செந்தில் : எதுத்தாப்புல இருக்க ராசியப்பன் சைக்கிள் கடையில சேரப்போரேன்.. அங்க உங்கள விட ரெண்டு ரூவா அதிகமா தர்றதா சொல்லிருகாங்க..

கவுண்டர் : ஆமா... இவரு Microsoft லருந்து resign பன்னிட்டு Apple computers ல சேர போராரு... இனிமே என் கண்ணு முன்னாடியே நிக்காம ஓடிப்போயிரு..

செந்தில் : கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு...

கவுண்டர் : அது கற்றவங்களுக்கு.. உனக்கு எங்க போனாலும் செருப்பு தான்... 12B தலையா....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

Ramesh said...

நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க...நல்லா இருக்கு...

முத்துசிவா said...

thanks sir

R.Gopi said...

யப்பா......

போட்டு பின்னிட்டியே தல....

//கவுண்டர் : அப்பறம்... தம்பி பேர் என்ன?

சிம்பு : என் தம்பி பேரு குரளரசன் சார்..

கவுண்டர் : டேய்..Jerry mouse வாயா... என்ன டகால்டியா? நா உன் பேர் என்னன்னு கேட்டேன்டா....//

கலக்கல்ல்ல்ல்ல்ல்ல்ல்

முத்துசிவா said...

nandri thala

தனி காட்டு ராஜா said...

கலக்கல் காமடி :))))))

”தளிர் சுரேஷ்” said...

கவுண்டர் காமெடிய கலக்கலா எழுதி இருக்கீங்க! சூப்பர் வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...