Tuesday, March 15, 2011

கவுண்டரின் அ.இ.ஆ.மு.க (அகில இந்திய ஆம்ளைஸ் முன்னேற்ற கழகம்)


Share/Bookmark
கவுண்டர் வீட்டு திண்ணையில் காதை பொத்திக்கிட்டு உக்கார்ந்துருக்காரு. அப்போஅங்க செந்தில் வர்றாரு


செந்தில்: என்னண்ணே.... காத பொத்திகிட்டு உக்கார்ந்துருக்கீங்க.

கவுண்டர்: அட இந்த அரசியல்வாதிகள் தொல்லை தாங்க முடியலடா... வீட்ட சுத்திநாலு பக்கமும் பெரிய பெரிய கொழாய (loud speaker) கொண்டுவந்து கட்டிபுட்டானுக...இந்த பக்கம் ஒருத்தன் 'அய்யா'ங்குறான், இந்த பக்கம் ஒருத்தன் 'அம்மா'ங்குறான். பிச்சைகாரன் ரேஞ்சுக்கு எறன்கிட்டானுக. இந்த சத்ததுல என் காது ஜவ்வு ரெண்டும்கிழிஞ்சி ரத்தம் வர ஆரம்பிச்சிருச்சி. அதான் காத பொத்துனாப்புல புடிச்சிருக்கேன்.உள்ளுக்குள்ள வேற புழுக்கம் ஜாஸ்தியா இருக்கா அதான் வெளிய உக்கார்ந்துருக்கேன்

செந்தில்: பேசாம ஒரு ஏசி ய வாங்கி மாட்ட வேண்டியதுதானேண்ணே...

கவுண்டர்: அடேய் கலைஞர் டிவி மண்டையா... போன எலெக்க்ஷனுக்கு டிவி குடுத்தானுக. டிவி வாங்குற செலவு மிச்சமாச்சு..இந்த எலெக்ஷ னுக்கு ஏசி, வாஷிங் மஷின் எதாவது குடுக்குறானுகளான்னு பாத்துட்டு அதுக்கப்புறமா வாங்கலாம்னு இருக்கேன்.

செந்தில்: உங்களுக்கு ஒடம்பெல்லாம் மூளைண்ணே....ஆமா நீங்க யாருக்குண்ணே ஓட்டு போட போறீங்க..

கவுண்டர்: ஏன்.... நான் யாருக்கு ஓட்டு போறேன்னு சொன்னா என் கிட்ட பணம் குடுத்த மத்த கட்சி காரனுககிட்டல்லாம் சொல்லி அடி வாங்கி தரலாம்னு பாக்குறியா... அது நடக்காது மகனே.... ஆமா நீ யாருக்கு நாயே ஓட்டு போட போற...

செந்தில்: ஏன் ஓட்டு எப்பவுமே ஒபாமாவுக்கு தான்ணே....

கவுண்டர்: என்னது ஒபாமாவுக்கா... அவரு எந்த தொகுதில நிக்கிறாரு

செந்தில்: அதெல்லாம் எனக்கு தெரியாது.... போன தடவையும் அவருக்கு தான் போட்டேன்..இந்த தடவையும் அவருக்கு தான் போடுவேன். ஏன்னா அவருதான் என்ன மாதிரி கருப்பாஇருப்பாரு.

கவுண்டர்: இய்ய்ய்ய்... எங்க உன் மூஞ்சிய கொஞ்சம் திருப்பு.... இந்த மூஞ்சியும் அந்த மூஞ்சியும் ஒண்ணா? நல்ல வேளை நெல்சன் மண்டேலாவுக்கு ஒட்டு போடுவேன்னு சொல்லாம விட்டியே..நீ ஒபாமாவுக்கே ஓட்டு போடு ராஜா....இந்தியா ரொம்ப சீக்கிரம் முன்னேறிடும்...

செந்தில்: அண்ணேன் நாம நாட்டுக்காக எதாவது பண்ணனும்ணே....

கவுண்டர்: அந்தா ஒரு கெணறு தெரியிதல்ல.... அதுல விழுந்து செத்துபோயிரு, அதான்நீ நாட்டுக்கு செய்யிற பெரிய நல்ல விஷயம்..

