Wednesday, December 22, 2010

முதல் வெற்றிப்பட இயக்குனர்கள்


Share/Bookmark சசிகுமாரின் ஈசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாத நிலையில் எல்லாரும் "சசிகுமார் கிட்ட இத எதிர்பாக்கல" "ச்ச மொத படம் இப்புடி குடுத்துட்டு ரெண்டாவது படத்துல இப்புடி பண்ணிட்டாரே" ன்னு எங்க பாத்தாலும்  ஒரே விமர்சனங்கள். எதோ சசிகுமார் வரிசையா பத்து படம் ஹிட் குடுத்துட்டு பதினொறாவது படத்துல சொதப்புன மாதிரி எல்லாரும் பேசுறாங்க.

சுப்ரமணியபுரத்திலும் சசிகுமார் பெரிதாக எதுவும் செஞ்சிடல. வழக்கமா எல்லா டைரக்டருங்களும், ஒரு low budjet படத்த ஹிட்டாக்க என்ன செய்வாங்களோஅததான் சசிகுமாரும் பண்ணியிருந்த்தாரு, பருத்திவீரன் படம் மாதிரியே. இந்த ரெண்டு படத்துலயுமே, climax ah தவிர்த்து பாத்த, மிக சாதாரணமான படங்களே. அதாவது ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும், சாதாரணமான களத்துல பயணிக்கிற கதை, கடைசியில் ஒரு குரூரத்தில் முடியும். கண்டிப்பா அது ஹீரோ, இல்லன்னா ஹீரோயின் அல்லது ரெண்டு பேரோட மரணத்தில் முடியிறதாகவே இருக்கும். இப்போது ஓடிகிட்டுருக்கிற மைனாவும் இதே வகைதான்.

அதைவிட சுப்ரமணியபுரத்துல சசிகுமார் ரசிகர்களை, கவர ரொம்ப சூப்பரா ஒரு ட்ரிக் யூஸ் பண்ணிருப்பாரு. லவ் பண்ண பொண்ணு ஏமாத்திட்டா.... "பெண்களை நம்பாதே"ங்குற கருத்தே படத்தோட இறுதியில மேலோங்கியிருக்கும்.. நம்ம ஊர்ல இந்த "பெண்களை நம்பாதே" குரூப் நெறய பேரு இருக்காய்ங்க... பொண்ணுங்கள பத்தி தப்பா எதாது டயலாக் வந்தாலே விசிலடிக்கிற குரூப்பு.. இவிங்க யோக்கியம் மாதிரி.அதோட அந்த படத்தின் கதையும் அவரோட கற்பனையில் உருவானதாக தெரியல.. சில உண்மைச் சம்பவங்களின் கோர்வையாகவே இருக்கனும்.

அதை கொஞ்சம் புதுமையாக்க கதை 1980ல நடக்குற மாதிரி கதைக்களம் அமைச்சிருந்தாரு. காதல் காட்சிகளுக்கு பிண்ணயில் பழைய ஹிட்டான பாட்டு போட்டு அதை ஒப்பேத்தியிருந்தாரு. இந்த மாதிரி காட்சிங்க இப்போ இன்னொரு ட்ரிக். எதுவும் எடுக்க வரலன்ன, baground la எதாவது பழைய ஹிட்டான பாட்ட போட்டா, அந்த காட்சி நல்லா இல்லன்னாலும் பாக்குறவங்களுக்கு atleast சிரிப்பாவது வரும். இப்புடி சசிகுமார் இளைஞர்கள் மத்தியில ஒரு புதுமை புரட்சி இயக்குனரா அவதாரம் எடுத்தாரு.

அவர் ஹீரோவா நடிச்ச நாடோடிகளும் அதே போல் ஒரு புதுமையான கதை. இதுவரை யாரும் பார்க்கத ஒரு புது கோணத்தில் நண்பர்களை பத்தி சொல்லியிருந்தாங்க. கண்டிப்பாக அந்த கதையும் அவர்களின் கற்பனையில் உருவானது அல்ல என்பது உறுதி. எங்கோ நடந்த உண்மை சம்பத்தின் அதிகபட்சவெளிப்படே அது. முதல் படம் எடுத்து இரண்டு வருஷம் ஆகியும், அவரால அந்த படத்தின் தாக்கத்தை ஏற்படுதுற மாதிரியான கதையை (தேடி) பிடிக்கமுடியாமலேயே இதுபோலான ஒரு பிடிமானமில்லாத ஒரு கதையை உருவாக்கியிருக்காரு. அமீருக்கு கூட பருத்திவீரனுக்கு அப்புறம்  எந்த படமும் இன்னும் வரலங்குறது இன்னொரு வருத்தமான விஷயம்.

முதல் படத்தில் தனது முத்திரையை பதிக்கனும்னு வர்ற இயக்குனருங்க, முதல்ல தேர்வு செய்யிறது இது போல உண்மை சம்பவங்களை அடிப்படையாக  கொண்ட கதையா தான் இப்போ இருக்கு. அதிலயும் எல்லோரயும் திரும்பி பாக்க வைக்கனும்னா கடைசில கண்டிப்பா கொடூரமா எதாவது நடக்கனும் அப்புடிங்குறதுல கரெக்டா இருக்காங்க. அவுங்க இந்த மாதிரியான கதையை தேர்வு செய்ய இன்னொரு காரணம் தயாரிப்பாளர்கள். ஒரு இயக்குனரோட முதல் படத்துக்கே 30 கோடி பட்ஜெட்ல படம் எடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாரா இருக்க மாட்டாங்க.

