Thursday, December 30, 2010

கனவு மெய்ப்பட வேண்டாம்


Share/Bookmark
கனவுங்குறது எப்ப வரும், எப்புடி வரும், ஏன் வரும்னு யாருக்குமே தெரியாது.ஆனா தூங்குறப்ப மட்டும் தான் வரும்தான் வரும்னு எல்லாருக்குமே தெரியும். வழக்கமா நமக்கு வர்ற கனவு எல்லாமே தூங்கி எந்திரிக்கும்போது ஏதோ லைட்டா ஞாபகம் இருக்க மாதிரி இருந்துட்டு கொஞ்ச நேரத்துல மறந்து போயிடும். ஆனா எனக்கு வந்த ஒரு கனவ அது மாதிரி மறக்க முடியல.. இதுல பெருசா ஆரம்பம், முடிவுன்னு எதும் இல்லைன்னாலும், கொஞ்சம் வித்தியாசமா நல்லா இருந்துச்சி. அதுனால இங்க பகிர்ந்துக்கிறேன். "இந்த பதிவுல வெள்ளை கலர் எழுத்துல உள்ளத்தெல்லாம் நிஜம்... புளு கலர் எழுத்துல உள்ளதெல்லாம் கனவு" அப்புடின்னு S.J.சூர்யா மாதிரி சொல்ற அளவுக்கு இது ரொம்ப பெரிய கனவு இல்லீங்க.... ரொம்ப சின்ன கனவுதான் பாருங்க.ச்சீ.... படிங்க...

கிட்டத்தட்ட மூணு வருஷம் பட் ரோடு ஏரியால இருந்துட்டு, ரெண்டு மாசம் முன்னாடிதான் நானும் என்னோட friends um  ராமாபுரத்துல ஒரு வீடு பாத்துகிட்டு போனோம். வீடு shift பண்ணி 15 நாள் ஆகி இருந்தாலும் நா ஒரு நாள் கூட அந்த வீட்டுல தூங்கல. ஊர்ல போயி டேரா போட்டுட்டு ஒரு நாள் திரும்பிவந்தேன்.எல்லாரும் கெளம்பி கம்பெனிக்கு போயிட்டாயிங்க.எனக்கு கொஞ்சம் களைப்பா இருந்ததனால, சரி கழுத ஒரு அரை நாள் லீவ போடுவோமேன்னு கொஞ்சம் அசதில தூங்கிட்டேன். கனவு start...

நா படுத்துருந்த ரெண்டாவது பெட் ரூம் ஜன்னல் கதவ யாரோ தட்டுனாங்க. அந்த ஜன்னலுக்கு பின்னாடி வெறும் செங்க கல்லும், ஒரு குட்டி compound சுவரும் தான் இருக்கும்.. அந்த பக்கம் வந்து ஜன்னல் கதவ தட்டுறது யாருன்னு நெனச்சிகிட்டேஜன்னல தொறந்தேன்.

வெளில ஒரு பொண்ணு. நீளமான முகம். கண்ணாடி போட்டுருந்துச்சி. ரொம்ப கலரா இல்ல..லைட் கருப்பா இருந்துச்சி.

"என்ன? யார் வேணும்"" ன்னேன்

"வீட்டுக்குள்ள வரனும்...... கதவ தொறங்க" ன்னுச்சி.

நா நேரா போயி, வீட்டு கதவ தொறக்க, வெளில ஒரு பொண்ணு. ஜன்னல்ல வந்த  பொண்ணு இல்ல. இது வேற. நல்ல கருப்பான,Round முகம். கண்ணாடி போட்டுருக்கு. ஆனா அதுக்கு கால் நடக்க முடியல. சொல்லப்போனா காலே இல்லன்னு சொல்லலாம். போலியோ attack ஆன மாத்ரி இருந்துச்சி.  ரெண்டு காலையும் மடிச்சி சம்மனக்கால் போட்ட மாதிரி வச்சிக்கிட்டு கைய ஊனிக்கிட்டே   உள்ள வந்து ஹால் ல கிழக்கு பக்கம்  பாத்தா மாதிரி  உக்காருது. நா  எதுக்க உக்கார்ந்தேன்.

கொஞ்ச நேரம் போனப்புறம் அது கண்ணுலருந்து, அவ்ளோ கண்ணீரு."எங்க வீட்டுல ரொம்ப கஷ்டம்ன்னு ஆரம்பிச்சி, நாம பஸ்ல பாக்குற பசங்க சொல்ற மாதிரி அப்பா இல்லை, அம்மாக்கு உடம்பு சரி இல்லை எதாது உதவி பண்ணுங்க"ங்குறமாதிரி ஏதேதொ சொல்லி ரொம்ப நேரம் பேசுது....

எல்லாத்தையும் நா கேட்டுகிட்டே இருக்கும் போது, திடீர்னு ஒண்ணு கவனிச்சேன்.அந்த பொண்ணு பேசுதே தவற அதோட வாய் அசையவே இல்ல. ஆனா அது பேசுறது என் காதுல நல்ல கேக்குது. உள்ளுக்குள்ள பயத்தோடவே

"என்னங்க... நீங்க பேசுறது எனக்கு கேக்குது, ஆனா... உங்க வாய் அசையவே இல்லையே.. உங்களால பேச முடியாதா?"

"ஆமா என்னால பேச முடியாது"

பேச முடியாதுன்னு சொல்றது கூட என் காதுல கேக்குது ,
" நீங்க பேசலன்னா அப்புறம் எப்புடி எனக்கு கேக்குது?"ன்னு கேட்டதுக்கு,

"உங்களுக்கு கேக்குறது எல்லாமே நான் என்னோட டைரில எழுதி வச்சிருக்கது" ன்னு அது சொல்ல எனக்கு திடுக்குன்னு முழிப்பு வந்துருச்சி.

மொத நாள் படுக்கையிலயே இப்புடி ஒரு கனவான்னு நெனச்சிக்கிட்டு,அன்னையிலருந்து நா அந்த ரூம்ல தனியா படுக்குறதே இல்ல.

அப்புறம் ஒரு நாள் இந்த கனவ எங்க அம்மாட்ட சொன்னப்ப, அதுக்கு அம்மா ஒரு காரணம் சொல்ல, அதுவும் கிட்ட தட்ட கரெக்டா தான் இருந்துச்சி.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

Nagasubramanian said...

ஒவ்வொரு பேச்சிலர் ரூம்லயும் ஒரு பேய் இருக்குமோ. (நாங்க இருந்த ரெண்டு ரூமுமே அப்படிதான்)

முத்துசிவா said...

கனவுல வந்தது பேய் இல்லீங்க...:)

Philosophy Prabhakaran said...

உங்களுடைய பழைய பதிவு ஒன்றினை ajith-vijay.blogspot.கம என்ற தளத்தினர் திருடியிருக்கிறார்கள்...

முத்துசிவா said...

@philosophy prabhakaran:

தகவலுக்கு மிக்க நன்றி
நண்பரே...

Azar said...

plz dont try to write this type of trivial .....

ravin said...

amma sona karanam ena????
atha solunka please.......

முத்துசிவா said...

@ravin singh
கனவுல வந்தது சாமின்னும், நா வேண்டிக்கிட்ட ஒரு நேர்த்திகடனை செய்ய மறந்தத ஞாபகப்படுத்திருக்குன்னும் சொன்னாங்க :)

ravin said...

ok any way dream super

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...