செந்தில்:
அண்ணேன் வெளையாடாதீங்கண்ணே... நா சீரியஸா பேசிகிட்டு இருக்கேன்...

(செந்தில் பேசிகிட்டு இருக்கும் போதே அங்கு நடிகர் விஜயகாந்த் ஒட்டு கேட்டு வர்றாரு)

கவுண்டர்: அய்யோ..ஊருக்குள்ள ஒரு காட்டெருமை வந்துருச்சிடோய்... எல்லாரும் ஓடிருங்க...

செந்தில்: இது நம்ம கேப்டன்ணே

கவுண்டர்: யாரு நம்ம கேப்டன் MS தோணியா?

செந்தில்: அய்யோ அண்ணே அவரு நம்ம விஜயகாந்த்ணே...மேக்கப் இல்லாம வர்றாரு

கவுண்டர்:
ஓ....

கேப்டன்: அலோ மிஸ்டர் gaவுண்டமணி... gow are u?

கவுண்டர்:
ஒ... இதுல இங்கிலீசு வேறயா? இதுவரைக்கும் நல்லாத்தானுங்க இருக்கேன்

கேப்டன்:
இந்த எலெக்ஸன்ல நீங்க கண்டிப்பா எனக்கு தான் ஓட்டு போடனும்.

கவுண்டர்:
(சைடுல திரும்பி) நீயெல்லாம் எலெக்ஷன்ல நிப்பன்னு தெரிஞ்சா நா ஓட்டு போடவே போக மாட்டேன்.... கண்டிப்பா உங்க காட்டெருமை சின்னத்துலயே போட்டரேன்ங்க

கேப்டன் : நோ மிஸ்டர் gaவுண்டமணி.. யூ பார் மிஸ்டேக்... நம்மளோட சின்னம்
         முரசு... அதுல போடுங்க....

கவுண்டர்: சரிங்... அப்புறம் உங்ககிட்ட ஒரு டவுட் கேக்கணும்ங்... அது என்ன மொதல்ல கூட்டணி வைக்கப்போறதில்லை. தனியாவே இந்தியாவ காப்பாத்தப்போறேன்னு சொன்னீங்.. இப்ப என்னங் ஆச்சு...

கேப்டன் : அது போன வருஷம்... இது இந்த வருஷம்...

போன வருஷம்: "கூட்டணி" தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை.
இந்த வருஷம்:  "கூட்டணி" தமிழ்ல எனக்கு புடிச்ச ஒரே வார்த்தை... வரட்டுமா....அவ்வ்வ்


கவுண்டர்: அய்யோ என்ன ஜென்மம் இவன்.... டேய் இந்த நாயெல்லாம் ஏண்டா ஊருக்குள்ள விடுறீங்க...

(கவுண்டர் கடுப்புல கத்திக்கிட்டு இருக்க... பிண்ணாடி நவரச நாயகன் கார்த்தி ஓட்டு கேட்டு வர்றாரு)

கவுண்டர்: டேய் zoo zoo மண்டையா.. யார்டா இந்த தொப்பி போட்ட நாயி....

செந்தில்: அவர்தாணே நவரச நாயகன் கார்த்தி

கவுண்டர்: அந்த நாயி ஏண்டா இங்க வர்றான்...

செந்தில்: என்னணே உங்களுக்கு தெரியாதா... அவரும் கட்சி தலைவர்ணே...

(கார்த்திக் வந்துடுறாரு)

கார்திக்: ஏய்...யூ... அவ்வ்..... மிஷ்டர் கவுண்ட....... மணி.........ம்ம்ம்ம்

கவுண்டர்:
டேய் ஒண்ணு  பீடாவ துப்பிட்டு பேசு... இல்லைன்னா அப்புடியே ஓடிப்போயிறு.. தமிழ கடிச்சி துப்புறவனுகள கண்டா இவனுக்கு புடிக்காது... நாக்க புடிச்சி கடிச்சி வச்சிருவான்..

