Monday, December 27, 2010

எந்திரனில் கவுண்டர் நடித்திருந்தால்


Share/Bookmark
சூப்பர் ஸ்டார் நடித்து, ஷங்கர் இயக்கிய எந்திரன் இப்போ அசத்தலான நூறாவது நாள நோக்கி போயிக்கிட்டு இருக்க, இந்த சமயத்துல அதே எந்திரன் படத்துல தல கவுண்டர் நடிச்சிருந்தா எப்புடி இருந்துருக்கும்? எந்திரன் காட்சிகளில் சில உங்களுக்காக.இந்த பதிப்புல வர்ற வசனங்கள் யாவும் நகைச்சுவைக்காகவே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

டாக்டர் வடக்குபட்டி ராமசாமிங்குற கவுண்டர், குட்டிங்குற ரோபோவ (செந்தில்) உருவாக்குறாரு. அத ஆண்டிப்பட்டி பஞ்சாயதார் முன்னாடி அறிமுகம் செஞ்சி வைக்கிறாரு.

இந்தா நிக்குதே நெல் அவிக்கிற சட்டி கலர்ல. இது பேருதான் குட்டி. பன்றி உருவம்  கொண்ட ரோபோ. He is none other than my மெக்கனிக் ஷாப்'ஸ் க்ரியேஷன்.

செந்தில்: ஹாய்... ஐ யாம் குட்டி... the robo.. Speed 5 km/hr.. 2GB in built memory ..
8GB extendable memory.

இவனுக்கு ஆண்டிப்பட்டில உள்ள அனைத்து மொழிகளும் தெரியும்

"அண்ணன் மொழி தமிழ்"

He can fight...

"வவ்.... வவ்வ்.... வவ்வவ்""

he can dance

"அவா அவா.... அவவா... அவவா... அவா அவா"

நம்ம ஊர்ல எந்த வீட்டுல, எந்த கொழம்பு வச்சாலும் இது கண்டுபுடிச்சிடும். இவனோட வாயி பேசுறதுக்கு மட்டும் இல்ல. திங்கிறதுக்கும் தான்.நூறு பேரோட வாயும் வயிறும் இவனுக்கு program பண்ணப்பட்டு இருக்கு.நாம நூறுபேர் சாப்டுற சாப்பட்ட இது ஒரு ஆளே திண்ணுறும். இப்போ இவன யாராவது கேள்வி கேக்குறதுன்னா கேக்கலாம்.


கூட்டத்திலருந்து ஒரு நபர்,

குட்டி, சிம்பிளா ஒரு கேள்வி கேக்குறேன். 362437 ஃபிபெனோசி நம்பரா?

செந்தில்: அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. by the by அது மூணாவது தெரு சுப்ரமணி wife oda.....

கவுண்டர்: அய்யயோ... ... ஏன்பா உனக்கு கேக்குறதுக்கு வேற நம்பரே இல்லையா...வேற எதாவது கேளுங்கப்பா....

கூட்டத்துலருந்து இன்னொருத்தர்,

உனக்கு தெரிஞ்ச Prime Ministers பேரு ரெண்டு மூணு சொல்லு...

செந்தில்:
243422224446466486383939838893389212127761212652256652556
21771278273123982378913791334897549058309583409583058045895034850
345049589304958049583049594580348509409583048954...........23984093840
3498209482094892..... 0798234982789 M forty four...இது சரியான்னு பாக்க உங்களுக்கு சில வருஷங்கள் ஆகும்.

கவுண்டர்: குட்டிமா.. உனக்கு பதில் தெரியலன்னா தெரியலன்னு சொல்லிரும்மா. இப்புடி சம்பந்தம் இல்லாம எதாவது சொன்னா இவனுக என் காத கடிச்சி வச்சிருவானுக...

கூட்டத்துலருந்த்து இன்னொருத்தர்,

ஆஹ்ஹா...... ஆஆ....ஆஆ....ஆஆ....ஆஹஹ்ஹாஆ.........

செந்தில்: நாட்டுகுறிஞ்சி பாருறேன்னுட்டு உசேரிக்கு போயிட்ட்டீங்க. நடுவுல
 ஆஹ்ஹ் இந்த இடத்துல சுதி வெலகிருச்சி.

நபர்3: ஏண்டா ஆப்ரிக்கா கொரங்கே... நா கட்டெரும்பு கால்ல கடிச்சிருச்சேன்னு அலருறேன்... இதுல உனக்கு சுதி வெலகாம வேற கத்தனுமா? செருப்பு  பிஞ்சிரும்.