ஆனா இதுபோலான உண்மை சம்பவங்களை படமாக்குறேன், இயல்பா நடக்குறத எடுக்குறேன்னு சொல்லிகிட்டு இருக்க இயக்குனருங்களுக்கு, கற்பனைவளம் குன்றி தானாக எந்த கதையையும் யோசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுறாங்க என்பதே உண்மை. .இப்போ சமீபத்துல ஹிட்டான "களவானி" படம் கூட இதை ஒத்ததே. எங்க ஊரு பக்கம் (ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை) என்ன நடக்குதுங்குறத அப்புடியே படம்மெடுத்துருக்கரு சற்குணம். இது அவர் சின்ன வயசுலேருந்து பாத்து பழகிய ஊரும், ஊர் மக்களோட வெளிப்படுமே. கற்பனை காட்சிகள் என்று அதில் எதுவுமே இல்லை. அவர் இதேபோலான இன்னொரு கதையை தேடிகிட்டு இருப்பாரு இப்போ. கண்டிப்பா அவரு அடுத்த படம் எடுக்க ரொம்ப நாள் ஆகும்.

இதனாலயே பல இயக்குனருங்க, ரெண்டு மூணு படத்துலயே காணாம போயிடுறாங்க.சினிமா துறையில உள்ள நுழையிறது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் துறையில் நிலைத்து நிற்பது. சினிமாவை சினிமாவாக எடுக்குறவங்கதான், திரைத்துறைய நீண்ட காலமா ஆட்சி செஞ்சிகிட்டு இருக்காங்களேயொழிய, உண்மையை எடுக்குறேன்... இயல்பான சினிமா எடுக்குறேன்னு சொன்னவங்க இல்லை.

இவ்வளவு படம் எடுத்தும், இப்போதும் எந்த இடைவெளியும் இல்லாம தொடர்ந்து படம் எடுத்துகிட்டு இருக்கும் k.s.ரவிகுமார், சுந்தர்.C, ஷங்கர் எல்லாருமே கற்பனை கதை, கற்பனையான காட்சிகள் போன்றவற்றினாலேயே இன்னும் திரைத்துரையில் நிலைச்சி நிக்குறாங்களே தவற இயல்பான சினிமாவினாலேயோ, உண்மைகதைகளை படமாக்கியாதலோ அல்ல. (A.வெங்கடேஷ கூட இந்த லிஸ்டுல சேத்துக்கலாம்...ஹி ஹி).

எப்போதாவது செய்தால் தான் வித்தியாசமான முயற்சி. எப்போதும் அதை போலவே செய்ய நினைத்தால் வீண்முயற்சியாகவே செல்லும் இது மாதிரியான இயக்குனர்கள் சில இயக்குனர்களுக்கு புரிந்தால் சரி.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

ம.தி.சுதா said...

நன்றாகக் கூறியுள்ளிர்கள் நன்றி... எங்கே பல நாளாய் ஆளைக் காணல...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

முத்துசிவா said...

அட எங்க தலைவா... கம்பெனி முன்னாடி மாத்ரி இல்ல... திடீர் திடீர்னு வேலை செய்யனும்ங்குறாங்க... அதான் கொஞ்ச நாள் இத side ஆக்கிட்டு வேலை பாத்துட்டுஇருந்தேன்

Karthikeyan said...

Good post.. PASANGA pandiraj also in the same boat.. Let us wait for his "Marina"

Anonymous said...

ok....who is doing according to u?..thappu kandu pidikradhu easy..unga site pathi eludha guts irukka?

முத்துசிவா said...

//who is doing according to u?// அதையும் பதிவுல சொல்லிருக்கேனே...

//unga site pathi eludha guts irukka?// என் site பத்தி என்ன எழுதனும்?

Nanumullen said...

cinema என்பது பொழுது போக்கு விஷயம், இருகிற 3 மணிநேரம் எப்படி போகுதுன்னு தான் பார்க்கணும், உங்கள் பார்வையில் சுப்ரமணியபுரம், நாடோடிகள், பசங்க, களவாணி, இவையெல்லாம் கற்பனை கதை இல்லை, எல்லாம் எங்கயோ யாருக்கோ நடந்தது அப்படின்னு சொல்லுரீங்க, உண்மைதான் சினிமா என்பது நிஜத்தோட பிரதிபளிபு தான sir

Anonymous said...

// .இப்போ சமீபத்துல ஹிட்டான "களவானி" படம் கூட இதை ஒத்ததே. எங்க ஊரு பக்கம் (ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை) என்ன நடக்குதுங்குறத அப்புடியே படம்மெடுத்துருக்கரு சற்குணம். இது அவர் சின்ன வயசுலேருந்து பாத்து பழகிய ஊரும், ஊர் மக்களோட வெளிப்படுமே. கற்பனை காட்சிகள் என்று அதில் எதுவுமே இல்லை. அவர் இதேபோலான இன்னொரு கதையை தேடிகிட்டு இருப்பாரு இப்போ. கண்டிப்பா அவரு அடுத்த படம் எடுக்க ரொம்ப நாள் ஆகும்.


சற்குணம் அடுத்த படம் எடுத்து படத்துக்கு நேஷனல் அவார்டும் வாங்கிட்டாரு ... அடுத்த தடவை நல்லா ஜோசியம் பார்க்க கத்துக்குங்க .... நன்றி !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...