கார்த்திக்: ஏய்... நோ... நோ.. நான்.... பீடா..... போடலா.... அவ்... எனக்கு அப்புடிதான் பேஷ வரும்...ம்ம்ம்ம்ம்...நாம கூட ரெண்டு... மூணு படம்... அவ்வ்வ்... நடிச்சிருக்கோமே..மறந்துட்டீங்களா.. மிஷ்டர் காலிங்....

கவுண்டர்: ஓ அவனா நீ... ஆமாப்பா... ஆண்டவன் ஆளாளுக்கு ஒரு கொறைய குடுக்குறான் பாவம் உனக்கு இப்புடி பேச்சு வராம பண்ணிட்டானேப்பா... சரி விடு.. இப்ப எங்க வந்த?

கார்த்திக்:
அவ்வ்... நா.... இங்க...எலெக்ஷன்ல..ம்ம்ம்... நிக்கிறேன்.. நீங்க எனக்கு....அவ்வ்... ஓட்டு போடனும்....

கவுண்டர்:
அடடா... இப்பதானப்பா அந்த கருநாயிக்கு ஓட்டு போடறதா வாக்கு குடுத்தேன்

கார்திக் அழ ஆரம்பிச்சிடுறாரு...

கார்திக்:  காலிங்... நா உங்க தம்பி மாதிரி...அவ்வ்வ்

கவுண்டர்; சரி சரி... இப்ப எதுக்கு அழுகுற நீ... உன் கிட்ட உண்டான கெட்ட பழக்கம்  இதாம்பா.. சரி உனக்காக நா ஒட்டு போடுறேன்

கார்த்திக்: ரொம்ப தான்க்ஸ் காலிங்.. நா வரட்டுமா...

--
செந்தில்: அண்ணேன் நீங்க நல்லா மாட்டிகிட்டீங்க....

கவுண்டர்: என்னடா இவனுக... நாலு படம் ஓடாம படுத்துருச்சின்னா ஒடனே அரசியலுக்கு வந்துடுறானுக.. அரசியல் என்ன அவ்வளவு கேவலமா போச்சாடா....

செந்தில்:
அண்ணேன் நீங்க ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்க கூடாது....

கவுண்டமணி: டேய் காக்கா.. என்ன நீ ஓவரா பறக்குற.. அது நமக்கு சரிப்படாதுடா..கண்டவன் கால்ல எல்லாம் விழனும்...

செந்தில்:
இல்லைண்ணே.. தமிழ் நாட்டு மானத்த உங்களால தான் காப்பாத்த முடியும்

கவுண்டர்:
அப்புடிங்குற.... டெலிகேட் பொசிஷன்... ஓண் ப்ளஸ் டூ... டூ ப்ளஸ் த்ரீ...
(கொஞ்ச நேரம் யோசனைக்கு பிறகு)

சரி விடு... நீ இவ்வளவு வற்புருத்தி கேக்குறதால நா கட்சி ஆரம்பிக்கிறேன்...

செந்தில்: ஹே ஹே... ஹே... கட்சிக்கு என்ன பேருண்ணே வைக்கலாம்?

கவுண்டர்: அகில இந்திய ஆம்ளைஸ் முன்னேற்ற கழகம்னு வச்சிக்க...

கட்சி கொள்கைகள் மற்றும் கட்சி மீட்டிங் அடுத்த பதிப்பில்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 comments:

சக்தி கல்வி மையம் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஏன் ஓட்டு எப்பவுமே ஒபாமாவுக்கு தான்ணே....ஃஃஃஃ

ஹ..ஹ..ஹ.. இப்படியானவங்க தான் நாட்டுக்க கட்டாயம் தேவை...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

India Free Traffic said...

Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

Start to post Here ------ > www.classiindia.com

பாலா said...

சரியான காமெடிங்க. சிரிப்பை அடக்கவே முடியல...

Nagasubramanian said...

செம ரௌசுங்க ...

பாலா said...

உங்க கமெண்ட்டுக்கு பதில் போட்டாச்சு. நேரமிருந்தா நம்ம பக்கம் வாங்க...

Jey said...

காமெடி நல்லாருக்கு.

சாமக்கோடங்கி said...

//
கேப்டன்: அலோ மிஸ்டர் gaவுண்டமணி... gow are u?//

மாஃபி... சிரிப்ப அடக்கவே முடியலப்பா...

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...