கவுண்டர்: அய்யய்யோ.... டேய் மண்டையா.. கேக்குற கேள்விக்கு மட்டும பதில் சொல்லுடா... இப்புடி அதிக பிரசிங்கி தனமா எதாவது பண்ணி நா விஞ்ஞானி ஆவுறத தடுத்துடாதடா....

நபர்4: கடைசியா ஒரு கேள்வி. ப்ரபாகரன் உயிரோட இருக்கரா இல்லையா?

செந்தில்: பிரபாகரன்னா யாரு?

நபர்4: ஈழத் தமிழர்களுக்காக பாடுபட்டவரு. ராஜபக்ஷேவ எதிர்த்து நின்னவரு.

செந்தில்: எனக்கு தெரிஞ்சி ராஜபக்ஷேவ எதிர்த்து குரல் குடுக்குறது இப்பவும் எங்க அண்ணன் வடக்குபட்டி ராமசாமி தான்......(கவுண்டர நோக்கி கைகாட்டி)

"ப்ரபாகரன் இருக்காரு...."

கவுண்டர்: ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்.... அய்யா.. அம்மா... இந்த கருநாயி பொய் சொல்லுது....அது நா இல்லிங்க... சத்தியாமா நா இல்லிங்க..எனக்கு தலையெல்லாம் சுத்துதுடா சாமி...இந்த விஷயம் மட்டும் அந்த ஆளு காதுக்கு போனுச்சி, ஒரு லாரி நெறயா துப்பாக்கியோடஎன்ன சுடுறதுக்கு ஆள் அனுப்பிடுவான்...மெக்கானிக் ஷாப்ல ஷட்டர போட்டு மூடுங்கடா.....

தொடரும்.....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

18 comments:

கழுகு said...

//குட்டிமா.. உனக்கு பதில் தெரியலன்னா தெரியலன்னு சொல்லிரும்மா. இப்புடி சம்பந்தம் இல்லாம எதாவது சொன்னா இவனுக என் காத கடிச்சி வச்சிருவானுக.//

சூப்பரு :)

Azar said...

This movie is very good comparing to the Original Robo movie

முத்துசிவா said...

@kazhugu:

Nandri Mr.Kazhugin iruagu..

முத்துசிவா said...

@azar:


ayyayo... ivan enna vambula maatti vitruvaan polarukke

பாலா said...

நல்லா யோசிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள் நண்பரே

முத்துசிவா said...

@bala

thanks na

Philosophy Prabhakaran said...

நல்ல கிரியேட்டிவிட்டி... அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன்...

Mayu said...

பிரபாகரன் ஒரு விடுதலை வேண்டி போராடிய ஒரு தேசத்தின் தலைமகன், அவரை கவுண்டமணி போன்ற நகைச்சுவை நடிகருடன் ஒப்பிடுவது மனதுக்கு வேதனை தருகிறது. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது வேறு விடயம், ஆனால் அதை நகைச்சுவைக்கான பேசுபொருளாக தயவு செய்து எடுக்காதீர்கள்..

Pirabaharan is a legend of Tamil's history after the fall of Sera,Chola, Pandiyar Kingdoms.

Azar said...

Mapuuuuu... unaku previous commentla vachutanga pola AAPPPUUUUUUU,

Nagasubramanian said...

//he can dance

"அவா அவா.... அவவா... அவவா... அவா அவா"//
sema timing. but don't compare gounda mani with Prabakaran and all.

சாமக்கோடங்கி said...

செம காமெடி.. பலமுறை விழுந்து விழுந்து சிரித்தேன்.,

நாட்டில் நடக்கும் அக்கிரமங்களையும், சமூக அவலங்களையும், மூடப் பழக்க வழக்கங்களையும் கவுண்டர் எதிர்க்கத் தவறியதே இல்லை..

அதனால் அவரும் ஒரு வகையில் ஒரு நல்ல தலைவரே..

guest said...

Dont use Tamil tiger Prabakaran for comedy comparisons.


Other than that it was extraordinary comedy......

yahooooooooo

பால கணேஷ் said...

கவுண்டமணி செந்தில் டயலாக் ஸ்டைலை நல்லா அடாப்ட் பண்ணி கலக்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

sir.....sathiyama ungaluku super future iruku tamil cinema la..plzzzzzz sir,neenga ipadi cine field la try pana,periya reach aagum...plzz boss,intha mathiri neenga visuala try pani enga vayira sirichi sirichi punnakanum..really awesome boss...unga blogs thavarama padichu njoy panitruken..chanceless man...i like u vryyyyyyyyyyyyyyyyyyy much

Unknown said...

Thala Kalakkuringa .

Unknown said...

Thala Kalakkuringa.Sirichu mudila,.

Unknown said...

Thala Kalakkuringa.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...